கருக்கலைப்பிற்கு எதிரான பெண்ணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருக்கலைப்புக்கு எதிரான பெண்ணியம் அல்லது வாழ்க்கை சார்பு பெண்ணியம் (Anti-abortion feminism or pro-life feminism) என்பது சில பெண்ணியவாதிகளால் கருக்கலைப்பு என்பதனை கட்டாயமாக்கும்பட்சத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை பெண்களுக்கு உள்ளது என கருக்கலைப்பிற்கு எதிரான பெண்ணியவாதிகள் கருதுகின்றனர். கருக்கலைப்பு என்பது பென்களுக்கு நன்மை விளைவிப்பதனை விட அதிக தீங்கினையே விளைவிக்கிறது என்பதே இதற்கான அடிப்படைக் காரணமாக உள்ளது.

நவீன கருக்கலைப்பு எதிர்ப்பு பெண்ணிய இயக்கம் 19 ஆம் நூற்றாண்டில் கருக்கலைப்பிற்கு எதிரான சிறந்த முன்னுதாரணமாக உள்ளது; இந்த இயக்கம் 1970 களின் முற்பகுதியிலிருந்து நடுப்பகுதி வரை சட்டப்பூர்வமாக கருக்கலைப்பு என்பது அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அமெரிக்காவில் ஃபெமினிஸ்ட் ஃபார் லைஃப் மற்றும் பிரித்தானியாவில் வுமன் பார் லைஃப் எனும் அமைப்புகளை நிறுவியதன் மூலம் கருக்கலைப்பிற்கு எதிராக தங்களது கருத்துக்களைத் தெரிவித்தன [1] ஃபெமினிஸ்ட் ஃபார் லைஃப் மற்றும் சூசன் பி. அந்தோணி லிஸ்ட் ஆகிய அமைப்புகள் அமெரிக்காவில் கருக்கலைப்பிற்கு எதிரான குறிப்பிடத்தகுந்த பெண்ணியவாதிகள் அமைப்பாக இருந்தன. நியூ வேவ் ஃபெமினிஸ்ட் மற்றும் ஃபெமினிஸ்ட் ஃபார் னான் வயலண்ட் சாய்சஸ் ஆகிய அமைப்புகளும் கருக்கலைப்பிற்கு எதிராக போராடிய பெண்ணியங்களில் குறிப்பிடத்தகுந்த அமைப்புகள் ஆகும்.

பார்வைகள் மற்றும் இலக்குகள்[தொகு]

கருக்கலைப்பு எதிர்ப்பு பெண்ணியவாதிகள் கருக்கலைப்புக்கான சட்ட அனுமதியினை"தாய்மைக்கு எதிரான சமூக அணுகுமுறைகள் மற்றும் அது தொடர்பான கொள்கைகளை ஆதரிப்பதாகவும் , பெண்களின் மரியாதையை மட்டுப்படுத்துவதாகவும் கருதுகின்றனர்". [2] கருக்கலைப்பு எதிர்ப்பு பெண்ணியவாதிகள், கருக்கலைப்பு என்பதனை சமூகங்கள் பெண்களை அடக்குமுறையுடன் செயல்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒன்றாகவும், அக்கறையில்லாத மற்றும் ஆணாதிக்க சமூகச் செயல்பாடாகவும் கருதுகின்றனர். [3] சாண்டா பார்பராவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பெண்ணிய ஆய்வின் இணைப் பேராசிரியரான லாரி ஓக்ஸ் என்பவர் கருக்கலைப்பு என்பது சட்டப்பூர்வமாக இருக்கும் போது தங்களது கல்விக்கும் , பணியிடத்தில் தங்களது முழு ஈடுபாடுகளுக்கும் தாய்மை என்பதனை தடையாகவே பார்க்கின்றனர் எனக் கூறுகிறார். [2] மற்றும் அயர்லாந்தில் உள்ள கருக்கலைப்பு எதிர்ப்பு பெண்ணிய செயல்பாட்டை "பெண் சார்பு" என்பதை விட "தாய் சார்பு" என்று விவரிக்கிறது. [1] லைஃப் ஆஃப் அயர்லாந்தின் நிறுவனரான பிரெடா ஓ'பிரையன் என்பவர் சமூகத்தில் பெண்களின் பங்களிப்பினை கருக்கலைப்பு போன்றவைகள் மட்டுப்படுத்துவதில்லை எனக் கூறுகின்றனர்.[1]

கருக்கலைப்புக்கு எதிரான பெண்ணிய அமைப்புகள் பொதுவாக கருக்கலைப்பு ஒரு சட்ட சிக்கலாகவும், கருக்கலைப்பை ஒரு தார்மீக பிரச்சினையாகவும், கருக்கலைப்பை ஒரு மருத்துவ முறையாகவும் வேறுபடுத்துவதில்லை. [2] இத்தகைய வேறுபாடுகள் பல பெண்களால் செய்யப்படுகின்றன, உதாரணமாக, தங்கள் சொந்த கர்ப்பத்தை கலைக்க விரும்பாத பெண்கள் கருக்கலைப்பு என்பது சட்டபூர்வமாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். [2]

கருக்கலைப்புக்கு எதிரான பெண்ணிய அமைப்புகள் கருக்கலைப்பு வேண்டாம் எனக் கூறிய பெண்களைப் பயன்படுத்தி தங்களது கருத்துக்களைப் பரப்ப முயல்கின்றன. [4]

புகழ்பெற்ற அமெரிக்க கருக்கலைப்பு எதிர்ப்பு பெண்ணிய அமைப்புகள் அமெரிக்காவில் கருக்கலைப்பை முடிவுக்குக் கொண்டுவர முயல்கின்றன . சூசன் பி. அந்தோணி லிஸ்ட் கருக்கலைப்பு எதிர்ப்பே எங்களின்"இறுதி இலக்கு" என்று கூறுகிறது, [5] ஃபெமினிஸ்ட் ஃபார் லைஃப் தலைவர் செரின் ஃபோஸ்டர் தங்களது அமைப்பு கருக்கலைப்பு என்பதனை நாங்கள் முற்றிலுமாக எதிர்க்கிறோம் என்ரும் இது பெண்ணியத்திற்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் ஆகும் என்று கூறுகிறார்.[2] [6]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Oaks, Laury (2000). "'Pro-Woman, Pro-Life'? The Emergence of Pro-Life Feminism in Irish Anti-Abortion Discourses and Practices". Irish Journal of Feminist Studies 4 (1): 73–90. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Oaks, Laury (Spring 2009). "What Are Pro-Life Feminists Doing on Campus?". NWSA Journal 21 (1): 178–203. பன்னாட்டுத் தர தொடர் எண்:1040-0656. http://muse.jhu.edu/journals/nwsa_journal/v021/21.1.oaks.pdf. 
  3. Oaks, Laury (2009). "What are Pro-Life Feminists doing on Campus?". NWSA 21: 178–203. http://muse.jhu.edu/article/263661. 
  4. Kintz, Linda (1997). Between Jesus and the Market: The Emotions that Matter in Right-Wing America. Durham: Duke University Press. பக். 269. https://archive.org/details/betweenjesusmark0000kint. 
  5. "SBA List Mission: Advancing, Mobilizing and Representing Pro-Life Women". Susan B. Anthony List. 2008 இம் மூலத்தில் இருந்து October 27, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141027042315/http://www.sba-list.org/about-sba-list/our-mission. "To accomplish our ultimate goal of ending abortion in this country..." 
  6. The Nation. August 11, 2005. Katha Pollitt. Reproductive Rights. Feminists for (Fetal) Life: subject to debate. Retrieved on May 11, 2009.