பண்பாட்டில் பெண்ணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெண்ணியம் பல வழிகளில் பண்பாட்டினை தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது, மேலும் ஏஞ்சலா மெக்ராபி, லாரா முல்வி மற்றும் பிறரால் பெண்ணியத்திற்கும், பண்பாட்டிற்கும் உள்ள தொடர்பு ஆராயப்பட்டுள்ளது. திமோதி லாரி மற்றும் ஜெசிகா கீன் ஆகியோர் "பெண்ணியத்தின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று, பெண்கள் பிரபலமான பண்பாட்டினை பெறும் முறைகளை தீவிரமாக ஆராய்வது ஆகும், இவ்வளவு பரப்பிசை பண்பாடும் ஆண்களால் ஆண்களுக்காக செய்யப்பட்டது" என்று வாதிட்டனர். [1] இது இலக்கியம், இசை, திரைப்படம் மற்றும் பிற திரை பண்பாடுகள் உட்பட பல்வேறு வடிவங்களில் பிரதிபலிக்கிறது.

பெண்களின் எழுத்து படைப்புகள்[தொகு]

ஒப்பீட்டளவில் சமீபத்தில் பெண்களின் சமீபத்திய இலக்கியப் படைப்புகள் மற்ற படைப்பளர்களிடம் இருந்து வேறுபடும் விதத்தில் அமைந்தது.

மகளிரின் சினிமா[தொகு]

"மகளிரின் சினிமா" என்ற சொல் பொதுவாக பெண் திரைப்பட இயக்குனர்களின் பணியினைக் குறிக்கிறது. ஒளிப்பதிவாளர்கள் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்கள் போன்ற புகைப்படக் கருவிக்குப் பின்னால் உள்ள மற்ற பெண்களின் பணிகளையும் இது குறிக்கலாம். பெண்கள் திரைப்பட தொகுப்பு, ஆடை வடிவமைப்பாளர்கள் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர்களின் பங்கேற்பு பொதுவாக "மகளிர் சினிமா" என்ற வார்த்தையை நியாயப்படுத்தும் அளவுக்கு தீர்க்கமானதாக கருதப்படவில்லை.

மகளிர் பண்பாடு, திரைப்படத்தின் மையக் கருத்தாக இல்லாவிட்டாலும் "பெண்ணிய இயக்கம்" பற்றிய ஆரம்ப குறிப்பு 1942 ஆம் ஆண்டின் வுமன் ஆஃப் தி இயர் திரைப்படத்தில் கேத்தரின் ஹெப்பர்னில் இருந்து துவங்கியது.

மற்றொரு படம், சீ இஸ் பியூட்டிஃபுல் வென் சீ இஸ் ஆங்ரி, 2014 ஆம் ஆண்டில் வெளியான, அமெரிக்காவில் பெண்களின் விடுதலை இயக்கத்தை சம்பந்தப்பட்ட பெண்களின் உண்மையான நிலையினை விவரிக்கிறது.

பெண்கள் இசை[தொகு]

பெண்களின் இசை என்பது பெண்கள், பெண்களால் இயற்றப்பட்ட, பெண்களுக்கான மற்றும் பெண்களைப் பற்றிய இசை என்பதனைக் குறிக்கிறது. [2] இந்த வகை இரண்டாவது அலை பெண்ணிய இயக்கத்தின் இசை வெளிப்பாடாக வெளிப்பட்டது [3] அத்துடன் உழைப்பு (பொருளியல்), சிவில் உரிமைகள் மற்றும் அமைதி இயக்கங்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக இருந்தது . [4] இந்த இயக்கம் அகனள்களான கிறிஸ் வில்லியம்சன், மெக் கிறிஸ்டியன் மற்றும் மார்கி ஆடம் , பெர்னிஸ் ஜான்சன் ரீகன் மற்றும் அவரது குழு ஸ்வீட் ஹனி இன் தி ராக் மற்றும் அமைதி ஆர்வலர் ஹோலி நியர் போன்ற ஆப்பிரிக்க-அமெரிக்க பெண் ஆர்வலர்களால் தொடங்கப்பட்டது. [4] மடோனா, சிண்டி லாப்பர் மற்றும் லேடி காகா போன்ற மற்ற பெண்களும் தடைகளை உடைத்து அனைத்து தரப்பு கலைஞர்களையும் தங்கள் கவனத்தை ஈர்க்க அனுமதிப்பதன் மூலம் இன்று பெண்ணிய இசையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர். [5] மகளிர் இசை என்பது பெண்களின் இசையின் பரந்த தொழிற்துறையைக் குறிக்கிறது, இது கலைஞர்களைத் தாண்டி படமனை இசைக்கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், ஒலி பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், பட விளம்பர கலைஞர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் விழா அமைப்பாளர்களையும் உள்ளடக்கியது. [2]

1990 களின் முற்பகுதியில் ஒலிம்பியா, வாஷிங்டன் மற்றும் வாஷிங்டன் டிசி ஆகியவற்றிலிருந்து கலக எழுச்சி இயக்கம் உருவானது. இது பெண்களின் குரல்களையும் கலை வெளிப்பாடுகளையும் கட்டுப்படுத்தும் திறனை வழங்க முயன்றது. [6] இதில், கேர்ள் எனும் ஆங்கில வார்த்தையில் grrrl இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக 'r' எனும் எழுத்து இடம் பெறுவதன் மூலம் பெண் எனும் வார்த்தையினை சிறுமைப்படுத்துவதனை மறுக்கிறது. [6]

சான்றுகள்[தொகு]

  1. Laurie, Timothy. "Why consenting adults should see 50 Shades of Grey - and take their teens". https://www.academia.edu/10818672.  February 19
  2. 2.0 2.1 Lont, Cynthia, Women's Music: No Longer a Small Private Party, in Reebee Garofalo, ed., Rockin' the Boat: Mass Music & Mass Movements (Cambridge, MA: South End Press, 1992 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89608-427-2), p. 242).
  3. Peraino, Judith, Girls with Guitars and Other Strange Stories, in Journal of the American Musicological Society, vol. 54, no. 3 (2001), p. 693.
  4. 4.0 4.1 Mosbacher, Dee, Radical Harmonies, Woman Vision (2002 (OCLC 53071762)). See also "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-05-13. பார்க்கப்பட்ட நாள் 2021-09-10..
  5. Reddington, Helen. The Lost Women of Rock Music: Female Musicians of the Punk Era. Vol. 2nd ed, Equinox Publishing Ltd, 2012.
  6. 6.0 6.1 Rowe-Finkbeiner, Kristin (2004). The F-Word: Feminism In Jeopardy—Women, Politics and the Future. Seal Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-58005-114-6. https://archive.org/details/fwordfeminisminj00rowe. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்பாட்டில்_பெண்ணியம்&oldid=3561710" இலிருந்து மீள்விக்கப்பட்டது