பகுரோட் குகைகள்

ஆள்கூறுகள்: 20°04′08″N 72°49′24″E / 20.068798°N 72.823220°E / 20.068798; 72.823220
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகுரோத் குகைகள் is located in இந்தியா
பகுரோத் குகைகள்
பகுரோத் குகைகள்
இந்திய நாட்டில் பகுரோத் குகைகளின் இருப்பிடம்.

பகுரோட் குகைகள் (Bahrot Caves) அல்லது பராத் (Barad) இந்தியாவில் மகாராட்டிரா மாநிலத்தின் தகானுவிற்கு அருகில் உள்ள ஒரே பார்சி / சரதுசம் குகைக் கோயில் ஆகும். பகுரோட் குகைகள் சஞ்சனுக்கு தெற்கே 25 கிலோ மீட்டர் தொலைவிலும், குசராத்து மாநிலத்தின் போர்டி கிராமம் தலசாரியிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும், தேசிய நெடுஞ்சாலை எண் 48 இலிருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

இந்த மலைத்தொடர் முதலில் கர்வி பழங்குடியின மக்களுக்கு சொந்தமான கிராமத்திற்கு உட்பட்டது. அவர்கள் மரத்தினால் உருவாக்கப்பட்ட பயன்படுத்தப்படாத புத்த குகைகளாக இருந்தன. அவை புத்த பிக்குகளால் தோண்டப்பட்டன. 1393 ஆம் ஆண்டில் முகம்மது பின் துக்ளக்கின் தளபதியான அலப் கான், சஞ்சனில் உள்ள அவர்களது குடியேற்றத்தின் மீது படையெடுத்த பிறகு சோராசுட்ரியர்கள் 13 ஆண்டுகள் இந்த மலைகளில் மறைந்திருந்தனர். இந்த காலகட்டத்தில் (1393-1405 சி.இ.) 'இரான்சா சுடர்' பகுரோட்டுக்கு மாற்றப்பட்டது. இன்றும் கூட, இந்த புனித நெருப்பு எரிகிறது. இப்போது உத்வாடாவில் உள்ள ஒரு கோவிலில் உள்ளது. இரான்சா அடாசு பெக்ராம் பார்க்கவும். இது உலகின் மிக உயர்ந்த அர்ப்பணிக்கப்பட்ட நெருப்பு தரமாக வழங்கப்படுகிறது. பகுரோத் குகைகள் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டு, இந்திய தொல்லியல் துறையின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுரோட்_குகைகள்&oldid=3860080" இலிருந்து மீள்விக்கப்பட்டது