உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் எஃப். கென்னடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜோன் எஃப். கென்னடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜான் ஃபிட்ஸ்ஜெரால்ட் கென்னடி
John Fitzgerald Kennedy
ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவர்
பதவியில்
ஜனவரி 20, 1961 – நவம்பர் 22, 1963
Vice Presidentலின்டன் ஜோன்சன்
முன்னையவர்டுவைட் ஐசன்ஹோவர்
பின்னவர்லின்டன் ஜோன்சன்
United States Senator
from மசாசுசெட்ஸ்
பதவியில்
ஜனவரி 3, 1953 – டிசம்பர் 22, 1960
முன்னையவர்ஹென்றி சபொட் லொட்ஜ், இளையவர்
பின்னவர்பெஞ்சமின் ஸ்மித்
Member of the U.S. House of Representatives
from மசாசுசெட்ஸ்'s 11வது காங்கிரஸ் district
பதவியில்
1947–1953
முன்னையவர்ஜேம்ஸ் மைக்கல் கேர்லி
பின்னவர்தாமஸ் பி. ஓ’நீல், இளையவர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1917-05-29)மே 29, 1917
புரூக்ளின்
இறப்புநவம்பர் 22, 1963(1963-11-22) (அகவை 46)
டெக்சாஸ்
அரசியல் கட்சிஜனநாயகக் கட்சி
துணைவர்ஜாக்குலின் கென்னடி
முன்னாள் கல்லூரிஹாவார்ட் பல்கலைக்கழகம்
கையெழுத்து

ஜான் எஃப். கென்னடி அல்லது ஜான் ஃபிட்ஸ்ஜெரால்ட் கென்னடி (John Fitzgerald Kennedy; மே 29, 1917 - நவம்பர் 22, 1963), ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவராக 1961 முதல் 1963 வரை அவர் கொலை செய்யப்படும் வரை இருந்தவர்.

இரண்டாம் உலகப் போரின் போது தென்மேற்கு பசிபிக் பகுதியில் கடற்படைக் கப்பலில் லெப்டினண்டாகப் பணிபுரிந்தார். போரின் முடிவில் அவர் தீவிர அரசியலுக்குத் திரும்பினார். மசாசுசெட்ஸ் மாநிலத்திற்கு 1947 முதல் 1953 வரை அமெரிக்க கீழவை (House) உறுப்பினராக ஜனநாயகக் கட்சி சார்பில் தெரிவானார். மேலவை (செனட்) உறுப்பினராக 1953 முதல் 1961 வரை இருந்தார். 1960 இல் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னாள் உதவி ஜனாதிபதியும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான ரிச்சார்ட் நிக்சனைத் தோற்கடித்தார். புலிட்சர் விருது பெற்ற ஒரேயொரு அமெரிக்கத் தலைவர் இவரே ஆவார்[1]. இவரது அரசு கியூபாவின் ஏவுகணை விவகாரம், பேர்லின் சுவர் கட்டப்பட்டமை, விண்வெளி ஆய்வுப் போட்டி, அமெரிக்க குடியுரிமை விவகாரம் (1955–1968), வியட்நாம் போரின் ஆரம்பம் போன்ற நிகழ்வுகளைச் சந்திக்க வேண்டி இருந்தது.

நவம்பர் 22, 1963 இல் டெக்சாஸ், டல்லாஸ் நகரில் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். லீ ஹார்வி ஒஸ்வால்ட் என்பவன் கொலைக்குற்றஞ்சாட்டப்பட்டுக் கைதானான். ஆனால் இவன் இரண்டு நாட்களின் பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு முன்னரேயே “ஜாக் ரூபி” என்பவனால் கொல்லப்பட்டான். கொலை விசாரணையை நடத்திய “வாரன் கமிஷன்” ஒஸ்வால்ட் என்பவன் வேறொரு உதவியுமின்றி தனித்தே கென்னடியைச் சுட்டுக் கொன்றதாக தெரிவித்தது. ஆனாலும், 1979 இல் அரசியல் கொலைகளை விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட கீழவை சிறப்பு விசாரணைக் குழு இக்கொலைக்கு அரசியல் பின்னணி இருந்திருக்கலாம் என்பதாகத் தெரிவித்தது[2]. இக்கொலைக்கான பின்னணி இதுவரையில் அறியப்படவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_எஃப்._கென்னடி&oldid=3276956" இலிருந்து மீள்விக்கப்பட்டது