உள்ளடக்கத்துக்குச் செல்

குளோரியா இசுடீனெம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளோரியா ஸ்டீனெம்
மகளிர் செயற் கூட்டணி, சனவரி 12, 1972 செய்தியாளர் சந்திப்பில் இசுடீனெம்
பிறப்புகுளோரியா மாரி இசுடீனெம்
மார்ச்சு 25, 1934 (1934-03-25) (அகவை 90)
டோல்டொ, ஒகையோ, அமெரிக்கா
இருப்பிடம்நியூயார்க் நகரம்
தேசியம்அமெரிக்கர்
கல்விவைத் உயர்நிலைப் பள்ளி
படித்த கல்வி நிறுவனங்கள்இசுமித் கல்லூரி[1]
பணிஎம்எஸ். மற்றும் நியூயார்க் இதழ்களில் எழுத்தாளர்/இதழாளர்
சொந்த ஊர்டோல்டொ, ஒகையோ
அரசியல் இயக்கம்பெண்ணியம்
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
மகளிர் ஊடக மையம்
வாழ்க்கைத்
துணை
டேவிட் பேல்
(2000–2003; கணவரின் மரணம்)
கையொப்பம்
வலைத்தளம்
gloriasteinem.com

குளோரியா மாரி இசுடீனெம் (Gloria Marie Steinem, மார்ச் 25, 1934) அமெரிக்க பெண்ணியவாதி, இதழாளர், மற்றும் சமூக,அரசியல் செயற்பாட்டாளர் ஆவார். 1960களின் பிற்பகுதி 1970களில் நிகழ்ந்த பெண்களின் விடுதலை இயக்கத்தின் தலைவராக தேசியளவில் அறியப்படுகிறார். முக்கியமான எழுத்தாளராகவும் 1960களின் பண்பாட்டிற்கெதிரான அரசியல்வாதியாகவும் விளங்கும் இசுடீனெம் பல திட்டங்களையும் அமைப்புக்களையும் நிறுவியுள்ளார். தமது சமூகப்பணிக்காக பல விருதுகளையும் பெருமைகளையும் பெற்றுள்ளார். நியூயார்க் இதழில் பத்தி எழுத்தாளராக உள்ள இசுடீனெம் எம்எஸ். இதழின் இணைநிறுவனராக உள்ளார். கருக்கலைப்பு உரிமைகளுக்காக போராடி வந்த இசுடீனெம் 1969இல் எழுதிய, "கருப்பின செல்வாக்கை அடுத்து மகளிர் விடுதலை",[2] என்ற கட்டுரை மூலம் நாடெங்கும் பெண்ணியத் தலைவராக புகழ்பெற்றார்.

2005இல் ஜேன் ஃபோண்டா, இராபின் மார்கனுடன் இணைந்து மகளிர் ஊடக மையம் என்ற அமைப்பை நிறுவினார்; இதன் முதன்மை நோக்கம் பெண்களின் குரலை வலுப்படுத்தும் வண்ணம் வக்காலத்து, ஊடகம் மற்றும் தலைமைப் பண்பிற்கான பயிற்சி வழங்குவதும் போதிய உள்ளுரையை உருவாக்குவதுமாகும். இந்த அமைப்பின் மேலாண் வாரியத்தில் தற்போது பணிபுரிகிறார். .

2013இல் கருக்கலைப்பு உரிமைகளுக்காக போராடியதைப் பாராட்டி பராக் ஒபாமா குடியரசுத் தலைவரின் விடுதலைக்கான பதக்கத்தை வழங்கியுள்ளார்.[3]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Gloria Steinem". Biography.com. Archived from the original on செப்டம்பர் 4, 2011. பார்க்கப்பட்ட நாள் June 1, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Steinem, Gloria (April 7, 1969). "After Black Power, Women's Liberation" (PDF). New York Magazine. பார்க்கப்பட்ட நாள் 2013-03-12.
  3. http://msmagazine.com/blog/2013/11/20/gloria-steinem-receives-top-national-honor/
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரியா_இசுடீனெம்&oldid=3658988" இலிருந்து மீள்விக்கப்பட்டது