மடோனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


Madonna
Madonna at the premiere of I Am Because We Are in 2008.
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்Madonna Louise Ciccone
பிற பெயர்கள்Madonna Ciccone, Madonna Louise Veronica Ciccone
பிறப்புஆகத்து 16, 1958 (1958-08-16) (அகவை 65)
Bay City, Michigan,
United States
இசை வடிவங்கள்Pop, rock, dance, electronic
தொழில்(கள்)பாடகி, பாடலாசிரியர், record producer, நடன கலைஞ்சர், நடிகை, திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், ஆடை வடிவமைப்பாளர், எழுத்தாளர், தொழிலதிபர்
இசைக்கருவி(கள்)Vocals, guitar, percussion
இசைத்துறையில்1979–இன்றுவரை
வெளியீட்டு நிறுவனங்கள்Sire (1982–1995)
Maverick (1992–2004)
Warner Bros. (1982–2009)
Live Nation Artists (2008-present)
இணைந்த செயற்பாடுகள்Breakfast Club, Emmy
இணையதளம்www.madonna.com

மடோனா (இயற்பெயர் மடோனா லூயிஸெ சிக்கோன் ; ஆகஸ்டு 16, 1958) ஒரு அமெரிக்க இசைக் கலைஞர், நடிகை, மற்றும் தொழிலதிபர் ஆவார். மிச்சிகன், பே சிட்டியில் பிறந்து, மிச்சிகன் ரோசெஸ்டர் ஹில்ஸில் வளர்ந்த இவர், நவீன நடனத் துறைக்காக 1977 ஆம் ஆண்டில் நியூயார்க் நகருக்கு இடம்பெயர்ந்தார். பிரேக்ஃபாஸ்ட் கிளப் மற்றும் எம்மி ஆகிய பாப் இசைக் குழுக்களின் ஒரு உறுப்பினராக இருந்தபின், தனது சொந்த தலைப்புடனான மடோனா என்னும் அறிமுக ஆல்பத்தை 1983 ஆம் ஆண்டில் சைர் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்காக செய்தார்.

அவரது ஸ்டுடியோ ஆல்பங்களான லைக் எ வர்ஜின் (1984) மற்றும் ட்ரூ ப்ளூ (1986) ஆகியவற்றில் இருந்த தொடர்ந்த பல வெற்றி சிங்கிள்களை அடுத்து அவருக்கு உலகளவில் அங்கீகாரம் கிட்டியது, பிரதான வகை இசையில் பாடல்வரிகளின் எல்லையை இன்னும் நெருக்கித் தள்ளும் பாப் அடையாளமாகவும் தனது இசை வீடியோக்களின் காட்சிப் பிம்பமாகவும் இவர் நிறுவப் பெற்றார், எம்டிவியில் இது கட்டாயம் இடம்பிடிப்பதானது. இவருக்கு கிட்டிய அங்கீகாரம் டெஸ்பரேட்லி சீக்கிங் சுஸேன் (1985) திரைப்படத்தின் மூலம் புலப்பட்டது, இதில் இவர் நாயகியாக நடிக்கவில்லை எனினும் இது மடோனா வாகனம் என்பதாய் பரவலாய் காணப்பட்டதானது. லைக் எ பிரேயர் (1989) கொண்டு மதரீதியான பிம்பத்தை பயன்படுத்துவதை மடோனா விரிவுபடுத்தியது அவரது பன்முகத்தன்மை கொண்ட இசை தயாரிப்புகளுக்கு நேர்மறையான விமர்சனத்தை அவருக்குப் பெற்றுத் தந்த அதே சமயத்தில் மத பழமைவாதிகள் மற்றும் வாடிகனிடம் இருந்து அவருக்கு எதிர்ப்பும் கிளம்பியது. 1992 ஆம் ஆண்டில் மடோனா மேவ்ரிக் கார்பரேஷன் என்னும் நிறுவனத்தைத் துவங்கினார், இது அவருக்கும் டைம் வார்னர் நிறுவனத்திற்கும் இடையிலான கூட்டு முயற்சியாகும். அதே ஆண்டில் அவர், தனது படைப்புகளில் பாலியல் வெளிப்பாட்டையும் அதிகமாய் பயன்படுத்தத் துவங்கினார், எரோடிகா என்னும் ஸ்டுடியோ ஆல்ப வெளியீட்டில் இது துவங்கியது, அதன்பின் காபி மேஜை புத்தகம் செக்ஸ் வெளியிடப்பட்டது, அதன்பின் பாலுணர்வுக் காட்சிகள் கொண்ட த்ரில்லர் படமான பாடி ஆஃப் எவிடென்ஸில் நடித்தார், இவை எல்லாம் பழமைவாதிகள் மற்றும் தாராளவாதிகள் இரு தரப்பில் இருந்தும் எதிர்மறை வரவேற்பை பெற்றது.

1996 ஆம் ஆண்டில் எவிடா என்னும் படத்தில் மடோனா நட்சத்திர பாத்திரம் ஏற்றார், இப்படத்திற்காக அவர் ஒரு இசை அல்லது காமெடியில் நடித்த சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதினை வென்றார். மடோனாவின் ஏழாவது ஸ்டுடியோ ஆல்பமான ரே ஆஃப் லைட் (1998), மிகவும் விமர்சனரீதியாக போற்றப்பட்ட அவரது ஆல்பங்களில் ஒன்றாக ஆனது, அதன் பாடல்வரிகளின் ஆழத்திற்காக அது அங்கீகரிக்கப்பட்டது. 2000களில் மடோனா நான்கு ஸ்டுடியோ ஆல்பங்களை வெளியிட்டார், இவை அனைத்துமே பில்போர்டு 200 வரிசையில் முதலிட அறிமுகம் பெற்றது. வார்னர் பிரதர்ஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து விலகி, 2008 ஆம் ஆண்டில் லைவ் நேஷன் நிறுவனத்துடன் மடோனோ பிரம்பிப்பூட்டும் 120 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

மடோனா ஆல்பங்கள் உலகெங்கிலும் 200 மில்லியன் வரை விற்றுத் தீர்ந்துள்ளன.[1][2] 20 ஆம் நூற்றாண்டின் அதிக விற்பனையாகும் பாடல்களுக்கான பெண் ராக் கலைஞராகவும், 64 மில்லியன் சான்றிதழ் பெற்ற ஆல்பங்களுடன் அமெரிக்காவின் இரண்டாவது அதிக விற்பனையாகும் பாடல்களுக்குரிய பெண் கலைஞராகவும் ரெக்கார்டிங் இண்டஸ்ட்ரி அசோசியேசன் ஆஃப் அமெரிக்கா இவருக்கு தரவரிசை வழங்கியுள்ளது.[3][4] எல்லா காலத்திற்குமான உலகின் மிகப் பெரும் வெற்றிகரமான பெண் ரெக்கார்டிங் கலைஞராக கின்னஸ் உலக சாதனைகளுக்கான அமைப்பு இவரைப் பட்டியலிட்டிருக்கிறது.[5] 2008 ஆம் ஆண்டில், “பில்போர்டு ஹாட் 100 ஆல்-டைம் டாப் ஆர்டிஸ்ட்” பட்டியலில் பில்போர்டு இதழ் மடோனாவுக்கு இரண்டாம் இடம் அளித்தது, தி பீட்டில்ஸ் மட்டும் முன்னிருந்தது, இது அவரை பில்போர்டு ஹாட் 100 சார்ட் வரலாற்றில் மிக வெற்றிகரமான தனிப்பாடல் கலைஞராக அவருக்கு அங்கீகாரம் சூட்டியது.[6] அதே வருடத்தில் ராக் அன் ரோல் ஹால் ஆஃப் ஃபேமிலும் அவர் இணைத்துக் கொள்ளப்பட்டார்.[7] சமகால இசை உலகத்தில் மிகவும் செல்வாக்கு மிகுந்த பெண்மணிகளில் ஒருவராய் கருதப்படும் மடோனா, தொடர்ந்து தனது இசையையும் தனது பிம்பத்தையும் புதுப்பித்துக் கொள்ளும் திறனுக்கு பெயர் பெற்றவராய் இருக்கிறார், அத்துடன் இசைப்பதிவுத் துறையில் தனிமனித சுதந்திரத்திற்கான ஒரு நிர்ணயத்தையும் அவர் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். ஏராளமான இசைக் கலைஞர்களிடையே இவரது பாதிப்பு அறியப்பட்ட ஒன்றாய் இருக்கிறது.

வாழ்க்கை சரிதம்[தொகு]

1958–1981: ஆரம்ப வாழ்க்கையும் துவக்கமும்[தொகு]

மடோனா 1958 ஆம் ஆண்டு ஆகஸ்டு 16 ஆம் தேதி மிச்சிகன், பே சிட்டியில் காலை 7:05 மணிக்குப் பிறந்தார், இவரது தாய் மடோனா லூயிஸெ (née Fortin) பிரெஞ்சு கனடா வம்சாவளியைச் சேர்ந்தவர், தந்தையான சில்வியோ சிக்கோன் முதல் தலைமுறை இத்தாலிய அமெரிக்க கிறைஸ்லர்/ஜெனரல் மோட்டார்ஸ் வடிவமைப்பு பொறியாளர், இத்தாலியின் பாசெந்த்ரோ, அப்ரசோவைப் பூர்விகமாய்க் கொண்டவர்.[8][9] ஆறு குழந்தைகளில் மடோனா மூன்றாவதாய் பிறந்தார்; மார்டின், அந்தோணி, பவுலா, கிறிஸ்டோபர், மற்றும் மெலானி ஆகியோர் இவரது சகோதர சகோதரிகள்.[10] தாய் வழியில் இவர் ஸகாரி க்ளவுடியர் மற்றும் ழான் கியான் டு புஸான் (Zacharie Cloutier and Jean Guyon du Buisson) வம்சாவளியைச் சேர்ந்தவர்.[11]

டெட்ராயிட்டின் புறநகர்ப் பகுதிகளான போன்டியாக் மற்றும் அவான் டவுன்ஷிப் (இப்போது ரோசஸ்டர் ஹில்ஸ்) பகுதிகளில் மடோனா வளர்க்கப்பட்டார். இவரது தாய் மார்பக புற்றுநோயால் 30வது வயதில் டிசம்பர் 1, 1963 அன்று மரணமடைந்தார். அதன்பின் இவரது தந்தை குடும்ப காப்பாளரான, ஜோன் குஸ்டஃப்சனை மணந்தார், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன: ஜெனிபர் மற்றும் மரியோ சிக்கோன். தனது தந்தையின் இரண்டாவது திருமணம் குறித்து மடோனா இவ்வாறு கூறினார்: “நான் வளர்ந்த சமயத்தில் எனது வளர்ப்புத் தாயை நான் ஏற்றுக் கொள்ளவில்லை... நினைத்துப் பார்க்கையில், அவரிடம் நான் சற்றுக் கடுமையாக நடந்து கொண்டதாய்த் தான் நான் நினைக்கிறேன்.”[12] மடோனா செயிண்ட் ஃப்ரெடரிக்’ஸ் மற்றும் செயிண்ட் ஆண்ட்ரூ’ஸ் ஆரம்ப பள்ளிகளில் பயின்றார் (இரண்டாவது இப்போது ஹோலி பேமிலி ரீஜனல் ஸ்கூல் என அழைக்கப்படுகிறது), அதன்பின் வெஸ்ட் மிடில் பள்ளியில் பயின்றார். இங்கே இவரது அதிகமான GPAக்காகவும், இவரது “வித்தியாசமான” நடத்தையாலும் இவர் புகழ் பெற்றார், குறிப்பாக இவருக்கு ஒருவகை உள்ளாடை நுகர்வு மோகம் இருந்தது: வகுப்புகளுக்கு இடையே மடோனா கார்ட்வீல்ஸ் மற்றும் ஹேண்ட்ஸ்டாண்ட்ஸ்களை பாதைகளிலேயே விளையாடிக் கொண்டிருப்பார், இடைவேளை சமயங்களில் மங்கி பார்களில் இருந்து தொங்கிக் கொண்டிருப்பார், வகுப்பு சமயத்தில் அவரது ஸ்கர்டை டக் செய்வதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார், பையன்கள் இவரது உள்ளாடைகளை காண முடியும்.

பின்னர், அவர் ரோசெஸ்டர் ஆடம்ஸ் உயர்நிலைப் பள்ளிக்கு சென்றார், அங்கு நேரடி-A மாணவியாக ஆன அவர், உற்சாகக் குரல் எழுப்பும் பிரிவின் உறுப்பினராகவும் இருந்தார். தனது உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்ததும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் நடன ஸ்காலர்ஷிப் அவருக்குக் கிடைத்தது.[13] பாலே கற்க விரும்பிய அவர் வகுப்புகளில் பங்கேற்க தந்தையை அனுமதிக்கச் செய்தார்.[14] அவரது பாலே ஆசிரியர் அவரை நடனத்தை தொழிலாக எடுக்க அவருக்கு ஆலோசனை வழங்கினார், எனவே 1977 ஆம் ஆண்டு முடிவில் தனது கல்லூரியை விட்டு விலகி இவர் நியூயார்க் நகரத்திற்கு இடம்பெயர்ந்து விட்டார்.[15] அந்த சமயத்தில் மடோனாவிடம் அதிகம் பண வசதி இல்லை என்பதால் அவர் ஒரு அழுக்கடைந்த பகுதியில் வசித்தார், டங்கின் டூநட்ஸில் வெய்ட்ரஸ் ஆகவும் நவீன நடனக் குழுக்களில் உறுப்பினராகவும் இருந்தார்.[16] நியூயார்க் நகர்ந்தது பற்றி மடோனா கூறுகையில், “நான் விமானத்தில் பயணித்தது அதுதான் முதல்முறை, நான் வாடகை டாக்ஸியில் சென்றதும் அது தான் முதல்முறை. நான் இங்கு வரும்போது என் பையில் இருந்தது 35 டாலர் தான். நான் செய்த துணிச்சலான காரியம் அது."[17] பிரெஞ்சு டிஸ்கோ கலைஞரான பாட்ரிக் ஹெர்னாண்டஸுக்காக அவரது 1979 உலகப் பயண சமயத்தில் ஒரு நடனக் கலைஞராக மேடையேறிய சமயத்தில்,[18] மடோனா இசைக் கலைஞரான டான் கில்ரோய் உடன் காதல் உறவு கொண்டிருந்தார், அவருடன் சேர்ந்து பின்னர் தனது முதல் ராக் குழுவான தி பிரேக்ஃபாஸ்ட் கிளப் குழுவை நியூயார்க்கில் உருவாக்கினார்.[19][20] குழுவுக்காக பாடியதோடு டிரம்கள் மற்றும் கிதாரும் வாசித்த அவர் குவீன்ஸ், கரோனாவில் ஸ்டுடியோவாக மாற்றப்பட்ட தலம் ஒன்றில் வசித்தார்.[21] ஆயினும் அவர்களிடம் இருந்து பிரிந்த அவர் 1980 ஆம் ஆண்டில் எம்மி என்கிற இன்னொரு இசைக்குழுவை, டிரம்மரும் முன்னாள் ஆண் நண்பருமான ஸ்டீபன் ப்ரே உடன் சேர்ந்து உருவாக்கினார்.[22] இவரும் ப்ரேயும் சேர்ந்து நடனப் பாடல்களை எழுதி தயாரித்தனர், இவை நியூயார்க் நடன கிளப்கள் இடையே இவருக்கு கவனத்தைப் பெற்றுத் தந்தது. டிஜேயும் ரெக்கார்டு தயாரிப்பாளருமான மார்க் கமின்ஸ் இவரது காட்சி இசைப்பதிவுகளில் ஈர்க்கப்பட்டார், எனவே இவரை சைர் ரெக்கார்ட்ஸ் நிறுவனரான செய்மோ ஸ்டீன் கவனத்திற்கு கொண்டு வந்தார்.[23]

1982–85: மடோனா , லைக் எ வர்ஜின் மற்றும் சீன் பென் உடன் திருமணம்[தொகு]

மடோனா வார்னர் பிரதர்ஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு லேபலான சைர் ரெக்கார்ட்ஸ்க்கு சிங்கிள்ஸ் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார்.[24] இவரது முதல் வெளியீடு ஏப்ரல் 24, 1982 இல் வெளிவந்த “எவ்ரிபடி” ஆகும்.[25] அவரது அறிமுக ஆல்பமான மடோனா பிரதானமாக ரெக்கி லூகாஸ் மூலம் தயாரிக்கப்பட்டது. அதே காலத்தில், அவருக்கு கலைஞரான ழான் - மைக்கேல் பாஸ்குயாட் உடன் தொடர்பு ஏற்பட்டது, அவரது லாஃப்டில் சில காலம் அவருடன் வசித்து வந்த இவர் டிசம்பர் 82-ஜனவரி 83 வரையான காலத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு பயணம் செய்து வந்தார்.[26] அதன் பின் போதை மருந்து பயன்படுத்தியது மற்றும் வீட்டிற்கு தாமதமாய் திரும்பியது ஆகிய காரணங்களால் விரைவில் அந்த கலைஞரைப் பிரிந்து விட்ட அவர், பின் அந்த ஆல்பம் வளர்ச்சியுற்று வந்த சமயத்தில் இசைக் கலைஞரான ஜான் “ஜெல்லிபீன்” பெனிடெஸ் உடன் தொடர்புற்றார்.[23]

மெதுவாய் மடோனாவின் தோற்றமும் ஆடையணியும் பாங்கும், மேடை நிகழ்ச்சிகளும் மியூசிக் வீடியோக்களும், இளம் பெண்கள் மற்றும் இளைஞிகள் இடையே பெரும் செல்வாக்கு பெறத் துவங்கின. பெருமளவில் நளின மற்றும் நகை வடிவமைப்பாளரான மரிபோல் உருவாக்கியதான மடோனாவின் ஆடைப் பாங்கு - லேஸ் டாப்ஸ், கேப்ரி பேண்டுகளுக்கு மேலமையும் ஸ்கர்ட்டுகள், ஃபிஷ்நெட் ஸ்டாக்கிங்குகள், கிறிஸ்தவ சிலுவை சுமக்கும் நகை, பல பிரேஸ்லெட்டுகள், மற்றும் பிளீச் செய்த முடி - எல்லாமே 1980களில் பெண்களுக்கான நாகரிக அடையாளமாக ஆனது.[27] அடுத்து வந்த அவரது ஆல்பமான லைக் எ வர்ஜின் (1984) பில்போர்டு 200 பட்டியலில் அவரது முதல் முதலிட ஆல்பமானது.[28] இதன் தலைப்பு பாடலான “லைக் எ வர்ஜின்” இந்த ஆல்பத்தின் வர்த்தகரீதியான வெற்றிக்கு பெரும் ஊக்கம் தருவதாய் அமைந்தது, இது பில்போர்டு ஹாட் 100 பட்டியலில் ஆறு வாரங்களுக்கு தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது.[18] ரெக்கார்டிங் இண்டஸ்ட்ரி அசோசியேஷன் ஆஃப் அமெரிக்காவிடம் இருந்து வைர சான்றிதழ் பெற்ற இந்த ஆல்பம் உலகளவில் 21 மில்லியன் பதிப்புகளுக்கும் அதிகமாய் விற்றது.[29][30] அப்போது தனது அடையாளமாய் இருந்த “பாய் டாய்” பெல்ட்டை அணிந்து கொண்டு முதலாவது எம்டிவி வீடியோ மியூசிக் விருதுகள் விழாவில் மடோனா இந்த பாடலை நிகழ்ச்சியில் பாடிக்காட்டினார்.[31] எம்டிவி வரலாற்றின் நினைவில் நிற்கும் தருணங்களில் இந்த நிகழ்ச்சியும் ஒன்றாகக் கருதப்படுகிறது,[31] அதே சமயத்தில் லைக் எ வர்ஜின் ஆல்பத்தை, எல்லா காலத்திற்கும் கட்டாயமான 200 ஆல்ப பட்டியலில் ஒன்றாக நேஷனல் அசோசியேசன் ஆஃப் ரெக்கார்டிங் மெர்க்கண்டைசர்ஸ் மற்றும் ராக் அன் ரோல் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலிட்டது.[32][33]

அடுத்த வருடத்தில், விஷன் குவெஸ்ட் என்கிற படத்தில் ஒரு கிளப் பாடகராய் கொஞ்ச நேரம் தோன்றி வெகுஜன திரைப்பட உலகில் மடோனா காலடி எடுத்து வைத்தார். அதன் இசைத்தடத்தில் அவரது இரண்டாவது அமெரிக்காவின் முதலிட சிங்கிளான “கிரேசி ஃபார் யூ” இடம்பெற்றிருந்தது.[34] டெஸ்பரேட்லி சீக்கிங் சூஸன் என்கிற காமெடிப் படத்திலும் அவர் தோன்றினார், இந்த படம் தான் “இன்டூ தி க்ரூவ்” பாடலை அறிமுகப்படுத்தியது, இது இங்கிலாந்தில் இவரது முதலிட சிங்கிளாக அமைந்த பாடலாகும்.[35] இந்த படத்தில் நாயகி வேடத்தில் நடிக்கவில்லை என்றாலும், மடோனா வாகனம்[36] என்பதாய் இந்த படம் பார்க்கப்படும் (சந்தைப்படுத்தப்படும்) அளவுக்கு அவரது பாத்திரம் விவரிக்கப்பட்டிருந்தது. இந்த படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான சீசர் விருதிற்கு பரிந்துரை செய்யப் பெற்றது, அத்துடன் தி நியூயார்க் டைம்ஸ் திரைப்பட விமர்சகரான வின்சன்ட் கேன்பி இந்த திரைப்படத்தை 1985 ஆம் ஆண்டின் பத்து சிறந்த திரைப்படங்களில்[37] ஒன்றாக வர்ணித்தார். நாயகி ரோசனா அர்குவெட் உடன் நடித்த படத்தில் தனது நடிப்பிற்காக சிறந்த துணை நடிகைக்கான BAFTA விருதினை வென்றார். “மெட்டீரியல் கேர்ள்” மியூசிக் வீடியோ படப்பிடிப்பு சமயத்தில் நடிகர் சீன் பென்னை டேட்டிங் செய்து வந்த இவர் அதே வருடத்தில் தனது இருபத்தி ஏழாவது பிறந்தநாளில் அவரைத் திருமணம் செய்து கொண்டார்.[38]

தி வர்ஜின் டூர் என்கிற பெயரில் வட அமெரிக்காவில் தனது முதல் கச்சேரிப் பயணத்தில் மடோனா இறங்கினார், துவக்கமாக பீஸ்டி பாய்ஸ் நிகழ்ச்சி அமைந்தது.[39] ஜூலை 1985 இல், பென்ட்ஹவுஸ் மற்றும் பிளேபாய் இதழ்கள் நியூயார்க்கில் 1978 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மடோனாவின் நிர்வாணப் புகைப்படங்கள் ஏராளமானவற்றை வெளியிட்டன. பணத்திற்கு சிரமப்பட்ட காலத்தில் மடோனா இந்த புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்திருந்தார்.[40] ஆனால் உரிய வெளியீட்டு படிவங்களில் அவர் கையெழுத்திட்டு இருந்ததால், அவற்றை தடுப்பதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எதனையும் அவரால் எடுக்க முடியவில்லை.[40] இந்த வெளியீடு ஊடகங்களில் பெரும் புயலை ஏற்படுத்தியது. ஆயினும், ஒரு அமர்வுக்கு வெறும் 25 டாலர் மட்டும் கொடுத்து தான் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானதற்கு அவர் எந்த வித எதிர்ப்போ வருத்தமோ தெரிவிக்காது தொடர்ந்து இருந்தார். அந்த புகைப்படங்கள் இறுதியாய் 100,000 டாலர்களுக்கு விற்கப்பட்டன.[40] இந்த சம்பவத்தை அவுட்டோரில் நடந்த லைவ் எய்ட் மனிதநேய கச்சேரி நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டார். தனது ஜாக்கெட்டை தான் கழற்ற விரும்பவில்லை ஏனென்றால் “அடுத்து பத்து வருடங்களுக்கு அவர்கள் [ஊடகங்கள்] எனக்கு எதிராக அதனைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள்” என்றார் அவர்.[41]

1986–1991: ட்ரூ ப்ளூ , லைக் எ ப்ரேயர் மற்றும் தி ப்ளாண்ட் ஆம்பிஷன் டூர்[தொகு]

The bust image of a young blond woman. She is wearing a black coat. Her hair is short, straight and parted from the left to the right. She has bright, red lips and appears to be speaking to someone on her left while looking down.
"ப்ளான்டெ ஆம்பிஷன் வேர்ல்டு டூர்” சமயத்தில் எய்ட்ஸ் நிவாரண நலநிதி திட்டத்திற்காக மடோனா - செப்டம்பர் 12, 1990

மடோனா தனது மூன்றாவது ஆல்பமான ட்ரூ ப்ளூ வை 1986 ஆம் ஆண்டில் வெளியிட்டா, “ஏதோ இதயத்தில் இருந்து வருவது போல் இருக்கிறது” என்று இதனை வர்ணித்தது ரோலிங் ஸ்டோன் .[42] உலகெங்கிலும் 28 நாடுகளுக்கும் அதிகமான இடங்களில் இந்த ஆல்பம் முன்னிலை பெற்றது, இது அந்த சமயத்தில் வரலாறு காணாத ஒரு சாதனையாகும், அத்துடன் கின்னஸ் உலக சாதனைப் புத்தக த்திலும் இடம் பிடித்தது.[43] இந்த ஆல்பம் பில்போர்டு ஹாட் 100 வரிசைகளுக்கு மூன்று முதலிட சிங்கிள்களை வழங்கியது: “லிவ் டூ டெல்”, “பாபா டோண்ட் ப்ரீச்” மற்றும் “ஓபன் யுவர் ஹார்ட்”, அத்துடன் ”ட்ரூ ப்ளூ” மற்றும் “லா ஐலா போனிடா” உள்ளிட்ட இன்னும் முன்னணி ஐந்து சிங்கிள்களையும் வழங்கியது.[34] அதே ஆண்டில், மடோனா ஷாங்காய் சர்ப்ரைஸ் என்னும் படத்தில் நடித்தார் (இது விமர்சர்களால் வறுத்தெடுக்கப்பட்டது), அத்துடன் தனது நாடக அரங்கு அறிமுகத்தை டேவிட் ரெபெ’ஸ் கூஸ் மற்றும் டோம்-டோம் தயாரிப்பில் செய்தார், இரண்டிலுமே இவர் சீன் பென் உடன் நடித்திருந்தார்.[44] 1987 ஆம் ஆண்டில், ஹூஸ் தேட் கேர்ளில் மடோனா நடித்தார், அத்துடன் அதன் இசைத்தடத்திற்கு நான்கு பாடல்களும் பங்களித்தார்; தலைப்பு இசையும் அமெரிக்காவின் இரண்டாமிட சிங்கிளான “காஸிங் எ கமோஷன்” பாடலும் இதில் அடக்கம்.[34] அதே வருடத்தில், ஹூஸ் தேட் கேர்ள் உலகப் பயணத்தில் அவர் இறங்கினார். மடோனாவின் புதுமையான ஆடைகளுக்காக இந்த பயணம் போற்றப்பட்டது.[45] அந்த வருடத்தின் பிற்பகுதியில், கடந்த கால வெற்றிப் பாடல்களின் ஒரு ரீமிக்ஸ் தொகுப்பான, யூ கேன் டான்ஸை அவர் வெளியிட்டார். 1988 ஆம் ஆண்டில், பசேந்த்ரோ நகரின் அதிகாரிகள் மார்புக் கச்சையுடன் மடோனாவின் 13-அடி (4 m) சிலையை அமைக்கத் துவங்கினர்.[46] இவரது முன்னோர்கள் பசேந்த்ரோவில் வாழ்ந்தவர்கள் என்பதை நினைவுகூரும் விதமாய் இந்த சிலை அமைக்கப்பட்டது.[47] சீன் பென் உடனான மடோனாவின் திருமணமும் முடிவுக்கு வந்தது. டிசம்பர் 1987 இல் விவாகரத்து ஆவணங்களை தாக்கல் செய்து பின்னர் திரும்பப் பெற்றுக் கொண்ட பின், இவர்கள் 1988 ஆம் ஆண்டின் புத்தாண்டு தினத்தன்று பிரிந்து விட்டனர், அத்துடன் ஜனவரி 1989 இல் விவாகரத்து செய்து கொண்டனர்.[48] பென் உடனான தனது திருமணம் குறித்து மடோனா கூறுகையில், “எனது தொழில் வாழ்க்கை குறித்து நான் முழுக்க வெறியுற்றிருந்தேன், எந்த வடிவம் அல்லது வகையிலும் சமரசம் செய்து கொள்ள நான் தயாராய் இருக்கவில்லை.”[38]

1989 ஆரம்பத்தில், மடோனா குளிர் பான நிறுவனமான பெப்சி உடன் கையெழுத்தானார். தனது புதிய பாடலான “லைக் எ ப்ரேயர்” பாடலை ஒரு பெப்சி விளம்பரத்தில் அறிமுகப்படுத்திய அவர் அதற்கென ஒரு மியூசிக் வீடியோவும் செய்தார். இந்த வீடியோவில் ஸ்டிக்மாட்டா மற்றும் எரியும் சிலுவைகள் உள்ளிட பல கிறிஸ்தவ அடையாளங்கள் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து வாடிகன் இந்த வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்தது. இந்த விளம்பரமும் மியூசிக் வீடியோவும் ஏறக்குறைய ஒத்தவகையானதாய் இருந்ததால், தங்களின் விளம்பரம் பொருத்தமற்றதல்ல என்பதில் பெப்சியால் பொதுமக்களை சமாதானப்படுத்த இயலவில்லை. அவர்கள் விளம்பரத்தை திரும்பப் பெற்றுக் கொண்டதோடு மடோனா உடனான ஒப்பந்தத்தையும் ரத்து செய்தனர். ஆயினும், ஒப்பந்த கால கட்டணத்தை அவர் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.[49] மடோனாவின் நான்காவது ஸ்டுடியோ ஆல்பமான லைக் எ ப்ரேயர் அதே ஆண்டில் வெளியிடப் பெற்றது. இது பேட்ரிக் லியோனார்டு மற்றும் ஸ்டீபன் ப்ரே உடன் இணைந்து எழுதி இணைந்து தயாரிக்கப்பட்டது.[50] ”....பாப் இசை தொடக்கூடிய கலையின் மிக நெருக்கமான அளவு” என்பதாக இதனை ரோலிங் ஸ்டோன் புகழ்ந்தது.[51] லைக் எ ப்ரேயர் பில்போர்டு 200 ஆல்பம் வரிசையில் முதலிடத்தை பிடித்ததோடு உலகெங்கிலும் ஏழு மில்லியன் பிரதிகள் விற்பனையானது, அமெரிக்காவில் மட்டும் நான்கு மில்லியன் பிரதிகள் விற்பனையாயின.[52] இந்த ஆல்பம் மூன்று முன்னணி ஐந்து சிங்கிள்களை - தலைப்பு இசை (ஹாட் 100 வரிசையில் அவரின் ஏழாவது முதலிட சிங்கிள்), “எக்ஸ்பிரஸ் யுவர்செல்ஃப்” மற்றும் “செரிஷ்” ஆகியவை - உருவாக்கியது.[34] 1980களின் இறுதி வாக்கில், மூன்று முதலிட ஆல்பங்கள் மற்றும் ஏழு முதலிட சிங்கிள்களுடன் அந்த தசாப்தத்தின் மிக வெற்றிகரமான பெண் கலைஞராக மடோனா உருவெடுத்திருந்தார்; இதனைக் கடந்து வெற்றி ஈட்டியிருந்தவர் மைக்கேல் ஜாக்சன் மட்டுமே.[53]

1990 ஆம் ஆண்டில், காமிக் புத்தக வரிசையான டிக் ட்ரேசி யின் திரைத் தழுவலில் “ப்ரீத்லெஸ்” மஹோனியாக மடோனா நடித்தார். வாரன் பீட்டி பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார்.[54] இந்த பட வெளியீட்டுடன் இணைந்து வரும் வகையில் ஐ’ம் ப்ரீத்லெஸ் என்கிற ஆல்பத்தை மடோனா வெளியிட்டார், இதில் படத்தின் 1930 கால அமைப்பை மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்ட பாடல்கள் இருந்தன. இது அவரது எட்டாவது அமெரிக்க முதலிட சிங்கிளான “வாக்”,[55] மற்றும் ஸ்டீபன் சோந்தீமுக்கு 1991 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான அகாதமி விருதை வென்று தந்த “சூனர் ஆர் லேடர்” ஆகிய பாடல்களைக் கொண்டிருந்தது.[56] இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வந்தபோது, மடோனாவுக்கு பீட்டி உடன் தொடர்பு ஏற்பட்டது.[57] அவரின் ஐ’ம் ப்ரீத்லெஸ் ஆல்பம் உறையிலும் ட்ருத் ஆர் டேர் என்னும் அவரது ஆவணப்படத்திலும் பீட்டி தோன்றினார். 1990 ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்திலேயே அவர்களது உறவு முடிவுக்கு வந்தது.[58] மடோனா தனது ப்ளாண்டெ ஆம்பிஷன் டூரை ஏப்ரல் 1990 இல் துவக்கினார். மத உணர்வுகள் மற்றும் பாலியல் உணர்வுகளை கருப்பொருளாகக் கொண்டு பாடல்கள் அமைந்திருக்க, இந்த பயணத்தில் அவரது “லைக் எ வர்ஜின்” நடனக் காட்சிக்காக சர்ச்சையை கொண்டு வந்தது, இதில் மடோனா சுயஇன்பத்தை தூண்டிக் கொள்ளும் முன்னதாக இரண்டு ஆண் நடனக் கலைஞர்கள் அவரது உடம்பை வருடுகிறார்கள்.[45] போப் மீண்டும் கத்தோலிக்கர்கள் பங்கேற்க கூடாது என்று அறிவுறுத்தினார்.[59] ஃபெமிக்லியா டோமேனி என்னும் ஒரு தனியான கத்தோலிக்க அமைப்பும் பாலுணர்வு அம்சங்களை அடக்கியிருந்ததால் இப்பயணத்தை புறக்கணிப்பதாக அறிவித்தது.[60] இதற்குப் பதில் கூறிய மடோனா, “நான் ஒரு இத்தாலிய அமெரிக்கன், அதில் பெருமையும் கொள்கிறேன்” என்றும் சர்ச் “படைப்புக்காக தவிர.....செக்ஸைக் கண்டாலே முற்றிலும் முகம்சுளிக்கிறது” என்றும் கூறினார்."[61] பின்னர், இந்த சுற்றுப்பயணத்தின் போதான லேஸ்ர்டிஸ்க் ரிலேஸ்க்காக 1992 ஆம் ஆண்டில் சிறந்த லாங் ஃபார்ம் மியூசிக் வீடியோ பிரிவில் கிராமி விருதினை அவர் வென்றார்.[62]

தி இம்மாகுலேட் கலெக்‌ஷன் என்னும் மடோனாவின் மிகப்பெரும் வெற்றிப் படைப்புகளின் முதல் தொகுப்பு ஆல்பம், 1990 ஆம் ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டது. ”ஜஸ்டிஃபை மை லவ்” மற்றும் “ரெஸ்க்யூ மீ” ஆகிய இரண்டு புதிய பாடல்களை இது கொண்டிருந்தது.[63] பில்போர்டு வரிசை வரலாற்றில் ஒரு பெண் கலைஞரின் மிக உயர்ந்த இட அறிமுக சிங்கிளான பெருமையை அக்காலத்தில் “ரெஸ்க்யூ மீ” பெற்றது, பதினைந்தாம் இடத்தில் நுழைந்த இப்பாடல் ஒன்பதாம் இடத்திற்கு உயர்ந்தது.[18] “ஜஸ்டிஃபை மை லவ்” மடோனாவின் ஒன்பதாவது அமெரிக்காவின் முதலிட சிங்கிள் ஆனது. இதனுடைய மியூசிக் வீடியோவில் சேடோமசோகிஸம், பாண்டேஜ்,[64] ஓரினச்சேர்க்கை முத்தம் மற்றும் மெல்லிய நிர்வாணம் ஆகிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன.[65] எம்டிவிக்கு பாலியல்ரீதியாக மிகவும் அப்பட்ட வெளிப்பாடுற்றவையாக இது தோன்றியதால், ஸ்டேஷனில் அது தடை செய்யப்பட்டது.[64] இறுதியில் தி இம்மாகுலேட் கலெக்‌ஷன் வரலாற்றில் ஒரு தனிப்பாடல் கலைஞரின் மிகச் சிறந்த விற்பனைத் தொகுப்பாக சரித்திரம் படைத்தது. RIAA வைர சான்றிதழ் பெற்ற இது இங்கிலாந்தில் ஒரு பெண் கலைஞரின் மிகச் சிறந்த விற்பனை ஆல்பமாக வரிசைப்படுத்தப்பட்டது.[29][66] அந்த ஆண்டினிறுதியில், சர்ச்சையை ஏற்படுத்திய ஜெனிபர் லிஞ்சின் பாக்ஸிங் ஹெலெனா திரைப்படத்தை விட்டு விலக முடிவு செய்தார்.[67][68] 1990 பிற்பகுதி முதல் 1991 ஆரம்ப காலம் வரை, மடோனா டோனி வார்டை டேட் செய்தார்,[69] ஒரு மாடலும் ஆபாச நடிப்பின் நட்சத்திரமாகவும் விளங்கிய அவர் இவரது “செரிஷ்” மற்றும் “ஜஸ்டிஃபை மை லவ்”வுக்கான மியூசிக் வீடியோக்களில் நடித்திருந்தார். ராப் கலைஞரான வெணிலா ஐஸ் உடனும் அவருக்கு எட்டுமாத தொடர்பு இருந்தது.[69] அவரது முதல் ஆவணப் படமான ட்ருத் ஆர் டேர் (வட அமெரிக்காவுக்கு வெளியே இன் பெட் வித் மடோனா என அறியப்பட்டது) 1991 மத்திவாக்கில் வெளியானது. இந்த ஆவணப்படம் அவரது ப்ளான்ட் ஆம்பிஷன் உலகச் சுற்றுப்பயணத்தை காலக்கிரமத்தில் விவரித்ததோடு, அவரது சொந்த வாழ்க்கை குறித்த வெளிச்சத்தையும் கொஞ்சம் காட்டியது.[70] அடுத்த வருடத்தில், எ லீக் ஆஃப் தெய்ர் ஓன் என்னும் பேஸ்பால் திரைப்படத்தில் மே மோர்டபிடோ என்னும் இத்தாலிய அமெரிக்கர் பாத்திரத்தில் தோன்றினார். இந்த படத்தின் கருப் பாடலை அவர் பதிவு செய்தார், “திஸ் யூஸ்டு டு பி மை ப்ளேக்ரவுண்ட்” அவரது பத்தாவது பில்போர்டு ஹாட் 100 முதலிட வெற்றிப் பாடல் ஆனது.[71]

1992–1996: மேவ்ரிக், செக்ஸ் , எரோடிகா , பெட்டைம் ஸ்டோரிஸ் மற்றும் எவிடா வெளியீடு[தொகு]

1992 ஆம் ஆண்டில் மடோனா மேவ்ரிக் என்னும் தனது சொந்த பொழுதுபோக்கு நிறுவனத்தை துவக்கினார், இதில் ஒரு ரெக்கார்ட் நிறுவனம் (மேவ்ரிக் ரெக்கார்ட்ஸ்), ஒரு படத் தயாரிப்பு நிறுவனம் (மேவ்ரிக் ஃபிலிம்ஸ்), மற்றும் இசை வெளியீடு, தொலைக்காட்சி, கிளைவிற்பனை மற்றும் புத்தக வெளியீட்டு பிரிவுகள் இருந்தன. இது டைம் வார்னர் உடனான கூட்டு முயற்சியாகும், 60 மில்லியன் டாலர் மதிப்புள்ள ரெக்கார்டிங்குகள் மற்றும் வர்த்தகங்களின் ஒரு பகுதியாய் இருந்தது. இந்த ஒப்பந்தம் அவருக்கு இருபது சதவீத ராயல்டியை வழங்கியது, இது அச்சமயத்தில் மைக்கேல் ஜாக்சன் பெற்றதற்கு சமமாகும்.[25] இந்த முயற்சியின் முதல் வெளியீடாக மடோனாவின் முதல் புத்தக வெளியீடான செக்ஸ் வெளிவந்தது, இது ஸ்டீவன் மெய்ஸெல் மூலம் எடுக்கப்பட்ட பாலுணர்வைத் தூண்டும் வெளிப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருந்த ஒரு புத்தகமாகும். இது ஊடகங்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியது, ஆனாலும் ஒரு சில நாட்களிலேயே இப்புத்தகம் பிரதி $50 என்கிற விலையில் 1,500,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்தது.[72][73] அதே சமயத்தில், தனது ஐந்தாவது ஸ்டுடியோ ஆல்பமான எரோடிகா வை மடோனா வெளியிட்டார். இந்த ஆல்பம் பில்போர்டு 200 வரிசையில் இரண்டாமிடத்தில் அறிமுகமானது.[73][74] இதன் தலைப்பு பாடல் பில்போர்டு ஹாட் 100 வரிசையில் மூன்றாமிடத்திற்கு உச்சமுற்றது.[34] ”டீப்பர் அன் டீப்பர்,” “பேட் கேர்ள்,”, “ஃபீவர்,”, “ரெய்ன்” மற்றும் “பை பை பேபி” ஆகிய இன்னும் ஐந்து சிங்கிள்களையும் எரோடிகா உருவாக்கியது.[75]

உணர்ச்சி தூண்டும் அவரது படங்கள் பாடி ஆஃப் எவிடென்ஸ் மற்றும் டேஞ்சரஸ் கேம் ஆகிய பாலுணர்வு காட்சிகள் கொண்ட த்ரில்லர் படங்களிலும் தொடர்ந்தது. முதலாவது படத்தில் S&M மற்றும் பாண்டேஜ் காட்சிகள் இருந்ததால் அது விமர்சகர்களிடையே நேர்மறை விமர்சனத்தைப் பெறவில்லை.[76][77] டேஞ்சரஸ் கேம் வட அமெரிக்காவில் நேரடியாய் வீடியோவிற்கு வெளியிடப்பட்டாலும் மடோனாவின் நடிப்பிற்காக சில நல்ல வரவேற்பு விமர்சனங்களையும் பெற்றது ”அவரைச் சுற்றி பொங்கி எழும் உணர்வுகளுக்கு அழகாக அவர் தன்னை அர்ப்பணிக்கிறார்” என்று நியூயார்க் டைம்ஸ் விவரித்தது.[78] 1993 ஆம் ஆண்டின் இறுதியில் தி கேர்ளி ஷோ உலகச் சுற்றுப் பயணத்தில் மடோனா இறங்கினார். இதில் மேலாடை அணியாத நடனக் கலைஞர்கள் சுற்றியிருக்க சாட்டை சுழற்றும் ஆரவல்லி போல் அவர் உடையணிந்து பாடுவதாய் இடம்பெற்றிருந்தது.[79] பூர்டோ ரிகோவில் மேடையிலேயே அந்நாட்டின் கொடியை தன் கால்களுக்கு இடையே கசக்குவது போல் அவர் செய்ததால் அங்கு அந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு கிளம்பியது. இஸ்ரேலில் அவரது முதன்முதல் நிகழ்ச்சிக்கு ஆர்தடாக்ஸ் யூதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.[45] அந்த ஆண்டில், லேட் ஷோ வித் டேவிட் லெடர்மேன் நிகழ்ச்சியிலும் தோன்றினார். லெடர்மேன் அவரை தனது நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தும்போது “உலகின் மிகப்பெரும் நட்சத்திரங்களில் ஒருவர்,
கடந்த 10 வருடங்களில் 80 மில்லியன் ஆல்பங்களுக்கும் மேலாய் விற்றுத் தீர்ந்திருப்பவர்....பொழுதுபோக்குத் துறையின்[80] சில மிகப் பெரும் புள்ளிகளுடன் உறங்கியிருப்பவர்,” என்று அறிமுகம் செய்த பின், மடோனா நான்கு எழுத்து கெட்ட வார்த்தைகளை திரும்ப திரும்ப பிரயோகித்ததாகவும், தனது உள்ளாடைகளை லெட்டர்மேனிடம் கொடுத்து அதனை முகர்ந்து பார்க்க கூறியதாகவும் கூறப்படுகிறது.[81] ட்ருத் ஆர் டேர் வெளியீடு, செக்ஸ் புத்தகம், எரோடிகா , பாடி ஆஃப் எவிடென்ஸ் மற்றும் லெட்டர்மேன் நிகழ்ச்சி - இவை எல்லாம் சேர்ந்து விமர்சகர்கள் மடோனா மீது ஒரு பாலியல்ரீதியாக இடம்மாறிக் கொண்டே இருப்பவர் போன்று கேள்விக் கணைகளை தொடுக்கச் செய்தது. கடுமையான எதிர்மறை பிரபலத்தை அவர் பெற்றார், ”அவர் ரொம்ப அதிகமாய் நடந்து கொண்டு விட்டார்” என்றும் அவரது தொழில் வாழ்க்கை முடிவுக்கு வரப் போகிறது என்றும் அவரது விமர்சகர்களும் ரசிகர்களும் கருத்து தெரிவித்தனர்.[82]

“ஐ’ல் ரிமெம்பர்” சிங்கிளை வெளியிட்டு தனது இந்த பாலுணர்வை தூண்டும் பிம்பத்தை தணிக்க மடோனா முயற்சி செய்தார், இந்த பாடல் அலெக் கெஷிஷியானின் வித் ஹானர்ஸ் என்கிற படத்திற்காக அவர் பதிவு செய்ததாகும்.[83] லெட்டர்மேன் உடன் ஒரு விருது நிகழ்ச்சியிலும் ஒப்புக்கு பங்கேற்ற அவர், ஜே லெனோ நிகழ்ச்சியிலும் தோன்றினார். ஆயினும், அப்படியும் மக்கள் அவரை ஏற்கவில்லை. இதற்குப் பின்னால் தான் நெடுங்காலத்திற்கு தனது தொழில்வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால் தனது இசைத் தொழிலுக்கு சில திடீர் மாற்றங்கள் அவசியம் என்பதை அவர் உணர்ந்தார். தனது ஆறாவது ஸ்டுடியோ ஆல்பமான பெட்டைம் ஸ்டோரிஸில் மடோனா தனது பிம்பத்தை மென்மைப்படுத்தி மீண்டும் சாதாரண பொதுமக்களுடன் இணைத்துக் கொள்ள முயற்சி செய்தார்.[84] இந்த ஆல்பம் பில்போர்டு 200 வரிசையில் மூன்றாம் இடத்தில் அறிமுகமானது, நான்கு சிங்கிள்களை உருவாக்கியது - இவற்றில் “சீக்ரெட்”, “டேக் எ போ” இரண்டும் பில்போர்டு ஹாட் 100 [71] பட்டியலில் ஏழு வாரங்கள் முதலிடத்தில் இருந்தன, “பெட்டைம் ஸ்டோரி” மற்றும் “ஹியூமன் நேச்சர்” ஆகியவை மற்ற இரண்டு.[85] அதே சமயத்தில் உடலமைப்பு பயிற்சியாளரான கர்லோஸ் லியோன் உடன் அவருக்கு காதல் ஏற்பட்டது.[86] தொடர்ந்து தனது பிம்பத்தை மென்மைப்படுத்தும் முயற்சியில், தனது பலட் பாடல்களின் தொகுப்பான, சம்திங் டூ ரிமெம்பரை மே 1995 இல் மடோனா வெளியிட்டார். மர்வின் கயே பாடலான “ஐ வாண்ட் யூ”வுக்கு இவரது கவர் பதிப்பும் டாப் டென் வெற்றிப் பாடலான “யூ’ல் சீ” ஆகியவை இதில் இடம்பெற்றிருந்தன.[87][34] அடுத்த வருடத்தில் மடோனாவின் விமர்சனரீதியாக பெரும் வெற்றி பெற்ற படமான எவிடா வெளிவந்தது.[88] இதில் எவா பெரோன் என்னும் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தார், இந்த பாத்திரத்தில் வெஸ்ட் என்ட் படத்தில் நடித்த எலெய்ன் பெய்ஜ் தான் முதலில் நடிப்பதாய் இருந்தது.[89] இசைத்தட ஆல்பம் அவரது மூன்று சிங்கிள்களை கொண்டிருந்தது, ஆண்ட்ரூ லாய்ட் வெபர் மற்றும் டிம் ரைஸ்க்கு 1997 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான அகாதமி விருதை வென்று தந்த “யூ மஸ்ட் லவ் மீ,” என்னும் பாடல் மற்றும் “டோண்ட் க்ரை ஃபார் மீ அர்ஜென்டினா” ஆகியவை இதில் அடக்கம். ஒரு மியூசிக்கல் அல்லது காமெடியில் சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதை இந்த பாத்திரத்திற்காக மடோனா வென்றார்.[90] அக்டோபர் 14, 1996 இல் மடோனா தனக்கும் கார்லோஸ் லியோனுக்கும் பிறந்த பெண் குழந்தையான லூர்தஸ் மரியா சிக்கோன் லியோனைப் பெற்றெடுத்தார்.[91]

1997-2002, ரே ஆஃப் லைட் , மியூசிக் , இரண்டாம் திருமணம் மற்றும் ட்ரவுன்டு வேர்ல்டு சுற்றுப்பயணம்[தொகு]

லூர்தஸ் பிறந்ததன் பின் மடோனா கிழக்கத்திய புதிர்வாதத்திலும் கபாலாவிலும் ஆர்வமுற்று விட்டிருந்தார். அவரது உணர்வுகள் மற்றும் பிம்பத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை அவரது ஏழாவது ஸ்டுடியோ ஆல்பமான ரே ஆஃப் லைட் பிரதிபலித்தது.[92] இந்த ஆல்பம் அமெரிக்காவில் இரண்டாம் இடத்தில் அறிமுகமானது.[85] ஆல்மியூசிக் இதனை அவரது “மிகுந்த சாகசமுற்ற ரெக்கார்ட்” என்று அழைத்தது.[93] அமெரிக்காவில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பிடித்த இரண்டு சிங்கிள்களை இது உருவாக்கியது: “ஃப்ரோஸன்” இரண்டாமிடத்தையும், “ரே ஆஃப் லைட்” ஐந்தாமிடத்தையும் பிடித்தன.[34] அதே ஆண்டில் மடோனாவுக்கு மூன்று கிராமி விருதுகள் கிட்டின.[94] தலைப்பு பாடலான “ரே ஆஃப் லைட்” இரண்டு கிராமி விருதுகளை “சிறந்த குறுகிய வடிவ மியூசிக் வீடியோ” மற்றும் ”சிறந்த நடனப் பதிவு” ஆகிய பிரிவுகளில் வென்றது, மைக்ரோசாப்டு நிறுவனம் விண்டோஸ் எக்ஸ்பி விளம்பரத்திலும் இதனைப் பயன்படுத்தியது.[62][95] முதலாவது சிங்கிளான “ஃப்ரோஸன்” பெல்ஜிய பாடலாசிரியர் சல்வடோர் அக்வாவிவா 1993 ஆம் ஆண்டில் உருவாக்கிய “மா வை ஃபோ எல்’கேம்ப்” என்னும் பாடலைத் திருடி உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து இந்த ஆல்பம் பெல்ஜியத்தில் தடை செய்யப்பட்டது.[96] ரோலிங் ஸ்டோனின் அனைத்து காலத்திற்குமான 500 மிகச் சிறந்த ஆல்பங்கள் பட்டியலில் ரே ஆஃப் லைட் 363 வது இடம் பிடித்தது.[97] ஆல்பம் தவிர, மியூசிக் ஆஃப் தி ஹார்ட் என்னும் திரைப்படத்தில் ஒரு வயலின் ஆசிரியையாக நடிக்கவும் மடோனா கையெழுத்திட்டிருந்தார், ஆனால் இயக்குநர் வெஸ் க்ராவன் உடன் ஏற்பட்ட “படைப்பு குறித்த கருத்துமோதல்களால்” அந்த படத்திலிருந்து விலகி விட்டார்.[98] ரே ஆஃப் லைட் வெற்றியைத் தொடர்ந்து மடோனாவின் “ப்யூட்டிபுல் ஸ்ட்ரேஞ்சர்” சிங்கிள் வந்தது, இது 1999 திரைப்படமான Austin Powers: The Spy Who Shagged Me ' இன் இசைத் தடத்திற்காக பதிவு செய்யப்பட்டதாகும். ஹாட் 100 வரிசையில் இது பத்தொன்பதாம் இடத்தைப் பிடித்தது, அத்துடன் ”ஒரு மோஷன் பிக்சர், தொலைக்காட்சி, அல்லது பிற காட்சி ஊடகத்திற்காக எழுதப்பட்ட சிறந்த பாடலுக்கான” கிராமி விருதையும் வென்றது.[34][62]

2000வது ஆண்டில் மடோனா தி நெக்ஸ்ட் பெஸ்ட் திங் என்னும் படத்தில் நடித்தார். இந்த படத்தின் இசைத்தடத்திற்கு இரண்டு பாடல்களை அவர் பங்களித்தார், “டைம் ஸ்டுட் ஸ்டில்” மற்றும் சர்வதேச வெற்றிப் படைப்பான “அமெரிக்கன் பை” (இது 1970களின் டான் மெக்லீன் சிங்கிளின் கவர் பதிப்பாகும்) ஆகியவை.[99] தனது எட்டாவது ஸ்டுடியோ ஆல்பமான மியூசிக் ஆல்பத்தை செப்டம்பர் 2000 இல் மடோனா வெளியிட்டார். உலகெங்கிலும் 20க்கும் அதிகமான நாடுகளில் இந்த ஆல்பம் முதலாமிடத்தைப் பெற்றது, அத்துடன் முதல் 10 நாட்களில் 4 மில்லியன் பிரதிகள் விற்றது.[100] அமெரிக்காவில், இது அவரது நான்காவது முதலிட ஆல்பமானது, அத்துடன் பில்போர்டு 200 வரிசையில் முதலிடத்தில் அறிமுகமாகும் அவரது முதலாவது ஆல்பமாகவும் ஆனது.[101] இது மூன்று சிங்கிள்களை உருவாக்கியது; மடோனாவின் பன்னிரண்டாவது அமெரிக்க முதலிட சிங்கிளான “மியூசிக்”, “டோண்ட் டெல் மீ”, மற்றும் “வாட் இட் ஃபீல்ஸ் லைக் ஃபார் எ கேர்ள்” ஆகியவை.[102] பிந்தையதன் மியூசிக் வீடியோவில் மடோனா கொலைகள் செய்வது போலவும் கார்களைக் கொண்டு விபத்துகளை ஏற்படுத்துவது போலவும் விவரிக்கப்பட்டிருந்தது, இதனை எம்டிவி மற்றும் விஎச்1 ஒளிபரப்புவதில் இருந்து தடை செய்தன.[103] அதே வருடத்தில் கை ரிட்சியுடன் இவருக்கு உறவு ஏற்பட்டது, இருவரது பரஸ்பர நண்பர்களான ஸ்டிங் மற்றும் ரிட்சியின் மனைவி ட்ரூடி ஸ்டைலர் ஆகியோர் மூலம் 1999 ஆம் ஆண்டில் ஒருவருக்கொருவர் சந்தித்திருந்தனர். ஆகஸ்டு 11, 2000 இல், ரோகோ என்னும் தங்களது ஆண்குழந்தையை மடோனோ பெற்றெடுத்தார்.[104] அந்த வருடத்தின் பிற்பகுதியில், மடோனாவும் ரிட்சியும் ஸ்காட்லாந்தில் திருமணம் செய்து கொண்டனர்.[105]

1993 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவரது முதலாவதான, ட்ரவுன்டு வேர்ல்டு டூர் என்னும் பெயரிலான அவரது ஐந்தாவது சுற்றுப்பயணக் கச்சேரி மே 2001 இல் துவங்கியது.[45] இந்த பயணக்குழு வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நகரங்களுக்கு பயணம் செய்தது. அந்த ஆண்டின் மிக உயர்ந்த வசூல் கொண்ட கச்சேரி பயணங்களில் ஒன்றாய்[106] அது ஆனது, டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த 47 நிகழ்ச்சிகளில் 75 மில்லியன் டாலர் வசூல் செய்தது.[107] இந்த பயணத்தின் ஹோம் வீடியோ வெளியீட்டுடன் இணைந்த வகையில் தனது இரண்டாவது பெரும் வெற்றிப் பாடல்கள் தொகுப்பான GHV2 ஐயும் மடோனா வெளியிட்டார். இந்த ஆல்பம் பில்போர்டு 200 வரிசையில் ஏழாவது இடத்தில் அறிமுகமானது.[108] தனது கணவர் கை ரிட்சி இயக்கிய ஸ்வெப்ட் அவே என்னும் திரைப்படத்திலும் மடோனா நடித்தார். இது 2002 ஆம் ஆண்டில் வெளியானது. இந்த படம் வர்த்தகரீதியாகவும் விமர்சனரீதியாகவும் தோல்வியைத் தழுவியது, இங்கிலாந்தில் நேரடி வீடியோ படமாக வெளியானது.[109] அதே ஆண்டின் பிற்பகுதியில், தான் ஒரு கவுரவப் பாத்திரம் ஏற்றிருந்த இருபதாவது ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கான “டை அனதர் டே” என்னும் தலைப்பு பாடலை அவர் வெளியிட்டார். இந்த பாடல் பில்போர்டு ஹாட் 100 வரிசையில் எட்டாவது இடத்தை பிடித்தது, அத்துடன் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதுக்கும் மோசமான பாடலுக்கான கோல்டன் ராஸ்ப்பெரி விருதுக்கும் சிபாரிசு செய்யப்பட்டது.[34][110][111]

2003–06: அமெரிக்கன் லைஃப் , கான்ஃபெஷன்ஸ் ஆன் எ டான்ஸ் ஃபுளோர் மற்றும் தத்து வழக்கு[தொகு]

The front profile, up to the waist, of a middle-aged blond woman. She is wearing a white, sleeveless coat and white pants. Her hair is middle-parted and in locks around her face. She is holding a microphone in her right hand while her left hand is placed behind her head. She is smiling looking down. Behind her a video screen is visible whose picture is red.
லைவ் 8 நலநிதிக் கச்சேரியில் மடோனா நிகழ்ச்சியாற்றுகிறார் - ஜூலை 2, 2005.

2003 ஆம் ஆண்டில் நாகரிகக் கலை புகைப்பட நிபுணரான ஸ்டீவன் க்லெய்ன் உடன் இணைந்து X-STaTIC Pro=CeSS என்ற பெயரிலான கண்காட்சியை நிறுவ மடோனா பங்காற்றினார். W மேகசினின் புகைப்பட அமர்வில் இருந்தான புகைப்படங்கள் மற்றும் ஏழு வீடியோ துண்டுகள் இதில் இடம் பெற்றிருந்தன. இந்த கண்காட்சி நியூயார்க்கின் டெய்ட்ஸ் பிராஜக்ட்ஸ் காலரியில் மார்ச் முதல் மே வரை ஓடியது. அதன் பின் திருத்தப்பட்ட வடிவத்தில் உலகெங்கும் பயணம் செய்தது.[112] அமெரிக்கன் லைஃப் என்னும் தனது ஒன்பதாவது ஸ்டுடியோ ஆல்பத்தை மடோனா வெளியிட்டார். அமெரிக்க சமூகத்தை கருப்பொருளாய்க் கொண்டிருந்த இது கலவையான வரவேற்பை பெற்றது.[113] பில்போர்டு ஹாட் 100 பட்டியலில் தலைப்பு பாடல் முப்பத்தி ஏழாவது இடத்தை பிடித்தது.[34] நான்கு மில்லியன் பிரதிகள் விற்ற[114] அமெரிக்கன் லைஃப் ஆல்பம் தான் அவரது தொழில் வாழ்க்கையில் மிகக் குறைவாய் விற்பனையான ஆல்பம் ஆகும்.[115] அந்த ஆண்டின் பிற்பகுதியில், பிரிட்னி ஸ்பியர்ஸ், கிறிஸ்டியனா அகுலெரா மற்றும் மிஸி எலியட் உடன் இணைந்து “ஹாலிவுட்” என்ற பாடலை 2003 எம்டிவி வீடியோ மியூசிக் விருதுகள் நிகழ்ச்சியில் மடோனா செய்தார். இந்த நிகழ்ச்சியின் போது மடோனா ஸ்பியர்ஸ் மற்றும் அகுலெராவை முத்தமிட்டது பிராந்திய சிற்றிதழ்களில் பரபரப்பூட்டியது.[116][117] அந்த இலையுதிர் காலத்தில், ஸ்பியர்ஸின் “மீ எகெய்ன்ஸ்ட் தி மியூசிக்” சிங்கிளுக்கு மடோனா கவுரவக் குரல் அளித்தார்.[118] 2003 கிறிஸ்துமஸ் பருவ சமயத்தில், மடோனா ரீமிக்ஸ்டு & ரீவிசிட்டடு என்னும் ஒரு ரீமிக்ஸ் EPஐ வெளியிட்டார், இதில் அமெரிக்கன் லைஃப் , மற்றும் “யுவர் ஹானஸ்டி”யில் இருந்தான பாடல்களின் ராக் பதிப்புகளும், பெட்டைம் ஸ்டோரிஸ் இசைப்பதிவு அமர்வுகளில் இருந்து முன்னர் வெளிவராத ஒரு தடமும் இதில் இடம்பெற்றிருந்தன.[119] காலவே ஆர்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஐந்து புத்தகங்களுக்கும் மடோனா ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், தி இங்கிலிஷ் ரோசஸ் என்ற பெயரில் முதலாவது புத்தகத்தை வெளியிட்டார். இந்த கதை நான்கு இங்கிலாந்து கல்லூரிமாணவிகள் ஒருவருக்கொருவர் தங்களுக்கிடையே பொறாமை கொள்வது குறித்ததாகும். புத்தகம் வெளியான பின், நியூயார்க் டைம்ஸ் சிறந்த விற்பனைப் பட்டியலில் தி இங்கிலிஷ் ரோசஸ் முதலிடத்திற்கு உயர்ந்தது.[120]

அடுத்த வருடத்தில், மடோனாவும் மேவ்ரிக்கும் வார்னர் மியூசிக் குரூப் மீதும் அதன் முந்தைய தாய் நிறுவனமான டைம் வார்னர் மீதும், வள ஆதாரங்களை தவறாக நிர்வகித்ததும் கணக்கு வழக்குகளை சரியாக பராமரிக்காமலும் நிறுவனத்திற்கு மில்லியன்கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி, வழக்கு தொடர்ந்தனர். மேவ்ரிக் தானே தான் மில்லியன்கணக்கான டாலர்களை இழந்திருந்ததாக வார்னர் பதில்மனு தாக்கல் செய்தது.[121][122] மடோனாவும் ரோனி டஷேவும் கொண்டிருந்த மேவ்ரிக் பங்குகள் வாங்கப்பட்டதை அடுத்து இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டது. அந்த நிறுவனம் முழுமையாக வார்னர் மியூசிக்குக்கு சொந்தமான ஒரு துணைநிறுவனமாய் ஆனது ஆயினும் மடோனா வார்னர் நிறுவனத்துடன் ஒரு தனியான இசைப் பதிவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த நிலையும் தொடர்ந்தது.[121] அந்த வருடத்தின் பிற்பகுதியில், அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவில் ரீ-இன்வென்ஷன் வேர்ல்டு டூர் ஒன்றில் மடோனா இறங்கினார். 2004 ஆம் ஆண்டில் 125 மில்லியன் டாலர் ஈட்டிய இப்பயணம் ஆண்டின் மிக உயர்ந்த வசூல் ஈட்டிய பயணமாக ஆனது.[123] ஐ’ம் கோயிங் டு டெல் யூ எ சீக்ரெட் என்கிற பெயரில் இந்த பயணம் குறித்த ஒரு ஆவணப் படத்தையும் அவர் உருவாக்கினார்.[124] அதே வருடத்திலேயே, ரோலிங் ஸ்டோன் நிறுவனத்தினர் தங்களது “அனைத்து காலத்திற்குமான 100 மாபெரும் கலைஞர்கள்” பட்டியலில் இவருக்கு முப்பத்தி ஆறாவது இடம் அளித்தனர்.[125] 2004 அதிபர் தேர்தலின் போது, வெஸ்லி கிளார்க்கின் ஜனநாயகக் கட்சி பரிந்துரைக்கு மடோனா வழிமொழிந்தார்.[126]

தொலைக்காட்சி கச்சேரியான “சுனாமி உதவி”யில் அவர் பங்கேற்றார், அத்துடன் ஜான் லெனான் பாடலான “இமேஜின்” பாடலின் கவர் பதிப்பிலும் அவர் பாடினார். ஜனவரி 2005 இல் நடந்த இந்த கச்சேரி, ஆசியாவில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டியது.[127] அதே வருடத்தில், லண்டனில் ஜூலையில் நடந்த லைவ் 8 நிதி திரட்டும் கச்சேரியிலும் மடோனா பங்குபெற்றார், பிரிட்டனின் மேக் பாவர்டி ஹிஸ்டரி பிரச்சாரம் மற்றும் குளோபல் கால் ஃபார் ஆக்‌ஷன் எகென்ஸ்ட் பாவர்டி ஆகிய பிரச்சாரத்திற்கு ஆதரவாக இவர் பங்கேற்றார்.[128] அவரது பத்தாவது ஸ்டுடியோ ஆல்பமான, கன்ஃபெஷன்ஸ் ஆன் எ டான்ஸ் ஃபுளோர் நவம்பரில் வெளியானது, அனைத்து பெரிய இசை சந்தைகளிலும் முதலிடத்தில் அறிமுகமானது.[129] “சிறந்த எலெக்ட்ரானிக்/டான்ஸ் ஆல்ப”த்திற்கான கிராமி விருதினை இந்த ஆல்பம் வென்றது.[62] இவரது முந்தைய ஸ்டுடியோ ஆல்பத்திற்கு கலவையான வரவேற்பு கிட்டியிருந்த நிலையில், கன்ஃபெஷன்ஸ் விமர்சகர்களிடம் பாராட்டைப் பெற்றது, அவரது வர்த்தகரீதியான செல்வாக்கை அவர் மீட்டு விட்டதாக விமர்சகர்கள் தெரிவித்தனர்.[130] ஆயினும், ஆல்பத்தின் “இஸாக்” பாடலை இஸ்ரேலிய ரபிக்கள் கண்டனம் செய்தனர், ஏனெனில் ரபி இஸாக் லுரியாவை நினைவு கூரும் விதமாக அமைக்கப்பட்டிருப்பதாக நம்பிய அவர்கள் ரபியின் பெயரை வர்த்தகத்திற்குள் கொண்டு வருவதை யூத சட்டம் தடை செய்திருப்பதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு இஸ்ரேலிய பாடகரின் பெயரில் தான் தான் அவ்வாறு பெயரிட்டதாக மடோனா தெரிவித்தார், “ஆல்பமே இன்னுமே வெளியில் வராத நிலையில், எனது பாடலில் என்ன இருக்கிறது என்பது யூத அறிஞர்களுக்கு எப்படித் தெரியும்?”[131] ஆல்பத்தின் முதல் சிங்கிளான “ஹங் அப்” சாதனையளவாக நாற்பத்தி ஐந்து நாடுகளில் முதலிடத்தை எட்டச் சென்றது.[132] இரண்டாவது சிங்கிளான “ஸாரி” இங்கிலாந்தில் மடோனாவின் பன்னிரண்டாவது முதலிட சிங்கிளானது.[133][134]

2006 மத்தியில், நாகரிக உடை வரிசையான H&M தங்களது உலகளாவிய மாடலாக மடோனாவை ஒப்பந்தம் செய்தது.[135] அடுத்த வருடத்தில், M பை மடோனா என்னும் உடை வரிசை சர்வதேச அளவில் வெளியிடப்பட்டது.[136] மடோனாவின் கன்ஃபஷென்ஸ் பயணம் மே 2006 இல் துவங்கியது. உலகெங்கும் 1.2 மில்லியன் பேர் இதன் ரசிகர்களாயினர், மொத்த வசூல் 260.1 மில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்பட்டது.[137] “லைவ் டூ டெல்” நிகழ்ச்சியில் சிலுவைச் சின்னம் மற்றும் முள் கிரீடம் போன்ற மத அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டதையடுத்து ரஷ்ய ஆர்தோடாக்ஸ் சர்ச்சுகள் மற்றும் ரஷ்யாவின் யூத சமுதாயங்களின் கூட்டமைப்பு ஆகியவை தனது உறுப்பினர்களை மடோனாவின் கச்சேரியைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்தன.[138] வாடிகனும் மற்றும் டுசெல்டோர்ஃப் பிஷப்புகளும் இந்த கச்சேரிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.[139][140] மடோனா பதில் கூறுகையில், “என்னுடைய நிகழ்ச்சி கிறிஸ்தவ விரோதமானதும் அல்ல, புனிதம் கெடுப்பதும் அல்ல, மதத்தை இழிவுபடுத்துவதும் அல்ல. மாறாக மனித குலம் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள வேண்டும் என்பதும் உலகத்தை ஒட்டுமொத்த பிணைப்புற்ற ஒன்றாகக் காண வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்” என்று கூறினார்.[141]

இந்த பயண சமயத்தில், மலாவி பயணம் செய்த மடோனா ரெய்ஸிங் மலாவி முன்முயற்சியின் ஒரு பகுதியாக ஒரு அனாதை இல்லத்திற்கு நிதி திரட்ட உதவினார்.[142] அக்டோபர் 10, 2006 அன்று, அந்த அனாதை இல்லத்தில் இருந்து டேவிட் பாண்டா முவாலே என்ற பெயருடைய ஒரு சிறுவனைத் தத்தெடுப்பதற்கான ஆவணங்களை அவர் தாக்கல் செய்தார். அந்த சிறுவன் டேவிட் பாண்டா முவாலே சிக்கோன் ரிட்சி என்று பெயர் மாற்றப்பட்டான்.[143][144] இந்த தத்தெடுப்பு பொதுமக்களிடையே கடுமையான எதிர்விளைவை ஏற்படுத்தியது, ஏனெனில் மலாவிய சட்டப்படி குழந்தையைத் தத்தெடுக்கும் முன்னதாக ஒருவருடம் அந்த பெற்றோர் மலாவியில் வசித்திருக்க வேண்டும்.[145] இந்த பிரச்சினை பெரும் விளம்பரம் பெற்றதோடு சட்ட மோதல்களில் போய் முடிந்தது.[146] தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோ நிகழ்ச்சியில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மடோனா மறுத்தார். அந்நிய நாட்டினர் தத்தெடுப்பதற்கு மலாவிய நாட்டில் எழுதப்பட்ட எந்த சட்டமும் இல்லை என்றும், தான் பாண்டாவை சந்தித்த போது மலேரியா மற்றும் ஆஸ்துமாவில் இருந்து தப்பித்து நிமோனியாவால் அவன் பாதிப்புற்றிருந்ததாகவும் மடோனா தெரிவித்தார்.[147][148] பாடகரும் மனிதாபிமான ஆர்வலருமான போனோ மடோனாவை ஆதரித்துக் கூறுகையில், “கற்பனை செய்ய முடியாத மோசமான ஒரு வறுமை நிலையில் இருந்து மீள ஒரு சிறுவனுக்கு உதவியதற்காக மடோனா பாராட்டப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.[149] பாண்டாவின் மரபணுத் தந்தை யோஹானேக்கு தத்தெடுப்பது என்றால் என்னவென்றே தெரியவில்லை என்றும் அவர் இந்த ஏற்பாடு வளர்ப்பதற்கு தான் என்று புரிந்து கொண்டிருக்கிறார் என்றும் சிலர் வாதிட்டனர். யோஹானே கூறினார், “இந்த மனித உரிமை ஆர்வலர்கள் என்பவர்கள் என்னை அன்றாடம் தொல்லை செய்கிறார்கள், நான் என்ன செய்கிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை என்று பயமுறுத்துகிறார்கள்.” ”அவர்களது நீதிமன்ற வழக்கில் அவர்களை ஆதரிக்க அவர்கள் வற்புறுத்துகிறார்கள், மடோனா மற்றும் அவரது கணவருக்கு வாக்கு கொடுத்திருக்கும் நான் அவ்வாறு செய்ய முடியாது” என்றும் அவர் தெரிவித்தார்.[150] இத்தத்தெடுப்பு மே 28, 2008 அன்று இறுதி செய்யப்பட்டது.[151]

2007- தற்போது வரை: லைவ் நேஷன், ஹார்டு கேண்டி , மற்றும் ஸ்டிக்கி & ஸ்வீட் டூர்[தொகு]

2008 டிரிபெகா திரை விழாவில் ஐ ஆம் பிகாஸ் வீ ஆர் பிரீமியரில் மடோனாவும் இயக்குநர் நாதன் ரிஸ்மேனும்

மே 2007 இல், லைவ் எர்த் கச்சேரி வரிசைகளுக்கான முன்னோட்டமாக பதிவிறக்கத்திற்கு மட்டுமான “ஹே யூ” என்கிற பாடலை மடோனா வெளியிட்டார். அதன் முதல் வாரத்தில் இந்த பாடல் இலவசமாகவே கிடைத்தது. அதனை ஜூலை 2007 இல் லண்டன் லைவ் எர்த் கச்சேரியிலும் மேடைநிகழ்ச்சியாக செய்தார்.[152] வார்னர் பிரதர்ஸ் ரெக்கார்ட்ஸில் இருந்து தான் விலகுவதை அறிவித்த மடோனா, அக்டோபரில் லைவ் நேஷனுடன் ஒரு புதிய 120 மில்லியன் டாலருக்கான பத்தாண்டு கால ஒப்பந்தம் செய்ய இருப்பதையும் தெரிவித்தார். லைவ் நேஷன் ஆர்டிஸ்ட்ஸ் என்கிற புதிய இசைப் பிரிவுக்கு ஸ்தாபக பதிவுக் கலைஞராக அவர் ஆனார்.[153] அதே ஆண்டில், ராக் அன் ரோல் ஹால் ஆஃப் ஃபேம் மடோனாவை 2008 ஆம் ஆண்டின் ஐந்து சேர்ப்பு உறுப்பினர்களில் ஒருவராக அறிவித்தது.[154] இந்த விழா மார்ச் 10, 2008 இல் நடைபெற்றது.[155] மலாவியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த ஐ ஆம் பிகாஸ் வீ ஆர் என்கிற ஒரு ஆவணப் படத்தை மடோனா எழுதி தயாரித்தார். இந்த ஆவணப்படத்தை அவரது முன்னாள் தோட்ட பராமரிப்பாளரான நாதன் ரிஸ்மேன் இயக்கினார். ஐ ஆம் பிகாஸ் வீ ஆரை தி கார்டியன் புகழ்ந்து எழுதியது, அவர் “வந்தார், பார்த்தார், உலகின் மிகப் பெரிய திரைப்பட விழாவை வெற்றி கொண்டார்” என்று அது கூறியது.[156][157] ஃபில்த் அன் விஸ்டம் என்கிற தனது முதல் படத்தையும் அவர் இயக்கினார். பிரித்தானிய ஊடகங்களில் இப்படம் கலவையான வரவேற்பைப் பெற்றது. மடோனா “தனக்குப் பெருமிதம் தேடிக் கொண்டிருப்பதாய்” தி டைம்ஸ் எழுதியது, தி டெய்லி டெலகிராபோ , “பெரிதாய் உறுதியளிக்குமளவுக்கான முதல் முயற்சி அல்ல என்றாலும் மடோனா தன்னுடைய அன்றாட வேலையை தொடர்ந்து நன்றாகவே செய்வார்” என்று எழுதியது.[158][159]

மடோனா ஹார்டு கேன்டி என்னும் தனது பதினொன்றாவது ஸ்டுடியோ ஆல்பத்தை ஏப்ரல் 2008 இல் வெளியிட்டார். “வரவிருக்கும் அவரது சுற்றுப்பயணத்தின் ஒரு கவரத்தக்க சுவை” என்று ரோலிங் ஸ்டோன் அதனைப் பாராட்டியது.[160] பில்போர்டு 200 உட்பட உலகெங்கிலும் 37 நாடுகளில் முதலிடத்தில் இந்த ஆல்பம் அறிமுகமானது, 280,000 பிரதிகளுக்கும் அதிகமாய் விற்றுத் தீர்ந்தது.[161][162] உலகெங்கிலும் இந்த ஆல்பம் பெரும்பாலும் நேர்மறை விமர்சனங்களைப் பெற்றது என்றாலும் சில விமர்சகர்கள் இதனை,[163] “நகரச் சந்தையை சுரண்டும் முயற்சி” என்று வர்ணித்தனர்.[164] இதன் தலைமை சிங்கிளான “4 மினிட்ஸ்” பில்போர்டு ஹாட் 100 பட்டியலில் மூன்றாம் இடத்தை எட்டிப் பிடித்தது.[34] இந்த சிங்கிள் மடோனாவுக்கு அவரது முப்பத்தி ஏழாவது பில்போர்டு ஹாட் 100 டாப் டென் வெற்றியை ஈட்டித் தந்தது, இதன்மூலம் மிக அதிக டாப் டென் வெற்றிகளை ஈட்டிய கலைஞராக எல்விஸ் ப்ரெஸ்லியின் சாதனையை இவர் கடந்தார்.[165] இங்கிலாந்தில், ஒரு பெண் கலைஞருக்கான மிக அதிக எண்ணிக்கையிலான முதலிட சிங்கிள்கள் என்னும் சாதனையை இவர் தக்க வைத்துக் கொண்டார், அந்த வகையில் இது அவரது பதின்மூன்றாவதாக அமைந்தது.[166] இந்த ஆல்பத்திற்கு இன்னும் விளம்பரம் கூட்டுவதற்காக, ஸ்டிக்கி & ஸ்வீட் டூரில் மடோனா இறங்கினார், இது தான் லைவ் நேஷன் உடனான அவரது முதல் பெரிய முயற்சியாக இருந்தது. ஒரு தனிக் கலைஞர் மூலம் மிகப் பெரும் வசூலை ஈட்டி வரலாற்று சாதனை படைத்த பயணமாக அது அமைந்தது, 280 மில்லியன் டாலர்கள் வசூல் செய்து முன்னர் கன்ஃபெஷன்ஸ் பயணத்தின் மூலம் செய்த சாதனை கடக்கப்பட்டது.[167][168] இந்த பயணம் அடுத்த ஆண்டும் நீட்டிக்கப்பட்டது, முன்னர் மடோனா சென்றிராத ஐரோப்பிய இடங்கள் சேர்க்கப்பட்டன, இறுதியில் இரண்டு இறுதி டெல் அவிவ் தேதிகளுடன் முடிக்கப்பட்டது.[169] மொத்த பயணத்தின் மூலம் வசூலானது 408 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.[170]

மடோனாவின் சகோதரர் கிறிஸ்டோபர் சிக்கோன் எழுதிய, லைஃப் வித் மை சிஸ்டர் மடோனா என்னும் சர்ச்சைக்குரிய ஒரு புத்தகம் ஜூலையில் வெளியானது. நியூயார்க் டைம்ஸ் சிறந்த விற்பனை பட்டியலில் இந்த புத்தகம் இரண்டாமிடத்தில் அறிமுகமானது.[171] மடோனாவிடம் அங்கீகாரம் பெறாத இந்த புத்தகம் அவர்கள் இருவருக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது.[172] மடோனா அக்டோபர் 2008 இல் தனது கணவர் கை ரிட்சியிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.[173] முதல்கட்ட விவாகரத்து தீர்ப்பு வழங்கப்பட்டதன் பிறகு,[174] இந்த பிரிவு டிசம்பரில் இறுதி செய்யப்பட்டது.[175] மார்ச் 2, 2009 இல் அந்த ஆண்டுக்கான ஜப்பான் கோல்டு இன்டர்நேஷனல் ஆர்டிஸ்ட் விருது அவரது ஹார்டு கேன்டி ஆல்பத்திற்காக ரெக்கார்டிங் இன்டஸ்ட்ரி அசோசியேசன் ஆஃப் ஜப்பான் கோல்டு டிஸ்க் விருதுகள் விழாவில் வழங்கப்பட்டது.[176] மடோனா மீண்டும் மலாவியில் இருந்து தத்தெடுக்க தீர்மானித்தார். நாட்டின் உயர்நீதி மன்றம் ஆரம்பத்தில் சிஃபண்டோ “மெர்ஸி” ஜேம்ஸை தத்தெடுப்பதற்கு ஒப்புதலளித்தது.[177] ஆயினும் அந்த தத்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது, மடோனா மலாவியில் வசிக்கவில்லை என்பதை நீதிமன்ற பதிவாளர் கென் மண்டா காரணமாய் தெரிவித்தார்.[178] இந்த தீர்ப்பு நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் தலைகீழானது. ஜூன் 12, 2009 இல் மலாவி உச்ச நீதிமன்றம் மெர்ஸி ஜேம்ஸை தத்தெடுக்க மடோனாவுக்கு உரிமையுள்ளதாய் தீர்ப்பளித்தது.[179]

செப்டம்பர் 2009 இல், மடோனா செலிப்ரேஷன் என்னும் அவரது மூன்றாவது மிகப்பெரிய வெற்றிகளின் தொகுப்பு ஆல்பம், மற்றும் வார்னர் பிரதர்ஸ் ரெக்கார்ட்ஸ் உடன் நிறைவு செய்யும் ஆல்பத்தை வெளியிட்டார். இதில் “செலிப்ரேஷன்” மற்றும் “ரிவால்வர்” (லில் வேய்ன் பங்கேற்றது) ஆகிய புதிய பாடல்களும், மற்றும் அவரது தொழில்வாழ்க்கை காலம் முழுவதிலும் உருவாக்கியிருந்த 34 வெற்றிப் பாடல்களும் இடம்பெற்றிருந்தன.[180] இந்த ஆல்பம் இங்கிலாந்து ஆல்ப வரிசையில் மடோனாவின் ஒன்பதாவது முதலிட ஆல்பமானது, இதன் மூலம் பிரித்தானிய இசை வரலாற்றில் மிக அதிக முதலிட ஆல்பங்களை வழங்கிய தனிக் கலைஞராக எல்விஸ் ப்ரெஸ்லி உடன் அவரும் இணைந்து கொண்டார்.[181] ஜூன் மாதத்தில், அந்த ஆண்டின் மூன்றாவது மிக சக்திவாய்ந்த பிரபலமாக அவரை ஃபோர்ப்ஸ் இதழ் அறிவித்தது.[182] செப்டம்பர் 13, 2009 இல் மைக்கேல் ஜாக்சனுக்கு உரையுடன் அஞ்சலி செலுத்தும் 2009 எம்டிவி வீடியோ மியூசிக் விருதுகள் நிகழ்ச்சியில் மடோனா பங்கேற்றார்.[183]

மடோனா தனது பன்னிரண்டாவது ஸ்டுடியோ ஆல்பமாக, 2008 ஹார்டு கேன்டி யின் தொடர்ச்சி வரிசைப் படைப்பில் வேலையைத் துவக்கியுள்ளார், அத்துடன் ராப் தயாரிப்பாளர் A-ட்ராக் மற்றும் ராக் தயாரிப்பாளர் பிரெண்டான் ஓ’ப்ரியன் ஆகியோரது உதவியையையும் பட்டியலிட்டுள்ளார். 1980களில் Run–D.M.C. அளித்த வாக் திஸ் வே ராப்/ராக் வெற்றிப் படைப்பை விஞ்சி வெற்றி காணும் நம்பிக்கையுடன் அவர் உழைத்து வருவதாகக் கூறப்படுகிறது, அத்துடன் கனமான கிதார் இசையுடன் பரிசோதனை பண்ணிப் பார்க்கும் ஆர்வமுற்று கிதார் இசைக் கருவியில் தேர்ச்சி பெற நேரம் செலவிட்டுள்ளார்.[184]

இசை பாணியும் பாதிப்புகளும்[தொகு]

ஒரு கலைஞராக, மடோனாவின் இசை விமர்சகர்களிடையே கடுமையான ஆய்வுக்குட்பட்டதாய் இருந்து வந்திருக்கிறது. கான்டெம்ப்ரரி ஸ்ட்ராடஜி அனலிசிஸ் (2005) என்கிற தனது புத்தகத்தில் அதன் ஆசிரியர் ராபர்ட் எம்.கிராண்ட் கூறுகையில் மடோனாவுக்கு வெற்றி தேடித் தந்தது “நிச்சயமாக அவரது பிறவித் திறன் அல்ல. ஒரு பாடல் கலைஞராக, இசைக் கலைஞராக, பாடலாசிரியராக, அல்லது நடிகையாக, மடோனாவின் திறமைகள் சிறந்தவை என்கிற அளவில் தான் இருக்கின்றன” என்கிறார்.[185] மடோனாவின் வெற்றி அவர் பிறரது திறமைகளில் நம்பிக்கை கொள்வதில் தான் அடங்கியிருப்பதாக உறுதிபடக் கூறும் இந்த ஆசிரியர், அவரது தொழில்வாழ்க்கையை மறுகண்டறிவு செய்வதில் அவரது அந்தரங்க உறவுகள் மைல்கற்களாக சேவையாற்றியிருப்பதாகக் குறிப்பிடுகிறார்.[185] இதற்கு மாறாக ரோலிங் ஸ்டோனோ மடோனா “ஹூக்குகள் மற்றும் அழிக்கவியலாத பாடல்வரிகளை வரப் பிரசாதமாய் பெற்ற ஒரு அற்புத பாடலாசிரியர், அத்துடன் அவரது நேரலை அதிசயங்கள் சான்றளிப்பதைக் காட்டிலும் ஒரு மேம்பட்ட ஸ்டுடியோ பாடகர்” என்கிறது.[186] அவர் ஒரு “கனமான பாடல் திறமைசாலி” அல்ல என்றாலும் “காற்றினும் மெல்லிய பாடல்களைப் பாடுவதற்கான செதுக்கிய வாய்ப்பாட்டு கலைஞர்” என்று அழைக்கப்படுகிறார்.[187]

1985 ஆம் ஆண்டில், தன்னை முதன்முதலில் வலிமையாய் கவர்ந்த பாடலாக நான்சி சினட்ராவின் “தீஸ் பூட்ஸ் ஆர் மேட் ஃபார் வாக் இன்” பாடலை மடோனா குறிப்பிட்டார், அதுவே அவரது “தலைமையேற்கும் மனோபாவத்தை” சுருங்கக் கூறுவதாய் அமையும் என்றும் தெரிவித்தார்.[188] ஒரு இளம் பெண்ணாக இலக்கியம், கலை, மற்றும் இசை ஆகிய துறைகளில் தனது ஆர்வத்தை விரிவாக்க அவர் முயற்சி கொண்டார், இந்த சமயத்தில் தான் அவருக்கு மரபு இசையில் ஆர்வம் பிறந்தது. தனக்கு பிடித்தமான பாணி பரோக் என்று குறிப்பிட்ட அவர், மோசார்ட் மற்றும் சோபின் மிகவும் பிடிக்கும் ஏனெனில் அவர்களது “பெண்மை பண்பு” தனக்கு பிடித்தமாய் அமைந்திருந்தது என்று தெரிவித்தார்.[189] 1999 ஆம் ஆண்டில், தன் மீது பாதிப்பை ஏற்படுத்திய காரென் கார்பென்டர், தி சுப்ரீம்ஸ் மற்றும் லெட் ஸெப்லின் போன்ற இசைக்கலைஞர்களையும், மார்தா கிரஹாம் மற்றும் ருடோல்ப் நுரெயெவ் ஆகிய நடனக் கலைஞர்களையும் மடோனா அடையாளம் காட்டினார்.[190] தி அப்சர்வருக்கு 2006 ஆம் ஆண்டில் அளித்த பேட்டியின் போது, மடோனா தற்போதைய இசை விருப்பங்களையும் அடையாளம் காட்டினார், டெட்ராயிட் குழுவினரான தி ரகோன்டிர்ஸ் மற்றும் தி ஒயிட் ஸ்ட்ரைப்ஸ், மற்றும் நியூயார்க் குழுவான தி ஜெட் செட் ஆகியவை இதில் அடக்கம்.[191]

மடோனாவின் கத்தோலிக்க பின்புலமும் அவரது பெற்றோருடன் அவருக்கிருந்த உறவும் லைக் எ பிரேயர் ஆல்பத்தில் பிரதிபலித்தது.[192][193] அவரது தொழில்வாழ்க்கையில் மதம் கொண்டிருந்த பாதிப்பை நினைவுகூருவதாகவும் அது இருக்கிறது.[194] தலைப்பு இசைத் தடத்திற்கான அவரது வீடியோவில் ஸ்டிக்மாடா போன்ற கத்தோலிக்க அடையாளங்கள் இடம்பெற்றிருந்தன. தி வர்ஜின் டூர் சமயத்தில், இவர் ஒரு ஜபமாலையை அணிந்திருந்தார் என்பதோடு “லா ஐலா போனிடா”வுக்கான மியூசிக் வீடியோவில் அதனைக் கொண்டு பிரார்த்தனையும் செய்தார்.[195] தன்னுடைய வேலையிலும் தனது இத்தாலிய பாரம்பரியத்தை அவர் குறிப்பிடுகிறார். “லைக் எ வர்ஜின்” வீடியோ வெனிசிய அமைப்பு அம்சங்களைக் கொண்டிருந்தது.[196] “ஓபன் யுவர் ஹார்ட்” வீடியோவில் அவரது பாஸ் அவரை இத்தாலிய மொழியில் திட்டுவதைக் காணலாம். அவரது ஹூஸ் தேட் கேர்ள் பயணத்தின் வீடியோ வெளியீடு சியோ, இத்தாலியா! - லைவ் ஃபிரம் இத்தாலி யில் “பாபா டோண்ட் ப்ரீச்” என்கிற பாடலை அவர் போப்புக்கு அர்ப்பணித்தார் (”பாபா” என்பது “போப்” என்பதற்கான இத்தாலிய வார்த்தையாகும்.) [197]

தனது இளமைப்பருவத்தில், மடோனா நடிகர்கள் மீது மிகுந்த அபிமானமுற்றவராய் இருந்தார், அவர் பின்னாளில் இவ்வாறு கூறினார்: “கரோல் லோம்பார்ட், ஜூடி ஹோலிடே மற்றும் மர்லின் மன்றோ ஆகியோர் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர்கள் அனைவரும் நம்ப முடியாத அளவு உற்சாகமாய் இருப்பார்கள்....அவர்களில் நான் என்னையே கண்டேன்....எனது பெண்பிள்ளைத்தனத்தை, எனது அறிவை, மற்றும் எனது அப்பாவித்தனத்தை”.[188] மடோனாவின் “மெட்டீரியல் கேர்ள்” மியூசிக் வீடியோ ஜென்டில்மேன் ப்ரஃபர் ப்ளான்டெஸ் படத்தில் மன்றோவின் “டையமண்ட்ஸ் ஆர் எ கேர்ள்’ஸ் பெஸ்ட் ஃபிரண்ட்” என்பதில் இருந்து மறு உருவாக்கம் செய்ததாகும், பின்னாளில் தனது ஹூஸ் தேட் கேர்ள் படத்திற்கு தயாரித்துக் கொண்டிருந்த சமயத்தில் 1930களின் ஸ்க்ரூ பால் நகைச்சுவைகளை, அதிலும் குறிப்பாக லோம்பார்டின் நகைச்சுவையை, ஆய்வு செய்தார். ”எக்ஸ்பிரஸ் யுவர்செல்ஃப்”க்கான (1989) வீடியோ ஃப்ரிட்ஸ் லேங்கின் ஊமைப் படமான மெட்ரோபோலிஸ் (1927) பாதிப்பில் உருவானதாகும். ”வாக்” வீடியோ ஹாலிவுட் கவர்ச்சி புகைப்படக் கலைஞர்களின், குறிப்பாக ஹோர்ஸ்ட் பி. ஹோர்ஸ்டின், பாணியை மறு உற்பத்தி செய்ததோடு மர்லீன் டயட்ரிச், கரோல் லோம்பார்டு மற்றும் ரீடா ஹேவோர்த் ஆகியோரின் போஸ்களை பின்பற்றிய வகையில் அமைந்திருந்தது, பாடல் வரிகளில் மடோனாவைக் கவர்ந்த,[198] பெட் டேவிஸ் (இவரை மடோனா ஒரு சின்னமாக வர்ணித்தார்), லூயிஸ் ப்ரூக்ஸ் மற்றும் டீடா பார்லோ ஆகியோர் உள்ளிட்ட, பல நட்சத்திரங்களின் பெயர்கள் இடம்பெற்றன.[199]

கலை உலகில் இருந்தும் அவரைப் பாதித்தவை உண்டு, குறிப்பாக ஓவியர் ஃப்ரிதா கஹ்லோவின் படைப்புகள் அவரைப் பாதித்தன.[200] “பெட்டைம் ஸ்டோரி”க்கான அவரது மியூசிக் வீடியோ கஹ்லோ மற்றும் ரெமெடியோஸ் வரோவின் ஓவியங்களைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட படங்களைக் கொண்டிருந்தது.[201]ஹாலிவுட்”டுக்கான அவரது 2003 வீடியோ புகைப்படக் கலைஞரான கை போர்டினது படைப்புகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையாய் அமைந்தது, ஆயினும் போர்டினது மகன் வழக்கு தொடுக்க இது இட்டுச் சென்றது, தனது தந்தையின் படைப்பு அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருப்பதாய் அவர் வழக்கு தொடுத்திருந்தார்.[202] ஆன்டி வரோல் போன்ற மற்ற புதுயுக ஓவியர்கள் “எரோடிகா” மற்றும் “டீப்பர் அன் டீப்பர்” ஆகியவற்றின் மியூசிக் வீடியோக்களுக்கு முன்மாதிரியாய் எடுத்துக் கொள்ளப்பட்டனர். தனது திரைமறைவுப் படங்களில் வர்ஹோல் பயன்படுத்திய S&M சித்திரங்கள் இந்த வீடியோக்களில் பிரதிபலித்தன. வர்ஹோலுக்கு ஒரு காலத்தில் கலை தேவதையாய் திகழ்ந்த எடி செட்க்விக்கையும் கூட மடோனா தனது “டீப்பர் அன் டீப்பரில்” எதிரொலித்தார்.[203]

1994 ஆம் ஆண்டில் தனது பெட்டைம் ஸ்டோரிஸ் ஆல்பம் வெளியீட்டிற்குப் பிறகு கபாலா யூத புதிர்வாத பள்ளியின் சீடராக மடோனா மாறினார். இந்த மதம் தன் மீது ஏற்படுத்திய பாதிப்பு குறித்து பேசியிருக்கும் இவர் நியூயார்க் மற்றும் லண்டனைச் சுற்றி அமைந்திருக்கும் இந்த மதப் பள்ளிகளுக்கு மில்லியன்கணக்கான டாலர்களை நன்கொடை அளித்துள்ளார்.[204][205] 2004 ஆம் ஆண்டில், தனது பெயரை எஸ்தர் என்று இவர் மாற்றிக் கொண்டார், ஹூப்ரூ மொழியில் இதன் பொருள் “நட்சத்திரம்” என்பதாகும்.[204] ஆயினும் கபாலாவில் அவர் மூழ்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது, ரபிக்களிடம் இருந்து அவர் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருந்தது, அவர்கள் மடோனா அந்த மதத்தில் சேர்ந்ததை அவமதிப்பாகவும் பிரபலங்களின் பொழுதுபோக்கு விளையாட்டுத்தனமாகவும் கண்டனர்.
மடோனா தனது கபாலா ஆய்வுகளை பாதுகாத்து பேசினார், “நான் நாஜி கட்சியில் சேர்ந்திருந்தால் கூட அது குறைவான சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும்” என்று தெரிவித்த அவர் கபாலா “யாரையும் புண்படுத்துவதில்லை” என்று கூறினார்.[206] இந்த மதம் மடோனாவின் இசையில் பாதிப்பை ஏற்படுத்தும் அளவு சென்றது, குறிப்பாக ரே ஆஃப் லைட் மற்றும் மியூசிக் போன்ற ஆல்பங்களில். அவரது 2004 மறுகண்டுபிடிப்பு சுற்றுப்பயணத்திலும் இது தோற்றமளித்தது, இச்சமயத்தில் நிகழ்ச்சியின் ஒரு சமயத்தில், மடோனாவும் அவரது நடனக் கலைஞர்களும் “கபாலாவாதிகள் மேம்படத் திகழ்கின்றனர்” என்கிற டி-சர்ட்டுகளை அணிந்திருந்தனர்.[204]

மியூசிக் வீடியோ மற்றும் நேரலை நிகழ்ச்சி[தொகு]

வேறு எந்த சமீபத்திய பாப் கலைஞரை விடவும், மடோனா எம்டிவி மற்றும் மியூசிக் வீடியோக்களை தனது பிரபலத்தை நிலைநாட்டுவதற்கும் தனது பதிவு வேலைகளை மேம்படுத்துவதற்கும் சிறப்பாக பயன்படுத்தியுள்ளதாக தி மடோனா கம்பேனியனில் வாழ்க்கை சரித ஆசிரியர் ஆண்ட்ரூ மெட்ஸ் குறிப்பிட்டார்.[207] அவரது பல பாடல்களும் மியூசிக் வீடியோவை வலிமையான பொருளில் கொண்டிருக்கின்றன என்பது அவரது கருத்து. ”பாபா டோண்ட் ப்ரீச்”, “லைக் எ ப்ரேயர்” அல்லது “ஜஸ்டிஃபை மை லவ்” போன்ற மிகவும் விவாதத்திற்குள்ளான பாடல்கள் மீதான ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்வினையானது, அந்த பாடல்களைக் காட்டிலும் அந்த பாடல்களை விளம்பரப்படுத்த உருவாக்கப்பட்ட மியூசிக் வீடியோக்கள் குறித்து தான் அதிகமாய் இருந்தது.[207] அவரது ஆரம்ப மியூசிக் வீடியோக்கள் அமெரிக்கன் மற்றும் ஹிஸ்பானிக் கலந்த வீதி பாணியையும் ஒரு பொலிவூட்டிய கவர்ச்சியையும் பிரதிபலித்தன. அடிப்படையில் ஒரு நடனக் கலைஞரான மடோனா இந்த பிம்பத்தை தனது மியூசிக் வீடியோக்கள் மூலம் வெளிப்படுத்தினார்.[207] “பர்னிங் அப்”, “பார்டர்லைன்” மற்றும் “லக்கி ஸ்டார்” போன்ற பாடல்களுக்கான அவரது முதல் உண்மையான மியூசிக் வீடியோக்கள் மூலம் மடோனா தனது முன்னேறிய டவுன்டவுன் நியூயார்க் நாகரிக உணர்வை அமெரிக்க ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தார்.[208] ட்ரூ ப்ளூ காலம் முதலான மியூசிக் வீடியோக்களில் இந்த பிம்பம் மற்றும் ஹிஸ்பானிக் கலாச்சாரம் மற்றும் கத்தோலிக்க அடையாளத்தை உட்சேர்ப்பதை அவர் தொடர்ந்தார்.[209] ஆசிரியர் டக்ளஸ் கெல்னர் குறிப்பிட்டார்: “இத்தகைய “பலகலாச்சாரத் தன்மை” மற்றும் அவரது கலாச்சாரரீதியாக அத்துமீறும் செயல்கள் ஆகியவை மிகவும் வெற்றிகரமானவையாக அமைந்து அவரை மிகப்பெரிய பல்தரப்பட்ட இளம் ரசிகர்களுக்கு நெருக்கமாய் கொண்டு சென்றது”.[210] வீடியோக்களில் மடோனாவின் ஸ்பேனிய தோற்றம் பிரபலமுற்றதோடு அந்த சமயத்தில், வீடியோவில் இருப்பது போல் போலிரோக்கள் மற்றும் மாலைமணிகள் மற்றும் சிலுவை கொண்டு அலங்கரிக்கப்பட்ட அடுக்கு ஸ்கர்ட்டுகள் ஆகியவை எல்லாம், நாகரிக பாணியாக ஆனது.[211][212]

தனது வீடியோக்களின் துணை கொண்டு, ஆண் வழக்கமாக ஆதிக்கம் செலுத்தும் பாலாக இருப்பதை நுட்பமாக மடோனா மாற்றுகிறார் என்றும், “வெறியுற்ற ஆண் பார்வைக்கும் பொருளுக்கும்”இடையிலான வழக்கமான அதிகார உறவுமுறையை ஸ்திரம் குலையச் செய்கிறார் என்றும் சித்தாந்தவாதிகள் குறிப்பிட்டனர்.[213] இந்த அடையாளமும் பிம்பமும் தான் அநேகமாய் “லைக் எ ப்ரேயர்”க்கான மியூசிக் வீடியோவில் மிக நிறைந்து காணப்பட்டதாய் இருந்தது. இந்த வீடியோவில் ஆப்பிரிக்க அமெரிக்க சர்ச் இசைக்குழு ஒன்று இருக்கும், மடோனா கறுப்பு துறவி ஒருவரின் சிலையை ”சூடேற்றிக் கொண்டிருப்பார்”, எரியும் சிலுவைகளுக்கு முன்னால் நின்று பாடிக் கொண்டிருப்பார். புனித விஷயங்களுடன் தவறான விஷயங்களை கலந்த இந்த கலவை வாடிகனை அதிருப்தியுறச் செய்தை அடுத்து பெப்சி விளம்பரத்தை திரும்பப் பெறல் நிகழ்ந்தது.[214] ஆரம்ப கால வீடியோக்களில் பாய்-டாய் பெண்மையுடனான பாத்திரங்கள் முதல் “ஜஸ்டிஃபை மை லவ்” மற்றும் “எக்ஸ்பிரஸ் யுவர்செல்ஃப்” க்கான செக்சுவல் ஆளுமை வரை, மடோனா தன்னை தான் கடந்து வந்த கலாச்சாரங்கள் மற்றும் போராட்டங்களால் கலக்கம் கொள்ளாத ஒரு பெண்ணாகவே பிரதிநிதித்துவப்படுத்தினார். இது இல்லாமல், அவர் தன்னை வீடியோவின் நிறைவிலான இசைக்கு திரையை விட்டு விலகி நடனமாடுவதாகவே சித்தரித்துக் கொண்டார்.[215] அவரது மறுகண்டுபிடிப்பு அவரது “ரே ஆஃப் லைட்” போன்ற மிக சமீபத்திய வீடியோக்களில் தொடர்ந்திருக்கிறது, 1998 எம்டிவி வீடியோ மியூசிக் விருதுகள் விழாவில் அந்த ஆண்டின் சிறந்த வீடியோ விருதுடன் அந்த வீடியோ பாராட்டப் பெற்றது.[216]

எம்டிவி செழித்ததொரு காலத்தில் மடோனாவின் எழுச்சியும் நிகழ்ந்தது, “ஏறக்குறைய தன் உதடு-ஒத்தசையும் வீடியோக்களுடன், சராசரி இசை ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் நாளின் பல மணி நேரங்களை பாடகர்கள் வெறும் அந்த வார்த்தைகளுக்கு வாயை மட்டும் அசைப்பதை ரசிக்க செலவிட்டு மகிழ்ந்ததொரு காலத்தில் அதுசெழித்தது.”[217] மியூசிக் வீடியோவுக்கும் உதட்டு ஒத்திசைவுக்கும் இடையிலமைந்த ஒரு இனிய உறவு தான் மியூசிக் வீடியோவின் அற்புதத்தையும் பிம்பத்தையும் நேரலை மேடை நிகழ்ச்சிகளுக்கு மாற்றுவதற்கான விருப்பத்திற்கு இட்டுச் சென்றது. தி நியூயார்க் டைம்ஸ் இதழின் கிறிஸ் நெல்சன் தெரிவிக்கிறார்: மடோனா மற்றும் ஜேனெட் ஜாக்சன் போன்ற கலைஞர்கள்,விரிவான ஆடையமைப்புகள் மட்டுமன்றி துல்லியமான மேடைத் தந்திரங்கள் மற்றும் ஓடியாடி இயங்கும் நடனம் ஆகியவை அடங்கிய கச்சேரிகள் மூலம், மேடை நிகழ்ச்சிக்கு புதிய அளவு நிர்ணயங்களை உருவாக்கித் தந்திருக்கின்றனர். நேரலையாக பாடுவதை விலையாகக் கொடுத்துத் தான் இந்த விளைவுகள் வந்தன."[217] டலாஸ் மார்னிங் நியூஸின் தோர் கிறிஸ்டென்சென் கூறுகையில், மடோனா தனது 1990 ப்ளாண்டெ ஆம்பிஷன் டூர் சமயத்தில் உதட்டு ஒத்தசைவுக்கு பெயர்பெற்றவராய் புகழ் சம்பாதித்தார் என்கிற அதே சமயத்தில் அப்போது முதல் அவர் தனது மேடை நிகழ்ச்சிகளில் எவ்வாறு மறுஒழுங்கு அமைத்துக் கொண்டார் என்றால், “தனது மிகக் கடினமான பாடல் பகுதிகளின் சமயத்தில்..... பெரும்பாலும் இருந்த இடத்தில் நின்று கொண்டு தனது பின்புலக் குழுவிடம் நடனத்தை விட்டு விடுவார்......இரண்டையும் ஒரே சமயத்தில் முயற்சிக்க மாட்டார்” என்று தெரிவித்தார்."[218]

பாரம்பரியம்[தொகு]

Picture of a middle-aged blond woman uptill the waiste, singing in front of a microphone. Her hair is in waves and falls up to her shoulders. She appears to be wearing a black bra covered with a sleeveless netted covering and wears a white hat on her head. There are black gloves on her hand and she plays an electric guitar. Behind her, to her left, a flood light is visible.
மடோனா 2008 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த வசூல் ஈட்டிய தனது ஸ்டிக்கி & ஸ்வீட் டூரில் இசை நிகழ்த்துகிறார்.

மடோனா “எல்லாக் காலத்திற்குமான மிகப்பெரிய பாப் கலைஞர்களில் ஒருவராய் இருப்பதாக” ரோலிங் ஸ்டோன் தெரிவிக்கிறது.[219] ”உலகில் மிக அதிக அளவில் சம்பாதிக்கும் பெண் பாடல் கலைஞரும்” அவர் தான்.[2] 2008 ஆம் ஆண்டில் மடோனா மேற்கொண்ட ஸ்டிக்கி & ஸ்வீட் சுற்றுப்பயணம் தான் ஒரு தனிக் கலைஞரால் கச்சேரி பயணத்தின் மூலம் ஈட்டப்பட்ட மிக உயர்ந்த வசூல் கச்சேரியாகும்.[220] ”எல்லா காலத்திற்குமான முன்னணி கலைஞர்களின் பில்போர்டு ஹாட் 100”[6] வரிசையில் மடோனா மிக வெற்றிகரமான தனிக் கலைஞராய் முதலிடம் பெறுகிறார் (ஒட்டுமொத்த கலைஞராய் இரண்டாவது இடம், தி பீட்டில்ஸ்க்கு பின்னால்), அத்துடன் 2008 ஆம் ஆண்டில் பில்போர்டு ஹாட் 100 வரலாற்றில் அதிகமான டாப் டென் வெற்றிகள் கொடுத்த கலைஞராக எல்விஸ் ப்ரெஸ்லியின் சாதனையை இவர் கடந்திருந்தார்.[221] இங்கிலாந்திலும், ஒரு பெண் தனிக் கலைஞரின் முதலிட ஆல்பங்கள் மற்றும் முதலிட சிங்கிள்களுக்கான சாதனையைக் கொண்டிருக்கும் இவர் பிரித்தானிய சார்ட் வரலாற்றில் மிக வெற்றிகரமான பெண் கலைஞராகவும் இருக்கிறார்.[181][222] 2007 ஆம் ஆண்டில் VH1 இன் மாபெரும் ராக் & ரோல் பெண் கலைஞர்கள் பட்டியலில் மடோனா எட்டாவது இடம் பிடித்தார்.[223] மார்ச் 10, 2008 இல், அவர் ராக் அன் ரோல் ஹால் ஆஃப் ஃபேம் உறுப்பினராகவும் ஆனார்.[7]

சில சமயங்களில் மடோனா அதிர்ச்சியூட்டும் செக்சுவல் பிம்பங்களை பயன்படுத்துவது அவரது தொழில் வாழ்க்கைக்கு ஆதாயம் அளித்திருப்பதோடு செக்சுவாலிட்டி மற்றும் பெண்ணிய விஷயத்தில் பொதுக் கருத்துகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.[224] தி டைம்ஸ் கருத்து தெரிவித்தது: “மடோனா, உங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும், இசையில் பெண்களிடையே ஒரு புரட்சியைத் துவக்கினார். ஒரு பெண்ணின் உடலை, ஒரு பார்பி டோல் பொம்மை போல் தோன்றுவதைக் காட்டிலும், பசி கொண்ட ஒரு எந்திரமாக தோன்றும் வகையில் அவர் உருவாக்கினார். செக்ஸ், நிர்வாணம், நாகரிகம் மற்றும் செக்சுவாலிட்டி விஷயங்களில் அவரது மனோபாவங்களும் கருத்துகளும் பொதுமக்களை நின்று கவனிக்கச் செய்தது.”[225] ரோட்ஜர் ஸ்ட்ரெய்ட்மேட்டர் தனது செக்ஸ் செல்ஸ்! (2004) புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “1980களின் மத்தியில் தேசத்தின் பார்வைக்குள் மடோனா அதிரடியாய் உள்நுழைந்த காலம் முதலாக, பொதுப் பார்வையை அதிர்ச்சிக்குள்ளாக்க தன் அதிகாரத்துக்குட்பட்ட அனைத்தையும் அவர் செய்தார், அவரது முயற்சிகள் அவருக்கு பலனையும் அளித்தன”.[226] அவர் மேலும் கூறினார், “பாப் உலகின் ராணி விமர்சனத்தில் செழித்து வளர்ந்தார், அத்துடன், தசாப்தம் முழுவதிலும், பெண்ணின் பாலியல் அதிகாரத்தைத் தொடர்ந்து கொண்டாடி வந்ததன் மூலம் தனது அடிப்படையான கருத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.”[226] ஹேட்டிங் வீமன்: அமெரிக்கா’ஸ் ஹோஸ்டைல் கேம்பேயின் எகெய்ன்ஸ்ட் தி ஃபேரர் செக்ஸ் (2005)ஆசிரியர் ஷ்முவேல் போடீச் கூறும்போது, இசைக்கும் போர்னோகிராபிக்கும் இடையிலிருந்த எல்லையை அழித்ததில் பெரும் பொறுப்பு மடோனாவையே சேரும் என்கிறார். அவர் கூறுகிறார்: “மடோனாவுக்கு முன்னதாக, இசை மகா நட்சத்திரங்களாகும் பெண்கள் தங்கள் மார்புப் பிளவுகளைக் காட்டிலும் தங்கள் குரல்வளத்திற்காகத் தான் பிரபலமாகும் நிலை சாத்தியமாய் இருந்தது. ஆனால் மடோனாவுக்குப் பிந்தைய உலகத்தில், ஜேனட் ஜாக்சன் போன்ற உயர்ந்த உண்மைத் திறன் படைத்தவர்களும் கூட தங்கள் ஆல்பங்களை விற்பதற்காக தேசிய தொலைக்காட்சியில் தங்களது உடம்பைக் காட்டும் நெருக்குதலை உணரத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.”[227] மடோனா ஆய்வுகளின் சமீபத்திய கல்வித் துணைப் பிரிவுகளின் ஒரு பகுதி ஓரினச்சேர்க்கையாளர்கள் போன்ற சிறுபான்மை குழுக்களின் அடையாள உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது, இந்த அடையாளங்களை அவர் “வாக்”, “லைக் எ ப்ரேயர்”, “லா ஐலா போனிடா” மற்றும் “பார்டர்லைன்” போன்ற வீடியோக்களில் பயன்படுத்தியிருந்தார்.[228] செக்ஸ் புத்தகத்தில் பல்வேறு ஆண்கள் மற்றும் பெண்களுடன் தனது பாலியல்ரீதியான சூழ்நிலைகளை விவரிக்கும் மடோனா, பைசெக்சுவாலிட்டி குறித்தும் மக்களுக்கு கல்வி புகட்டினார்.[229] அந்த சமயத்தில் நயோமி கேம்பல் மற்றும் சாண்ட்ரா பெர்ன்ஹார்டு உள்ளிட்ட பிற பெண்களுடன் அவரது உறவு குறித்தும் கூட ஊகங்கள் நிலவி வந்தன.

பகிரங்க பாலியல் வெளிப்பாடுற்ற ஆளுமை பல இளம் கலைஞர்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரௌட்லெட்ஜ் இன்டர்னேஷனல் என்சைக்ளோபீடியா ஆஃப் வீமன்: குளோபல் வீமன்’ஸ் இஸ்யூஸ் அன் நாலெட்ஜ் (2000) இவ்வாறு கூறியது: “மடோனா கட்டுப்பாட்டை போதித்திருக்கலாம், ஆனாலும் பல பெண் பாப் கலைஞர்களும் விஞ்சி விட எண்ணிய பாலியல் வெளிப்பாட்டு மனோபாவம் குறித்த ஒரு பிரமையை அவர் உருவாக்கி விட்டார்.”[230] எழுத்தாளரும் ஆசிரியருமான ஃபவுஸ்-ஹெர்னாண்டஸ், தனது மடோனா’ஸ் ட்ரவுன்டு வேர்ல்ட்ஸ் புத்தகத்தில் குறிப்பிடுகையில், பிரிட்னி ஸ்பியர்ஸ், கிறிஸ்டினா அகிலெரா, ஜெனிபர் லோபஸ், கைலி மினோக் மற்றும் பிங்க்[231] எல்லோரும் மடோனாவைக் கேட்டு போற்றி வளர்ந்தவர்கள் என்பதால் அவரது பாணியை விஞ்ச முற்பட்டனர் என்கிற அர்த்தத்தில் மடோனாவின் பிள்ளைகள் போல் தான் வளர்ந்தனர் என்று கூறினார். இவர்கள் எல்லோரிலும், ஸ்பியர்ஸில் மடோனாவின் தாக்கம் மிகவும் குறிப்பிடத்தக்கதாய் இருக்கும், மடோனாவால் பாதுகாக்கப்பட்டவராக அவர் அழைக்கப்பட்டதுண்டு.[225] தங்களது ஒற்றுமை குறித்து ஸ்பியர்ஸ் கூறுகையில், “எங்களுக்குள் ஒரே உத்வேகம் தான் இருப்பதாக நினைக்கிறேன். ஒன்றை அடைய விரும்பினால், அதனைப் பெற்று விடுவோம்” என்று தெரிவித்தார்.[225] தனது மியூசிக் வீடியோவில் இருக்கும் சக்தியாக பெண்ணியத்திற்கு அவர் மறுபொருள் கூறியபோது ஸ்பைஸ் கேர்ள்ஸ் மீது மடோனாவின் தாக்கம் தெரிய வந்தது. “பெண் சக்தி” என்னும் ஸ்பைஸ் கேர்ள்ஸ் அடையாளம் பெண் சுதந்திரம் குறித்த இந்த சித்தரிப்பில் இருந்து தான் தருவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதாய் குறிப்பிடப்படுகிறது.[225] தனது இசையில் அவர் செலுத்திய கட்டுப்பாட்டு உணர்வு டெஸ்டினி சைல்ட் பியான்ஸ் க்னாலெஸ் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது.[225] பிரதான அமெரிக்க பாப் கலாச்சாரத்திற்குள் ஐரோப்பிய எலெக்ட்ரானிக் நடன இசையை அறிமுகப்படுத்திய பெருமையும், ஸ்டுவர்ட் ப்ரைஸ் மற்றும் மிர்வாயிஸ் அஹ்மத்சாய் போன்ற ஐரோப்பிய தயாரிப்பாளர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பெருமையும் கூட மடோனாவுக்கு உண்டு.[231]

தனது துறையின் பெண் தொழிலதிபர்களுக்கு முன் மாதிரியாய் திகழ்ந்ததற்காகவும் மடோனா பாராட்டு பெற்றார், “இத்துறையில் வெகு காலமாக பெண்கள் போராடி வந்திருக்கும் நிதியாதார கட்டுப்பாட்டு வகையை” சாதித்த அவர், தனது தொழில் வாழ்க்கையின் முதல் தசாப்தத்திலேயே 1.2 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான விற்பனையை சாதித்திருந்தார்.[230] வார்னர் மியூசிக் நிறுவனம் வழக்கமாய் வழங்கும் வேனிடி லேபல் கிடைக்கப் பெற்று (இதேபோன்ற ஏற்பாடுகள் மரியா கரே போன்ற கலைஞர்களுக்கும் மற்றவர்களுக்கும் கூட வழங்கப்பட்டிருந்தது) ஒரு சில ஆண்டுகளுக்குள்ளேயே மேவ்ரிக் ரெக்கார்ட்ஸ், இத்தகைய லேபல்களுக்கு அசாதாரணமான ஒன்றாக, மிகப் பெரும் வர்த்தக வெற்றியை மடோனாவின் முயற்சிகள் காரணமாய் சாதித்தது.[232] தி டைம்ஸ் பத்திரிகையில் 2009 ஆம் ஆண்டில் இசைப் பிரிவு செய்தியாளரான ராபர்ட் சாண்டல் கூறும்போது, 1992 ஆம் ஆண்டில் மடோனா உடனான ஒரு நேர்காணலின் போது, பாப் இசையை விட “ஒரு கலாச்சார அதிரடி வெற்றி” தான் தனக்கு முக்கியம் என்று அவர் தெரிவித்தார், பாப் இசை என்பது தனக்கு ”தற்செயலாய்” அமைந்த ஒரு தொழில் தான் என்றும் அவர் கூறினார் என்றார். அத்துடன் எதற்கும் துணிந்த அவரது மேடைத் தோற்றத்திற்கும், தனது சொந்த நிதி விஷயங்களில் ரகசியமான “பாதுகாப்பற்று உணர்ந்த” மனோநிலைக்கும் (உதாரணமாக, தனது சொந்த சகோதரரையே வடிவமைப்பாளராக இருப்பதில் இருந்து வெளியேற்றி, அதில் தலையிடாமல் செய்து விட்டார்) இடையில் இருந்த பேதத்தையும் அவர் குறிப்பிட்டுக் காட்டினார்.[233]. லண்டன் பிசினஸ் ஸ்கூல் கல்வியாளர்கள் மடோனாவின் வணிக பண்புகள் குறித்து செய்த ஆய்வில் அவரை ஒரு பின்பற்றத் தகுந்த “சுறுசுறுப்பான தொழிலதிபர்” எனக் குறிப்பிடப்பட்டது, வெற்றி இலக்கை அவர் அடையாளம் காண முடிந்தது, இசைத் துறை மீதான அவரது புரிதல், தனது திறன் எல்லைகளை அடையாளம் காணும் திறன் (இதனால் அவர் உதவியை சரியான இடத்தில் அமர்த்த முடிந்தது), அவரது “கடுமையான உழைப்பு” மற்றும் மாற்றத்திற்கு தகவமைத்துக் கொள்ளும் அவரது திறன் ஆகியவை தான் அவரது அபாரமான வர்த்தக வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தவை என அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.[234] ஆயினும் தனது சொந்த இசை வரம்புகளை வெல்வதில் அவர்க்கிருந்த திறன் குறித்து பாடலாசிரியரான ஜானி மிட்செல் கடுமையாக விமர்சித்தார், பரவலாக வெளியிடப்பட்ட அவரது கருத்துகளில் அவர், “மடோனா இந்த பிரிவில் திறமையின் முக்கியத்துவத்தை வெளியேற்றி விட்டார். சரியான ஆட்களை பணியிலமர்த்தி அவர் ஏராளமாய் பணம் சம்பாதித்துக் கொண்டதோடு உலகின் மிகப் பெரும் நட்சத்திரமாகவும் ஆகி விட்டார்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்துகள் ஒட்டுமொத்தமாகவே சமகால இசைத் துறை மீது தொடுக்கப்படும் தாக்குதல் கணைகளின் ஒரு பகுதியே ஆகும், மிட்செல் இசைப்பதிவையே ஒட்டுமொத்தமாய் கைவிடப் போவதாய் அச்சுறுத்தினார்.[235] செய்தியாளர் மைக்கேல் மெக்வில்லியம்ஸ் இவ்வாறு கூறுகிறார்: "மடோனா முரட்டுத்தனமானவர், பேராசையுற்றவர், திறமையற்றவர் என்றெல்லாம் கூறப்படும் குறைகள் எல்லாம் அவருடைய விடாப்பிடித்தனம் மற்றும் கலையின் சாரத்தை - அனைத்து பாப் கலாச்சாரத்திலும் இதமான ஒன்றாக, மனிதாபிமானம் மிக்க ஒன்றாக, மிக ஆழமான திருப்தியளிக்கும் ஒன்றாக இது இருக்கிறது - மறைத்து விடுகின்றன.”[236]

தனது தொழில் வாழ்க்கை முழுவதிலும், மடோனா, டேவிட் போவி போல, தொடர்ச்சியான காட்சி மற்றும் இசை ஆளுமைகளின் தொடர்ச்சி மூலம் தன்னை புதுப்பித்துக் கொண்டு வந்திருக்கிறார், அத்துடன் ஒரு திரைப்பட மற்றும் நாடக கலைஞராகவும் தனது தொழில் வாழ்க்கையை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறார். இந்த மறுகண்டுபிடிப்பு என்பது அவரது முக்கியமான கலாச்சார சாதனைகளில் ஒன்று என்று ஃபவுஸ் ஹெர்னான்டெஸ் வாதிடுகிறார்.[224] தான் ஊடக கவனத்தின் மையத்தில் நின்று கொண்டிருந்த அச்சமயத்தில், வளர்ந்து வரும் திறமையான தயாரிப்பாளர்கள் மற்றும் முன்னதாக அறிந்திராத கலைஞர்களுடன் இணைந்து தொடர்ந்து உழைத்து அவர் இதனை சாதித்திருக்கிறார் என்று அவர் கூறுகிறார். இவ்வாறு செய்கையில் ஒருவர் பொழுதுபோக்குத் துறையில் தனது தொழில் வாழ்க்கையை பராமரிப்பது எப்படி என்பதில் அவர் ஒரு முன்மாதிரியாகவும் விளங்கியிருக்கிறார்.[231]

2006 ஆம் ஆண்டில் ஒரு புதிய நீர்க் கரடி இனத்திற்கு (லத்தீன்: டர்டிக்ரடா) மடோனாவின் பெயரால் எசினிஸ்கஸ் மடோனே [237] என பெயர் சூட்டப்பட்டது. இ.மடோனே என்கிற விவரிப்புடனான ஆய்வறிக்கை இன்டர்னேஷனல் ஜர்னல் ஆஃப் அனிமல் டேக்ஸானமி ஸூடாக்ஸா வில் மார்ச் 2006 இல் வெளியானது (தொகுதி. 1154, பக்கங்கள்: 1–36). இந்த பெயர் சூட்டலுக்கான காரணத்தை பின்வருமாறு ஆசிரியர் தெரிவிக்கிறார்: “இந்த உயிரின வகையை நமது காலத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க கலைஞர்களில் ஒருவரான, மடோனா லூய்ஸெ வெரோனிகா ரிட்சிக்கு அர்ப்பணம் செய்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.” இந்த உயிரினத்திற்கான ஒருங்கிணைந்த டேக்ஸானாமிக் தகவல் அமைப்பு (ITIS) எண் 711164 ஆகும்.[238]

டிஸ்கோகிராபி[தொகு]

 • மடோனா (1983)
 • லைக் எ வர்ஜின் (1984)
 • ட்ரூ ப்ளூ (1986)
 • லைக் எ ப்ரேயர் (1989)
 • எரோடிகா (1992)
 • பெட்டைம் ஸ்டோரிஸ் (1994)
 • ரே ஆஃப் லைட் (1998)
 • மியூசிக் (2000)
 • அமெரிக்கன் லைஃப் (2003)
 • கான்ஃபெஷன்ஸ் ஆன் எ டான்ஸ் ஃபுளோர் (2005)
 • ஹார்டு கேன்டி (2008)

இதர பணிகள்[தொகு]

 • மடோனா திரைப்படவியல்
 • மடோனா கச்சேரி சுற்றுப்பயண பட்டியல்
 • மடோனாவின் புத்தகங்கள் பட்டியல்

மேலும் காண்க[தொகு]

 • அதிகம் விற்பனையாகும் இசைக் கலைஞர்களின் பட்டியல்
 • அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் இசைக் கலைஞர்களின் பட்டியல்
 • வெகுஜன இசையில் மரியாதைப் பட்டங்களின் பட்டியல்
 • ஓரினச்சேர்க்கையாளர்களின் ஐகானாக மடோனா
 • ஒற்றைப் பெயர் மனிதர்கள்
 • ஒயின் ஆலைகள் மற்றும் திராட்சைத் தோட்டங்கள் கொண்ட பிரபலங்களின் பட்டியல்

குறிப்புகள்[தொகு]

 1. Release, Press (2006-09-13). "IFPI Platinum Europe Awards: July & August 2006". International Federation of the Phonographic Industry இம் மூலத்தில் இருந்து 2006-11-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061104041040/http://www.ifpi.org/content/section_news/plat_month_20060913.html. பார்த்த நாள்: 2007-12-14. 
 2. 2.0 2.1 Reporter, Daily Mail (2006-09-28). "Queen of Pop Madonna Crowned Highest Earning Female Singer on Earth". Daily Mail (Associated Newspapers). http://www.dailymail.co.uk/pages/live/articles/showbiz/showbiznews.html?in_article_id=407501&in_page_id=1773. பார்த்த நாள்: 2007-12-28. 
 3. "Top Selling Artists". Recording Industry Association of America. Archived from the original on 2007-07-01. பார்க்கப்பட்ட நாள் 2008-06-09.
 4. Release, Press (1999-11-10). "The American Recording Industry Announces Its Artists of the Century". Recording Industry Association of America இம் மூலத்தில் இருந்து 2007-09-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070930200852/http://www.riaa.com/newsitem.php?news_year_filter=1999&resultpage=2&id=3ABF3EC8-EF5B-58F9-E949-3B57F5E313DF. பார்த்த நாள்: 2008-01-30. 
 5. Bowman, Edith (26 May 2007). "BBC World Visionaries: Madonna Vs. Mozart". BBC News. Archived from the original on 2008-05-25. பார்க்கப்பட்ட நாள் 2008-05-12. In 2000, Guinness World Records listed Madonna as the most successful female recording artist of all time.
 6. 6.0 6.1 "Billboard Hot 100 Chart 50th Anniversary". Billboard (Nielsen Business Media, Inc). http://www.billboard.com/bbcom/specials/hot100/charts/top100-artists-20.shtml. பார்த்த நாள்: 2009-10-01. 
 7. 7.0 7.1 "Madonna Leads List of Rock Hall Inductees". CNN. Archived from the original on 2007-12-13. பார்க்கப்பட்ட நாள் 2008-06-09.
 8. Worrell, Denise (May 27, 1985). "Now: Madonna on Madonna". Time (magazine) இம் மூலத்தில் இருந்து 2008-06-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080612174827/http://www.time.com/time/magazine/article/0,9171,957025,00.html. பார்த்த நாள்: 2008-06-05. 
 9. "The Child Who Became a Star: Madonna Timeline". The Daily Telegraph. 26 Jul 2006. Archived from the original on 2008-04-23. பார்க்கப்பட்ட நாள் 2008-06-09.
 10. "Madonna Biography". Fox News. பார்க்கப்பட்ட நாள் 2008-06-05.
 11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-12-27. பார்க்கப்பட்ட நாள் 2010-02-05.
 12. "Madonna Biography: Part 1". People. Archived from the original on 2008-05-28. பார்க்கப்பட்ட நாள் 2008-05-29.
 13. Tilden, Imogen (2001-07-04). "Madonna". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 2008-05-29.
 14. மோர்டான், ப. 12
 15. "A Star with Staying Power". People in the News. CNN.
 16. "Madonna: Queen of Pop". Biography. The History Channel. 5 minutes in.
 17. "Madonna on Coming to New York City to Be a Dancer". TalkEntertainment.com. Archived from the original on 2008-05-15. பார்க்கப்பட்ட நாள் 2008-05-29.
 18. 18.0 18.1 18.2 "Madonna Biography". Music Atlas. Archived from the original on 2007-12-17. பார்க்கப்பட்ட நாள் 2007-12-28.
 19. மோர்டான், ப. 23
 20. "Madonna Biography: Part 1". People (magazine). Archived from the original on 2008-05-28. பார்க்கப்பட்ட நாள் 2008-01-13.
 21. சிக்கோன், கிறிஸ்டோபர்; மற்றும் லே, வென்டி. "Life with My Sister Madonna", ப. 56. சைமன் & ஸ்கஸ்டர், 2008. ISBN 0-553-09673-7. அக்டோபர் 1, 2009 இல் அணுகப்பட்டது. "கனெக்டிகட் வழியாக நாங்கள் நகருக்கு வரும் சமயத்தில், குவீன்ஸ், கரோனாவில் ஸ்டுடியோவாக மாற்றப்பட்டதொரு தலத்தில் மடோனா வசித்துக் கொண்டிருந்ததோடு, தனது ஆண்நண்பரான டான் கில்ராயின் இசைக்குழுவான தி பிரேக்ஃபாஸ்ட் கிளப்பில் டிரம்கள் வாசித்துக் கொண்டிருந்தார்."
 22. "Biography - Madonna". Rolling Stone. 2008. Archived from the original on 2009-01-19. பார்க்கப்பட்ட நாள் 2008-04-29.
 23. 23.0 23.1 டராபோரெல்லி, p. 43
 24. "Madonna, Beastie Boys Nominated For Rock And Roll Hall Of Fame". MTV News. 23 September 2007. பார்க்கப்பட்ட நாள் 2008-05-29.
 25. 25.0 25.1 Holden, Stephen. "Madonna Makes a $60 Million Deal". New York Times. http://query.nytimes.com/gst/fullpage.html?res=9E0CE2DB103FF933A15757C0A964958260. பார்த்த நாள்: 2008-05-27. 
 26. ஹோபன், ப. 102
 27. "History of Fashion". American Vintage Blues. பார்க்கப்பட்ட நாள் 2008-06-09.
 28. ரெட்டன்மண்ட், ப. 67
 29. 29.0 29.1 "Diamond Awards". Recording Industry Association of America. Archived from the original on 2015-12-30. பார்க்கப்பட்ட நாள் 2010-01-03.
 30. Reporter, Daily (2008-08-15). "Contrasting fortunes as Madonna and Jacko turn 50". The Age (Fairfax Media) இம் மூலத்தில் இருந்து 2011-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811184417/http://www.theage.com.au/lifestyle/people/contrasting-fortunes-as-madonna-and-jacko-turn-50-20090403-9ruh.html. பார்த்த நாள்: 2009-08-24. 
 31. 31.0 31.1 Lippens, Nate (2007). "Making Madonna: 10 Moments That Created an Icon". Live Earth: The Concerts For a Climate in Crisis. MSN Music. Archived from the original on 2008-01-10. பார்க்கப்பட்ட நாள் 2008-01-04.
 32. "Definitive 200". The Rock and Roll Hall of Fame and Museum. பார்க்கப்பட்ட நாள் 2008-04-08.
 33. "The RS 500 Greatest Songs of All Time". Rolling Stone. Jann S. Wenner. 9 December 2004. Archived from the original on 2006-08-20. பார்க்கப்பட்ட நாள் 2009-05-23.
 34. 34.00 34.01 34.02 34.03 34.04 34.05 34.06 34.07 34.08 34.09 34.10 "Artist Chart History - Madonna". Billboard. Nielsen Business Media, Inc. பார்க்கப்பட்ட நாள் 2009-03-12.
 35. "Madonna Scores 12th Chart Topper in the UK". BBC News. http://news.bbc.co.uk/1/hi/entertainment/4753366.stm. பார்த்த நாள்: 2008-06-09. 
 36. American Film Institute (1984). American Film (Arthur M. Sackler Foundation, University of Michigan) 10: 20. 
 37. Ebert, Roger (16 August 2007). "Movie Answer Man". rogerebert.suntimes.com. Archived from the original on 2007-09-30. பார்க்கப்பட்ட நாள் 2009-08-02.
 38. 38.0 38.1 Greig, Geordie (6 November 2005). "Geordie Greig Meets Madonna: Secret Life of a Contented Wife". The Sunday Times. பார்க்கப்பட்ட நாள் 2008-06-09.
 39. ப்ரெலெஸ், வாரன், பக். 23-25
 40. 40.0 40.1 40.2 மோர்டான், பக். 134–35
 41. "Madonna Years". Lycos. பார்க்கப்பட்ட நாள் 2008-06-10.[தொடர்பிழந்த இணைப்பு]
 42. Sigerson, David (July 17, 1986). "True Blue review". Rolling Stone. Jann S. Wenner. Archived from the original on 2007-10-23. பார்க்கப்பட்ட நாள் 2008-05-29.
 43. போஹம், ப. 78
 44. "Madonna Biography". Tribune Entertainment Media Group. பார்க்கப்பட்ட நாள் 2008-06-09.
 45. 45.0 45.1 45.2 45.3 Smith, Neil (24 May 2004). "Show Stealer Madonna on Tour". BBC (BBC News). http://news.bbc.co.uk/2/hi/entertainment/3704915.stm. பார்த்த நாள்: 2008-02-12. "This, after all, was the tour that introduced Jean-Paul Gaultier's infamous conical bra outfit and featured the singer simulating masturbation during Like a Virgin." 
 46. க்ராஸ், ப. 100
 47. க்ராஸ், ப. 105
 48. ஹோர்டான், ப. 56
 49. "Madonna Biography". MyVillage. Archived from the original on 2008-09-19. பார்க்கப்பட்ட நாள் 2008-06-09.
 50. Madonna.Like a Prayer[Audio CD].Sire Records.Retrieved on 2007-12-16.
 51. Considine, J.D. (April 6, 1989). "Like A Prayer review". Rolling Stone. Jann S. Wenner. Archived from the original on 2008-11-01. பார்க்கப்பட்ட நாள் 2007-01-21.
 52. ஓ’ ப்ரையன், ப. 71
 53. "Madonna". Rock and Roll Hall of Fame. பார்க்கப்பட்ட நாள் 2009-10-11.
 54. மோர்டான், ப. 98
 55. "Poll: 'Vogue' Is Fave Madonna Chart-Topper". Billboard. Nielsen Business Media, Inc. 15 September 2000. பார்க்கப்பட்ட நாள் 2007-12-14.
 56. பிட்ஸ் ப. 40
 57. Sporkin, Elizabeth (July 02, 1990). "He Still Leaves 'Em Breathless". People. http://www.people.com/people/archive/article/0,,20118117,00.html. பார்த்த நாள்: 2009-07-30. 
 58. Christopher Ciccone (19 July 2008). "Warren Beatty, Sean Penn ... and My Sister Madonna's Great Daddy Chair Dilemma". Daily Mail (Associated Newspapers). http://www.dailymail.co.uk/tvshowbiz/article-1036516/Warren-Beatty-Sean-Penn---sister-Madonnas-great-Daddy-Chair-dilemma.html. பார்த்த நாள்: May 2009-05-23. 
 59. Grunt, Gary (23 May 2006). "Madonna's giant cross offensive". BBC (BBC News). http://news.bbc.co.uk/2/hi/entertainment/5006008.stm. பார்த்த நாள்: 2006-05-28. "In 1990, the Pope called for a boycott of the Blond Ambition Tour, in which Madonna simulated masturbation during Like a Virgin." 
 60. செக்ஸ்டன், ப. 88
 61. Carrie Fisher (August 1991). "True Confessions: The Rolling Stone Interview With Madonna (Part One)". Rolling Stone. 
 62. 62.0 62.1 62.2 62.3 "Grammy Award Winners". Grammy Awards. Archived from the original on 2007-03-13. பார்க்கப்பட்ட நாள் 2008-05-27.
 63. கிராஸ், ப. 128
 64. 64.0 64.1 "Madonna: Rebel without a Cause" (PDF). Rutgers University. Archived from the original (PDF) on 2011-07-20. பார்க்கப்பட்ட நாள் 2008-05-27.
 65. "Madonna - 10 Moments That Created an Icon". MSN. Archived from the original on 2008-01-10. பார்க்கப்பட்ட நாள் 2008-01-04. The music video for Justify My Love, directed by Jean-Baptiste Mondino, showed Madonna in suggestive scenes of S & M, bondage, same-sex kissing and brief nudity.
 66. "Top 40 Best Selling Albums 28 July 1956 – 14 June 2009" (PDF). British Phonographic Industry. Archived from the original (PDF) on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 8-10-2009. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help); Italic or bold markup not allowed in: |work= (help)
 67. Davidson, Casey (December 07, 1990). "Boxed Lynch: Boxing Helena News: Jennifer Lynch Tells Us About Her New Film and Casting Madonna in the Lead Role". Entertainment Weekly. Time Inc. Archived from the original on 23 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 5 பிப்ரவரி 2010. {{cite web}}: Check date values in: |access-date=, |date=, and |archive-date= (help)
 68. Birnbaum, Jane (May 22, 1992). "Unarmed and Dangerous: Boxing Helena Experiences Star Dropouts, Director Jennifer Lynch Loses Madonna, Kim Basinger, But Gains Sherilyn Fenn". Entertainment Weekly. Time Inc. பார்க்கப்பட்ட நாள் 2009-05-28.
 69. 69.0 69.1 "Crazy for Madonna's Men". USA Today. 2000. http://www.usatoday.com/life/madonnamen.htm. பார்த்த நாள்: 2008-01-07. "Madonna and model Tony Ward briefly dated in 1990", "Vanilla Ice and Madonna were together for eight months in 1992." 
 70. "Truth or Dare". Rolling Stone. Jann S. Wenner. 8 December 2000. Archived from the original on 2009-07-07. பார்க்கப்பட்ட நாள் 2009-05-26.
 71. 71.0 71.1 International, Publication. "Madonna's 25 Most Popular Songs". How Stuff Works. பார்க்கப்பட்ட நாள் 2009-05-26.
 72. மோர்டான், ப. 54
 73. 73.0 73.1 Kirschling, Gregory. "The Naked Launch". Entertainment Weekly (Time Inc.) இம் மூலத்தில் இருந்து 2013-01-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130115134604/http://www.ew.com/ew/article/0,,365681,00.html. பார்த்த நாள்: 2008-05-27. 
 74. "The Billboard 200: Erotica". Billboard. Nielsen Business Media. பார்க்கப்பட்ட நாள் 2008-01-04.
 75. "Erotica: Album details". Icon: The Official Madonna Website. Madonna.com. Archived from the original on 2008-05-26. பார்க்கப்பட்ட நாள் 2008-06-09.
 76. மெட்ஸ், பென்சன், பக். 17-20
 77. "Body of Evidence". Rotten Tomatoes. பார்க்கப்பட்ட நாள் 2008-06-09.
 78. Maslin, Janet (November 19, 1993). "Film Review, Dangerous Game". The New York Times. The New York Times Company. பார்க்கப்பட்ட நாள் 2008-07-10.
 79. Booth, Samantha (26 April 2007). "25 Years of Madonna". Daily Record. http://www.dailyrecord.co.uk/news/editors-choice/tm_headline=25-years-of-madonna&method=full&objectid=18966107&siteid=66633-name_page.html. பார்த்த நாள்: 2008-06-10. 
 80. டேவிட் லெட்டர்மேன் குறித்து மடோனா
 81. வாட்சன், ப. 143
 82. டராபோரெல்லி, பக். 232-235
 83. டராபோரெல்லி, ப. 242
 84. டராபோரெல்லி, ப. 235
 85. 85.0 85.1 Erlewine, Stepehen Thomas (21 March 2005). "allmusic ((( Madonna > Overview )))". Allmusic. Macrovision Corporation. பார்க்கப்பட்ட நாள் 2008-01-03.
 86. வோலர், ப. 221
 87. Erlewine, Stephen Thomas (November 17, 1995). "allmusic ((( Something to Remember > Overview )))". Allmusic. Macrovision Corporation. பார்க்கப்பட்ட நாள் 2009-07-30.
 88. "Fashion Timeline - Madonna". MSN. Archived from the original on 2009-02-02. பார்க்கப்பட்ட நாள் 2008-06-09.
 89. Pareles, Jon (December 2, 1996). "Evita - Madonna, Chic Pop Star, As Chic Political Leader". The New York Times. The New York Times Company. பார்க்கப்பட்ட நாள் 2009-05-26.
 90. Busari, Stephanie (24 March 2008). "Hey Madonna, Don't Give Up the Day Job!". CNN (Turner Broadcasting System). http://www.cnn.com/2008/SHOWBIZ/Movies/03/18/madonna.movies/?iref=mpstoryview. பார்த்த நாள்: 2008-03-21. "Apart from a role in Evita, for which she won a Golden Globe best actress award, Madonna's contribution to the film world can be, at best, described as forgettable." 
 91. வோலர் ப. 117
 92. ரூக்ஸ்பி, ப. 50
 93. Erlewine, Stephen Thomas (March 23, 1998). "allmusic ((( Ray of Light > Overview )))". Allmusic. Macrovision Corporation. பார்க்கப்பட்ட நாள் 2009-05-26.
 94. "That thing: Lauryn Hill sets Grammy record". CNN. February 24, 1999 இம் மூலத்தில் இருந்து 2013-07-15 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6I81DLpVJ?url=http://transcripts.cnn.com/2000/SHOWBIZ/Music/11/10/wb.madonna.album/index.html. பார்த்த நாள்: 2008-02-09. "Pop queen Madonna, now 40, earned three Grammys." 
 95. Saunders, Christopher. "Microsoft Hopes Ray of Light Makes XP Shine". Clickz. பார்க்கப்பட்ட நாள் 2008-06-09.
 96. "Madonna in plagiarism case defeat". BBC News. 18 November 2005. http://news.bbc.co.uk/1/hi/entertainment/music/4449580.stm. பார்த்த நாள்: 2007-01-21. 
 97. "The Rolling Stone 500 Greatest Albums of All Time". Rolling Stone (Jann S. Wenner) இம் மூலத்தில் இருந்து 2008-06-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080619073237/http://www.rollingstone.com/news/story/5938174/the_rs_500_greatest_albums_of_all_time/4. பார்த்த நாள்: 2008-06-06. 
 98. Clinton, Paul (October 28, 1999). "Review: Music of the Heart Hits All the Right Notes". பார்க்கப்பட்ட நாள் 2007-08-12.
 99. "American Pie". BBC Radio 2. பார்க்கப்பட்ட நாள் 2008-06-09.
 100. "Madonna's secret to making 'Music'". CNN. 2000-11-10. Archived from the original on 2013-07-15. பார்க்கப்பட்ட நாள் 2009-12-15.
 101. Caulfield, Keith (2000-09-28). "After 11 Year Absence, Madonna's Back At No. 1". Billboard (Nielsen Business Media, Inc). http://www.billboard.com/#/news/after-11-year-absence-madonnas-back-876212.story. பார்த்த நாள்: 2009-01-20. 
 102. "Music: Album overview". Madonna.com. Archived from the original on 2008-05-12. பார்க்கப்பட்ட நாள் 2008-06-09.
 103. Lee, Hann C. (23 March 2001). "Controversial new Madonna video airs on the Web". CNN இம் மூலத்தில் இருந்து 2013-07-15 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6I81Ex2pS?url=http://archives.cnn.com/2001/TECH/internet/03/23/madonna.video.idg/. பார்த்த நாள்: 2008-06-09. 
 104. "Madonna gives birth to boy". CNN. 11 August 2000. Archived from the original on 2013-06-18. பார்க்கப்பட்ட நாள் 2006-05-05.
 105. "Madonna Weds Her Guy". BBC News. 22 December 2000. http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/december/22/newsid_3290000/3290829.stm. பார்த்த நாள்: 2008-06-05. 
 106. "The Concert Hotwire". Pollstar. Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2008-06-03.
 107. Susman, Gary (23 July 2003). "Materialist Girl". Entertainment Weekly. Time Inc. Archived from the original on 2008-10-17. பார்க்கப்பட்ட நாள் 2008-06-03.
 108. Erlewine, Stephen Thomas (13 November 2001). "allmusic ((( GHV2 > Overview )))". Allmusic. Macrovision Corporation. பார்க்கப்பட்ட நாள் 2009-05-26.
 109. "Madonna flop goes straight to video". BBC (BBC News). 8 November 2002. http://news.bbc.co.uk/2/hi/entertainment/2426783.stm. பார்த்த நாள்: 2008-06-03. 
 110. "Die Another Day". GreenCine. 2002. Archived from the original on 2008-05-15. பார்க்கப்பட்ட நாள் 2008-06-09.
 111. "Golden Raspberry Awards past winners database". Los Angeles Times (Tribune Company). http://theenvelope.latimes.com/extras/lostmind/year/2002/2002gr.htm. பார்த்த நாள்: 2008-06-14. 
 112. Lieberman, Rhonda (May 2003). "Weighty Madonna: Rhonda Lieberman on "X-STaTIC PRo=CeSS" - Slant". BNET. Archived from the original on 2012-06-29. பார்க்கப்பட்ட நாள் 2009-05-23.
 113. "American Life by Madonna: Review". Metacritic. பார்க்கப்பட்ட நாள் 2007-12-30.
 114. Hastings, Chris (16 October 2005). "Thank You For the Music! How Madonna's New Single Will Give Abba Their Greatest-Ever Hit". The Daily Telegraph இம் மூலத்தில் இருந்து 2008-01-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080119184121/http://www.telegraph.co.uk/news/main.jhtml?xml=%2Fnews%2F2005%2F10%2F16%2Fnmad16.xml&sSheet=%2Fnews%2F2005%2F10%2F16%2Fixhome.html. பார்த்த நாள்: 2008-01-07. 
 115. "Madonna - Entertainer". BBC h2g2. பார்க்கப்பட்ட நாள் 2008-01-03.
 116. Warn, Sarah (15 September 2003). "VMA's Madonna-Britney-Christina Kiss: Progress or Publicity Stunt?". AfterEllen.com. Archived from the original on 2012-05-29. பார்க்கப்பட்ட நாள் 2009-05-28.
 117. Gardner, Elysa. "Madonna, Spears, Aguilera shock at MTV Awards". USA Today (Gannett Company). http://www.usatoday.com/life/music/awards/mtvmusicawards/2003-08-28-mtv-vma_x.htm. பார்த்த நாள்: 2007-01-10. 
 118. டராபோரெல்லி, ப. 233
 119. பிரேக்கெட், ப. 304
 120. க்ராஸ், ப. 97
 121. 121.0 121.1 "Madonna's label sues record giant". BBC. BBC News. 26 March 2004. பார்க்கப்பட்ட நாள் 2008-06-07.
 122. "Madonna sells record company". NME News. http://www.nme.com/news/madonna/30546. பார்த்த நாள்: 2008-06-09. 
 123. "Madonna Ready to Dance on World Tour". China Daily. 4 April 2006. பார்க்கப்பட்ட நாள் 2008-05-23.
 124. "Madonna: Full Biography". MTV. பார்க்கப்பட்ட நாள் 2008-06-09.
 125. "The Immortals: The First Fifty". Rolling Stone Issue 946. Archived from the original on 2008-06-25. பார்க்கப்பட்ட நாள் 2008-01-03.
 126. "Madonna Urges Others to Support Clark". TypePad. 2004-01-07. பார்க்கப்பட்ட நாள் 2006-04-17.
 127. "Hollywood, music stars join forces in tsunami telethon". ABC News. http://www.abc.net.au/news/stories/2005/01/16/1282814.htm. பார்த்த நாள்: 2008-06-14. 
 128. "The Live 8 Event". BBC. http://www.bbc.co.uk/music/thelive8event/. பார்த்த நாள்: 2008-06-14. 
 129. Harris, Chris (2005-11-23). "Madonna's Confessions Floors Carrie And Carey For Billboard #1". MTV (MTV Networks). http://www.mtv.com/news/articles/1514426/20051123/madonna.jhtml. பார்த்த நாள்: 2009-10-21. 
 130. "Confessions On A Dance Floor". Metacritic. Archived from the original on 2007-12-12. பார்க்கப்பட்ட நாள் 2008-01-03.
 131. Gardner, Elysa (27 October 2005). "Madonna at a Crossroads". USA Today. பார்க்கப்பட்ட நாள் 26 February 2006.
 132. க்ளெண்டே, ப. 167
 133. "Madonna Storms to 12th UK Number One". The Epoch Times. http://en.epochtimes.com/news/6-2-26/38705.html. பார்த்த நாள்: 2007-12-30. 
 134. "Madonna Smashes Record in UK Charts". RTE Entertainment இம் மூலத்தில் இருந்து 2008-04-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080417064302/http://www.rte.ie/arts/2006/0228/madonna.html. பார்த்த நாள்: 2008-06-10. 
 135. "H&M Signs Madonna". Adweek. Archived from the original on 2007-12-12. பார்க்கப்பட்ட நாள் 2006-11-27.
 136. Norman, Pete (2007). "Madonna's H&M TV Commercial". People. Time Inc. பார்க்கப்பட்ட நாள் 2007-03-24.
 137. "Top 25 Tours of 2006". Billboard. Nielsen Business Media, Inc. Archived from the original on 2007-01-06. பார்க்கப்பட்ட நாள் 2007-12-30.
 138. "Boycott of Madonna Moscow concert urged". Jewish News Weekly of Northern California. 18 August 2006. http://www.jewishsf.com/content/2-0-/module/displaystory/story_id/30088/format/html/displaystory.html. பார்த்த நாள்: 2008-01-21. 
 139. "Madonna defies prosecution threat". BBC News annel]]. 2006-08-20. http://news.bbc.co.uk/1/hi/entertainment/5269684.stm. பார்த்த நாள்: 2008-07-10. 
 140. Pisa, Nick. "Vatican fury at 'blasphemous' Madonna". The Daily Telegraph இம் மூலத்தில் இருந்து 2008-04-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080420182010/http://www.telegraph.co.uk/news/main.jhtml?xml=%2Fnews%2F2006%2F08%2F04%2Fwmadge04.xml. பார்த்த நாள்: 2007-12-09. 
 141. Popkin, Helen A.S. (11 October 2006). "Just call Madonna the recycled-Material Girl". MSNBC. பார்க்கப்பட்ட நாள் 2008-06-14.
 142. "Madonna adopts Malawian child, says father". October 2006. http://www.mg.co.za/articlePage.aspx?articleid=286338&area=/breaking_news/breaking_news__africa/. பார்த்த நாள்: 2008-02-23. 
 143. Perry, Simon (October 2006). "Boy Madonna Hopes to Adopt Leaves Africa". People (Time Inc.). http://www.people.com/people/article/0,,1546505,00.html. பார்த்த நாள்: 2006-10-16. 
 144. "Madonna names baby". The Boston Globe. http://www.boston.com/ae/celebrity/articles/2006/10/19/madonna_names_baby/?rss_id=Boston.com+%2F+A%26E+%2F+Celebrity+news. பார்த்த நாள்: 2008-06-09. 
 145. "Madonna Adoption Plans Trigger Broad Backlash". Reuters Wire Services. 2006-10-17. http://news.sawf.org/Entertainment/24351.aspx. பார்த்த நாள்: 2008-02-23. 
 146. Tenthani, Raphael (2007-09-03). "Upset in Madonna's Malawi Adoption Case". Associated Press. http://abcnews.go.com/International/wireStory?id=3553924. பார்த்த நாள்: 2008-02-23. 
 147. Kapos, Shia. "Madonna: Boy's Father Has Been Manipulated". People இம் மூலத்தில் இருந்து 2008-04-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080424123645/http://www.people.com/people/article/0,,1550254,00.html. பார்த்த நாள்: 2008-06-09. 
 148. Heher, Ashley M (2006-10-25). "Madonna Disappointed by Criticism". San Francisco Chronicle இம் மூலத்தில் இருந்து 2007-08-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070809083904/http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=%2Fn%2Fa%2F2006%2F10%2F25%2Fentertainment%2Fe073141D55.DTL. பார்த்த நாள்: 2008-06-14. 
 149. "Bono Defends Madonna's Adoption". NME News. http://www.nme.com/news/madonna/25047. பார்த்த நாள்: 2008-06-05. 
 150. "Boy's Father Worries Madonna May Back Out". MSNBC/Associated Press. 26 October 2006. http://www.msnbc.msn.com/id/15429329. பார்த்த நாள்: 2008-06-14. 
 151. Tenthani, Raphael (28 May 2005). "Madonna 'Over the Moon' About Finalized Adoption". People (Time Inc]) இம் மூலத்தில் இருந்து 2008-05-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080530050519/http://www.people.com/people/article/0,,20202798,00.html. பார்த்த நாள்: 2008-05-28. 
 152. "Madonna Writes New Song "Hey You" for Live Earth". 2007-05-17. பார்க்கப்பட்ட நாள் 2007-05-17.
 153. "Madonna Joins Forces With Live Nation in Revolutionary Global Music Partnership". PR Newswire. பார்க்கப்பட்ட நாள் 2008-06-03.
 154. "Madonna, Others Named to Rock Hall of Fame". USA Today/Gannett Company. 13 Dec. 2007. http://www.usatoday.com/life/music/awards/2007-12-13-rockfame_N.htm. பார்த்த நாள்: 2007-12-17. 
 155. "Madonna to be inducted into Rock'n'Roll Hall Of Fame". NME News. http://www.nme.com/news/madonna/33165. பார்த்த நாள்: 2007-12-17. 
 156. "I Am Because We Are". A Documentary Film produced by Madonna. Archived from the original on 2010-03-26. பார்க்கப்பட்ட நாள் 2008-06-09.
 157. Petridis. "I Am Because We Are review". The Guardian. Guardian News and Media Limited. பார்க்கப்பட்ட நாள் 2008-06-14. {{cite web}}: Unknown parameter |fisrt= ignored (help)
 158. Elan, Priya (3 April 2008). "Review: Madonna's Filth and Wisdom". The Times. http://entertainment.timesonline.co.uk/tol/arts_and_entertainment/film/film_reviews/article3364108.ece. பார்த்த நாள்: 2008-06-14. 
 159. "Filth and Wisdom: Don't give up the day job, Madonna". The Daily Telegraph இம் மூலத்தில் இருந்து 2008-06-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080619024217/http://www.telegraph.co.uk/arts/main.jhtml?xml=%2Farts%2F2008%2F02%2F14%2Fbfberlin114.xml. பார்த்த நாள்: 2008-06-14. 
 160. Shewan, Don (1 May 2008). "Madonna debuts Hard Candy". Rolling Stone. Jann S. Wenner. Archived from the original on 2009-02-18. பார்க்கப்பட்ட நாள் 2008-06-05.
 161. "Madonna's Hard Candy Debuts At #1 in 37 countries". Madonna.com. 2008-12-22. Archived from the original on 2008-12-25. பார்க்கப்பட்ட நாள் 2008-12-23.
 162. Hasty, Katie (7 May 2008). "Madonna Leads Busy Billboard 200 with 7th #1". Billboard. Nielsen Business Media, Inc. பார்க்கப்பட்ட நாள் 2008-05-07.
 163. "Hard Candy". Metacritic. CNET Networks. பார்க்கப்பட்ட நாள் 2008-04-26.
 164. Savage, Mark (2008-04-08). "Review: Madonna's Hard Candy". BBC Music. பார்க்கப்பட்ட நாள் 2008-04-26.
 165. Hasty, Katie (2 April 2008). "Mariah, Madonna Make Billboard Chart History". Billboard. பார்க்கப்பட்ட நாள் 2008-04-04.
 166. Schmidt, Veronica (2008-04-21). "Madonna Goes to No. 1 For the 13th Time". The Times. பார்க்கப்பட்ட நாள் 21 April 2008.
 167. "Madonna's 'Sticky & Sweet' Tour: 58 Shows - 2,350,282 Fans!!!". International Business Times. 22 December 2008. Archived from the original on 2009-02-09. பார்க்கப்பட்ட நாள் 2009-05-24.
 168. Lewis, Randy (29 December 2008). "'08 tour leader: Madonna". Los Angeles Times. http://www.latimes.com/entertainment/news/music/la-et-tours29-2008dec29,0,4292189.story. பார்த்த நாள்: 2009-01-07. 
 169. "Madonna's 'Sticky & Sweet Tour' Goes Back on the Road Summer 2009". Icon:Official Madonna club. Reuters. 30 January 2009. Archived from the original on 2009-07-19. பார்க்கப்பட்ட நாள் 2009-05-24.
 170. "Madonna Closes Tour In Tel Aviv; 2nd Highest Grossing Trek Of All Time". Billboard. Billboard. 2 September 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-11-06.
 171. "Bestsellers: Hardcover Nonfiction", The New York Times, 3 August 2008, பார்க்கப்பட்ட நாள் 2008-08-21[தொடர்பிழந்த இணைப்பு]
 172. "Madonna's brother's book explores Guy Ritchie marriage". The Daily Telegraph. 15 October 2008. Archived from the original on 2008-12-12. பார்க்கப்பட்ட நாள் 2009-05-23.
 173. "Madonna and Ritchie Confirm Split". BBC News. 16 Oct. 2008. http://news.bbc.co.uk/1/hi/entertainment/7672083.stm. பார்த்த நாள்: 2008-10-15. 
 174. "Madonna $75 million divorce deal 'agreed'". CNN. 15 December 2008. http://www.cnn.com/2008/SHOWBIZ/11/21/madonna.ritchie.divorce/index.html?iref=mpstoryview. 
 175. "Madonna gives Guy £50m in divorce". BBC. 15 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-05-23.
 176. Schwartz, Rob (3 March 2009). "Exile, Madonna Honored At RIAJ Gold Disc Awards". Billboard.biz. Nielsen Business Media. Archived from the original on 2012-06-29. பார்க்கப்பட்ட நாள் 2009-03-04.
 177. "Madonna's bid to adopt second child from Malawi is blocked". Daily Record (Scotland). 3 April 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-07-07.
 178. Banda, Mabvuto (Louise Ireland). "Madonna Loses Adoption Bid In Malawi". Billboard. Reuters. Archived from the original on 2012-12-31. பார்க்கப்பட்ட நாள் 2009-05-26. {{cite web}}: Check date values in: |date= (help); Unknown parameter |coauthors= ignored (help)
 179. Tyre, Blan (12 June 2009). "Madonna Wins Adoption Battle". CBS News. CBS Interactive Inc. Archived from the original on 2009-06-19. பார்க்கப்பட்ட நாள் 2009-06-19.
 180. Caulfield, Keith (2009-07-23). "Madonna's 'Celebration' Hits Collection To Feature Two New Songs". Billboard (Nielsen Business Media, Inc). http://www.billboard.com/#/news/madonna-s-celebration-hits-collection-to-1003996769.story. பார்த்த நாள்: 2009-07-23. 
 181. 181.0 181.1 Sexton, Paul (2009-09-29). "Madonna's U.K. Chart 'Celebration'". Billboard (Nielsen Business Media, Inc). http://www.billboard.com/news/madonna-s-u-k-chart-celebration-1004016343.story. பார்த்த நாள்: 2009-09-29. 
 182. "The Celebrity 100". Forbes. 2009-06-03. பார்க்கப்பட்ட நாள் 2009-06-05.
 183. Montogomery, James (2009-09-13). "Madonna Pays Tearful Tribute To Michael Jackson At 2009 VMAs‎". MTV (MTV Networks). http://www.mtv.com/news/articles/1621390/20090913/jackson_michael.jhtml. பார்த்த நாள்: 2009-09-14. 
 184. McConnell, Donna (2010-01-07). "Madonna gets a touch of the GaGas... as she steps out with her face completely covered by mesh scarf". Daily Mail (Associated Newspapers Ltd). http://www.dailymail.co.uk/tvshowbiz/article-1241271/Madonna-gets-touch-GaGas--steps-face-completely-covered.html. பார்த்த நாள்: 2010-01-07. 
 185. 185.0 185.1 Grant, Robert (2005), Contemporary Strategy Analysis, Wiley-Blackwell, p. 6, ISBN 9781405119993
 186. "Madonna: Biography: Rolling Stone". Rolling Stone. Jann Wenner. Archived from the original on 2009-01-19. பார்க்கப்பட்ட நாள் 2009-08-03.
 187. Bego, Mark (2000), Madonna: Blonde Ambition, Cooper Square Press, p. 122, ISBN 9780815410515
 188. 188.0 188.1 Worrell, Denise (1985-05-27). "Madonna, Why She's Hot". டைம். 
 189. செயிண்ட் மைக்கேல், ப. 199
 190. King, Larry (January 19, 1999). "Interview: Madonna reviews life on Larry King Live". CNN. பார்க்கப்பட்ட நாள் 2008-06-09.
 191. "Material Girl talks of her pop material". The Observer. 2006-10-29. 
 192. J.D. Considine. "Like A Prayer review". Rolling Stone இம் மூலத்தில் இருந்து 2008-11-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081101112946/http://www.rollingstone.com/artists/madonna/albums/album/185201/review/5940859/like_a_prayer. பார்த்த நாள்: 2008-06-09. "Madonna maintains an impressive sense of balance throughout the album, juxtaposing the ecstatic fervor of "Like a Prayer" with the Catholic injoking of Act of Contrition." 
 193. ஓ’ப்ரையன், ப. 131
 194. ஓ’ ப்ரையன், ப. 126
 195. ஃபவுஸ்-ஹெர்னாண்டஸ், பக். 67-70
 196. "Venice, Italy". BBC. பார்க்கப்பட்ட நாள் 2008-06-03.
 197. "Online English-Italian Dictionary". WorldReference.com. பார்க்கப்பட்ட நாள் 23 May 2009.
 198. விக்டர், ப. 78
 199. ஃபிஷர், கேரி (ஆகஸ்டு 1991). ரோலிங் ஸ்டோன் , "True Confessions: The Rolling Stone Interview With Madonna, Part One".
 200. வோலர், ப. 170
 201. குரால்னிக், ப. 149
 202. Susman, Gary. "Madonna Faces Copyright Suit Over Video Images". Entertainment Weekly. http://www.ew.com/ew/article/0,,491440,00.html. பார்த்த நாள்: 2008-06-14. 
 203. கில்பர்ட், ப. 69
 204. 204.0 204.1 204.2 ஃபிரிஸ்கிக்ஸ்-வாரென், ப. 72
 205. Ross (5 August 2004). "Madonna opens her own school". The Times of India. Archived from the original on 2012-06-29. பார்க்கப்பட்ட நாள் 2006-02-20. {{cite web}}: Unknown parameter |fisrt= ignored (help)
 206. "Madonna defends Kabbalah interest". BBC. 2005-10-31. பார்க்கப்பட்ட நாள் 2008-06-03.
 207. 207.0 207.1 207.2 மெட்ஸ், ப. 161
 208. மெட்ஸ், ப. 163
 209. ஃபவுஸ் ஹெர்னாண்டெஸ், ப. 145
 210. கெல்னெர், ப. 271
 211. கரோல் கிளர்க், ப. 44
 212. ரெடன்மண்ட், ப. 34
 213. வெல்டன், ப. 234
 214. கிராஸ், ப. 70
 215. டெட்ஸ்லாஃப், ப. 259
 216. ஓர்கில், ப. 80
 217. 217.0 217.1 Nelson, Chris (2004-02-01), "Lip-Synching Gets Real", The New York Times, p. 2.1, ISSN 0362-4331
 218. Christensen, Thor (2001-09-15), "Loose Lips: Pop Singers' Lip-Syncing In Concert Is An Open Secret", Pittsburgh Post-Gazette, p. B.8, ISSN 1068-624X
 219. "Madonna". Rolling Stone. Jann S. Wenner. Archived from the original on 2009-01-19. பார்க்கப்பட்ட நாள் 2008-08-03.
 220. Callan, James (22 December 2008). "Madonna's 'Sticky & Sweet' Highest-Grossing Solo Tour". Bloomberg L.P. பார்க்கப்பட்ட நாள் 2009-05-23.
 221. Bronson, Fred (24 November 2005). "Chart Beat". Billboard. Nielsen Business Media, Inc. பார்க்கப்பட்ட நாள் May 2008-05-02. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 222. "The musical superstars". BBC. பார்க்கப்பட்ட நாள் 2008-06-09.
 223. "100 Greatest Women of Rock & Roll (20-1)". VH1. MTV Network. Archived from the original on 2009-01-06. பார்க்கப்பட்ட நாள் 2008-06-05.
 224. 224.0 224.1 ஃபவுஸ் ஹெர்னாண்டெஸ், ப. 168
 225. 225.0 225.1 225.2 225.3 225.4 ஃபவுஸ் ஹெர்னாண்டெஸ், ப. 162
 226. 226.0 226.1 ஸ்ட்ரிட்மேட்டர், ப. 34
 227. Boteach, Shmuel (2005), Hating women: America's hostile campaign against the fairer sex, HarperCollins, p. 110, ISBN 9780060781224
 228. ராபர்ட்சன், ப. 117
 229. ரஸ்ட், ப. 209
 230. 230.0 230.1 க்ராமரே, ப. 459
 231. 231.0 231.1 231.2 ஃபவுஸ் ஹெர்னாண்டெஸ், ப. 161
 232. Susman, Gary. "So-called Chaos". Entertainment Weekly. Time Inc. Archived from the original on 2011-02-02. பார்க்கப்பட்ட நாள் 2009-08-03. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
 233. Sandall, Robert (5 April 2009). "Why Madonna is still a Material Girl". The Times. பார்க்கப்பட்ட நாள் 2009-08-03.
 234. Anderson, Jamie; Kupp, Martin (18 January 2007). "Case Study: Madonna". The Times. பார்க்கப்பட்ட நாள் 2009-08-03.
 235. Simpson, Dave (21 November 2002). "I'm quitting this corrupt cesspool". The Guardian. http://www.guardian.co.uk/music/2002/nov/21/artsfeatures.popandrock. பார்த்த நாள்: 2009-08-03. 
 236. McWilliams, Michael (1990-04-21), Why the rock world hates Madonna, Detroit News, பார்க்கப்பட்ட நாள் 2009-10-11[தொடர்பிழந்த இணைப்பு]
 237. "Echiniscus madonnae". Tardigrada Newsletter. Michalczyk & Kaczmarek. 2006. Archived from the original on 2009-03-26. பார்க்கப்பட்ட நாள் 2008-06-14.
 238. "Echiniscus madonnae". ITIS. பார்க்கப்பட்ட நாள் 2008-06-03.

குறிப்புதவிகள்[தொகு]

கூடுதல் வாசிப்பு[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
மடோனா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மடோனா&oldid=3925491" இலிருந்து மீள்விக்கப்பட்டது