அண்டோனியோ கிராம்ஷி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அண்டோனியோ கிராம்ஷி
Gramsci.png
அண்டோனியோ கிராம்ஷி, 1916
பிறப்புசனவரி 22, 1891(1891-01-22)
இத்தாலி
இறப்பு27 ஏப்ரல் 1937(1937-04-27) (அகவை 46)
இத்தாலி
பகுதிமேற்கத்திய தத்துவம்
பள்ளிமார்க்சியம்
முக்கிய ஆர்வங்கள்
அரசியல்,கருத்தியல், பண்பாடு
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
மேலாதிக்கம்

அண்டோனியோ கிராம்ஷி [About this soundAntonio Gramsci [1]; 22 சனவரி 1891 - ஏப்ரல் 27, 1937] ஒரு இத்தாலிய எழுத்தாளர், அரசியல்வாதி, அரசியல் நிபுணர், தத்துவவாதி, சமூகவியல், மற்றும் மொழியியலாளர். இவர் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினர் மற்றும் அக்கட்சியின் தலைவராக ஒரு முறை பதவிவகித்தார். பெனிட்டோ முசோலினியால் சிறையில் அடைக்கப்பட்டார்.கிராம்ஷி 20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய மார்க்சிய சிந்தனையாளர்களில் ஒருவராவார். கலாச்சார மற்றும் அரசியல் தலைமையை பகுப்பாய்வு செய்துள்ள அவரது எழுத்துக்களில் பண்பாட்டு மேலாதிக்க கோட்பாடுகளை முன் வைக்கின்றார். முதலாளித்துவ சமூகத்தில், பண்பாட்டு மேலாதிக்கத்தின் மூலம் அரசுகள் அதிகாரத்தை எவ்வாறு தக்க வைத்துக் கொள்கின்றன , என்பதை விளக்குகிறார்.[2]

கிராம்ஷியின் சிந்தனைகள்[தொகு]

ஆளுகிற முதலாளித்துவ வர்க்கங்கள் பொருளாதாரத்தில் தங்களது சுரண்டல் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிப்பதோடு நின்று விடுவதில்லை.மக்களின் அன்றாட வாழ்க்கை சார்ந்த கருத்துக்கள்,சிந்தனைமுறை அனைத்திலும் தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த இடையறாது முயற்சிக்கின்றனர்.இதனையொட்டி,கிராம்ஷி,தனது பிரசித்திபெற்ற "கருத்து மேலாண்மை"(Hegemony) , "குடியுரிமை சமுகம்" "பொதுபுத்தி" , போன்ற கருத்தாக்கங்களை உருவாக்கினார்.அரசு செயல்படும் விதம்,அதன் கட்டமைப்பு,ஆட்சி நடைபெறும் தன்மை,அரசியல் இயக்கங்களின் தன்மைகளும்,செயல்பாடுகளும் என பல வகையில் ஆராய்ச்சியை மேற்கொண்டு மார்க்சிய அரசியல் தத்துவத்தைக் கிராம்ஷி உருவாக்கினார். சோசலிச சமுகம் பற்றியும்,அந்த சமுகத்தை வென்றடைவதற்கான வழிமுறை உத்திகளும் ஒருசேர ஆராய்ந்தார்,கிராம்ஷி. [3]

அரசு[தொகு]

வன்முறை வழியில் ஒடுக்கும் அரசு நிறுவனங்களுக்கும்,கருத்து மேலாண்மை செலுத்தும் நிறுவனங்களுக்கும் இடையிலான சமநிலை அல்லது ஒற்றுமைதான் அரசு எனப்படுவது என்பது கிராம்ஷியின் பார்வை.[3]

கருத்து மேலாண்மை[தொகு]

ஆளும் வர்க்கங்கள் வன்முறை சார்ந்த அதிகாரத்தை மட்டும் நம்பியிருப்பதில்லை. அடக்கி ஒடுக்கப்படும் மக்களிடையே “கருத்து  மேலாண்மை” செலுத்தி அவர்களின் “சம்மதத்தை” செயற்கையாக நிறுவி,தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்கின்றனர்.இதுதான் இத்தாலியில் நிகழ்ந்தது.இதனால்தான் புரட்சிகர சூழலை மாற்றி நீண்ட தூரம் பின்னோக்கிய பாசிசப் பாதையில் இத்தாலியை கொண்டு செல்ல ஆளும் வர்க்கங்களால் முடிந்தது.[3]

அரசியல் மேலாண்மை[தொகு]

தற்போது அதிகாரம் செலுத்தும் முதலாளித்துவம் இந்த அதிகாரத்தை எளிதாகப் பெற்றிடவில்லை.தொடர்ந்த,உணர்வுப்பூர்வமாகத் திட்டமிடப்பட்ட அரசியல் செயல்பாடுகளால்தான் இந்த அதிகார ஆதிக்க  நிலையை அடைந்துள்ளது.எனவே ஒரு வர்க்கம் தனது பொருளியல் ரீதியான தேவை சார்ந்த எல்லைகளோடு நின்றிடாமல் அரசியல் மேலாண்மைக்கு முயற்சிக்க வேண்டும் என்ற முக்கிய முடிவுக்கு கிராம்ஷி வந்தடைகின்றார்.[3]

சிறைக் குறிப்புகள்[தொகு]

கிராம்சி சிறையில் இருந்த காலத்தில் இத்தாலியின் வரலாறு, கல்வி, பொருளாதாரம் தொடர்பான தம் கொள்கைகளையும் எண்ணங்களையும் 3000 பக்கங்கள் கொண்ட 32 குறிப்பேடுகளில் எழுதினார். அக்குறிப்புகள் சிறையிலிருந்து மீட்கப் பட்டு இத்தாலியில் வெளியிடப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gramsci, Antonio".. Oxford University Press. 
  2. "Antonio Gramsci". en.wikipedia. 25 அக்டோபர் 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 3.2 3.3 குணசேகரன், என். (நவம்பர்), "விண்ணைத்தாண்டித் தாண்டி வளரும் மார்க்சியம்-6", புத்தகம் பேசுது இதழ் Check date values in: |date=, |year= / |date= mismatch (உதவி)

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்டோனியோ_கிராம்ஷி&oldid=3522277" இருந்து மீள்விக்கப்பட்டது