மரபுகடப்புப் பெண்ணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரபுகடப்புப் பெண்ணியம் (Radical feminism) அல்லது மரபுவிடைப்புப் பெண்ணியம் என்பது மரபுவழி சமூக ஒழுங்கை மீளமைத்து, சமூக, பொருளியல் சூழல்களில் ஆணிய மேலாதிக்கத்தின் வேரறுக்க முனையும் பெண்ணியக் கண்ணோட்டமாகும்; இது இனம், வருக்கம், பாலின விருப்பத் தேர்வு ஆகிய பிற சமூகப் பிரிவினைகளாலும் மகளிருக்கு விளையும் பட்டறிவுகளையும் உள்ளடக்கியதாகும். இந்த இயக்கமும் கருத்தியலும் 1960 களில் எழுச்சி கண்டது.[1][2][3]

மரபுகடப்புப் பெண்ணியர்கள் அடிப்படையில் தந்தைவழி சமூகமாக உள்ளதையும் எனவே ஆண்கள் ஓங்கலான அதிகாரம் செலுத்தி பெண்களை ஒடுக்குகிண்றனர் பார்க்கின்றனர். எனவே, மரபுகடப்புப் பெண்ணியர்கள் தந்தைவழி முறைமையை கடந்துசெல்ல, சமநிலை அறம் நிலவாத சமுகத்தில் உள்ள சமூக வரன்முறைகளையும் நிறுவனங்களையும் மாற்றுவதற்கான அறைகூவலை விடுத்து பெண்களையும் சிறுமியரையும் அவர்ரின் ஒடுக்குமுறையில் இருந்து விடுதலை செய்ய முயல்கின்றனர். இந்தப் போராட்டம், வன்புணர்வு, மகளிர்பாலான வன்முறை, பாலினப் பாத்திரங்கள் பற்றிய சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி, பெண்களைப் பாலியல் நுகர்வுப் பொருளாகக் கருதுவதை எதிர்க்கிறது; இவர்கள் அமெரிக்காவிலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் நிலவும் இனவாதந் தோய்ந்த முதலாளியத்துக்கு அறைகூவல் விடுத்து எதிர்க்கின்றனர். சுலாமித் பயர்சுட்டோனின் பாலுணர்வின் இயங்கியல்(1970) நூலின் கூற்றுப்படி, " பெண்ணியப் புரட்சியின் அறுதி இலக்காக, முதல் அலைப் பெண்ணிய இயக்கத்தைப் போல ஆண்களின் சலுகைகளைக் குறைப்பதாக மட்டுமே அமையாமல், பாலுணர்வு, பாலினப் பகுபாட்டை வேரறக் களைவதாக அமையவேண்டும்: பிறப்புறுப்பு வேறுபாடுகள் இனிப் பண்பாட்டு வேறுபாட்டுக்கு வழிவகுக்கக் கூடாது."[4]பிறப்புறுப்பு வேறுபாடுகளும் அதனாலான இரண்டாம் பாலின இயல்புகளும் இனிப் பண்பாட்டு, அரசியல் வேறுபாட்டுக்கு வழிவகுக்கக் கூடாது என்பதை மரபுகட்ப்புப் பெண்ணியர்கள் நம்புவதோடு, மகளிரின் இனப்பெருக்கம் சார்ந்த சிறப்புப் பத்திரத்தைக் கணக்கில் எடுத்து, பணியிடத்தில் அதற்கான ஈடுகட்டல் சலுகைகளை நல்கவேண்டும் என வாதிடுகின்றனர்.[5]

மகளிர் ஒடுக்குமுறைக்கான அடிப்படையான காரணத்தை, தாராளப் பெண்ணியர்களைப் போல சட்ட அமைப்புகளிலும், மார்க்சியப் பெண்ணியர்களைப் போல வருக்கப் போராட்டத்திலும் க்காணாமல், மரபுகடப்புப் பெண்ணியர்கள் தந்தைவழி முறைமை சார்ந்த பாலின உறவுகலில் காண்கின்றனர். இரண்டாம் அலைப் பெண்ணியத்தின் பகுதியாக 1960 களில் தோன்றிய தொடக்கநிலை மரபுகடப்புப் பெண்ணியம், [6] தந்தைவழி முறைமையை மற்ற ஒடுக்குமுறை வாயில்களை விட முந்தியதாகவும் ஆழமானதாகவும் அதே நேரத்தில் ஒரு இடைநிலை வரலாற்று நிகழ்வாகவும் கருதுகிறது. [7] " மேலும், இது மற்ற வடிவங்களை விட பழமையானதும் மிகவும் பொதுவானதும் முதன்மையானதாகவும் மற்றவர்றுக்கு வழிகாட்டக் கூடியதாகவும் கருதுகிறது".[8] இதில் இருந்து கிளைத்த பிற அரசியல் வடிவங்கள் பண்பாட்டுப் பெண்னியமாகவும் நிகரறப் பெண்ணியமாகவும் கலகப் பெண்ணியமாகவும் பிரிந்து, சமூக வருக்கம், பொருளியல் ஆகியவற்றையும் தந்தைவழி முறைக்கு இணையான ஒடுக்குமுறை வாயில்களாகக் கருதின.[9]

கோட்பாடும் கருத்தியலும்[தொகு]

விளக்கக் குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Willis 1984, ப. 91–118
  2. Giardina, Carol (2010). Freedom for Women : Forging the Women's Liberation Movement, 1953–1970. University Press of Florida. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0813034560. இணையக் கணினி நூலக மையம்:833292896. https://archive.org/details/freedomforwomenf0000giar/page/n3/mode/2up. 
  3. Martins, Amanda (May 14, 2019). "Feminist Consciousness: Race and Class". Meeting Ground. பார்க்கப்பட்ட நாள் 15 September 2020.
  4. Firestone 1970, ப. 11.
  5. Hanisch, Carol. "Housework, Reproduction and Women's Liberation – MEETING GROUND OnLine" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-15.
  6. Willis 1984, ப. 118.
  7. Willis 1984, ப. 122.
  8. Willis 1984, ப. 123.
  9. Willis 1984, ப. 117, 141.

சான்று வாயில்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

நூல்களும் இதழ்களும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரபுகடப்புப்_பெண்ணியம்&oldid=3699995" இலிருந்து மீள்விக்கப்பட்டது