உள்ளடக்கத்துக்குச் செல்

பொதுநலவாய நாடுகளின் உறுப்பினர் நாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தற்போதைய பொதுநலவாய உறுப்பினர்கள் (கரும் நீலம்), தற்போதைய இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள உறுப்பினர்கள் (பச்சை), முன்னாள் உறுப்பினர்கள் (வெளிர் சிவப்பு), மற்றும் பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்களும் அரச சார்பகங்கள் (இளம் நீலம்)

பொதுநலவாய நாடுகள் தன்னாட்சியுள்ள இறைமையுள்ள 56 அரசுகளின் தன்னார்வல சங்கமாகும். இவற்றில் பெரும்பான்மையானவை முன்னாள் பிரித்தானியாவின் குடிமைப்பட்ட நாடுகள் அல்லது அக்குடியேற்றங்களின் சார்பகங்களாகும்.

இது ஓர் அரசியல் ஒன்றிணைப்பு இல்லாதமையால் எந்த ஒரு அரசும் மற்ற நாட்டு அரசுகளின் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது. பல்வேறு சமூக, அரசியல்,பொருளியல் பின்னணிகளைக் கொண்ட நாடுகள் சமமான நிலையில் 1971இல் வெளியிட்ட சிங்கப்பூர் பிரகடனத்தின்படி பொதுவான இலக்குகளுடன் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைக்கும் சர்வதேச அமைப்பு ஆகும்.[1] இந்த பொதுவான இலக்குகளில் மக்களாட்சி, மனித உரிமைகள், நல்லாட்சி, சட்ட ஆட்சி, தனிநபர் சுதந்திரம், சமத்துவம், கட்டற்ற வணிகம், பல்வகைமை, மற்றும் உலக அமைதி ஆகியவற்றில் முன்னேற்றம் காண்பது அடங்கியுள்ளது. இவற்றை தங்களுக்குள்ளான திட்டங்கள் மூலமும் சந்திப்புகளின் மூலமும் நிறைவேற்ற முயல்கின்றது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பெறும் பொதுநலவாய விளையாட்டுக்கள் இதற்கோர் எடுத்துக்காட்டாகும்.[2]

தற்போதைய உறுப்பினர்கள்[தொகு]

அனைத்து பட்டியல் தகவல்களும் பொதுநலவாய செயலகத்தின் உறுப்பினர்களின் பட்டியலிலுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. குறிப்பிடாவிடத்து, பெரும்பாலான மக்கள்தொகை 2007 மதிப்பீடுகளின் அடிப்படையானவை.[3]

குறிப்பு: இந்தப் பட்டியலை ஆங்கில அகரவரிசையில் அல்லது காலவரிசையில் பயன்படுத்தி அடுக்கலாம்.

நாடு இணைந்தது கண்டம் மக்கள்தொகை குறிப்புகள்[A]
அன்டிகுவா பர்புடா அன்டிகுவா பர்புடா[F] 1981-11-011 நவம்பர் 1981 வட அமெரிக்கா 88,000
ஆத்திரேலியா ஆஸ்திரேலியா[F] 1931-12-1111 திசம்பர் 1931 ஓசியானியா 22,073,000 சனவரி 1, 1901இல் பெயரளவில் விடுதலை (மேலாட்சி அரசு முறை தகுதி) வழங்கப்பட்டது. வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 நிறைவேற்றப்பட்ட காலத்தில் மேலாட்சி அரசு முறை பெற்றிருந்த குடியேற்றப்பகுதிகளில் ஆத்திரேலியாவும் ஒன்றாக இருந்தது. வெஸ்ட்மின்ஸ்டர் சட்டத்தை 1942 வரை ஆத்திரேலியா தனது சட்டமன்றத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. 1942இல் தான் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் ஏற்பு சட்டம் 1942 நிறைவேற்றப்பட்டது (1939இலிருந்து பின்னேகலாக).[4] பிரித்தானிய நாடாளுமன்றத்துடனான தனது பிணைப்பை 1986இல் முறித்துக் கொண்டது.
பகாமாசு பகாமாசு[F] 1973-07-1010 சூலை 1973 வட அமெரிக்கா 342,000
வங்காளதேசம் வங்காளதேசம்[B] 1972-04-1818 ஏப்ரல் 1972[5] ஆசியா 162,221,000 1971இல் பாக்கித்தானிலிருந்து விடுதலை பெற்றதாக அறிவித்தது.[6]
பார்படோசு பார்படோசு[F] 1966-11-3030 நவம்பர் 1966 வட அமெரிக்கா 279,000
பெலீசு பெலீசு[F] 1981-09-2121 செப்டம்பர் 1981 வட அமெரிக்கா 322,130
போட்சுவானா போட்சுவானா 1966-09-3030 செப்டம்பர் 1966 ஆபிரிக்கா 1,950,000
புரூணை புரூணை 1984-01-011 சனவரி 1984 ஆசியா 400,000
கமரூன் கமரூன் 1995-11-1313 நவம்பர் 1995[7] ஆபிரிக்கா 19,522,000 நாட்டின் பெரும்பகுதி பிரான்சிய கட்டளைக்கீழான நிலப்பகுதியாக (பின்னர் ஐக்கிய நாடுகளின் பொறுப்பாட்சியில்) இருந்தன; இவை பிரான்சிடமிருந்து சனவரி 1, 1960 அன்று விடுதலை பெற்றன. பிரித்தானிய கட்டளைப் பகுதியில் இருந்த சிறுபகுதி (தெற்கு கமரூன்கள்) ஐக்கிய இராச்சியத்திடமிருந்து அக்டோபர் 1, 1961இல் விடுதலை பெற்று கமரூனுடன் இணைந்தன.
கனடா கனடா[F] 1931-12-1111 திசம்பர் 1931 வட அமெரிக்கா 34,053,000 [8] 1 சூலை 1867இல் பெயரளவில் விடுதலை (மேலாட்சி அரசு தகுதி) பெற்றது. வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 நிறைவேற்றப்பட்டபோது ஏற்கெனவே மேலாட்சி அரசுத் தகுதி பெற்றிருந்த நாடுகளில் கனடா முதலில் இருந்தது.[9] மற்றொரு மேலாட்சிப் பகுதியாக இருந்து வந்த நியூஃபவுண்ட்லாந்து மேலாட்சி மார்ச் 31, 1949இல் இணைந்தது.[10] பிரித்தானிய நாடாளுமன்றப் பிணைப்பை 1982இல் கனடா சட்டம், 1982 மூலம் முறித்துக் கொண்டது.
சைப்பிரசு சைப்பிரசு 1961-03-1313 மார்ச் 1961[11] ஐரோப்பா 803,200 [12] ஐக்கிய இராச்சியத்திடமிருந்து ஆகத்து 16, 1960இலிருந்து விடுதலை பெற்றது.
டொமினிக்கா டொமினிக்கா 1978-11-033 நவம்பர் 1978 வட அமெரிக்கா [C]79,000
எசுவாத்தினி எசுவாத்தினி 1968-09-066 செப்டம்பர் 1968 ஆபிரிக்கா 1,182,000 சுவாசிலாந்து என இணைந்தது, அதன் பிறகு 19 ஏப்ரல் 2018 அன்று அதன் பெயரை எசுவாத்தினி என மாற்றியது.
பிஜி பிஜி[B] 1970-10-1010 அக்டோபர் 1970 ஓசியானியா 858,038 [13] 1987இல் நீங்கியது; 1997இல் மீண்டும் இணைந்தது; சூன் 6, 2000இல் இடைநீக்கம் செய்யப்பட்டது;[14] இடைநீக்கம் திசம்பர் 20, 2001இல் நீக்கப்பட்டது;[15] மீண்டும் திசம்பர் 8, 2006இல் இடைநீக்கம் செய்யப்பட்டது .[16][17]
காபொன் காபோன் 2022-06-2525 ஜூன் 2022 ஆபிரிக்கா 22,33,272 ஆகஸ்ட் 17, 1960 இல் பிரான்சிடம் இருந்து சுதந்திரம் பெற்றது . மூன்றாவது ( மொசாம்பிக் மற்றும் ருவாண்டாவிற்குப் பிறகு ) ஐக்கிய இராச்சியத்துடன் எந்த முன்னாள் காலனித்துவ அல்லது அரசியலமைப்பு தொடர்புகள் இல்லாமல் காமன்வெல்த்தில் அனுமதிக்கப்பட்டது
கம்பியா காம்பியா 1965-02-1818 பிப்ரவரி 1965 ஆபிரிக்கா 21,55,958 3 அக்டோபர் 2013 அன்று " நவகாலனித்துவம் " என்று கூறி விலகினார்.  2016 ஆம் ஆண்டு காம்பியாவின் அதிபராக அடாமா பாரோ தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, 22 ஜனவரி 2018 அன்று பொதுநலவாயத்தில் மீண்டும் இணைவதற்கான விண்ணப்பத்தை அது சமர்ப்பித்தது,  மேலும் 8 பிப்ரவரி 2018 அன்று மீண்டும் இணைந்தது
கானா கானா 1957-03-066 மார்ச் 1957 ஆபிரிக்கா 23,837,000
கிரெனடா கிரெனடா[F] 1974-02-077 பெப்ரவரி 1974 வட அமெரிக்கா 103,000
கயானா கயானா 1966-05-2626 மே 1966 தென்னமெரிக்கா 761,000
இந்தியா இந்தியா 1947-08-1515 ஆகத்து 1947 ஆசியா 1,210,193,422 முன்னாள் பிரெஞ்சு இந்தியப் பகுதிகள் ( மே 2, 1950 முதல் சந்தன்நகர், நவம்பர் 1, 1954 முதல் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், மாஹே ), முன்னாள் போர்த்துக்கேய இந்தியப் பகுதிகள் (திசம்பர் 19, 1961 முதல் கோவா (மாநிலம்), தமன், தியூவும் 1961 முதல் முறையாக தாத்ரா மற்றும் நகர் அவேலியும்) மற்றும் சிக்கிம் ( மே 16, 1975இலிருந்து) இணைக்கப்பட்டன.
ஜமேக்கா ஜமேக்கா[F] 1962-08-066 ஆகத்து 1962 வட அமெரிக்கா 2,721,000
கென்யா கென்யா 1963-12-1212 திசம்பர் 1959 ஆபிரிக்கா 39,856,000
கிரிபட்டி கிரிபட்டி 1979-07-1212 சூலை 1979 ஓசியானியா [D]99,000
லெசோத்தோ லெசோத்தோ 1966-10-044 அக்டோபர் 1966 ஆபிரிக்கா 2,000,000
மலாவி மலாவி 1964-07-066 சூலை 1964 ஆபிரிக்கா 15,884,000
மலேசியா மலேசியா 1957-08-3131 ஆகத்து 1957[18][19] ஆசியா 28,356,000 1957இல் மலாயா கூட்டமைப்பாக இணைந்தது; வட போர்னியோ, சரவாக், சிங்கப்பூர் இணைந்த நாடாக செப்டம்பர் 16, 1963இல் மலேசியா என்ற பெயர் மாற்றம் பெற்றது (ஆகத்து 9, 1965இல் சிங்கப்பூர் தனிநாடானது).[20]
மாலைத்தீவுகள் மாலைத்தீவுகள் 1982-07-099 சூலை 1982 ஆசியா 329,000 ஐக்கிய இராச்சியத்திலிருந்து சூலை 26, 1965இல் விடுதலை பெற்றது.[21] சூலை 9, 1982 முதல் சூலை 20, 1985 வரை பொதுநலவாயத்தின் சிறப்பு உறுப்பினராக இருந்தது.[22]
மால்ட்டா மால்ட்டா 1964-09-2121 செப்டம்பர் 1964 ஐரோப்பா 412,668
மொரிசியசு மொரிசியசு 1968-03-1212 மார்ச் 1968 ஆபிரிக்கா 1,285,000
மொசாம்பிக் மொசாம்பிக் 1995-11-1313 நவம்பர் 1995[23] ஆபிரிக்கா 22,892,000 போர்த்துகல்லில் இருந்து சூன் 26, 1975இல் விடுதலை பெற்றது. ஐக்கிய இராச்சியத்தின் குடிமைப்பட்ட பகுதியாகவோ அரசமைப்பின்படி தொடர்புள்ளதாகவோ இல்லாது பொதுநலவாயத்தில் இணைந்த முதல் நாடு.[24] இரண்டாம் உலகப் போரின் போது கிழக்கு ஆபிரிக்கப் போர்த்தொடரின் போது பிரித்தானியப் படைவீரர்கள் இந்நாட்டில் இருந்துள்ளனர்.
நமீபியா நமீபியா 1990-03-2121 மார்ச் 1990 ஆபிரிக்கா 2,131,000 தென்னாப்பிரிக்காவிடமிருந்து விடுதலை பெற்றது.[25] பெப்ரவரி 28, 1994இல் தென்னாப்பிரிக்காவால் கையளிக்கப்பட்ட வால்விசு பே மற்றும் பெங்குயின் தீவுகளை உள்ளடக்கியது.
நவூரு நவூரு[B] 1968-11-01†1 நவம்பர் 1968 ஓசியானியா 14,000 சனவரி 31, 1968 இல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் கூட்டுப் பொறுப்பாட்சியிலிருந்து விடுதலை பெற்றது. நவம்பர் 1, 1968 முதல் மே 1, 1999 வரை பொதுநலவாயத்தின் சிறப்பு உறுப்பினராக இருந்தது. மே 1, 1999இல் முழுமையான உறுப்பினராக ஏற்றம் பெற்று[26] சனவரி 2006இல் மீளவும் சிறப்பு உறுப்பினரானது.[27] சூன் 2011 முதல் மீண்டும் முழு உறுப்பினர்.[28]
நியூசிலாந்து நியூசிலாந்து[F] 1931-12-1111 திசம்பர் 1931 ஓசியானியா 4,317,972 செப்டம்பர் 26, 1907இல் பெயரளவில் விடுதலை (மேலாட்சி தகுதி) பெற்றது. வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம், 1931இன் போது மேலாட்சி தகுதி பெற்றிருந்த நாடுகளில் இதுவும் ஒன்று. இந்தச் சட்டத்தை நியூசிலாந்தின் நாடாளுமன்றம் 1947இல் தான் ஏற்றுக் கொண்டது.[29] பிரித்தானிய நாடாளுமன்றத்துடனான தனது பிணைப்புகளை 1986இல் முறித்துக் கொண்டது.
நைஜீரியா நைஜீரியா 1960-10-011 அக்டோபர் 1960 ஆபிரிக்கா 154,796,000 மே 31, 1961இல் பிரித்தானிய கட்டளைப் பகுதி/பொறுப்பாட்சியில் இருந்த வடக்கு கேமரூன்களை தன்னகப்படுத்தியது. 1995இல் இடைநீக்கம் செய்யப்பட்டது; 1999இல் இடைநீக்கம் விலக்கப்பட்டது.[30]
பாக்கித்தான் பாக்கித்தான் 1947-08-1414 ஆகத்து 1947[E] ஆசியா 168,052,000 செப்டம்பர் 8, 1958இல் மஸ்கட் மற்றும் ஓமானிடமிருந்து பெற்ற இக்குவாடர் நகரை உள்ளடக்கியது. 1971 வரை(அப்போது கிழக்கு பாக்கிஸ்தான் என அறியப்பட்ட) வங்காள தேசத்தை உள்ளடக்கியது.[6] 1972இல் பொதுநலவாயத்திலிருந்து விலகி, 1989இல் மீண்டும் இணைந்தது; 1999இல் இடைநீக்கம் செய்யப்பட்டு 2004இல் இடைநீக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது; மீண்டும் 2007இல் இடைநீக்கம் செய்யப்பட்டு[31] 2008இல் நீக்கிக்கொள்ளப்பட்டது.[32]
பப்புவா நியூ கினி பப்புவா நியூ கினி[F] 1975-09-1616 செப்டம்பர் 1975 ஓசியானியா 6,737,000 Gained independence from ஆஸ்திரேலியா.
ருவாண்டா ருவாண்டா[B] 2009-11-2929 நவம்பர் 2009[24] ஆபிரிக்கா 9,998,000 சூலை 1, 1962இல் பெல்ஜியத்திலிருந்து விடுதலை பெற்றது. ஐக்கிய இராச்சியத்தின் குடிமைப்பட்ட பகுதியாகவோ அரசமைப்பின்படி தொடர்புள்ளதாகவோ இல்லாது பொதுநலவாயத்தில் இணைந்த (மொசாம்பிக்கை அடுத்து) இரண்டாவது நாடு.[24]
செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் செயிண்ட் கிட்சும் நெவிசும்[B][F] 1983-09-1919 செப்டம்பர் 1983 வட அமெரிக்கா 52,000
செயிண்ட். லூசியா செயிண்ட் லூசியா[F] 1979-02-2222 பெப்ரவரி 1979 வட அமெரிக்கா 171,000
செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்[F] 1979-10-2727 அக்டோபர் 1979 வட அமெரிக்கா [C]119,000 27 அக்டோபர் 1979 முதல் 1 சூன் 1985 வரையிலும் பொதுநலவாயத்தின் சிறப்பு உறுப்பினர்.
சமோவா சமோவா 1970-08-2828 ஆகத்து 1970 ஓசியானியா 185,000 சனவரி 1, 1962இல் நியூசிலாந்திடமிருந்து விடுதலை பெற்றது. மேற்கு சமோவா என்ற பெயரில் இணைந்து சூலை 4, 1997இல் சமோவா என்று பெயர் மாற்றம் பெற்றது.[33]
சீசெல்சு சீசெல்சு 1976-06-2929 சூன் 1976 ஆபிரிக்கா 84,000
சியேரா லியோனி சியேரா லியோனி 1961-04-2727 ஏப்ரல் 1961 ஆபிரிக்கா 5,695,000
சிங்கப்பூர் சிங்கப்பூர் 1965-10-15†9 ஆகத்து 1966 (9 ஆகத்து 1965இலிருந்து செயலாக்கம் )[34] ஆசியா 4,986,000 செப்டம்பர் 16, 1963இல் ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்று மலேசியா கூட்டமைப்பில் இணைந்தது. ஆகத்து 9, 1965இல் தனிநாடானது.[35]
சொலமன் தீவுகள் சொலமன் தீவுகள்[F] 1978-07-077 சூலை 1978 ஓசியானியா 913,000
தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா 1931-12-1111 திசம்பர் 1931 ஆபிரிக்கா 49,423,000 மே 31, 1910இல் பெயரளவில் விடுதலை (மேலாட்சி தகுதி) பெற்றது. வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம், 1931இன் போது மேலாட்சி தகுதி பெற்றிருந்த நாடுகளில் இதுவும் ஒன்று. மே 31,1961இல் விலகியது; மீளவும் சூன் 1, 1994இல் இணைந்தது.[36]
இலங்கை இலங்கை 1969-10-1515 அக்டோபர் 1959 ஆசியா,ஆபிரிக்கா 20,743,000 இலங்கை மேலாட்சி என்ற பெயரில் இணைந்தது; 1972இல் பெயர் மாற்றம் பெற்றது.
தன்சானியா தன்சானியா 1961-12-099 திசம்பர் 1961 ஆபிரிக்கா 43,729,000 தங்கனீக்காவாகவும் பின்னர் சன்சிபாராகவும் இணைந்தது; ஏப்ரல் 26, 1964இல் ஒன்றிணைந்து தன்சானியா உருவானது.[37]
டோகோ டோகோ 2022-06-2525 ஜூன் 2022 ஆபிரிக்கா 86,08,444
தொங்கா தொங்கா 1970-06-044 சூன் 1970 ஓசியானியா 102,000
டிரினிடாட் மற்றும் டொபாகோ டிரினிடாட் மற்றும் டொபாகோ 1962-08-3131 ஆகத்து 1962 வட அமெரிக்கா 1,335,000
துவாலு துவாலு[B][F] 1978-10-011 அக்டோபர் 1978 ஓசியானியா 12,000 அக்டோபர் 1, 1978 முதல் செப்டம்பர் 1, 2000 வரை பொதுநலவாயத்தின் சிறப்பு உறுப்பினராக இருந்தது.[38]
உகாண்டா உகாண்டா 1962-10-099 அக்டோபர் 1962 ஆபிரிக்கா 32,816,000
ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம் 1931-12-1111 திசம்பர் 1931 ஐரோப்பா 61,609,500 ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 இயற்றப்பட்டது.
வனுவாட்டு வனுவாட்டு[B] 1980-07-3030 சூலை 1980 ஓசியானியா 241,000 பிரான்சு, ஐக்கிய இராச்சியக் கூட்டாட்சியிலிருந்து விடுதலை பெற்றது.
சாம்பியா சாம்பியா 18 அக்டோபர் 1977 ஆபிரிக்கா 12,935,000

^ A. வேறுவிதமாகக் குறிப்பிடாவிடில், பொதுநலவாயத்தில் இணைந்த (இரண்டாம் நெடுவரிசையில்) குறிப்பிட்ட நாளில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்றது.
^ B. பொதுநலவாய நிறுவனத்தின் உறுப்பினரல்ல
^ C. மக்கள்தொகை எண்கள் 2004 மதிப்பீடுகளை ஒட்டியவை.
^ D. மக்கள்தொகை எண்கள் 2005 மதிப்பீடுகளை ஒட்டியவை.
^ E. பாக்கித்தான் தனது விடுதலை நாளை 14 ஆகத்து 1947 அன்று கொண்டாடினாலும் அலுவல்முறையான விடுதலை நள்ளிரவு, 15 ஆகத்து 1947 அன்றே வழங்கப்பட்டது. எனவே, பொதுநலவாயத்தில் இணைந்த நாள் 15 ஆகத்து 1947 ஆகும்.
^ F. ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்தை ஐக்கிய இராச்சியத்தின் அரசி என்பதைத் தவிர தங்கள் அரசமைப்பின்படி நாட்டுத் தலைவராகக் கொண்ட பொதுநலவாய இராச்சியங்கள்.

மேற் சான்றுகள்[தொகு]

 1. "FAQs". Commonwealth Secretariat. பார்க்கப்பட்ட நாள் 16 June 2008.
 2. "Singapore Declaration of Commonwealth Principles 1971". Commonwealth Secretariat. பார்க்கப்பட்ட நாள் 12 June 2008.
 3. "Members". Commonwealth Secretariat. பார்க்கப்பட்ட நாள் 15 பெப்ரவரி 2008. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 4. "Australia". Commonwealth Secretariat. பார்க்கப்பட்ட நாள் 2008-02-15.
 5. Kohen, Marcelo G. (2006). Secession. London: Cambridge University Press. p. 122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-84928-9.
 6. 6.0 6.1 "Wind of Change". Commonwealth of Nations. 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-15.
 7. Pondi, Jean-Emmanuel (அக்டோபர் 1997). "Cameroon and the Commonwealth of Nations". The Round Table 86 (344): 563–570. doi:10.1080/00358539708454389. 
 8. "Ethnic origins, 2006 counts, for Canada, provinces and territories – 20% sample data". Statistics Canada. 4 சனவரி 2008. Archived from the original on 2008-12-05. பார்க்கப்பட்ட நாள் 19 அக்டோபர் 2009.
 9. "Canada - History". Commonwealth Secretariat. பார்க்கப்பட்ட நாள் 15 பெப்ரவரி 2008. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 10. "Dominion Status". Commonwealth of Nations. 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-15.
 11. W. David McIntyre (சனவரி 2000). "Britain and the creation of the Commonwealth Secretariat". Journal of Imperial and Commonwealth History 28 (1): 135–158. doi:10.1080/03086530008583082. https://archive.org/details/sim_journal-of-imperial-and-commonwealth-history_2000-01_28_1/page/135. 
 12. "Statistical Service Republic of Cyprus". Ministry of Finance. பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2012.
 13. (PDF) Annual official estimate. 2008 revision. United Nations. 2012. http://www.statsfiji.gov.fj/Key%20Stats/Population/1.2%20pop%20by%20ethnicity.pdf. பார்த்த நாள்: 31 மே 2013. 
 14. Derek Ingram (journalist) (20 திசம்பர் 2008). "Commonwealth Update". The Round Table Journal 89 (355): 311–55. doi:10.1080/00358530050083406. 
 15. Derek Ingram (journalist) (20 திசம்பர் 2008). "Commonwealth Update". The Round Table Journal 91 (364): 131–59. doi:10.1080/00358530220144148. 
 16. Derek Ingram (journalist); Soal, Judith (20 திசம்பர் 2008). "Commonwealth Update". The Round Table 96 (388): 2–28. doi:10.1080/00358530701189734. 
 17. Fiji suspended from the Commonwealth. Commonwealth Secretariat, 1 செப்டம்பர் 2009; retrieved 11 ஏப்ரல் 2011.
 18. வார்ப்புரு:Sourcetext
 19. வார்ப்புரு:Sourcetext
 20. "Malaysia - History". Commonwealth Secretariat. பார்க்கப்பட்ட நாள் 15 பெப்ரவரி 2008. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 21. "Maldives - History". Commonwealth Secretariat. பார்க்கப்பட்ட நாள் 15 பெப்ரவரி 2008. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 22. "The Maldives and the Commonwealth". Republic of Maldives. Archived from the original on 2012-10-07. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2009.
 23. Derek Ingram (journalist) (ஏப்ரல் 1996). "Commonwealth Update". The Round Table 85 (338): 153–165. doi:10.1080/00358539608454302. 
 24. 24.0 24.1 24.2 "Rwanda becomes a member of the Commonwealth". BBC News. 29 November 2009. பார்க்கப்பட்ட நாள் 29 November 2009. பிழை காட்டு: Invalid <ref> tag; name "rwandajoins" defined multiple times with different content
 25. Chronology of Namibian Independence
 26. "Nauru Accedes to Full Membership of the Commonwealth". Commonwealth Secretariat. 12 ஏப்ரல் 1999. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2009. {{cite web}}: Check date values in: |date= (help)
 27. "Nauru–History". Commonwealth Secretariat. பார்க்கப்பட்ட நாள் 15 பெப்ரவரி 2008. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 28. "Nauru back as full Commonwealth member". Radio New Zealand International. 26 சூன் 2011. http://www.rnzi.com/pages/news.php?op=read&id=61413. பார்த்த நாள்: 23 அக்டோபர் 2011. 
 29. "New Zealand - History". Commonwealth Secretariat. பார்க்கப்பட்ட நாள் 15 பெப்ரவரி 2008. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 30. "Nigeria". Commonwealth Secretariat. பார்க்கப்பட்ட நாள் 2008-02-15.
 31. "Pakistan suspended from the Commonwealth". Commonwealth Secretariat. 22 நவம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 15 சூன் 2008.
 32. "Commonwealth lifts Pakistan suspension". Commonwealth Secretariat. 12 மே 2008. பார்க்கப்பட்ட நாள் 15 சூன் 2008.
 33. "Constitution Amendment Act (No 2) 1997". http://www.paclii.org/ws/legis/num_act/caa21997295. பார்த்த நாள்: 27 நவம்பர் 2007. 
 34. வார்ப்புரு:Sourcetext
 35. "Road to Independence". ஆசியாOne. http://ourstory.ஆசியா1.com.sg/merger/merger.html. பார்த்த நாள்: 28 சூன் 2006. [தொடர்பிழந்த இணைப்பு]
 36. "South Africa". Commonwealth Secretariat. பார்க்கப்பட்ட நாள் 2008-02-15.
 37. "Tanzania - History". Commonwealth Secretariat. பார்க்கப்பட்ட நாள் 15 பெப்ரவரி 2008. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 38. "Tuvalu Accedes to Full Membership of the Commonwealth". Commonwealth Secretariat. 14 ஆகத்து 2000. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2009.

வெளி இணைப்புகள்[தொகு]