முதல் அலை பெண்ணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதல் அலைப் பெண்ணியம் (First wave feminism) என்பது பெண்ணிய இயக்கத்தின் முதல் காலகட்டத்தைக் குறிக்கிறது. 19 ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டிலும் ஐக்கிய அமெரிக்காவிலும், ஐக்கிய இராச்சியத்திலும் பெண்களின் சட்ட உரிமைகளை, குறிப்பாக பெண்களின் வாக்குரிமையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் முதல் அலைப் பெண்ணியமாகக் கருதப்படுகிறது.

மார்த்தா இலியர் நியூயார்க் டைம்சு இதழில் 1968 இல் முதல் அலைப் பெண்ணியம், இரண்டாம் அலைப் பெண்ணியம் ஆகிய சொற்களை முதலில் பயன்படுத்தினார்[1][2] அப்போது இந்த இயக்கம், முந்தையப் பெண்ணியர்களிடம் இருந்து பெண் சமனின்மைகளுக்காகப் போராடியது.

மிரியம் சுனையர் கூற்றுப்படி, சீமோன் தெ பொவாயர் தன் பாலினத் தற்காப்புக்காக தனது பேனாவை கையிலெடுத்த முதல் பெண் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறித்தைன் தெ பிசான் ஆவார் எனக் கூறியுள்ளார்.[3] ஈன்ரிச் கார்னேலியசு அக்ரிப்பா,மாதேசுத்தா தி ஃபோர்சி ஆகியோர் 16 ஆம் நூற்றாண்டில் பணிபுரிதனர்.[3] ஆன்னி பிராதுசுட்டிரீட், பிராங்குவா பவுலைன் தெ இலா பாரே ஆகியோரின் பாலினங்களின் சமனிலை எனும் நூல் 1673 இல் வெளிவந்தது.[3]

மேரி வுல்சுட்டோன்கிராஃப்ட் எழுதிய காலம் உரூசோ, அறிவொளிக்கால மெய்யியலாலும் உர்க்கொண்ட்தாகும். முறுமலர்ச்சிக்கால மக்களாட்சித் தந்தை கருத்தியலான பாகுபாடற்ற ஆண், பெண் சமனிலையோடு வாழும் குறிக்கோள்நிலைச் சமூகத்தை வரையறுத்தார். வுல்சுட்டோன்கிராஃப்ட் , அவரது சம காலத்தினர் பெண்களை விவாதத்தில் விலக்கியதை உரூசோ சுட்டிக் காட்டினார். பின்னர் வுல்சுட்டோன் உரூசோவின் எண்ணக்கருக்களைப் பின்பற்றி எழுதினார்.[4] முதலில் இவர் கருத்து உ+ஊசோவுடன் முரண்பட்டாலும், வுல்சுட்டோன்கிராஃப்ட் உரூசோவின் சமூகத்தைப் பாலின சமனிலையை இணைத்து விரிவாக்கினார்.

வுல்சுட்டோன்கிராஃப்ட் 1972 இல் மகளிர் உரிமைக்கான மறுப்பு]] எனும் தன் முதல் பெண்ணிய நூலை வெளியிட்டார். இந்நூலில் இவர் தனது 1790 இல் வெளியிட்ட சிறுநூலை விரிவாக்கி பால்களுக்கான சமூக, அறவியல் சமமைக்காக வாதிட்டார். இவர் பிறகு ஆடவர் உரிமைக்கான மறுப்பு எனும் புதினத்தையும் எழுதினார். அடுத்த அவரது முடிவுறாத புதினம், (Maria: or, The Wrongs of Woman|Maria) பெண்களின் குற்றங்கள் வன்மையான விவாதத்துக்கு உள்ளாகியது. இதில் இவர் பெண்களின் பாலியல் அவாக்களை வெளியிட்டிருந்தார். இவர் இளமையிலேயே இறந்தார். அவரது கணவர் வில்லியம் கோத்வின் எனும் மெய்யியலாளர் ஆவார். இவர் வுல்சுட்டோன்கிராஃப்ட்டினது வாழ்க்கையின் மலரும் நினைவுகளி வெளியிட்டார். இது வுல்சுட்டோன்கிராஃப்டின் புகழை, இவர் நினைத்தமைக்கு மாறாக, பின் தலைமுறைகளிடையே குறைத்துவிட்டது.

வுல்சுட்டோன்கிராஃப்ட் பிரித்தானிய பெண்னிய இயக்கத்தின், பெண்ணிய வரலாற்றின் அன்னையாகப் போற்ரப்படுகிறார். இவரது எண்ணக்கருக்கள் பெண்வாக்குரிமைப் போராளிகளின் சிந்தனையை வென்றெடுத்தது.[5]

தொடக்கநிலை அமெரிக்க முயற்சிகள்[தொகு]

அமெரிக்காவின் தொடக்கநிலைப் பெண்ணியம் ஒழிப்புவாத இயக்கத்தோடு தொடர்பு கொண்ட்தாகவே அமைகிறது. இதன் விலைவாக பல பெயர்பெற்ற பெண்ணியர்களும் செயல்முனைவாளர்களும் உருவாகினர். தொடக்கநிலைப் பெண்ணியர்களில் சிலராக, சொயவுமர் டிரூத், எலிசபெத் பிளாக்வெல், ஜேன் ஆல்டன், டோரத்தி டே ஆகியோரைக் கூறலாம்.[6] The first wave of feminism was primarily led by white women in the middle class, and it was not until the second wave of feminism that women of color began developing a voice.[7] அக்காலத்தின்அரசியல் விளக்கச் சொல்லாக பெண்ணியம் எனும் சொல் உருவாக்கப்பட்டது. பெண்ணியம் சம்னிலை வாய்ந்த சீர்திருத்த மக்களாட்சிப் பேச்சுகளால் பெண்ணிய இயக்கம் உருக்கொண்டது.[8]

படிமம்:8marta.jpg
A 1932 Soviet poster for International Women's Day: "Day of the uprising of female workers against kitchen slavery".
Louise Weiss along with other Parisian suffragettes in 1935. The newspaper headline reads, in translation, "THE FRENCHWOMAN MUST VOTE".


மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புகள்
  1. Henry, Astrid (2004). Not My Mother's Sister: Generational Conflict and Third-Wave Feminism. Indiana University Press. பக். 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780253111227. https://books.google.com/books?id=W4U4Ss1OZGoC&pg=PA58. 
  2. First Wave Feminism | BCC Feminist Philosophy
  3. 3.0 3.1 3.2 Schneir, Miram, 1972 (1994). Feminism: The Essential Historical Writings. Vintage Books. பக். xiv. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-679-75381-0. 
  4. Reuter, Martina (2017). "Jean-Jacques Rousseau and Mary Wollstonecraft on the imagination". British Journal for the History of Philosophy 25 (6): 1138–1160. doi:10.1080/09608788.2017.1334188. 
  5. Tauchert, Ashley (2002). Mary Wollstonecraft and the Accent of the Feminine. New York: Palgrave. பக். 5. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780230287358. https://archive.org/details/marywollstonecra0000tauc. 
  6. "Feminist History". Feminists for Life. 2017-02-04 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Four Waves of Feminism". Pacific University. 2015-10-25. 2015-11-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-02-04 அன்று பார்க்கப்பட்டது.
  8. Offen, Karen (1988). "Defining Feminism: A Comparative Historical Approach". Signs 14 (1): 119–157. doi:10.1086/494494. https://archive.org/details/sim_signs_autumn-1988_14_1/page/119. 
நூல்தொகை
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதல்_அலை_பெண்ணியம்&oldid=3583037" இருந்து மீள்விக்கப்பட்டது