மர்லின் மன்றோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மர்லின் மன்றோ
Marilyn Monroe
இயற் பெயர் நோர்மா ஜீன் மோர்ட்டென்சன்
பிறப்பு சூன் 1, 1926(1926-06-01)
லொஸ் ஏஞ்சலீஸ், கலிபோர்னியா  அமெரிக்கா
இறப்பு ஆகத்து 5, 1962(1962-08-05) (அகவை 36)
லொஸ் ஏஞ்சலீஸ், கலிபோர்னியா,  அமெரிக்கா
வேறு பெயர் நோர்மா ஜீன் பேக்கர்
தொழில் நடிகை, மாடல், ஒப்பனையாளர், இயக்குநர்
நடிப்புக் காலம் 1947–1962
துணைவர் ஜேம்ஸ் டொகேர்ட்டி (1942-1946)

ஜோ டிமாகியோ (1954)
ஆர்தர் மில்லர் (1956-1961)

இணையத்தளம் http://www.marilynmonroe.com/

மர்லின் மன்றோ Marilyn Monroe, ஜூன் 1, 1926ஆகஸ்ட் 5, 1962), அமெரிக்க நடிகையும் பாடகியும் திரைப்பட இயக்குநரும் ஆவார்.

1960 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது இவருக்குக் கிடைத்தது. அத்துடன் 1999 ஆம் ஆண்டில் அமெரிக்க திரைப்படக் கழகத்தினால் (AFI) அனைத்துக் காலப் பகுதிக்குமான சிறந்த நடிகை (greatest female star of all time) விருது வழங்கிச் சிறப்பித்தது.

1947 ஆம் ஆண்டில் இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் சிறிய பாத்திரங்களில் தோன்றினார். 1950 இல் The Asphalt Jungle மற்றும் All About Eve என்ற படங்கள் இவருக்குப் புகழ் தேடிக் கொடுத்தன. நகைச்சுவைப் பாத்திரங்களில் இவரது நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது.

நோர்மா டொகேர்ட்டி, யாங்க் இதழ், 1945

மன்றோவின் கடைசி நாட்களில் போதைப் பொருள், குடும்பப் பிரச்சினையால் அல்லல் உற்றார். இவரது இறப்பு இன்னமும் ஒரு தீர்க்கப்படாத புதிராகவே உள்ளது. தற்கொலை செய்து கொண்டதாகவே அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் போதைப் பொருள் அதிகம் உட்கொண்டு இறந்திருக்கலாம் என்ற கருத்தும் மறுக்கப்படவில்லை[1]. கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இவரது பெயர் ஜோன் எஃப். கென்னடி, மற்றும் ரொபேர்ட் கென்னடி ஆகியோருடன் இணைத்துப் பேசப்பட்டது[2].

அதிகம் பேசப்பட்ட படம்[தொகு]

சற்று மேலே பறக்கும் மேலாடையுடன் The Seven Year Itch திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட மன்றோவின் புகைப்படம் சிறப்பாக அமைய 14 முறை ரீடேக் எடுக்கப்பட்டதாகவும், இரவு 1.00 மணிக்கு எடுக்கப்பட்ட அக்காட்சி நிறைவுற மூன்று மணி நேரம் ஆனதாகவும் புகைப்படக்கலைஞர் ஜார்ஜ் எஸ்.ஸிம்பல் தெரிவித்துள்ளார்.[3]

இலண்டனும் நாடக வாழ்க்கையும்[தொகு]

சேக்சுபியர் எப்போது எழுதத் துவங்கினார் என்று துல்லியமாகத் தெரியவில்லை. ஆனால் சமகாலத்திய குறிப்புகளும் நாடக நிகழ்ச்சிகளின் பதிவுகளும் அவரது பல நாடகங்கள் லண்டன் அரங்கில் 1592 ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்கலாம் எனக் காட்டுகின்றன.[4] அப்போது நாடக ஆசிரியரான ராபர்ட் கிரீன் சேக்சுபியரை பின்வரும் வகையில் அவமதித்துப் பேசும் அளவுக்கு சேக்சுபியர் லண்டனில் போதுமான அளவு அறியப்பட்டவராயிருந்தார்:

....புதிதாய் ஒரு காகம் கிளம்பியிருக்கிறது. உங்களில் சிறந்தவர்களில் ஒருவரைப் போல தனக்கும் திறனுண்டு என்பதைப் போல வெற்று செய்யுளைக் கொண்டு அது பகட்டு செய்கிறது. முழுக்க எல்லாம்-தெரிந்த ஆசாமி யாக இது அலட்டிக் கொள்கிறது.[5]

இந்த வார்த்தைகளின் துல்லியமான பொருளில் அறிஞர்கள் வேறுபடுகிறார்கள்.[6] ஆனால் கிறிஸ்டோபர் மர்லோ, தாமஸ் நஷெ மற்றும் கிரீனும் போன்ற பல்கலைக்கழக கல்வி பெற்ற எழுத்தாளர்கள் அளவுக்கு தன்னை உயர்த்தி நிறுத்திக் கொள்ள சேக்சுபியர் தனது தகுதிக்கு மீறி முயற்சிப்பதாக கிரீன் குற்றம் சாட்டுகிறார் என்பதை மட்டும் அநேகமானோர் ஒப்புக் கொள்கின்றனர்.[7][8]

கிரீனின் தாக்குதல் தான் நாடக வாழ்க்கையில் சேக்சுபியர் குறித்த முதல் பதிவு பெற்ற குறிப்பாகும். அவரது தொழில்வாழ்க்கை கிரீனது கருத்துகளுக்கு கொஞ்சம் முன்னால் 1580களின் மத்தியில் ஏதோ ஒரு சமயத்தில் துவங்கியிருக்க வேண்டும் என்று வாழ்க்கைவரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.[9] 1594 ஆம் ஆண்டு முதல், சேக்சுபியரின் நாடகங்கள் லார்டு சாம்பர்லெய்ன்'ஸ் மென் குழுவினால் மட்டுமே நடத்தப்பட்டன. இது சேக்சுபியர் உள்ளிட்ட ஒரு குழுவினர் பங்குபெற்று நடத்தி வந்த ஒரு நிறுவனமாகும். இது விரைவில் லண்டனின் முன்னணி நாடக நிறுவனமானது.[10] 1603 ஆம் ஆண்டில் ராணி எலிசபெத்தின் மறைவுக்குப் பிறகு, புதிய மன்னரான முதலாம் ஜேம்ஸ் இந்நிறுவனத்திற்கு அரச உரிமத்தை வழங்கி, அதன் பெயரையும் கிங்'ஸ் மென் என்பதாக மாற்றினார்.[11] 1599 ஆம் ஆண்டில், நிறுவன உறுப்பினர்களின் ஒரு கூட்டணி தேம்ஸ் நதியின் தெற்குக் கரையில் தங்களது சொந்த நாடக அரங்கைக் கட்டியது. இதனை அவர்கள் குளோப் என்று அழைத்தனர். 1608 ஆம் ஆண்டில், இந்த கூட்டணி பிளாக்ஃபிரையர்ஸ் உள் அரங்கத்தையும் கைவசமாக்கியது. சேக்சுபியரின் சொத்து வாங்கல்கள் மற்றும் முதலீடுகள் குறித்த பதிவுகள் நிறுவனம் அவரை ஒரு பணக்காரராக்கி இருப்பதை சுட்டிக் காட்டுகின்றன.[12] 1597 ஆம் ஆண்டில், ஸ்ட்ராட்ஃபோர்டில் இரண்டாவது மிகப்பெரிய வீடான நியூ ப்ளேஸை அவர் வாங்கினார். 1605 ஆம் ஆண்டில், ஸ்ட்ராட்ஃபோர்டு திருச்சபை வருவாய் பங்கில்அவர் முதலீடு செய்தார்.[13]

1594 ஆம் ஆண்டு முதல் சேக்சுபியரின் சில நாடகங்கள் குவார்டோ பதிப்புகளாக வெளியாகின. 1598 வாக்கில், அவரது பெயர் விற்பனை அம்சமாக மாறி முகப்பு பக்கங்களில் தோன்றத் துவங்கியிருந்தது.[14] நாடக ஆசிரியராக வெற்றி பெற்ற பிறகு சேக்சுபியர் தனது சொந்த நாடகங்கள் மற்றும் பிறரது நாடகங்களில் நடிப்பதைத் தொடர்ந்தார். பென் ஜான்சன் படைப்பு களின் 1616 ஆம் ஆண்டு பதிப்பு எவரி மேன் இன் ஹிஸ் ஹியூமர் (1598) மற்றும் செஜானஸ், அவரது வீழ்ச்சி (1603) ஆகிய நாடகங்களின் நடித்தவர் பட்டியலில் சேக்சுபியரின் பெயரைக் குறிப்பிடுகிறது.[15] 1605 ஆம் ஆண்டின் ஜான்சன்'ஸ் வோல்போன் நடிகர் பட்டியலில் அவர் பெயர் இல்லாதிருப்பது, அவரது நடிப்பு வாழ்க்கை முடிவை நெருங்கியதன் அடையாளம் என்று சில அறிஞர்கள் எடுத்துக் கூறுகின்றனர்.[16] ஆயினும், 1623 ஆம் ஆண்டின் தி ஃபர்ஸ்ட் ஃபோலியோ சேக்சுபியரை "இந்த அனைத்து நாடகங்களின் பிரதான நடிகர்களில்" ஒருவர் என்று பட்டியலிடுகிறது. இவற்றில் சில வோல்போனுக்கு பிறகு தான் முதன்முறையாக அரங்கேற்றப்பட்டவை, ஆயினும் அவர் ஏற்ற பாத்திரங்கள் என்ன என்பது நமக்கு உறுதிபடத் தெரியவில்லை.[17][18] 1709 ஆம் ஆண்டில், சேக்சுபியர் ஹேம்லெட்டின் அப்பாவின் ஆவி பாத்திரத்தை ஏற்றதாக ஒரு கூற்றும் பிறந்தது.[19] அவர் அஸ் யூ லைக் இட் நாடகத்தில் ஆதாம் வேடமும் ஹென்றி V நாடகத்தில் கோரஸ் வேடமும் கூட ஏற்றிருக்கிறார் என்பதாக பிந்தைய கூற்றுகள் கூறி வந்தன,[20] ஆனால் இந்த தகவல்களின் மூலங்கள் குறித்து அறிஞர்கள் சந்தேகம் கொள்கிறார்கள்.[21]

சேக்சுபியர் தனது தொழில் வாழ்க்கையின் போது தனது காலத்தை லண்டன் மற்றும் ஸ்ட்ராட்ஃபோர்டுக்கு இடையில் பிரித்துக் கொண்டார். 1596 ஆம் ஆண்டில், அவர் ஸ்ட்ராட்ஃபோர்டில் தனது குடும்ப இல்லமான நியூ ப்ளேஸை வாங்குவதற்கு ஒரு வருடம் முன்னதாக, தேம்ஸ் நதிக்கரையின் வடக்குப் பகுதியில் வசித்து வந்தார்.[22] 1599 வாக்கில், நதியைக் கடந்து சவுத்வார்க்கிற்கு நகர்ந்தார். அவரது நிறுவனம் அந்த ஆண்டில் அங்கு குளோப் தியேட்டரை கட்டியிருந்தது.[23] 1604 வாக்கில், அவர் மீண்டும் நதியின் தெற்கில் சென்று விட்டார். அங்கே அவர் கிறிஸ்டோபர் மவுண்ட்ஜாய் எனும் பெண்களின் தலையலங்காரங்கள் தயாரிப்பாளரான பிரெஞ்சு ஹயூக்னாட்டிடம் வாடகைக்கு அறைகளை அமர்த்திக் கொண்டார்.[24]

மேற்கோள்கள்[தொகு]

 1. Wolfe, Donald H. The Last Days of Marilyn Monroe. (1998) ISBN 0787118079
 2. Engelberg, Morris. DiMaggio, Setting the record straight, page 281, (2003), ISBN 0-7603-1482-9
 3. "Monroe took 14 retakes for iconic scene". The Hindu. September 17,2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/monroe-took-14-retakes-for-iconic-scene/article6417357.ece. பார்த்த நாள்: 19 September 2014. 
 4. Chambers 1930, Vol. 1: 287, 292
 5. Greenblatt 2005, 213.
 6. Greenblatt 2005, 213; Schoenbaum 1987, 153.
 7. Ackroyd 2006, 176.
 8. Schoenbaum 1987, 151–52.
 9. Wells 2006, 28; Schoenbaum 1987, 144–46; Chambers 1930, Vol. 1: 59.
 10. Schoenbaum 1987, 184.
 11. Chambers 1923, 208–209.
 12. Chambers 1930, Vol. 2: 67–71.
 13. Bentley 1961, 36.
 14. Schoenbaum 1987, 188; Kastan 1999, 37; Knutson 2001, 17
 15. Adams 1923, 275
 16. Wells 2006, 28.
 17. Schoenbaum 1987, 200.
 18. Schoenbaum 1987, 200–201.
 19. Rowe 1709.
 20. Ackroyd 2006, 357; Wells ஏனையோர். 2005, xxii
 21. Schoenbaum 1987, 202–3.
 22. Honan 1998, 121.
 23. Shapiro 2005, 122.
 24. Honan 1998, 325; Greenblatt 2005, 405.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மர்லின்_மன்றோ&oldid=2194555" இருந்து மீள்விக்கப்பட்டது