உள்ளடக்கத்துக்குச் செல்

உதட்டுச் சாய பெண்ணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உதட்டுச் சாய பெண்ணியம் (Lipstick feminism) என்பது பெண்களின் பாலியல் சக்தி உட்பட பெண்ணியத்தின் பாரம்பரியக் கருத்துகளைத் ஏற்றுக் கொள்ள முயற்சிக்கும் பல்வேறு வகையான மூன்றாம் அலை பெண்ணியம் ஆகும். [1]

பெண்களின் வாக்குரிமை இயக்கத்தில் தொடங்கி , பெண்களின் அடிப்படை உரிமைகளில் கவனம் செலுத்திய ஆரம்பகால பெண்ணிய பிரச்சாரங்களைப் போலல்லாமல், உதட்டுச்சாய பெண்ணியம், குறிப்பாக பாலுணர்வின் அடிப்படையில் பெண்கள் தங்கள் பெண்மையை புறக்கணிக்காமல் அல்லது மறுக்காமல் பெண்ணியமாக இருக்க முடியும் என்பதை அறிய முயல்கிறது. பெண்ணியத்தின் இரண்டாவது அலையின் போது, பெண்ணியவாதிகள் பெண்களின் சட்ட மற்றும் சமூக சமத்துவத்தில் மட்டுமே கவனம் செலுத்தினர். ஆனால்,அவர்களின் பாலுணர்வை 'ஏற்றுக்கொள்ள' மறுத்தனர். ஜோரா நீல் ஹர்ஸ்டன் மற்றும் எம்மா கோல்ட்மேன் போன்றவர்கள் பெண்கள், அழகியல் மற்றும் பெண்மையின் கருத்துக்களின் தத்துவ கருத்துக்களைப் பயன்படுத்துவதன் மூலம், பாலினத்தின் வழிகளை மேம்படுத்துவதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் சாத்தியம் ஏற்படும் என்று வாதிட்டனர். உதட்டுச் சாயப் பெண்ணியம், பெண்ணின் உடலிலிருந்து உமிழப்படும் பெண்மை மற்றும் பெண் பாலியல் பற்றிய கருத்துக்களை உள்ளடக்கியது. உதட்டுச்சாய பெண்ணியத்தின் அறிஞர்கள், பெண்கள் உணர்வு மற்றும் பாலுணர்வுக்கு ஏற்ப செயல்பட உரிமை உண்டு என்று நம்புகிறார்கள். [2] [3]

உதட்டுச் சாயப் பெண்ணியம் சில இழிவான வார்த்தைகளை வலிமை மிகுந்த வார்த்தைகளாக மாற்றுகிறது. உதாரணமாக 'ஸ்லட்' எனும் வார்த்தையினை ஸ்லட்வாக் என்று மாற்றியது. இது இரண்டாவது அலை பெண்ணியத்தின் கருத்தியல் பின்னடைவினை சரிசெய்யும் விதத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது.

மொழி

[தொகு]

சொற்பொருளியலின்படி, உதட்டுச் சாய பெண்ணியம் எனும் குறிச் சொல் பெண்களை இழுபடுத்தும் சொற்களான ஸ்லட் (இழிமகள்) என்பதனை மீட்டெடுக்கும் பொருட்டு உருவாக்கபட்டது.இந்தச் சொல் "ஒழுக்கநெறியற்ற பெண்" மற்றும் சுதந்திரவாதி ஆகிய பொருள்படும் வகையில் உருவாக்கப்பட்டது.

தத்துவம்

[தொகு]

தத்துவரீதியாக, உதட்டுச்சாய பெண்ணியம் ஒரு பெண் , உளவியல் ரீதியாக, சமூக ரீதியாக, அரசியல் ரீதியாக அதிகாரம் பெறக்கூடியதனை முன்மொழிகிறது

மற்ற பெண்ணியவாதிகள், உதட்டுச் சாய பெண்ணியத்தில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்று அழைக்கப்படுவது ஒரு தத்துவ முரண்பாடாக உள்ளது எனக் கூறினர்.பெண்கள் தங்களது கால்களில் உள்ள முடிகளை நீக்கம் செய்வது மற்றும் குட்டை பாவாடை அணிவது போன்ற பாரம்பரிய பாலின செயல்களைச் செய்வதற்கான முடிவை அதிகாரமளிக்கும் செயலாகக் கருதலாமா இல்லையா என்பதை பெண்ணிய அறிஞர்கள் பல முறை விவாதித்து வந்திருக்கிறார்கள். ஃபியன்குவாலா சுவீனி மற்றும் கதி டேவிசு போன்ற பெண்ணியக் கல்வியாளார்கள் பெண்ணிய விடுதலை என்பது புரிந்து கொள்வதன் மூலமே கிடைக்கும் என்றும் அது பழமைவாத நடவடிக்கைகளில் இருந்து நீங்கள் வெளியேறும் போதும் தான் நிகழும் எனவும் கூறுகின்றனர்.

பிரபலமான கலாச்சாரத்தில்

[தொகு]

அமெரிக்க தொலைக்காட்சித் தொடரில், தி வெஸ்ட் விங், 57 வது நிகழ்ச்சியில் , " நைட் ஃபைவ் ", என்பதில் உதட்டுச் சாயப் பெண்ணியத்தின் சிறப்புகளை கதாபாத்திரங்கள் விவாதிக்கும் ஒரு காட்சியை கொண்டுள்ளது. பெண் கதாநாயகி இது அதிகாரம் அளிப்பதாக முடிவு செய்கிறார், அதே நேரத்தில் இது பாலின-எதிர்மறைவாதம் ஊதிய சமநிலை போன்ற முக்கியமான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பப்படுகிறது என்று கூறும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். [4]

சான்றுகள்

[தொகு]
  1. R. D. Lankford, Women Singer-Songwriters in Rock (2010) p.98
  2. Sweeney, Fionnghuala (2015). "'Beautiful, radiant things': Aesthetics, experience and feminist practice a response to Kathy Davis". Feminist Theory 16: 27–30. doi:10.1177/1464700114563244. http://webaccess.psu.edu/. பார்த்த நாள்: 2021-09-06. 
  3. Davis, Kathy (April 2015). "Should a feminist dance tango? Some reflections on the experience and politics of passion1". Feminist Theory 16 (1): 3–21. doi:10.1177/1464700114562525. பன்னாட்டுத் தர தொடர் எண்:1464-7001. 
  4. "#313 (57) "Night Five"". The West Wing Continuity Guide. பார்க்கப்பட்ட நாள் 1 June 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதட்டுச்_சாய_பெண்ணியம்&oldid=3593663" இலிருந்து மீள்விக்கப்பட்டது