மேரி உல்சுடன்கிராஃப்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேரி உல்சுடன்கிராஃப்ட்

மேரி உல்சுடன்கிராஃப்ட் (Mary Wollstonecraft) (ஏப்ரல் 27, 1759செப்டம்பர் 10, 1797) ஓர் ஆங்கில மெய்யியலாளர் மற்றும் துவக்க கால பெண்ணிய ஆர்வலர்.சிறுவர்களுக்கான நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். அவரது இரு புகழ்பெற்ற நூல்கள்: பிரெஞ்சுப் புரட்சிக்கு எதிர்வினையாக மனிதர்களின் உரிமைகளுக்கு நியாயப்படுத்துதல் - A Vindication of the Rights of Man (1790) மற்றும் பெண்களின் சம உரிமைகளுக்காக பெண்களின் உரிமைகளுக்கு நியாயப்படுத்துதல் - A Vindication of the Rights of Woman (1792). பொது வாழ்வில் இருவரும் சமமாக போராட வசதியாக சிறுவர், சிறுமியர் இருவருக்கும் சமமான கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தினார்.

உல்சுடன்கிராஃப்ட் மெய்யியலாளர் வில்லியம் காட்வினைத் திருமணம் செய்திருந்தார்.அவரது மகள் மேரி உல்சுடன்கிராஃப்ட் காட்வின் என்ற மேரி ஷெல்லியும் சிறந்த எழுத்தாளர். பயமூட்டும் புதினமான பிராங்கென்ஸ்டைனை எழுதியவர்.