உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தை மரபாட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தந்தை மரபாட்சி (Patriarchy) ஆண்கள் முதன்மை அதிகாரம் பெற்றிருக்கும் ஓர் சமூக அமைப்பாகும்; அரசியல் தலைமை, ஒழுக்கம்சார் தலைமை, சமூக முன்னுரிமைகள், சொத்துரிமை ஆகியவற்றில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்; குடும்பத்தில் தந்தை அல்லது தந்தைக்கிணையானவர்கள் பெண்கள், சிறுவர்களை கட்டுப்படுத்துகின்றனர். இது ஆணாதிக்க அமைப்பை நிறுவுவதோடு பெண்களை அடிமைப்படுத்துகிறது. தவிரவும் பல தந்தை மரபாட்சிகளில் சொத்தும் பதவியும் ஆண் வாரிசுகளுக்கே செல்கின்றது. இதற்கு இணையான பெண்வழி மரபு தாய் மரபாட்சி எனப்படுகிறது.

காலந்தொட்டு பல்வேறு பண்பாடுகளில் தந்தை மரபாட்சி சமூக, சட்ட, அரசியல்,பொருளியல் அமைப்புகளில் வெளிப்பட்டுள்ளது.[1]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Malti-Douglas, Fedwa (2007). Encyclopedia of Sex and Gender. Detroit: Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-865960-0.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தந்தை_மரபாட்சி&oldid=3368990" இலிருந்து மீள்விக்கப்பட்டது