நிகரறப் பெண்ணியம்
பெண்ணியம் தொடரின் பகுதி |
---|
பெண்ணியம் வலைவாசல் |
பெண்ணிய மெய்யியல் தொடரின் பகுதி |
---|
முதன்மை ஆக்கங்கள் |
முதன்மை கோட்பாட்டாளர்கள் |
முக்கிய கோட்பாடுகள் |
மார்க்சியம் தொடரின் ஒரு பகுதி |
---|
நிகரறப் பெண்ணியம் (Socialist feminism) அல்லது சமதரவுப் பெண்ணியம் 1960 களிலும் 1970 களிலும் எழுச்சிபெற்ற பெண்ணிய இயக்கத்தின் பிரிவாக புத்திடதுசாரி இயக்க ஊக்குதலால் எழுச்சிபெற்ற இயக்கமாகும். இது தந்தைவழி முறைமை, முதலாளிய அமைப்பு ஆகிய இரண்டின் இணையுறவில் கவனம் குவிக்கிறது.[1] என்றாலும், சமூகத்தில் நிலவும் மகளிர் தனி, வீட்டு, பொது வெளி சார்ந்த பாத்திரம் கருத்துப் படிமமும் சிந்தனையும் உருவாகிய வழிமுறைகளைப் புரிந்துகொள்ள, 1792 இல் மேரி வுல்சுட்டோன்கிராப்ட்டு இயற்றிய மகளிர் உரிமைகளின் ஒடுக்குமுறை எனும் நூலுக்கும் வில்லியம் தாம்ப்சன் 1800 களில் கற்பனாவாத நிகரறப் பணிகளுக்கும் நம்மை இட்டுச் செல்கிறது.[2]கரோல் கனிசுச் தான் முதலி மகளிர் அனைவரும் ஒருங்கே குழுமி தந்தைவழிச் சமூக விளைவால் எழும் தனியர் சிக்கல்களைத் தீர்க்கவேண்டும் என அறைக்கூவல் விடுத்தார். இந்த எண்ண்க்கருக்களை இவர் தனது 1969 ஆண்டைய கட்டுரையில் அறிமுகப்படுத்தி, இவை நம் சொந்தச் சிக்கல் அல்ல அரசியல் சிக்கல்கள் என்ற முழக்கத்தையும் அரசியலில் முன்வைத்தார். [3] நிகரறப் பெண்ணியம் கிளர்ந்தெழுந்தபோது தான் இரண்டாம் அலைப் பெண்ணியமும் முகிழ்த்தது. நிகரறப் பெண்னியர்கள் மகளிர் விடுதலை, மகளிரின் ஒடுக்குமுறையை உருவாக்கும் பொருளியல், பண்பாட்டு வாயில்களை முடிவுக்குக் கொணரும்போது மட்டுமே எழுச்சிகாணவியலும் என வாதிட்டனர்.[4]
நிகரறப் பெண்ணியத்தின் இரு வகைகளாக மார்க்சியப் பெண்ணியமும் பழமைகடப்புப் பெண்ணியமும் அமைகின்றன. மார்க்சியப் பெண்ணியம் பெண்களின் ஒடுக்குமுறையில் முதலாளியத்தின் தாக்கத்தையும் பழமைகடப்பு அல்லது மரபெதிர்ப்புப் பெண்ணியத்தின் தந்தைவழி முறைமையின் பாலினப் பாகுபாட்டுத் தாக்கததையும் விளக்குகின்றன. நிகரறப் பெண்ணியர்கள் மகளிர் ஒடுக்குமுறைக்குத் தந்தைவழி முறைமை மட்டுமே முதன்மையான காரணி எனும் வாதத்தை ஏற்பதில்லை.[5] மாற்றாக, நிகரறப் பெண்ணியர்கள் நிதிக்காக ஆண்களைச் சார்ந்து இருப்பதாலேயே பெண்கள் ஆண்களால் ஒடுக்கப்பட வாய்ப்பு ஏற்படுகிறது என உறுதிபடுத்துகின்றனர். முதலாளிய அமைப்பில் ஆண்களின் ஓங்கலான அதிகாரம் சரிசமனற்ற செல்வப் பகிர்வால் ஏற்படுகிறது. இந்தப் பொருளியல் சார்பே ஆண்கள் பெண்களை ஒடுக்குவதரான முடுக்க விசையாகிறது என்பதைச் சுட்டி காட்டுகின்றனர். மேலும், நிகரறப் பெண்ணியர்கள் பெண்களின் விடுதலையை சமூக, பொருளியல், அரசியல் விடுதலையின் ஒரு பகுதியாகவே கருதுகின்றனர். இவர்கள் பிற ஒடுக்குமுறைகளாகிய இனம், வருக்கம், பாலினம், பொருளியல் நிலை ஆகியவற்ருக்கு எதிராக அனைத்து மகளிரையும் அணிதிரட்டுகின்றனர்.[6]
கிறித்தென் கோடுசீ, ஏன் நிகரறச் சமூகத்தில் மகளிர் சிறந்த பாலின உறவைப் பெறுவர் எனும் தன் நூலில், கட்டற்ற சந்தை பெண்களை நம்பகத் தன்மை குறைந்தவராகவும் வலிவுகுன்றியவர்களாகவும் உணர்ச்சிக்கு வேகமாக ஆட்படுபவர்களாகவும் பெருமுதலாளிகளைக் கருதவைத்து, அவர்களைக் குறந்த சம்பளத்தில் பணியமர்த்துகிறது என வாதிடுகிறார்.[7]
ஜார்ஜ் பெர்னாடு சா "முதலாளிய அமைப்பு பணத்துக்காக பாலியல் உறவைப் பயன்படுத்த தொடர் உந்துதலை ஊட்டுகிறது" என வாதிடுகிறார்.[8] இவர் மேலும் பெரும்பாலான மகளிர் சந்தை அக்கறை காட்டாத, வீட்டு வேலைகளையே செய்ய நேரிடுகிறது எனவும் கூறுகிறார்.
முதன்மைச் சிக்கல்கள்
[தொகு]பிரிவிடை உறவு
[தொகு]நிகரறப் பெண்ணியர் கிளாடியா ஜோன்சுபொதுவிடைமைக் கட்சியில் கருப்புப் பெண்களையும் பிற பழுப்புவகைப் பெண்களையும் 1930 களில் அணிதிரட்டி இணைக்க முயன்றார்;அவர்களைன் தேவைகலாஇயும் வேண்டல்களையும் முன்னெடுத்துப் போராடினார். ஏனெனில், பொதுவுடைமைக் கட்சி இயல்பாக வெள்ளையின் பாட்டாளிகளை ஒருங்குதிரட்டிவந்தது. இந்நிலையில் ஜோன்சின் கோட்பாட்டுப் பின்னணி மார்க்சியத்தின் பிரிவுகளியிலான உறவுகளைக் குறிப்பாக, கருப்பினத் தேசியம், மார்க்சியம், பெண்ணியம் பேணி வளர்க்க முயன்றார். இவர் கோட்பாட்டுப் புலத்தில் மூன்றொடுக்குமுறைகளை, அதாவது கருப்பு, பழுப்பு, பாட்டளிப் பெண்களின் ஒடுக்குமுறையையும் அவர்கள் இனம், வருக்கம், பாலின அடிப்படையில் ஒடுக்கப்படும் நடைமுறை த் தெளிவுகளை முன்னிறுத்தினார். இவர் அயல்குடியேற்றக் கட்டமைப்புகளை ஒழித்து, கருப்பினத் தேசியத்தை ஏற்காதவரையில், கருப்பின, பழுப்பினப் பெண்கள் மட்டுமல்ல வெள்ளையினப் பெண்களும் விடுதலை பெற வழியில்லை என வாதிடுகிறார்.[9]
பெண்ணிய வரலாற்றியலாளர் இலிண்டா கோர்தான் ‘’நிகரறப் பெண்ணியம் இயல்பாகவே பிரிவிடை உறவைப் பேணுவதாகும். ஏனெனில், இது ஓரளவு தன்னளவில் வருக்கத்தையும் பாலினத்தையும் கருத்தில் கொள்கிறது’’ என உறுதிபடுத்துகிறார். மேலும்,கோர்தான் நிகரறப் பெண்ணியம் பல்லச்சு ஆயங்களைச் சார்ந்திருப்பதாலும் கிம்பெர்லே கிரென்சா 1989 இல் பிரிவிடை உறவு கருத்துப் படிமத்தை அறிமுகப்படுத்திய பத்தாண்டுகளுக்கு முன்பே பிரிவிடை உறவு வரலாற்றைக் கொண்டிருப்பதாலும் இது நிறுவப்படுகிறது என்கிறார்.[10] கோர்தனின் கருத்துப்படி, 1980 களின் நிகரறப் பெண்ணியம் ஒடுக்குமுறை சார்ந்த தனியாளின்பட்டறிவின் பன்முக மேற்படிந்த கட்டமைவுகளை ஆய்வுக்கு எடுத்துகொண்டதால் மறைமுகமாக அந்நிலை பிரிவிடை உறவை நுண்மட்டத்திலும் கருதியது விளங்கும்.[11]பெண்ணிய அறிஞரும் மகளிர் ஆய்வுப் பேராசிரியர்மான எலிசபெத் இலாப்போவுசுகி கென்னடி சமூகக் கட்டமைப்புகல் பர்ரிய அகல்விரிவான பகுப்பாய்வு நிகரறப் பெண்ணியத்தோடு தொடங்கி, பெண்ணியப் புலமைக்கு செயலூக்கத்தைத் தந்தது எனக் கூறுகிறார்.மேலும் அவர் பல மகளிர் ஆய்வுகல் நிகரறப் பெண்ணியக் கோட்பாட்டாளர்களால் நிறுவப்பட்டன என்கிறார்.[1] அடையாள வேறுபாடுகளைக் களையும் ஒருமைப்படுத்தும் மெய்யியலாக,[12] நிகரறப் பெண்ணிய அணுகுமுறையை, அனைவரின் பொருளியல் சுரண்டல் ஊடாகப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பிரிவிடை உறவு கருத்தினம் வழியாக கிரென்சா மேம்படுத்தினார்.
நிகரறப் பெண்ணியத்தில் பிரிவிடை உறவு வழிமுறை இருந்தபோதும் பல பெண்ணியர்கள், குறிப்பாக,பிறவண்ணப் (கருப்பு, பழுப்பு, வெண்கருப்புப்) பெண்ணியர்கள், இந்த இயக்கத்தை இனப் பாகுபாட்டைப் பற்றி(இனச் சமனிலைபற்றி) குறையுள்ளதாகவே விமர்சனம் வைக்கின்றனர். மகளிர் ஆய்வில் நிகரறப் பெண்ணியத் தாக்கத்தைக் குறிப்பிடுகையில் கென்னடி, கல்விப்புலத்தில் கருப்பினக் குரல்களின் அருகிய பங்களிப்பே உள்ளதால், மகளிர் ஆய்வுத் திட்டங்களும் கற்கைநெறிகளும் கண்துடைப்பாகவே உள்ளது என வெளிப்படுத்துகிறார்.[1] சாந்தா பார்பாரா கலிபோர்னியா பல்கலைக்கழகப் பெராசிரியர் குங்கும் பவானியும் நிகரறப் பெண்ணிய அறிஞரான மார்கரெட் கவுல்சரும் நிகரறப் பென்ணிய இனவாதம், இனநிறௌவன அமைப்பைப் பற்றிய வெள்ளைப் பெண்ணியரின் உணர்தலின்மையாலேயே ஏற்படுகிறது என்பதை உறுதிப்படுத்துகின்றனர். பவானி, கவுல்சன் கூற்றுப்படி, இனம், வருக்கம், பாலினம் தவிர்க்கவியலாதபடி இணைந்தவை என்பதால், இவற்றில் யாதொன்றைத் தம் உலகப் பார்வையில் இருந்துப் புறக்கணித்தாலோ அல்லது விலக்கிவைத்தாலோ சமூகத்தில் அவை உருவாக்கும் உடுக்குமுறை, சலுகை அமைப்புகளைப் பற்றிய அரைகுறையான முழுமையற்ற புரிதலே அமையும்.[13]
ஐக்கிய அரசு பெண்ணிய அறிஞரான காத்திரின் காரிசு, 1980 களின் ஐக்கிய அரசு நிகரறப் பெண்ணியத்தின் குறைபாடுகள் எவையெனத் தெளிவாக விளக்குகிறார். மகளிர் விடுதலை இயக்கத்தில் விளிம்புநிலைப் பெண்ணியரின் குறைகள் கவனிக்கப்படுவதில்லை. அவர் மேலும் கூறுவதாவது, பல அகனள் இயக்க மகளிர், இந்த மகலிர் விடுதலை இயக்கத்தில் கலப்புப் பாலுறவினரின் ஓங்கல்நிலையை எதிர்த்து அவர்கள் இருபாலின உறவை வற்புறுத்துவதைக் கண்டிக்கின்றனர்.மேலும், மகளிர், குடும்பம், இனப்பெருக்க உரிமைகள் சார்ந்த வன்முறைகளைப் பற்றிய பரவலான பெரும்பாலான வெள்ளைப் பெண்களது பார்வைகள் கருப்பினப் பெண்களின் குரலைக் கேட்கவொட்டாமல் செய்து, இதேபோல, பிற வண்ணப் பெண்கள் தனித்துச் சந்திக்கும் போராட்டங்களின் பட்டறிவுகளைக் கணக்கிகெடுக்காமல் புறந்தள்ளி விடுகின்றன என்பதை உறுதிபடுத்துகின்றனர்.[14]
தாய்மையும் தனிவெளியும்
[தொகு]கோட்பாட்டாளர்கள் எழுத்தாளர்அன்னா வீலர், மெய்யியலாளர் வில்லியம் தாம்ப்சன் மாந்தவினத்தின் சரிபாதியான மகளிரை, அடுத்த சரிபாதியான ஆண்களின் நடிப்பால் எதிர்த்து, அரசியல், அதன்வழி குடிமை, வீட்டக அடிமைத்தனத்தை நிலைநிறுத்தும் போக்கிற்கான மகளிரின் வேண்டுகோள், எனும் நூல் 1825 இல் வெளியிடப்பட்டது. இது எப்படி மகளிர் பணிகள் முதலாளியத்தினைத் தொடரச் செய்கிறது என விளக்குகிறது. சமையல், கழுவல், துணிகளுக்குப் பெட்டிபோடுதல் இன்னும் பிற வீட்டுச் செயல்கள் அனைத்தும் வேலைகளே என உறுதிபடுத்துகிறது. வீலரும் தாம்ப்சனும் மக்களும் உழைப்பும் முதலாளியம் செயல்பட கட்டாயம் தேவை; மகளிர் இன்றி, அவர்களது இனப்பெருக்கம் இன்றி, அவர்களின் வீட்டு வேலைகளைத் தவிர்த்து, முதலாளியம் உளுத்து வீழும் என்பதையும் உறுதிபடுத்துகின்றனர்.[2]
பிரெஞ்சு நிகரறச் செயல்பாட்டாளர் புளோரா திரிசுட்டியான் 1843 இல் வெளியிட்ட தனது "ஏன் நான் மகள்ரைக் குறிப்பிடுறேன்னெனும் சிறுபதிவில், மகளிரும் இளம்பெண்களும் வீட்டு வேலைகளை மேற்கொள்வதால் கல்விபெற முடியாமல் போகிறது. எனவே, திரிசுட்டியான் கூற்றுப்படி, கல்விப் புறக்கணிப்பாலும் கழுவல், சமைத்தல், குழந்தை வளர்த்தல் போன்ற வீட்டு அலுவல்களில் மூழ்கிப் போவதாலும், இவர்கள் வீட்டுக்கு வெளியே ஊதியம் ஈட்டும் வேலைகளில் சேரமுடியாமல் போகிறது.[2]பெர்கின்சு கில்மன் பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஓய்வு கிடைக்கும்படியும் அவர்களின் ஆக்கத்திறன் வாய்ப்பைப் பெருமமாக்க வீடுகள் மறுவடிவமைக்கப்படவேண்டும்,அதாவது சமையல் அறைகளையும் உணவருந்தறைகளையும் நீக்கி, மாற்றாக கலைக்கூடங்களையும் படிப்பறைகளையும் அமைக்கவேண்டும் எனப் பரிந்துரைக்கிறார். இந்த மாற்றங்கள் உணவு சமைப்பதையும் உண்பதையும் வீட்டுக்கு வெளியே சமூகமயப்படுத்தும் கட்டாயத்தை உருவாக்கும்; இதனால் மகளிர் வீட்டளவில் ஏற்றிருந்த சுமையில் இருந்து விடுதலை பெறுவர் என விளக்குகிறார்.
நச்சு ஆண்மை
[தொகு]நிகரறப் பெண்ணியர், நச்சுத்தன ஆண்மை ஆண்களையும் பெண்களையும் சிதைப்பதோடு, இருபாலின உறவில் இல்லாதவரையும் சிதைக்கிரது என வாதிடுகின்றனர்.
பாலின ஊதியப் பாகுபாடு
[தொகு]நிகரறப் பெண்ணியர் உலக அளவில் நிலவும் மகளிரின் பொருளியல் பாகுபாட்டையும் சமனின்மையையும் எடுத்துரைக்கின்றனர்.
நடைமுறை
[தொகு]நிகரறப் பெண்ணியர்கள் மகளிர் விடுதலை அனைத்துமக்களின் சமூக, பொருளியல் நீதியோடுதான் இயலும் என நம்புகின்றனர். இவர்கள் சமூகநீதிக்கு ஆண் மேட்டிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவருவது முதன்மையானது எனினும் இது மட்டுமே போதாது, இது பிற பலவகை ஒடுக்குமுறைகளில் ஒன்றே என பார்க்கின்றனர்.[15]
நிகரறக் கட்டத்தில் பெண் விடுதலை
[தொகு]கிழக்கு செருமனியின் 40 ஆண்டு நிகரமை ஆட்சிக் காலத்தில் செருமனி மக்களாட்சிக் குடியரசு பல பெண்ணியர்களின் வேண்டல்கள் நடைமுறைப்படுத்தியது:
- பிற மேலை நாடுகளில் மகளிர் தாராளக் கருக்கலைப்புச் சட்டத்துக்குப் போராடிக் கொண்டிருக்க, செருமனியில் 12 ஆம் வாரம் வரை கருக்கலைப்புக்கு 1972 முதல் இசைவு தரப்பட்டுள்லதோடு எவருக்கும் கருக்கலைப்பு மாத்திரைகளும் கிடைக்க வழிசெய்யப் பட்டுள்ளது.
- பிற மேலை நாடுகளில் ஆண்கள் நல்ல ஊதியத்துடன் பணிசெய்யும் தொழில்களில் மகளிருக்குக் கிடைக்க வாய்ப்பில்லாமல் இருக்க, கிழக்கு மக்களாட்சிக் குடியரசில் மகள்ர் அப்பணிகளில் வேலை செய்ய ஊக்கப்படுத்துவதோடு, மேனிலை ஆராய்ச்சிக்கும் பதவி உயர்வு தரப்படுகின்றனர்.
- குழந்தைகள் கிண்டர்கார்டன்களிலும் முன்கிண்டர்கார்டன்களிலும் பேனப்படுகின்றனர்; மேலை நாடுகளில் இந்தப் பொதுமுறை குழந்தை கவனிப்பு உருவாகவில்லை. பொதுப்பணிகளில் சமவாய்ப்பும் கிடைப்பதில்லை.
என்றாலும், மேற்கு பெர்லின் பெண்ணியர்கள், அக்கம்பக்க வீடுகளில் கிழக்கு பெர்லினில் உள்ள நடைமுறை நிகரற வாழ்க்கையை ஐயுறவோடே பார்க்கின்றனர். கிழக்கு பெர்லினில் நண்பர்களும் சுற்றங்களும் உள்ள சிசிலியா இரென்ட்மைய்சுட்டர் 1974 இல் கிழக்கு மக்களாட்சிக் குடியரசு மகளிர் சூழலைப் பகுப்பாய்வு செய்து ஒருகட்டுரையில் பதிவு செய்துள்ளார்.[16]
சிக்காகோ மகளிர் விடுதலை ஒன்றியம்
[தொகு]சிக்காகோ மகளிர் விடுதலை ஒன்றியம் 1969 இல் இல்லினாயிசில் பலட்டைனில் நடந்த கருத்தரங்கில் உருவாக்கப்பட்டது. இதில், நவோமி வீசுட்டைன், விவியான் உரோத்சுட்டைன், கீத்தர் பூத் உரூத் சர்கல் ஆகியோர் நிற்வனர்கலாகக் கலந்துகொண்டனர். இதன் முதன்மையான நோக்கம் பலினச் சமனின்மையையும் பாலுறவுச் சிக்கலையும் முடிவுக்குக் கொணர்தலே ஆகும். சிக்காகோ மகளிர் விடுதலை ஒன்றியம் இப்பணியை " அதிகாரத்தில் உள்ளவரின் நலங்களுக்காக மகளிரைப் பயன்படுத்தலை முறையாக வீழ்த்துதலே" என வரையறுத்துள்ளது.[17]இந்த நிறுவனம் வெளிப்படுத்தியுள்ள நோக்கம் சார்ந்த கூற்றில் "சமூகத்தில் மகளிர் இருப்பை மாற்ருவது அவ்வளவு எளிதன்று. இம்மாற்றத்துக்கு எதிர்பார்ப்புகள், வேலைகள், குழந்தை வளர்ப்பு, கல்வி ஆகியவற்றின் மாற்றங்கள் தேவைப்படுகின்றன; இது நம் வாழ்க்கையைக் கட்டுபடுத்தும் முடிவெடுத்தலையும், அதிகாரத்தையும் அனைத்து மக்களும் பகிர்ந்துகொள்ளும் மாற்றத்தை வேண்டுகிறது."[17] மகளிர் விடுதலை ஒன்றிய மையம் ஒரு பத்தாண்டாக பாலியல் உறவு, வருக்க உறவுகளை மாற்றவேண்டிய அறைகூவலை விடுக்க பலவகைகலிலும் மகளிரை அணிதிரட்டப் போராடி வருகிறது. இந்தக் குழு தனது 1972 சிறுநூலான "நிகரறப் பெண்னியம்: மகளிர் இயக்க்கச் செயல்பாட்டு நெறிமுறைகள்" வெளிட்டுக்காக மிகவும் பெயர்பெற்றது. இதை சிக்காகோ மகலிர் விடுதலை ஒன்றிய கைதே பூங்காப் பிரிவு வெளியிட்டது. தேசிய அளவில் பரவலாகச் சுற்றுக்கு விடப்பட்ட இந்த வெளியீட்டில் தான் நிகரறப் பென்ணியம் எனும் சொல் முதலில் வழக்கிற்கு வந்தது.
சிக்காகோ மகளிர் விடுதலை ஒன்றியம்(CWLU) என்பது மிக பரந்துபட்ட பணிக்குழுக்களையும் விவாதக் குழுக்களையும் ஒன்றிணக்க உருவாகிய கருநிலை நிறுவனமாகும். நிறுவனக் கொள்கையையும் செயல் நெறிமுறைகளையும் பற்றிய பொதுக் கருத்தேற்பை வகுக்க, ஒவ்வொரு பணிக்குழுவில் இருந்தும் ஒருவர், ஒவ்வொரு மாதமும் முன்னணிக் குழுக் கூட்டங்களுக்குச் சென்றனர். இவர்கள் மகளிர்நலம், இனப்பெருக்க உரிமைகள், கல்வி, பொருளியல் உரிமைகள், நிகழ்த்துகலைகள், இசை, விளையாட்டுகள், அகனள் விடுதலை, இன்னும் பல்வேறு பொருண்மைகளைப் பற்றியெல்லாம் பேசி விவாதித்தனர்.
மகளிர் அகிலம்: நரகப் பாணி அச்சுறுத்தல் சதி
[தொகு]மகளிர் அகிலம்: நரகப்(பாழ்தளப்) பாணி அச்சுறுத்தல் சதி (W.I.T.C.H.) அல்லது நரகப் பாணி பன்னாட்டு மகளிர் அச்சுறுத்தல் சதி என்பவை ஐக்கிய அமெரிக்காவில் 1968 இலும் 1969 இலும் உருவாகிய பல்வேறு தற்சார்பான மகலிர் அணிகளாகும். இவையே முதலில் அமெரிக்க ஒன்றியத்தில் நிகரறப் பெண்ணியத்தை வளர்த்தெடுத்த முன்னோடிகளாகும். இந்த W.I.T.C.H. எனும் ஆங்கிலச் சுருக்கப் பெயர் "Women Inspired to Tell their Collective History" எனவோ, "Women Interested in Toppling Consumer Holidays" எனவோ, அல்லது இன்னும் பிற வேறுபட்ட வடிவங்களிலோ வழங்கியது.[18]
இந்த இயக்கத்துக்கு மையப்படுத்தப்பட்ட நிறுவனமேதும் இல்லை. இதன் ஒவ்வொரு அணியும் முன்பு நிகழ்ந்த செயல்களின், எண்ணக்கருக்களின் எடுத்துக்காட்டால் ஊக்கம் பெற்று தற்சார்பாக உருவானவை. இவர்களது செயல் முனைவு, கொரில்லா அரங்கம், தெருமுனை அரங்கம், இணைந்த எதிர்ப்பியக்கக் கூத்து வடிவமாகும்("zap"); இது கவனமீர்க்கும் நகைவை ததும்பும் பொதுச் செயல்பாடுகளை உயர்நில அரசியல், பொருளியல் கோரல்களைக் குழுமங்களுக்கும் அரசு அமைப்புகளுக்கும் எடுத்துரைக்கப் பயன்படுத்தும், அடிக்கடி கூளியர் உடையணிந்து, சாவச்(சாபச்)சூல்களை ஓதும் பாணியைக் கொண்டதாகும். இடது பெண்ணிய இலக்கியங்களில் இதுபோன்ற கூளியரையும் பாழினிகளையும்(Witches) பேய்மகளிரையும் அடிக்கடி காணலாம். பெரும்பாலும் இவை பெயர்பெண்மை படியுயிரிப் பருண்மைவகைகளாகவே அமையும்.
கந்தலும் அச்சமூட்டும் உடைகளும் அணிந்து 1968 இல் வால்சுட்டிரீட்டில் காலோவனில் சேசு மன்காட்டான் வங்கியருகில் ஒரு மகளிர் அணி சூலோதல் கூத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது; இதனால் மறுநாலே தொவ் ஜோன்சு தொழிலகச் சராசரி மதிப்பு செஞ்சரிவைச் சந்திதித்ததாகக் கூறினார்.[18] இந்தத் தொவ் ஜோன்சு தொழிலகச் சராசரி மதிப்பு உயர்ந்து சரியாக, அடுத்து சில நாட்களும் வாரங்களும் பிடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.[19]நிகரறப் பெண்ணிய மகளிர் ஊக்க அணி ஒன்று, 1968 திசம்பரில் ஆண்கள் மட்டுமே போரெதிர்ப்பியக்கம் நடத்தியதாக, அமெரிக்க உள்ளரங்கக் குழுவும் சிக்காகொ எட்டுக் குழுவும் அறிவித்ததால் அந்நிறுவனங்களைக் குறிவைத்து இய்யக்கம் நடத்தலானது. இந்த அணி 1969 இல் மாடிசன் வளாகத் தோட்டத்தில் நடந்த மண்மக்கல் விழாவில் எதிர்ப்பைக் காட்ட, கருப்புடை அணிந்து, "மங்கலவுடை மறுப்போம்" எனும் சிறுநூலைக் கையளித்து "டிமைகள் இங்கு வந்தனர்/தம் கல்லறை நோக்கிச் சென்றனர் " என்ற பாடலையும் இசைத்தனர்; ஒரு "மணமெதிர்ப்பு விழா"வையும் நடத்தினர். இந்த எதிர்ப்புகளில் பல் வெள்ளெலிகளையும் அவிழ்த்துவிட்டனர்; இதனால், விழாவுக்கு வந்தோர் வளாகத்தில் அங்கும் இங்கும் அலைந்து திரிய நேரிட்டது. ஊடகம் இதற்கு எதிர்ப்புகாட்டிச் செய்தி வெளியிட்டதோடு அணியின் உறுப்பினரே தம் இலக்குகளைக் குறித்தும் செயல்தந்திரம் குறித்தும் கேள்வி கேட்டனர்.[20]மக்கள்தொகைக் கட்டுபாட்டுக்கான நாடாளுமன்ற மேலவை விவாதம் நடந்தபோது, வாழ்சிங்டனில் கோவென்சு எனும் ஒரு மகளிரின் கூளியர் குழு 1970 இல் ஓர் எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கியது. இவர்கள் இரால்ப் யார்பரோவின் உரையைக் குறுக்கிட்டு விவாதக் குழுவின் மீதும் அங்கு திரண்டிருந்த பார்வையாளர்கள் மேடைகளில் கருத்தடை மாத்திரைகளை வீசிப் பாட்டு படி மகிழ்ந்தனர்.[20] கோவெசு மீள்நிகழ்ச்சிகள் ச்க்காகோவிலும் இல்லினாயிசிலும் வாழ்சிங்டனிலும் தொடர்ந்தன;[18] இந்த பாழினி அணி கூத்துகள் தொடர்ந்து 1970 களின் தொடக்கம் முழுவதும் நடந்தன. சற்றே பின்னர் நநஇபெ(நம்பி, நங்கை, இருனர்,பெயரர்) இயக்கமும் இதே போன்ற எதிர்கூத்து நடவடிக்கைகளப் பின்பற்ற இது ஊக்கம் தந்துள்ளது. இம்முறையிலான எதிர்ப்பு நடவக்கைக்கள் இன்னமும் கூட நிகழ்ந்துவருகின்றன.
பெருந்தீ
[தொகு]பெருந்தீ என்பது "பாட்டாளி வருக்கச் சார்புள்ள புரட்சிகர நிகரறப் பெண்ணிய நிறுவனம்" ஆகும்.[21][22] இது ஐக்கிய அரசில் உள்ள நிறுவனம் ஆகும். இந்தக் குழு முதலில் 1970 இல் இலிவர்பூலில் நிறவப்பட்டு, பிறகு தொடக்க்கத்திலேயே வேகமாக வளர்ந்து, பிற நகரங்களிலும் கிளைகலை நிறுவியது. இந்த இதழின் வெளியீடுகள் "பெருந்தீ நிறுவனம் வளர ஒரு புரட்சிகரக் கட்சி தேவை; இது அத்தகைய கட்சியிக்கான முளைக்கரு கூட அன்று" என வற்புறுத்தி வந்தன". இது இத்தாலிய உலோட்டத் தொடர்மக் குழுவால் ஊக்கத்தைப் பெற்றதாகும்.[23]
இந்தக் குழு பெருந்தீ எனும் இதழையும் புரட்சிகர நிகரறம் எனும் சுழலிதழையும் வெளியிட்டது.[24] உறுப்பினர்கள் கேவுடுவிலும் தாகன்காமிலும் உள்ள போர்டு ஆலைகளில் செயல்முனைவோடு இருந்தனர்; தம் பெரும்பாலான நேரத்தைத் தற்பகுப்பாய்விலும் டிராட்சுகி பெருங்குழுகளுடனான உறவிலும் செலவிட்டனர். இவர்கள் தம்மை தாராள மார்க்சியர் எனக் குறிப்பிட்டனர். இவர்கள்1978 இல் டிராட்சுகி பன்னாட்டு மார்க்சியக் குழு பங்கேற்ற நிகரற ஒன்றியத் தேர்தல் கூட்டணியில் சேர்ந்தனர். தாராளப் பொதுவுடைமைக் குழு ஒழுங்கறவுவாதிகள் 1980 இல் பெருந்தீ இயக்கத்தில் சேர்ந்து கொண்டனர். அப்போது புரட்சிகர மார்க்சிய அணியும் இதில் சேர்ந்தது. என்றாலும், இதில் இருந்து பெருவாரியான உறுப்பினர் ஐக்கிய அரசு தொழிற்கட்சியில் சென்று இணைந்தால், 1982 இல் இதழ் வெளியிடுதல் நின்றுபோனது;[24] இதழ்க்குழு 1984 இல் கலைந்தது.இக்குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் திரள்சந்தை கணினிவழி இதழை ஞாயிறு செய்திகள் என்ற பெயரில் 1987 இல் வெளியிட்டனர். என்றாலும் இது அதே ஆண்டில் நிறுத்தபட்டுவிட்டது.[25]பெருந்தீ எனும் இக்குழுவின் பெயர் 1969 இல் வெளிவந்த தொலைக்காட்சி நாடகத்தின்பெயரில் இருந்து பெறப்பட்டதாகும். இந்நாடக எழுத்தாளர் நாடக ஆசிரியர் ஜிம் ஆல்லன் ஆவார்; இயக்குநர் குன் உலோச் ஆவார்; இது பிரித்தானிய ஒலிபரப்பு நிறுவன அறிவன்கிழமை நாடக வரிசைக்காக எழுதப்பட்டது. நாடகம் இலிவர்ப்புல் துறைமகத்தில் நடந்ததொரு புனைவு வேலைநிறுத்தம், உள்ளிருப்பு போராட்டம் பற்றி காட்சிப்படுத்தியது.[26]
கோட்பாட்டாளர்கள்
[தொகு]- யோகான்னா பிரென்னர்
- பார்பாரா எகிரென்ரைக்
- கேஞ்செலா தேவிசு
- பார்பாரா சுமிது
- அவுதிரி இலார்தே
- கிளாரா பிரேசர்
- சார்லெத்தி பெர்கின்சு கில்மன்
- எம்மா கோல்டுமன்
- சிலா பெடெரிசி
- தோன்னா கராவே
- இலியோபோதினா பார்ச்சுனத்தி
- எய்தி ஐ. கார்த்மன்
- செல்மா ஜேம்சு
- கரோலின்மெர்க்கந்த்
- மரியா மைசு
- சீலா உரோபாதம்
- ஏரியல் சால்லேகு
- வந்தனா சிவா
- சில்வியா வால்பி
- நெல்லீ வோங்கு
மேலும் காண்க
[தொகு]- மரபுகடப்புப் பெண்ணியம்
- பிரிவிடை உறவு
- கலகப் பெண்ணியம்
- சூழற்பெண்ணியம்
- பெண்ணியக் கோட்பாடு
- பெண்ணிய வரலாறு
- மார்க்சிய பெண்ணியம்
- தன்னியக்கப் பெண்ணியம்
- பொருளாயதப் பெண்ணியம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Lapovsky Kennedy, Elizabeth (2008). "Socialist Feminism: What Difference Did It Make to the History of Women's Studies?". Feminist Studies 34 (3). http://web.b.ebscohost.com/ehost/pdfviewer/pdfviewer?sid=7fa751b2-dc67-4a88-90cf-28338f91acf0@sessionmgr104&vid=1&hid=102.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 2.0 2.1 2.2 Ferguson, Susan (2020). Women and work: Feminism, labour, and social reproduction. UK: Pluto Press. pp. 40–52.
- ↑ The Personal is Political, retrieved January 21st 2021.
- ↑ http://www.feministezine.com/feminist/modern/Socialist-Feminism.html What is Socialist Feminism?], retrieved on May 28th 2007.
- ↑ Buchanan, Ian. "Socialist Feminism." A Dictionary of Critical Theory. Oxford Reference Online. Oxford University Press. Web. 20 October 2011.
- ↑ "Socialist Feminism vs. Other Types of Feminism". ThoughtCo. https://www.thoughtco.com/socialist-feminism-vs-other-feminism-3528987.
- ↑ Kristen R. Ghodsee, Why Women Have Better Sex Under Socialism (US: Nation Books, 2018)
- ↑ George Bernad Shaw, An Intelligent Women’s Guide to Capitalism and Socialism (New York: Houghton Mifflin Harcourt, 2017)
- ↑ Lynn, Denise (2014). "Socialist Feminism and Triple Oppression: Claudia Jones and African American Women in American Communism". Journal for the Study of Radicalism 8 (2): 1–20. doi:10.14321/jstudradi.8.2.0001. https://www.jstor.org/stable/10.14321/jstudradi.8.2.0001.
- ↑ Gordon, Linda (2016-07-12). "'Intersectionality', Socialist Feminism and Contemporary Activism: Musings by a Second-Wave Socialist Feminist". Gender & History 28 (2): 340–357. doi:10.1111/1468-0424.12211. பன்னாட்டுத் தர தொடர் எண்:0953-5233. https://zonafranca.unr.edu.ar/index.php/ZonaFranca/article/view/185.
- ↑ Gordon, Linda (2013). "Socialist Feminism: The Legacy of the "Second Wave"". New Labor Forum 22 (3): 20–28. doi:10.1177/1095796013499736.
- ↑ Mambrol, Nasrullah (2018-01-15). "Marxist Feminism". Literary Theory and Criticism (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-16.
- ↑ Bhavnani, Kum-Kum; Coulson, Margaret (2005). "Transforming Socialist-Feminism: The Challenge of Racism". Feminist Review 80 (80): 87–97. doi:10.1057/palgrave.fr.9400219.
- ↑ Harriss, Kathryn (1989). "New Alliances: Socialist-Feminism in the Eighties". Feminist Review (31): 34–54. doi:10.2307/1395089.
- ↑ Kennedy, Elizabeth Lapovsky (2008). "Socialist Feminism: What Difference Did It Make To The History Of Women's Studies?". Feminist Studies. https://archive.org/details/feminista00kenn.
- ↑ "Ein Blick über die Berliner Mauer (1974)" in Cristina Perincioli, "Berlin wird feministisch"(2015) p.172-177 (article translated in English)[1].
- ↑ 17.0 17.1 "Cwlu Herstory".
- ↑ 18.0 18.1 18.2 Brownmiller, Susan (1999). In Our Time: Memoir of a Revolution. The Dial Press. p. 49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-385-31486-2.
- ↑ "Historical Dow Jones Closing Prices 1961-1970". Automation Information. Archived from the original on 31 July 2012. பார்க்கப்பட்ட நாள் 15 March 2013.
- ↑ 20.0 20.1 Bradley, Patricia (2003). Mass Media and the Shaping of American Feminism, 1963-1975. University Press of Mississippi. pp. 63–64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781578066131.
- ↑ Archive Archie Big Flame 1970-1984: Who We Were at wordpress.com
- ↑ "Sojourner Truth Organization - 1969-1983 - Workplace Papers - Review of "Reflections on Organizing" (1970)". www.sojournertruth.net.
- ↑ David Widgery The Left In Britain, 1956-1968 Penguin,1976 (p. 479)
- ↑ 24.0 24.1 John Moorhouse, A Historical Glossary of British Marxism (Pauper's Press, 1987) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-946650-06-3
- ↑ Peter Chippindale, Chris Horrie. Disaster: The Rise And Fall of News On Sunday - Anatomy of a Business Failure. 1988 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0747402305
- ↑ Big Flame, The (1969) at Screenonline
வெளி இணைப்புகள்
[தொகு]- The Radical Women Manifesto: Socialist Feminist Theory, Program and Organizational Structure
- The socialist feminist project by Nancy Holmstrom
- Socialist Feminism: The First Decade, 1966-76 by Gloria Martin
- What is Socialist Feminism? by Barbara Ehrenreich at the CWLU Herstory Archive
- Entry for Socialist Feminism in the Reader's Companion to U.S. Women's History
- Socialist Feminism: A Strategy for the Women's Movement By Hyde Park Chapter, Chicago Women's Liberation Union
- London Project for a Participatory Society is a Canadian "anti-racist, pro-feminist, anti-capitalist organization"