உள்ளடக்கத்துக்குச் செல்

அஞ்செலா டேவிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஞ்செலா டேவிசு
அக்டோபர் 2006இல் அஞ்செலா டேவிசு
பிறப்புஅஞ்செலா இவான் டேவிசு
சனவரி 26, 1944 (1944-01-26) (அகவை 80)
பர்மிங்காம், அலபாமா, ஐ.அ.
படித்த கல்வி நிறுவனங்கள்
பணிகல்வியாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்
பணியகம்கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான்டா குரூசு (பணி நிறைவு)
அரசியல் கட்சிஐக்கிய அமெரிக்கப் பொதுவுடமைக் கட்சி (1969–1991), மக்களாட்சிக்கும் சோசலிசத்திற்குமான தொடர்பாடல் குழுக்கள் (1991–நடப்பில்)
வாழ்க்கைத்
துணை
இல்ட்டன் பிரைத்வைட் (1980–?)[1]
உறவினர்கள்பென் டேவிசு (சகோதரர்); இரெஜினால்டு டேவிசு (சகோதரர்); ஃபானியா டேவிசு ஜோர்டன் (சகோதரி)

அஞ்செலா இவான் டேவிசு ( Angela Yvonne Davis, சனவரி 26, 1944) அமெரிக்க அரசியல் செயற்பாட்டாளரும் கல்வியாளரும் எழுத்தாளரும் ஆவார். 1960களில் ஐக்கிய அமெரிக்கப் பொதுவுடமைக் கட்சித் தலைவராக அக்காலத்திய எதிர்ப்பண்பாடு இயக்கங்களில் முன்னணி வகித்தார். கருஞ்சிறுத்தைக் கட்சியின் அலுவல்முறையான உறுப்பினராக இல்லாதபோதும், குடிசார் உரிமைகள் இயக்கங்களில் பங்கேற்றமையால் அக்கட்சியுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டிருந்தார். சிறைக் குற்றவாளிகளின் உரிமைகளை நிலைநாட்டப் பாடுபட்டார்; இதற்காக கிரிட்டிகல் ரெசிஸ்டன்சு என்ற அமைப்பை நிறுவினார். இது சிறை-தொழிற்சாலை முறையை எதிர்த்தது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சான்டா குரூசு வளாகத்தில் உணர்வியல் வரலாற்றுத் துறையில் பேராசிரியையாக இருந்து பணி ஓய்வு பெற்றார். அதே பல்கலைக்கழகத்தின் பெண்ணியக் கல்வி துறைக்கு முன்னாள் இயக்குநராகவும் இருந்துள்ளார்.[2]

இவருக்கு பெண்ணியம், ஆபிரிக்க-அமெரிக்கர்கள், மார்க்சியம், பரப்பிசை, சமூக உணர்வியல், தண்டனை மற்றும் சிறைச்சாலைகள் குறித்த மெய்யியல் ஆகியவற்றில் ஆய்வுக்கான விருப்பம் இருந்தது. பொதுவுடமைக் கட்சியில் உறுப்பினராக இருந்தமையால் 1969இல் கலிபோர்னியா மாநிலத்தின் பல்கலைக்கழகங்களில் இவர் பணியாற்றுவதற்குத் தடை விதிக்க ரானல்ட் ரேகன் கோரினார். 1980களில் இரண்டு முறை ஐக்கிய அமெரிக்க பொதுவுடமைக் கட்சியின் சார்பில் அமெரிக்கத் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Angela Davis, Sweetheart of the Far Left, Finds Her Mr. Right". People. July 21, 1980. Archived from the original on மார்ச் 11, 2015. பார்க்கப்பட்ட நாள் October 20, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Interview with Angela Davis". BookTV. October 3, 2004.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்செலா_டேவிசு&oldid=3540670" இலிருந்து மீள்விக்கப்பட்டது