உள்ளடக்கத்துக்குச் செல்

கிளாரா ஜெட்கின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளாரா செட்கின்
கிளாரா செட்கின் (அண். 1920)
பிறப்புகிளாரா யோசப்பைன் ஐபினர்
5 ஜூலை 1857
வீடெரவு, சாக்சானி அரசு, செருமனி கூட்டாட்சி
இறப்பு20 ஜூன் 1933( அகவை 75)
ஆர்கென்செல்சுகோயே, மாஸ்கோ அருகில், உருசிய சோவுயத் குடியரசு(SFSR), சோவியத் ஒன்றியம்
கல்லறைகிரெம்ளின் சுவர் நெக்கிரோபோலிசு, மாஸ்கோ
மற்ற பெயர்கள்கிளாரா ஜெட்கின்
பணிஅரசியல்வாதி, அமைதிச் செயல்பாட்டாளர் மகளிர் உரிமைச் செயல்பாட்டாளர்
அரசியல் கட்சிசெருமனி சமூக மக்களாட்சிக் கட்சி (1917 வரை)
தற்சார்பு செருமனி சமூக மக்களாட்சிக் கட்சி (1917–1922); சுபார்ட்டகசு சிறகம்
செருமனி பொதுவுடைமைக் கட்சி (1920–1933)
துணைவர்ஓசிப் செட்கின் (1850–1889)
ஜார்ஜ் பிரெடெரிக் சுன்டெல் (1899–1928)
பிள்ளைகள்மாக்சிம் செட்கின் (1883–1965)
கோசுத்யா செட்கின் (1885–1980)
1910 இல் உரோசா இலக்சம்பர்குடன் கிளாரா

கிளாரா செட்கின் (Clara Zetkin) (/ˈzɛtkɪn/; இடாய்ச்சு: [ˈtsɛtkiːn]; எய்சனர் [ˈaɪsnɐ] எனப்படுபவர்; 5 ஜூலை 1857 – 20 ஜூன் 1933) ஒரு செருமானிய மார்க்சியக் கோட்பாட்டளரும், பொதுவுடைமைச் செயற்பாட்டாளரும் மகளிர் உரிமைப் போராளியும் ஆவார்.[1] இவர் 1917 வரை செர்மானியச் சமூக மக்களாட்சிக் கட்சியில் செயல்பட்டார்.[2] பிறகு இவர் தற்சார்பு சமூக மக்களாட்சிக் கட்சியில் வ்சேர்ந்து அதன் மிக இடது சார்பு பிரிவான சுபார்ட்டகசு குழுவில் இயங்கினார். இக்குழு, பிறகு செருமானியப் பொதுவுடைமைக் கட்சியாக மாறியது. இவர் கட்சி அரசியல் குழுவில் வீமர் குடியரசு பேராளராக 1920 இல் இருந்து 1933 வரை இருந்தார்.[3]

வாழ்க்கை[தொகு]

பின்னணியும் கல்வியும்[தொகு]

கிளாரா யோசப்பைன் எய்சனர் (Clara Josephine Eißner (Eissner) சாசானிய வீடெரவு குடும்பத்தில் மிக மூத்த மகவாக கோனிகுசை ன்-வீடெரவு நகராட்சி சார்ந்த வீடெரவு பகுதியில் பிறந்தார்.[4] இவரது தந்தையார் கோட்பிரீடு எய்சனர் ஒரு பள்ளி ஆசிரியரும் பேராய இசைக்கலைஞரும் சீர்திருத்தக் கிறித்தவரும் ஆவார். இவரது தாயார் பிரெஞ்சு கால்வழிவந்த யோசப்பைன் விட்டேல், இலீப்சிகு நகர நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த உயர்கல்விசான்ற பெண்மணி ஆவார்.[4][5][6] கிளாராவின் குடும்பம் 1872 இல் இலீப்சிகு நகருக்கு இடம்பெயர்ந்தது. இங்கே இவர் இலீப்சிகு மகளிர் ஆசிரியர் கல்லூரியில் கல்வி பயின்றார். இவர் அப்போதுதான் தோன்றியிருந்த சமூக மக்களாட்சிக் கட்சியுடன் தொடர்பில் இருந்தார்.

சூரிச் கருத்தரங்கில் செட்கின், 1897

ஆட்டோ பிசுமார்க்கு 1878 இல் சமூக மக்களாட்சிக் கட்சியைத் தடை செய்ததால், 1882 இல் கிளாரா சூரிச்சுக்குச் சென்றார். பிறகு பாரீசில் தலைமறைவாக வாழ்ந்துவந்தார். இவர் பாரீசில் இதழியலும் மொழிபெயர்ப்பும் கற்றார்மிவர் பாரீசில் வாழ்ந்தபோது, பன்னாட்டு நிகரறக் குழுவை நிறுவுவதில் முதன்மையாவ பாத்திரம் வகித்துள்ளார்.[1] இவர் தன் காதலன் உருசிய யூதரான ஓசிப் செட்கின் பெயரை வைத்துக் கொண்டார்; ஓசிப் செட்கின் சிறந்த மார்க்சியர் ஆவார். இவர்கள் இருவருக்கும் மாக்சிம்செட்கின் கோசுத்தியா செட்கின் என இரண்டு ஆண்மகவுகள் பிறந்தனர்ரோசிப் செட்கின் 1889 தொடக்கத்தில் இருந்து உடல்நலமின்றி இருந்து ஜூனில் இறந்துவிட்டார்.தன் காதலர் இறந்ததும், செட்கின்குழந்தைகலுடன் சுட்டட்கார்ட்டுக்குச் சென்றார். இவர் கலைஞரான ஜார்ஜ் பிரெடெரிக் சுண்டாலை மணந்துகொண்டு, 1900 முதல் 1928 வரை அவருடன் வாழ்ந்தார். சுண்டால் செட்கினைவிட 18 அகவை சிறியவர்.[7]

சமூக மக்களாட்சிக் கட்சித் தொடக்கநிலை ஈடுபாடு[தொகு]

செட்கினும் உரோசா இலக்சம்பர்கும், 1910

இவரது அரசியல் வாழ்க்கை ஓசிப் செட்கினைச் சந்தித்தபோது தொடங்கியது. பிறகு கிளாரா ஓசிப் செட்கினை மணந்துகொண்டார்.நிகரறக் குழு கூட்டங்களில் சில மாதங்கள கலந்துகொண்டதும், செட்கின் முழுமையாகக் கட்சியில் ஈடுபடலானார். இது மகளிர் விடுதலைக்கான முன்வைப்பை மார்க்சிய அணுகுமுறைவழி பெற வழிவகுத்தது. செருமனியி 1880 கால கட்ட அரசியல் சூழ்நிலையால் செட்கின் முதலில் சுவிட்சர்லாந்திலும் பின்னர் பிரான்சிலும் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். பத்தாண்டுகளுக்குப் பிறகு அவர் செருமனிக்குத் திரும்பிவந்ததும், சமமை எஉம் சமூக மக்களாட்சிக் கட்சியின் இதழின் பதிப்பாசிரியரானார். இவர் இப்பதவியில் 25 ஆண்டுகள் வரை இருந்தார்.[8]

ஆசிரியர் கல்வி முடித்ததும், செட்கின் செருமனி மகளிர் இயக்கத்திலும் தொழிலாளர் இயக்கத்திலும் தொடர்புகளை 1874 இல் இருந்து ஏற்படுத்திக்கொண்டார். இவர் 1878 இல் செருமனி நிகரற பாட்டாளிகள் கட்சியில் சேர்ந்தார். இந்தக் கட்சி 1875 இல் பெர்டினாண்டு இலாசல்லி உருவாக்கிய செருமனி பொது பட்டாளிகள் கழகம் என்ற அமைப்பையும் ஆகத்து பேபலும் வில்கெல்ம் இலீப்நிச்சும் உருவாக்கிய செருமனி சமூக மக்களாட்சிப் பாட்டாளிகள் கட்சியையும் இணைத்து உருவாக்கப்பட்டதாகும். இது 1890 இல் தன் பெயரைச் செருமனி சமூக மக்களாட்சிக் கட்சி என மாற்றிக்கொண்டது.[சான்று தேவை]

செட்கின் 1898 இல் உரோசா இலக்சம்பர்குடன் நட்பு பூண்டார். இந்நட்பு பின்னர் 20 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. செட்கினின் பேரளவு ஆற்றலை உறிஞ்சிய இலக்சம்பர்கு மகளிர் இயக்கத்தில் அக்கறை காட்டாவிட்டாலும், இருவரும் கட்சியின் இடது சிறக கூட்டுறவில் உறுதியாகச் செயல்பட்டனர். இலக்சம்பர்கு ஒருதடவை ந்ம் இருவரின் கூட்டுக் கல்லறை வாசகம் " இங்கே செருமனியின் கடைசி இரண்டு சமூக மக்களாட்சி ஆடவர் உறங்குகின்றனர்" என அமையவேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.[9] இருபதாம் நூற்றாண்டுத் திருப்பத்தில் மார்க்சியத் திருத்தல்வாத விவாதத்தில் இவர்கள் இருவரும் கூட்டாக, எடுவார்டு பெர்ன்சுட்டைனின் சீர்திருத்த ஆய்வுரைகளைத் தாக்கினர். பெர்ன்சுட்டைனின் தன் ஆய்வுரைகளில் புரட்சிகர மாற்றக் கருத்தியலுக்கு மாற்றாக படிமலர்ச்சி(பரிணாம) சார்ந்த நிகரறச் சமுக மாற்றத்தை முன்வைத்தார்". [10]

மகளிர் உரிமைகளுக்கான போராட்டங்கள்[தொகு]

செட்கின் நிகரறத்தின் ஊடாக மகளிர் அரசியலை முன்வைத்து, அவர்கலுக்கான சம வாய்ப்புகளுக்காகவும் வாக்குரிமைக்காகவும் போராட ஆர்வத்துடன் முனைந்தார். இவர் செருமனியில் சமூக மக்களாட்சி மகளிர் இயக்கத்தைக் கட்டியமைக்க உதவினார்ரிவர் 1891 முதல் 1917 வரை சமம( SPD ) மகளிர் செய்தித்தாளைப்(Die Gleichheit) பதிப்பித்தார். இது முதலில் 1890 இல் இருந்து Die Arbeiterin (பாட்டாளி) என்றபெயரில் வெளிவந்தது. இது சிலகாலமே வெளிவந்த Die Staatsbürgerin இதழின் பின்வந்த வடிவமாகும். இது கெர்ட்டிரூடு குவில்லவுமே சுசாக்கால் நிறுவப்பட்டு 1886 இல் தடைசெய்யப்பட்டது. செட்கின் இவ்விதழின் பெயரைத் தான் பதிப்புப் ணியை மேற்கொண்டதும் Die Gleichheit (சமமை) என மாற்றினார்.[11]இவர் 1907 இல் புதிடாக உருவாகிய சமூக மக்களாட்சிக் கட்சி சார்ந்த மகளிர் அலுவலகத்தின் தலைவர் ஆனார். இவர் பன்னாட்டு மகளிர் நாளுக்கும் பங்கலிப்பு செய்துள்ளார்.[12][13]டென்மார்க்கில் கோப்பானேகனில் அணிதிரட்டபட்ட இரண்டாம் நிகரற மகளிர் அகிலத்துக்கு முன்பு, 1910 ஆகத்தில், இவர் பன்னாட்டு நிகரற மகளிர் கருத்தரங்கை ஒழுங்கமைத்தார்.[14] அமெரிக்க நிகரறச் செயல்பாடுகளால் ஊக்கமுற்ற, செட்கினும் காத்தே தங்கரும் பிறரும் ஒவ்வோராண்டும் ஒரு சிறப்பு மகளிர் நாளைகடைப்பிடிக்கவேண்டும் என முன்மொழிந்தனர். என்றாலும், குறிப்பிட்ட நாளேதும் முன்வைக்கப்படவில்லை.[15][12][13]மகளிர் வாக்குரிமைக்கான செயல்நெறிமுறைகளை மேம்படுத்தும் எண்ணக்கருவுக்கு , 17 நாடுகளைச் சார்ந்த 100 பெண்கள் பேராளிகள் இசைவளிததனர்.[16] அடுத்த ஆண்டே 1911, மார்ச்சு, 19 இல், முதல்முறையாக ஆத்திரியா, செருமனி, சுவிட்சர்லாந்து சார்ந்த ஒரு மில்லியனுக்கும் மேலான மக்கள் பன்னாட்டு மகளிர் நாளைக் கடைபிடித்தனர்.[17]

என்றாலும், செட்கின் முதலாளியப் பெண்ணியத்தை எதிர்த்தார்; இவர் இது பாட்டாளிகஈன் ஒற்றுமையை பிரிக்கும் கருவியாகச் செயல்படுகிறது என்றார்.[18] இவர் 1889 இல் நடந்த இரண்டாம் அகிலத்தில் ஆற்றிய உரையில் பின்வருமாறு கூறுகிறார்:

மகளிர் உரிமைகளுக்காக போராடுவதாகக் கூறிக்கொள்ளும் முதலாளியப் பெண்ணிய இயக்கத்தில் இருந்து, சமூகச் சமமையை விரும்பும் உழைக்கும் மக்கள் தம் மேம்பாட்டுக்கான எதையும் எதிர்பார்க்கமுடியாது. அதன் கருத்தியல் உண்மையில் மணலில் காட்டிய வீட்டப் போன்று அடிப்படையேதும் இல்லாததாகும். மகளிர் மேம்பாட்டுச் சிக்கல் என்பது தனக்குள்ளே தனியாக நிலவும் ஒன்றன்று, ஆனால், அது மாபெரும் சமூக மாற்றத்தோடு கட்டுண்டது எனத் தெளிவாக உனர்ந்துள்ளனர். நிலவும் சமூகத்தில் இந்தச் சிக்கலுக்கான தீர்வைக் காணமுடியாது; முழு சமூக உருமாற்றத்துக்குப் பிறகே அதை நிறைவேர்ரவியலும் என முழுமையாகவும் தெளிவாகவும் உணர்ந்துள்ளனர்.[19]

இவர் பெண்ணிய இயக்கத்தில் பெரும்பாலும் மேல்தட்டு, நடுத்தர வகுப்பு பெண்களே இருப்பதால், அவர்களது மனநிலையும் ஆர்வங்களும் உழைக்கும் மகளிரின் தேவைகளோடு ஒத்துபோகாது எனக் கருதுகிறார். எனவே, பெண்ணியமும் மகளிர் உரிமைகளுக்கான நிகரறப் போராட்டமும் ஒத்துபோவதில்லை என்கிறார். இவர் நிகரறப் போராட்டம் மட்டுமே மகளிர் ஒடுக்குமுறையை உண்மையாக ஒழிப்பதற்கான ஒரே வழி எனவும் கூறுகிறார். இவரது இலக்குகளில் ஒன்றாக மகளிரை வீட்டுவேலையில் இருந்து விடுவித்து கொண்டு, தொழிற்சங்கங்களிலும் பிற உழைக்கும் மக்கள் உரிமை அமைப்புகளிலும் இணைந்துப் பங்கேற்று, தம் வாழ்நிலைமைகளை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்கிறார். மகளிர் ஒடுக்குமுறைகளைக் குறைக்கும்சீர்திருத்தங்களுக்காக நிகரற இயக்கம் போராடவேண்டும் என வாதிடுவதோடு, அத்தகைய சீர்திருத்தங்கள் நிகரறத்துக்காக போராடும் பொது இயக்கத்தில் பொதிந்திருந்தால் மட்டுமே பாதுகாப்பாக நிலவும்; இல்லாவிட்டால், பெறும் உரிமைகள் வருங்காலச் சட்டங்களால் ஒழித்துவிடும் வாய்ப்புள்ளது என்கிறார்.[20] இவர் 1920 இல், "மகளிர் சிக்கல்" பற்றி இலெனினிடம் நேர்காணல் கண்டார்.[21]


இவர் 1920 இல், "மகளிர் சிக்கல்" பற்றி இலெனினை நேர்காணல் கண்டார்.[22]

முதல் உலகப் போருக்கு எதிர்ப்பு[தொகு]

முதல் உலகப் போரின்போது, சுவிட்சர்லாந்தில் நடந்த பன்னாட்டு அமைதிக் கருத்தரங்கில் அமைதிக்கான செயல்முனைவாளர்களும் புரட்சியாளர்களும் ஆதரவாளர்களும் குழுமி, போர்க்களத் தொழிலாளர் ஒற்றுமையைக் கோரும் அக்கறையை எதிர்த்து போராடினர்.[8]அக்கருத்தரங்கில் செட்கின் பின்வருமாறு பேசினார்:

இப்போரால் நன்மை பெறுபவர்கள் யார்? ஒவ்வொரு நாட்டிலும் மிகச் சிலரே நன்மை பெறுகின்றனர். துமுக்கி, தகரிக் குழும உரிமையாளர்கள், கவச, போர்ப்படகு உரிமையாளர்கள், துறைமுக முற்றத்தின் உரிமையாளர்கள், ஆய்தப் படை தேவைகளை வழங்குபவர்கள். இவர்கள் தம் ஈட்டல் வேட்கைக்காக , மக்களிடையே வெறுப்பை விதைக்கின்றனர். இதனால், போர் மூளுகிறது. இந்தப் போரால் தொழிலாளருக்கு நலங்கல் ஏதும் கிடைப்பதில்லை; ஆனால், இவர்கள் தமக்கு நெருக்கமான அனைத்தையும் இழக்கின்றனர்.[8]

செட்கினும் கார்ல் இலீப்கினெச்ட்டும், உரோசா இலக்சம்பர்கும் உலூயிசே காகிலரும் 50 சமூக மக்களாட்சி அரசியல்வாதிகளும் இணைந்துகட்சியின் Burgfrieden கொள்கையை புறந்தள்ளினர். இக்கொள்கை போரின்போது வேலைநிறுத்தம் செய்வதைத் தவிர்க்கும் அரசுடனான உடன்படிக்கையாகும்.[23]மற்ற பிற போரெதிர்ப்பு செயல் பாட்டாளர்களோடு இணைந்து, செட்கின் பன்னாட்டு நிகரற மகளிர் போரெதிர்ப்பு கருத்தரங்கை 1915 இல் பெர்லினில் அணிதிரட்டி நடத்தினார்.[24]போரெதிர்ப்புக் கண்ணோட்டத்துக்காக, செட்கின்போரின்போது பலமுறை சிறைபடுத்தப்பட்டுள்ளார். 1916 இலும் பாதுகாப்புக் காவலில் வைக்கப்பட்டு பிறகு இவரது உடலமின்மை காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.[1]

பொதுவுடைமைக் கட்சியில் சேர்தல்[தொகு]

செட்கின் 1916 இல் சுபார்ட்டகசு குழுவையும் தற்சார்பு சமூக மக்களாட்சிக்(ஜனநாயகக்) கட்சியையும் உருவாக்கிய இணைநிறுவனர்க்களில் ஒருவர்; 1917 இல், இது தன் தாய்க்கட்சியான சமூக மக்களாட்சிக் கட்சியில் இருந்து அதன் போர் ஆதரவு நிலைப்பாட்டால் பிரிந்தது.[1] முந்தைய ஆண்டு செருமனி நவம்பர் புரட்சிக்குப் பிறகு 1919 ஜனவரியில், செருமனி பொதுவுடைமைக் கட்சி நிறுவப்பட்டது. செட்கின் அதில் சேர்ந்து, 1920 முதல் 1933 வரை அதன் இரிச்சுட்டாகு(வீமர் குடியரசு)வின் பேராளராக விளங்கினார்.[25] இவரும் பவுல் இலெவியும் தான் இரிச்சுட்டாகுவில் இணைந்த முதல் பொதுவுடைமையாளர்கள் ஆவர்.

திரெசுதெனில் கிளாரா செட்கினின் நினைவுச் சிலை

1920 இல் கிளாரா பெண்களைப் பற்றி லெனினிடம் நேர்காணல் ஒன்றை நடத்தினார்.[26]

1924 வரை செருமனி பொதுவுடைமைக் கட்சியில் இருந்தார். 1927 முதல் 1929 வரை அதன் நடுவண்குழு உறுப்பினராகவும் இருந்தார். மேலும் அவர் 1921 முதல் 1933 வரை பொதுவுடைமை அகிலத்தின் செயற்குழு‍ உறுப்பினராகவும் இருந்தார்.இவர் பன்னாட்டு மகளிர் செயலகத் தலைவராக இருந்தார். இது 1920 இல் பொதுவுடைமை அகிலத்தால் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பன்னாட்டுப் பொதுவுடைமை மகளிர் கருத்தரங்கு 1921 ஜூனில் மாஸ்கோவில் நடந்தது. இதன் தலைவராகக் கிளாரா செட்கின் இருந்துள்ளார்; இது பான்னாட்டு மகளிர் நாளை மார்ச்சு 8 ஆம் நாளுக்கு மாற்றியது. பன்னாட்டு மகளிர் நாளாக இன்றும் மார்ச்சு 8 ஆம் நாளே கொண்டாடப்படுகிறது.[19] இவர் 1925 இல் செருமனி இடது சிறக ஒற்றுமை நிறுவனத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் (Rote Hilfe).

செட்கின் 1922 கோடையில், மாஸ்கோ நிகரறப் புரட்சியாளர் அரசியல்லொறுப்புக் குழுவில் பங்கேற்றார்; ஆனால், மற்ற வேளைகளில் இவர் செருமனி பொதுவுடைமைக் கட்சி மீதான மாஸ்கோவின் தாக்கத்தை துணிவோடு கண்டித்தார். இவர் அப்போது கட்சி வலதுமுகாமில் இருந்தார். இடதுமுகாமுக்குத் தலைமை வகித்த உரூத் பிசுச்சர் செருமனி மக்களாட்சிக் கட்சியின் பொறுப்பை ஏற்றதும், இவர் கட்சி நடுவண்குழுவில் இருந்து வெளியேற்றப்பட்டார். 1928 இல் மாச்கோ எடுத்த கொள்கை முடிவை எதிர்த்தார். அம்முடிவு முதன்மை நிகரறக் கூட்டணியில் இருந்து செருமானியப் பொதுவுடைமை சார்ந்த தொழிற்சங்கங்கள் பிரிந்து புதிய எதிரணியை(Rote Gewerkschaftsbund) உருவாக்கிட வேண்டும் என்பதாகும்பிம்முடிவை ஜோசப் இசுட்டாலின் காமின்ட்டர்ன் செயற்குழுவில் 1928 திசம்பரில் வைத்தபோது, அதை எதிர்த்த செயற்குழு உறுப்பினர் மூவரில் செட்கினும் ஒருவராவார்.[27] அதை எதிர்த்த மற்ற ஏஞ்செலோ தாச்க்காவும் யூல்சு அம்பெர்ட் துரோசும் மறு ஆண்டே வெளிப்படையாக அடக்கப்பட்டனர்; ஆனால், செட்கின் தன் செயற்குழு உறுப்பினர் பதவியைத் தக்கவைத்துகொண்டார்; கான்ட்டர்ன் தலைமைக்குழு பதவியிலும் தொடர்ந்தார்.

மாஸ்கோவில் 1932 ஆகத்தில் மிகவும் நலிந்த உடல்நலத்துடன் இருந்த நிலையிலும், இவர் பெர்லினுக்குத் திரும்பிச் சென்று அதன் மிகப் பழைய துணைஅரசத் தலைவராக, புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட ரீச்சுடாகுவின் தலைமை தாங்கினார்ரிவர் தன் திறப்புரையில் நாசிப் பாசிசத்துக்கு எதிராக அனைத்து தொழிலாளர்களையும் ஒற்றுமையாக அணிதிரள அழைப்பு விடுத்தார்:

அடிமையுற்ற, சுரண்டப்படும் மக்கள்திரளைக் காக்கவும் பருண்மையான வாழ்தலைத் தக்கவைக்கவும் அனைத்து தொழிலாளர்களின் கூட்டணியை உருவாக்கி, அனைத்து வலிமையையும் அதிகாரத்தையும் பாசிசத்தை அடிவேரோடு கல்லியெறிய பயன்படுத்தவேண்டுவதே இப்போதைய முதன்மையான உடனடி அரும்பணியாகும். இந்தக் கட்டாய வரலாற்றுத் தேவைக்கு முன்பு, அனைத்து அரசியல், தொழிற்சங்க, சமய, கருத்தியல் தடுப்புகளையும் பிரிவினைகளையும் பின்னுக்குத் தள்ளிவைக்கவேண்டும். அச்சுறுத்தப்படுவதாக உணரும் அனைவரும், நிலவும் அவலத்தைத் துடைத்தெரிது விடுதலை பெற விரும்பும் அனைவருமமிந்தக் கூட்டணியில் அணிதிரண்டு பாசிசத்தையும் அதன் அரசு அதிகாரக் கட்டமைப்பையும் எதிர்த்து எழவேண்டும்.[28]

இவர் 1932 இல் இலெனின் ஆணையையும் 1927 இல் செம்பதாகை(செங்கொடி) ஆணையையும் பெற்றார்.[7]

நாடுகடத்தலும் இறப்பும்[தொகு]

கிழக்குச்‍ செருமனி வெளியிட்ட வங்கி நாணயத்தாள்
செருமனி, ஜேனாவில் கிளாரா செட்கின் வாழ்ந்த இட பொறிப்பு

அடால்ஃப் இட்லர் நாசிக் கட்சியும் 1933 இல் செருமனி ஆட்சியேற்றதும், நாசி அரசு செருமனி பொதுவுடைமைக் கட்சியையும் பிற எதிர்ப்பு அரசியல் கட்சிகளையும் தடை செய்தது. செட்கின் இறுதியாக நாடுகடந்து, இப்போது சோவியத் ஒன்றியத்துக்குச் சென்றார். இவர் அங்கே மாஸ்கோ அருகில் இருந்த அர்க்கென்செல்சுகோயேவில், 1933 இல் தன் 76 அகவையில் இறந்தார்.[1] இவரது சாம்பல் செஞ்சதுக்கத்துக்கு அருகில் உள்ள மாஸ்கோ கிரெம்ளின் சுவர் நெக்கிரோபோலிசில் வைக்கப்பட்டது.[1] இவரது அடக்கம் ஜோசப் இசுட்டாலின், நதேழ்தா குரூப்சுகாயா உட்பட்ட அனைத்து ஐரோப்பியப் பொதுவுடைமைத்த் தலைவர்கள் முன்னிலையில் நடந்தது.[29]

1949 க்குப் பிறகு, கிளாரா செட்கினைக் கிழக்குச் செருமனி மக்களாட்சிக் குடியரசு தனிப்பெரும் வீராங்கணையாகக் கொண்டாடி வருகிறது; கிழக்குச் செருமனியின் அனைத்துப் பெரிய நகரங்களிலும் ஒரு தெரு இவரது நினைவாகப் பெயரிடப்பட்டதுமிவரது பெயர் இன்னமும் முன்னாள் செருமன மக்களாட்சிக் குடியரசு நிலப்படங்களில் காணப்படுகிறது.[7] உருசியாவில் துலா நகரத் தெருவொன்று கிளாரா செட்கின் (ул. Клары Цеткин) பெயரில் வழங்குகிறது. இத்தெரு செஞ்சதுக்க வளாகத்துக்கு இணையாக, நகரின் மாஸ்கோ தொடருந்து நிலையத்துக்குச் செல்கிறது.

இறந்த பின் தகைமைகள்[தொகு]

 • இவரது நினைவாக கிழக்குச் செருமனியில் பத்து மார்க்கு நாணயத்தாளும் இருபது மார்க்கு நாணய வில்லையும் வெளியிடப்பட்டது.
 • 1949 க்குப் பிறகு, கிழக்குச் செருமனியின் அனைத்துப் பெரிய நகரங்களின் ஒரு தெரு இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.
 • 1954 இல், செருமனி மக்களாட்சிக் குடியரசு கிளாரா செட்கின்பதக்கத்தை (Clara-Zetkin-Medaille) நிறுவியது.
 • 1955 இல் இலீப்சிகு நகரமன்றம் கிளாரா செட்கின் பூங்கா எனும் பெயரில் ஒரு மனமகிழ்விடத்தை நிறுவியது.[30]
 • 1967 இல் கிழக்குச் செருமனி மக்களாட்சிக் குடியரசு சிற்பி வால்ட்டேர் ஆர்னால்டு செய்த கிளாரா செட்கின் சிலை யோகான்னாபூங்காவில் இவரது 11ஒ ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் எழுப்பப்பட்டது.
 • 1987 இல் இவரது நினைவாக இவர் உருவம் பொறித்த அஞ்சல்தலையைக் கிழக்குச் செருமனி மக்களாட்சிக் குடியரசு வெளியிட்டது.
 • 2011 இல் இருந்து ஆண்டுதோறும் கிளாரா செட்கின் மகளிர் விருதை"(Clara-Zetkin-Frauenpreis)" செருமனி இடதுசாரிக் கட்சி வழங்கி வருகிறது.

மேலும் காண்க[தொகு]

நிகரறப் பெண்ணியம்

மார்க்சியப் பெண்ணியம்

அலெக்சாந்திரா கொலந்தாய்

நதேழ்தா குரூப்சுகாயா

உரோசா இலக்சம்பர்கு

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Zetkin, Clara * 5.7.1857, † 20.6.1933: Biographische Angaben aus dem Handbuch der Deutschen Kommunisten". Bundesstiftung zur Aufarbeitung der SED-Diktatur: Biographische Datenbanken. பார்க்கப்பட்ட நாள் 15 November 2014.
 2. Clara Zetkin | bpb
 3. Gilbert Badia, Clara Zetkin: Féministe Sans Frontières (Paris: Les Éditions Ouvrières 1993).
 4. 4.0 4.1 Young, James D. (1988). Socialism since 1889: a biographical history. Rowman & Littlefield. pp. 169. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-389-20813-6.
 5. Encyclopedia of World Biography: Vitoria-Zworykin. Gale Research. 1998. pp. 504. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7876-2556-6.
 6. Zetkin, Klara; Philip Sheldon Foner (1984). Clara Zetkin, selected writings. International Publishers. pp. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7178-0620-1.
 7. 7.0 7.1 7.2 Clara Zetkin biography from the University of Leipzig (in German)
 8. 8.0 8.1 8.2 Schulte, Elisabeth (7 November 2014). "Clara Zetkin, Socialism and Women's Liberation".
 9. Nettl, J.P. (1966). Rosa Luxemburg. London: Oxford U.P. p. 371.
 10. Clara Zetkin biography, Fembio.org. Accessed 14 October 2022. (in German)]
 11. Mutert 1996, ப. 84.
 12. 12.0 12.1 Kaplan, Temma (1985). "On the Socialist Origins of International Women's Day". Feminist Studies 11 (1): 163–171. doi:10.2307/3180144. https://archive.org/details/sim_feminist-studies_spring-1985_11_1/page/163. 
 13. 13.0 13.1 "History of International Women's Day". United Nations. பார்க்கப்பட்ட நாள் 26 May 2012.
 14. Ruthchild, Rochelle Goldberg (2012). "From West to East: International Women's Day, the First Decade". Aspasia 6: 1–24. doi:10.3167/asp.2012.060102. 
 15. ""International Socialist Congress, 1910; Second International Conference of Socialist Women". p. 21. பார்க்கப்பட்ட நாள் 7 March 2020.
 16. "About International Women's Day". Internationalwomensday.com. 8 March 1917. பார்க்கப்பட்ட நாள் 26 February 2016.
 17. "United Nations page on the background of the IWD". Un.org. Archived from the original on 11 March 2012. பார்க்கப்பட்ட நாள் 8 March 2012.
 18. Boxer, M. J. (2007). "Rethinking the Socialist Construction and International Career of the Concept "Bourgeois Feminism"". The American Historical Review 112: 131–158. doi:10.1086/ahr.112.1.131. https://archive.org/details/sim_american-historical-review_2007-02_112_1/page/131. 
 19. 19.0 19.1 Gaido, Daniel; Frencia, Cintia (2018). ""A Clean Break": Clara Zetkin, the Socialist Women's Movement, and Feminism". International Critical Thought 8 (2): 277–303. doi:10.1080/21598282.2017.1357486. 
 20. Holland, Shelly. "The IWD Story". The Guardian. https://static.guim.co.uk/sys-images/Guardian/Pix/pictures/2012/7/31/1343750637045/Zetkin-profile-001.jpg. 
 21. The interview transcript (in English) is available at The Emancipation of Women: From the Writings of V.I. Lenin, interview with Clara Zetkin, International Publishers, on the Marxist Archives
 22. The interview transcript (in English) is available at The Emancipation of Women: From the Writings of V.I. Lenin, interview with Clara Zetkin, International Publishers, on the Marxist Archives
 23. Klara Zetkin, "German Women to Their Sisters in Great Britain" December 1913
 24. Timeline of Clara Zetkin's life, at the Lebendiges Museum Online (LEMO)
 25. Marxist Internet Archive Biography
 26. இதன் ஆங்கில மொழியாக்கம் பெண்கள் விடுதலை: லெனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள், கிளாரா நேர்காணல்
 27. Drachkovitch, Milorad M.; Lazitch, Branko (1966). The Comintern – Historical Highlights. New York: Frederick A, Praeger. p. 227.
 28. Zetkin, Clara. "Fascism Must Be Defeated". The Socialist Worker.
 29. "Clara Zetkin facts". Your Dictionary. Archived from the original on 2 April 2019. பார்க்கப்பட்ட நாள் 23 February 2019.
 30. Clara-Zetkin-Park – Stadt Leipzig

தகவல் வாயில்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாரா_ஜெட்கின்&oldid=3780033" இலிருந்து மீள்விக்கப்பட்டது