பிரிட்னி ஸ்பியர்ஸ்
Appearance
பிரிட்னி ஸ்பியர்ஸ் | |
---|---|
2013 இல் பிரிட்னி ஸ்பியர்ஸ் | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | பிரிட்னி ஜீன் ஸ்பியர்ஸ் |
பிறப்பு | திசம்பர் 2, 1981 மெக்கோம்ப் மிஸ்சிசிப்பி, ஐக்கிய அமெரிக்கா |
பிறப்பிடம் | கெண்ட்வுட், லூசியானா, ஐக்கிய அமெரிக்கா |
இசை வடிவங்கள் | பாக், நடன பாப், சமகால ஆர் & பி |
தொழில்(கள்) | கேளிக்கையாளர் |
இசைக்கருவி(கள்) | வாய்ப்பாட்டு பியானோ |
இசைத்துறையில் | 1993–நடப்பு |
வெளியீட்டு நிறுவனங்கள் | ஜைவ் ரெக்கார்ட்ஸ் |
இணையதளம் | www.britneyspears.com www.britney.com |
பிரிட்னி ஸ்பியர்ஸ் (ஆங்கில மொழி: Britney Jean Spears, பி. டிசம்பர் 2, 1981) ஒரு அமெரிக்கப் பாடகி மற்றும் கேளிக்கையாளர். சிறுவயதிலேயே பொது நிகழ்ச்சிகளில் பாடத் துவங்கிய ஸ்பியர்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களிலும் நடித்து வந்தார். 1997 இல், 16வது வயதில் தன் முதல் தொழில்முறை பாடகர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அவருடைய முதல் இசைத்தொகுப்பு பேபி ஒன் மோர் டைம் 1999 இல் வெளியாகி உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதுவரை ஏழிற்கும் மேற்பட்ட இசைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவரது இசைத் தொகுப்புகள் 100 மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்றுள்ளன.
படைப்புகள் பட்டியல்
[தொகு]- பேபி ஒன் மோர் டைம் (1999)
- ஊப்ஸ்!...'' ''ஐ டிட் இட் அகெய்ன் (2000)
- பிரிட்னி (2001)
- இன் தி ஸோன் (2003)
- பிளாக்அவுட் (2007)
- சர்க்கஸ் (2008)
- கிரேடஸ்ட் ஹிட்ஸ்: மை பிரெரொகேட்டிவ் (2004)
- தி சிங்கிள்ஸ் கலெக்ஷன் (2009)