நதியெஸ்தா குரூப்ஸ்கயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாதியா குரூப்ஸ்கயா
Nadezhda Krupskaya
நதியெஸ்தா குரூப்ஸ்யா, 1890களில்
பிறப்புநதியெஸ்தா கான்ஸ்தன்தீனவ்னா குரூப்ஸ்கயா
(1869-02-26)26 பெப்ரவரி 1869
சென் பீட்டர்ஸ்பேர்க், உருசியப் பேரரசு
இறப்பு27 பெப்ரவரி 1939(1939-02-27) (அகவை 70)
மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
வாழ்க்கைத்
துணை
விளாதிமிர் லெனின் (தி. 1898-1924)

நதியெசுதா கான்சுதாந்தீனொவ்னா "நாதியா" குரூப்சுக்கயா (Nadezhda Konstantinovna "Nadya" Krupskaya, உருசியம்: Наде́жда Константи́новна Кру́пская, 26 பெப்ரவரி [யூ.நா. 14 பெப்ரவரி] 1869 – 27 பெப்ரவரி 1939)[1] உருசியப் புரட்சியாளரும், அரசியல்வாதியும், எழுத்தாளரும், கல்வியாளரும் ஆவார். இவர் சோவியத் ஒன்றியத்தில் 1929 முதல் 1939 இல் இறக்கும் வரை துணைக் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். உருசியப் புரட்சியாளர் விளாதிமிர் லெனினின் மனைவி ஆவார்.

குரூப்சுகாயா புனித பீட்டர்சுபர்கில் குரூப்சுகி எனும் மேல்தட்டு வகுப்புக் குடும்பத்தில் பிறந்தார். இவரது குடும்பம் இவர் பிறந்தபோது வறுமையில் உழன்றநிலையில் இருந்துள்ளது. இதனால், இவர் ஏழைகளை முன்னேற்றும் ஆழ்ந்த மனப்பாங்கைப் பெற்றார். இவர் மார்க்சியத்தில் இணைந்து 1894 இல் ஒரு விவாதக்குழுவில் இலெனினைச் சந்தித்துள்ளார். இருவரும்1896 இல் புரட்சிகரப் பணிகளுக்காக சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இலெனின் சைபீரியாவுக்கு நாடுகடத்தபட்டபோது, 1898 இல் அவருடன் சேர, இருவரும் திருமணம் செய்துகொள்ளும் கட்டுத்தளையின் பேரில் குரூப்சுகாயாவுக்கு இசைவு தரப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நாடுகடத்தல் தண்டனை முடிந்த பிறகு, தோல்வியுற்ற 1905 உருசியப் புரட்சியில் பங்கேற்க உருசியாவுக்குச் சிறிது காலம் தங்க வருமுன், மூனிச்சிலும் அதன் பின்னர் இலண்டனிலும், வாழ்ந்துள்ளனர்.

1917 உருசியப் புரட்சிக்குப் பிறகு, குரூப்சுகாயா அர்சியல் அரங்கில் முன்னணிப் பாத்திரம் வகித்தார். இவர் 1924 இல் சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி நடுவண்குழு உறுப்பினரானார். இவர் 1922 முதல் 1925 வரை ஜோசப் இசுட்டாலின், கிரிகொரி சினோவியேவ், இலெவ் காமனேவ் அணியில் இலியோ டிராட்சுகியின் இடது எத்திர்ப்பணிக்கு எதிராகச் செயல்பட்டார். இவர் 1929 முதல் 1939 வரை துணைக் கல்வி அமைச்சராக விளங்கினார். அப்போது இவர் சோவியத் கல்வித் துறையிலும் நூலக வளர்ச்சி இயக்கத்திலும் வலிவான ஆளுமையைச் செலுத்தினார்.

தொடக்க கால வாழ்க்கை[தொகு]

குரூப்சுகாயா, 1876

அவர் உயர் குடும்ப வகுப்பில் பிறந்தார், ஆனால் குடும்பம் வறுமையில் வாடியது. குரூப்சுகாயாவின் தந்தை கான்சுட்டான்டின் ஓர் உருசிய படைத்துறை அதிகாரி. அவர் நாட்டிற்கு எதிரான தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு பொறுப்புகள் அனைத்தும் திரும்ப பெற்றுக்கொள்ளபட்டது. அவர் தொழிற்சாலைகளில் வேலைச் செய்து பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இறந்தார். பின் அவரது தாயார் வேலைக்கு சென்று குரூப்சுகாயாவைக் காப்பாற்றினார். குரூப்ஸ்காயா இளம் வயதிலே கல்வித் துறையில் நுழைந்தார். இவர் கல்வி மீதான டால்ஸ்டாயின் கோட்பாடுகளால், ஈர்க்கப்பட்டு ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட வளர்ச்சி, கவனம் ஆசிரியர்-மாணவர் உறவின் முக்கியத்துவத்தை மையமாக கொண்டுள்ளது என்பதை முன்மொழிந்தார்.

இவர் வறுமையில் வாடிய உயர் வகுப்புக் குடும்பத்தில் பிறந்தார். குரூப்சுகாயாவின் தந்தை கான்சுட்டான்டின் ஒரு நிலக்கிழார் குடும்பத்தில் பிறந்து, தன் ஒன்பது வயதில் பெற்றோரை இழந்து ஏதிலியானார். இவர் கல்வி கற்றதும் உருசியக் காலாட்படை ஆணையத்தில் அலுவலராகச் சேர்ந்தார்.[2] போலந்து நாட்டுப் பணியைத் துறக்கும் முன் இவர் குரூப்சுகாயாவின் தாயாரை மணந்தார். ஈராண்டுகளுக்குப் பின், இவர் தம் மேலதிகாரிகளின் நம்பிக்கையை இழந்து, புரட்சிகரப் பணிகளில் ஈடுபட்டதாக ஐயப்பட்டு படைத்துறைப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். பிறகு இவர் அவர் தொழிற்சாலைகளில் வேலைச் செய்து அல்லது கிடைத்த வேலைகளைச் செய்து பொது வாழ்க்கையில் ஈடுபட்டார். இறப்பதற்கு முன் இவர் படைத்துறை அலுவலராக மீளமர்த்தப்பட்டார்.[3]

குரூப்சுகாயாவின் தாயார், எலிசவேத்தா வாசிலியேவ்னா திரிசுத்திரோவா (1843–1915) ஒரு நிலமிழந்த உருசிய நிலக்கிழாரின் மகளாவார். எலிசவேத்தாவின் இளமையிலேயே அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். இவர் அப்போது உருசியாவில் மகளிருக்கான மிகவும் உயர்நிலை வாய்ந்த பெசுத்துழேவ் பாடவகுப்புகளில் சேர்ந்துள்ளார். இவர் பட்டம் பெற்றதும், குரூப்சுகியுடன் திருமணம் செய்துகொள்ளும் வரை பல நிலக்கிழார் குடும்பங்களின் ஆளுநராகப் புரிந்தார்.[4]

குரூப்சுகாயா, 1879

நன்கு கல்விகற்ற மேட்டுக்குடி பிறந்த குரூப்சுகாயா, உழைக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்நிலைமைகளை நன்கு அறிந்திருந்தமை, அவரது ஆழ்ந்த கருத்தியலையும் நம்பிக்கைகளையும் உருவாக்கியுள்ளது. "இவர் இளமை முதலே தன்னைச் சுற்றியமைந்த அருவெறுப்புதரும் வாழ்க்கையை எதிர்க்கும் மனப்பான்மையைப் பெற்றிருந்துள்ளார்."[5]

குரூப்சுகாயாவின் பள்ளி த் தோழியான அரியாதினே திருக்கோவா, இவரைப் பற்றி "பையன்களோடு விடலைப் பேச்சு பேசாத உயரமான அமைதியான சிறுமி; சிந்தனையோடு நகர்பவர்; ஏர்கெனவே வலிமையான மனவுரம் கொண்டவர் . . . எப்போதும் பொறுப்புடன் செயல்படுபவரில் ஒருவர், சிதனைகலாலும் உணர்வுகளாலும் நிறைந்திருப்பவர் . . ." என விவரிக்கிறார்.[6] இவர் இரண்டு வேற்பட்ட தொடக்கநிலைப் பள்ளிகலி சேர்ந்துள்ளார். பிறகு, அவருக்கு இளவரசர் ஏ.ஏ. ஒபோலென்சுகி பள்லிக்கூடம் தனக்கு மிகவும் பொருத்தமாக அமைவதால் இறுதியாக அங்கு சேர்ந்தார். இப்பள்ளி பீட்டர்சுபர்கில் இருந்த " தகைமை வாய்ந்த மகளிர் தொடக்கநிலை பள்ளியாகும்." இங்கு, முந்தைய புரட்சியாளர்கள் ஆசிரியராக விளங்கியதால், மற்ற பள்ளிகளை விட கல்வியின் தரமும் பாடங்களும் மிகவும் வளமாக அமைந்திருந்தன.[7]

தந்தையார் இறந்ததும், குரூப்சுகாயாவும் அவரது தாயாரும் வருமானத்துக்காக மாணவர்களுக்கு பாடம் நடத்தியுள்ளனர். குரூப்சுகாயா இளமையில் இருந்தே கல்வித் துறையில் ஈடுபட ஆர்வம் பூண்டிருந்தார்.[8] இவர், குறிப்பாக இலியோ டால்சுட்டாயின் கல்விக் கோட்பாடுகளால் கவரப்பட்டுள்ளார். இக்கோட்பாடுகள் கட்டமைப்பு இல்லாமல் நெகிழ்வாக அமைந்திருந்தன. இவை தனி மாணவரின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தின; ஆசிரியர்-மாணவர் உறவுக்கு முதன்மை அளித்தன.[9]

இதனால் குரூப்சுகாயா டால்சுட்டாயின் பல நூல்களை, அவரது சீர்திருத்த கோட்பாடுகள் உட்பட்டவற்றைப் படிக்கலானார். இவை அமைதி கோருபவை;சட்டத்தைப் பின்பற்றுபவை; மக்களை தேவையற்ற ஆடம்பரங்களிலில் இருந்து விலக்குவதில் கவனம் குவித்தவை; வீட்டைக் கவனிக்க பிறரை நாடாமல் தற்சார்புடன் வாழ வழிவகுப்பவை. டால்சுட்டாய் இவரது ஆளுமையில் தொடர்ந்து ஆளுகை செலுத்தியுள்ளார்; இவர் " சிறப்பாடைகளிலும் ஏந்துகளிலும் தனிவெறுப்பு கொண்டிருந்ததாகக்" கூறப்படுகிறது.[10] இவர் உடையிலும் வீடு, அலுவலக இருக்கைகளிலும் எளிமையை விரும்பிப் பேணிவந்தவர்.

வாழ்நாள் முழுவதும் அக்கறையான மாணவராக இருந்ததால், குரூப்சுகாயா பல விவாத வட்டங்களில் பங்கேற்றார். இந்தக் குழுக்கள் மக்கள் அனைவருக்கும் நலந்தரும் குறிப்பிட்ட தலைப்புகளில் ஆய்வையும் குழுவிவாதங்களையும் நடத்த உருவாகியவை ஆகும். பிறகு, இதுபோன்ற குழுக்கள் ஒன்றில்தான், இவர் மார்க்சியக் கோட்பாடுகளுக்கு அறிமுகம் பெற்றுள்ளார். தம் மக்களுக்கு நல்ல வாழ்க்கையை உருவாக்கம் வல்லமை வாய்ந்த வழிமுறையாக அமைவதால், அவரது ஆர்வம் மேலும் உந்துதல் பெற்றுள்ளது.[11] இவர் ஆழமாக மார்க்சியத்தைக் கற்கலானார். அரசு தணிக்கையால் உருசியாவில் நூல்கள் கிடைப்பது அரிதாகவிருந்தது. ஆனால், புரட்சியாளர்கள் அவற்றைத் திரட்டி, தலைமறைவு நூலகங்களில் வைத்திருந்தனர். இவர் 1890 இல் இராபெர்ட் கிளாசன் ஒழுங்கமைத்த மார்க்சிய வட்டத்தில் சேர்ந்தார்.[12] அடுத்த ஆண்டே, இவர் அகவை முதிர் தொழிலாளர்களுக்கான ஞாயிறுக்கிழமைப் பள்ளியில் பணியில் சேர்ந்தார்.

திருமண வாழ்க்கை[தொகு]

குரூப்சுகாயா, 1890 களில்

குருப்சுகாயா விளாதிமீர் இலியிச் உலியனோவை(பின்னர் விலாதிமீர் இலெனின் என அழைப்பட்டவரை) முதலில் 1894 பிப்ரவரியில்[13] ஒரு விவாதக்குழுவில் சந்தித்தார். இலெனின் ஆளுமையை விட அவரது பேச்சு குரூப்சுகாயாவை மிகவும் கவர்ந்துள்ளது; முதன்முதலில் அப்படித்தான் இருந்துள்ளது. கட்சி சொந்தத் தகவல்களைப் பேசுவதில்லை என்பதால் இலெனின் குரூப்சுகாயா காதலைப் பற்றி அறிவது அரிதானதாகவே உள்ளது.[14]

குரூப்சுகாயாவும் 1896 அக்தொபரில், இலெனின் சிறைசென்ற சில மாதங்களுக்குப் பிறகு, சிறைசெய்யப்பட்டார்ரிவர் சிறிது காலம் பீட்டர், பவுல் கோட்டையில் சிறிது காலம் தங்கவைக்கப்பட்டார். இவருடன் சிறைப்பட்ட மற்றொரு பெண் தீக்குளித்து இறக்கவே இவர் விடுதலை செய்யப்பட்டார்.[15] குரூப்சுகாயாவும் உஃபாவுக்கு மூன்றாண்டுகள் நாடுகடத்தப்பட்டார்; ஆனால், இவர் நாட்டைவிட்டுப் புறப்படும் முன், இவருக்கு இலெனின் ஒரு கமுக்கமான குறிப்பொன்றை அவரது தாயார் வழியாக அனுப்பியுள்ளார். அதில் அவர் குரூப்சுகாயா தன்னை இலெனினின் காதலியாக அறிவித்தால், தன்னுடன் நாடுகடத்தலில் சைபீரியாவில் மினுசின்சுக் எனும் ஊரில் வந்து இணையமுடியும் எனப் பரிந்துரைத்துள்ளார்.[13] சைபீரியா சென்றதுமே இலெனினை மணந்துகொள்ள வேண்டும் என்ற ஒப்புதலின் பேரில், குரூப்சுகாயா இலெனினோடு சென்று இணைய இசைவு தரப்பட்டுள்ளார்.[16] குரூப்சுகாயா 1898 இல் இலெனினுடன் இணைய, தன் தாயாருடன் சைபீரியாவுக்குச் சென்றுள்ளார்.

தனது நினைவலைகளில், குரூப்சுகாயா "with him even such a job as translation was a labour of love" எனக் குறிப்பிட்டுல்ளார்.[17]

குரூப்சுகாயா கிரேவ்சு நோயால் தாக்கப்பட்டுள்ளார் என நம்பப்படுகிறது;[18] இந்நோய் கழுத்தடிச் சுரப்பி நலிவால் உருவாவதாகும்; இதனால், விழிகள் பெருக்கமுறும்; கழுத்து இறுக்கமுறும்; இது மாதவிடாய்ச் சுழற்சியையும் குலைக்கும். இது இலெனின்-குரூப்சுகாயா இணையருக்குக் குழந்தைகள் இல்லாமையை விளக்குகிறது.[2]

விடுதலைக்குப் பிறகு, இலெனின் ஐரோப்பாவுக்குச் சென்று மூனிச்சில் வாழலானார். தன் விடுதலைக்குப் பிறகு குரூப்சுகாயா 1901 இல் அவரோடு இணைந்துல்ளார். குரூப்சுகாயா வந்த பிறகு இருவரும் இலண்டனுக்குச் சென்றனர்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

குரூப்சுகாயா, விளாதிமீர் இலெனின், இலெனின் பூனை, அமெரிக்க இதழியலாளர், கிரெம்ளின், 1920

குரூப்சுகாயாவின் அரசியல் வாழ்க்கை சுறுசுறுப்பானது; 1903 இல் இருந்து இவர் உருசிய சமூக மக்களாட்சித் தொழிலாளர் கட்சி, போல்செவிக் பிரிவின் வெறும் செயல்பாட்டாளராக மட்டுமே இருக்கவில்லை.

இலெனினுடனும் குரூப்சுகாயாவுடனும் 1902 முதல் 1903 வரை நெருக்கமாகப் பணிபுரிந்த இலியோன் டிராட்சுகி, "என் வாழ்க்கை"(1930) எனும் வாழ்க்கைவரலாற்று நூலில் கட்சி, செந்தழல்(Iskra) இதழ் வெளியீடு இரண்டின் அன்றாடச் செயல்பாடுகளில் வகித்த மையப்பாத்திரம் குறித்து குறிப்பிட்டுள்ளார். " செந்தழல் இதழ்ச் செயற்குழுவின் செயலாளராக குரூப்சுகாயா விளங்கினார். இவர் அனைத்து ஆட்சிப் பணிகளின் மையமாகத் திகழ்ந்துள்ளார்; இவர் தோழர்கள் வருகையில் வரவேற்று, செல்லும்போது உரிய அறிவுரைகள் வழங்குவார்; இடைத்தொடர்புகளைப் பேணுவார்; தேவையான கமுக்க முகவரிகளை அளிப்பார்; எழுத்துவழித் தொடர்பு கொண்டு, மறைகுறிப்புகளையும் தெரிகுறிப்புகளையும் அறிவிப்பார்ரவரது அறையில் மறைகுறிப்புத் தாட்களை எரிக்கும் புகைமணம் தவழும்..."[19]

குரூப்சுகாயா 1905 இல் கட்சி நடுவண்குழுவின் செயலாளர் ஆனார். அந்த ஆண்டில் இவர் உருசியாவுக்கு வந்து, 1905 உருசியப் புரட்சியின் தோல்விக்குப் பிறகு, உருசியாவை விட்டுச் சென்று பிரான்சில் சில ஆண்டுகளளாசிரியராகப் பணிபுரிந்தார்.

1917 அக்டோபர் புரட்சியின் பிறகு, அனதோலி உலுனசாவ்சுகியின் கல்வி அமைச்சகத்தில், வயது வந்தோர் கல்விப் பிரிவைப் பொறுப்பெடுத்துக்கொண்டார்..[20] 1920 இல் கல்விக் குழுவின் தலைவராகவும் 1929 முதல் 1939 வரை அரசு கல்வி அமைச்சராகவும் பதவி வகித்தார்..[20].

குரூப்சுகாயா சோவியத் ஒன்றியக் கல்விக் கட்டமைப்பின் அடிப்படையை நிறுவினார். இவர் சோவியத் நூலக வளர்ச்சிக்கு அடிப்படை வித்திட்டவரும் ஆவார்.

குரூப்சுகாயா சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சி நடுவண்குழு உருப்பினராக 1924 இலும்,கட்டுபாட்டு ஆணைய உறுப்பினராக 1927 இலும், தகைசால் குடிமையராகவும் மீநிலைச் சோவியத் உறுப்பினராகவும் 1931 இலும் ஆனார். கில்டா அகிலாஃப் 1931 இல் புரூக்ளின் கழுகு செய்தித்தாளுக்கான குரூப்சுகாயாவின் நேர்காணலுக்காக அவரைச் சந்திக்க வந்ததாக கூறப்படுகிறது.[21]

Krupskaya and Lenin, 1922

இலெனினுக்கு இரண்டாம் முறை மாரடைப்பு ஏற்பட்ட பிறகு, 1922, திசம்பரில் இலெனினை அணுகிப் பார்க்க இசுட்டாலின் கட்டாயப்படுத்திக் கேட்டபோது, குரூப்சுகாயா பின்னவருடன் கடுமையாக சண்டையிட நேர்ந்துள்ளது. அப்போது குரூப்சுகாயா இலெனின் மிகவும் நலிந்துள்ளதக வாதிட்டுள்ளார். திசம்பர் 23 இல், குரூப்சுகாயா காமெனேவுக்கு கடந்த 30 ஆண்டுகளில் தான் சம புரட்சித்தோழரிடம் இருந்து இசுட்டாலின் காட்டிய கெடுபிடியையும் அச்சுறுத்தலையும் போன்ற இழிகேட்டைச் சந்தித்ததே இல்லை முறையிட்டு கடிதம் எழுதியுள்ளார்.[22] மார்ச்சில் இலஎனின் இதை அறிந்ததும், இசுட்டாலின் உறவையே துண்டித்துக் கொள்வேன் அவரை அச்சுறுத்தினார்.

இலெனின் 1924 ஜனவரியில் இறந்த பிறகு, குரூப்சுகாயா கட்சி விவாதங்களில் கிரிகொரி செனோவியேவுக்கும் இலெவ் காமனேவுக்கும் அணுக்கமான அரசியல் நிலையை எடுத்துள்ளார். 1920 களில் கட்சி மூன்று உட்பிரிவுகளைக் கொண்டிருந்தது. இலியோன் டிராட்சுகி இடது எதிர்பாணியிலும் இசுட்டாலின் நடுவணியிலும் புக்காரின் வலது எதிர்ப்பு அணியிலும் இருந்தனர். 1922 முதல் 1925 வரை இசுட்டாலினின் நடுவணியோடு செனோவியேவும் காமனேவும் முந்நிலைக் கூட்டணியில் இருந்து டிராட்சுகியின் வலது அணியை எதிர்த்தனர். குரூப்சுகாயா இவர்களுக்கு ஆதரவு நல்கி, சந்துசெய்யும் மொழிநடையில் டிராட்சுகியை எதிர்த்து நின்றார்; இவர் 1924 இல், " டிராட்சுகி அவர்மீது சுமத்திய சாவுநிலைக் குற்றங்கலைச் செய்திருப்பாரா எனத் தெரியவில்லை" எனக் கூறியுள்ளார்.[23]

குரூப்சுகாயா 1925 இல் டிராட்சுகியின் அக்தோபர் பாடங்கள் எனும் நூலுக்கு அரசியலாக எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். அதில் தோழர் டிராட்சுகியின் வலிவான கோரிக்கை மார்க்சியப் பகுப்பாய்வன்று " எனக் கூறியுள்ளார்.[24] தனிநாட்டில் நிகரறச் சமூக உருகாக்கத்துக்கும் நிலையான உலகப் புரட்சிக்குமான முரண்பாட்டைப் பற்றி, இவர் டிராட்சுகி "உழவரின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுகிறார்" என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், டிராட்சுகி முதல் உலகப் போருக்குப் பிந்தைய செருமனியின் புரட்சிகர நிலையைத் தவறாக விளங்கிக் கொண்டுள்ளார் எனும் நிலைப்பாட்டை எடுக்கிறார்.

1925 இறுதியில் முந்நிலைப் பிரிவு இரண்டாக, இவர் நேரடியாகவே செனோவியேவையும் காமனேவையும் ஆதரித்து இசுட்டாலினை எதிர்த்தார்; 1926 தொடக்கத்தில் இவர் டிராட்சுகி இடதனியில் இணைந்து, ஒன்றிய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். டிராட்சுகியின் மகன் இலெவ் செடோவ் தனது நூலான சிவப்புப் புத்தகம்: மாஸ்கோ தண்டனை என்பதில் " இலெனின் சிறைப்படாமல், தான் இறந்துவிட்டதால் தப்பினார்" எனக் கூறுகிறார்.[25] தனது தலைமையை பெரிதும் நிலைநாட்ட, இசுட்டாலின் தனது பதினைந்தாம் கட்சிப் பேராயத்தில் 1927 திசம்பரில் குரூப்சுகாயா எதிர்ப்பணியை துறந்துவிட்டதாக அறிவித்தார்.

குரூப்சுகாயா 1930 இல் மறுபடியும் இசுட்டாலினை எதிர்த்தார்ரிப்போது இவர் வலதணி தலைவர்கலாகிய நிக்கோலாய் புக்காரின், அலெக்சி இரிக்கோவ் ஆகியோருக்கு ஆதரவாக, மாஸ்கோ, பவுமன் மாவட்டக் கட்சியில் பேசினார். அதன்பிறகு, அப்போது கட்சி அலுவலில் இருந்த நிகிதா குருச்சேவ் " விளம்பரம் ஏதுமின்றிறீவரது பேச்சு கட்சி வட்டங்களில் சென்று சேர்கிறது ... இந்த விவாதங்களில் அனைவரும் அவருக்கு எதிராக எழ, அவரைப் பார்க்கவே கசப்பான உணர்வு தான் ஏற்படுகிறது. முதிர்ந்த வயதில் அவர் மனதுடைந்து நின்ற காட்சி எனக்கு நினைவுக்கு வருகிறது" எனக் கூறுகிறார்.[26]

குருச்சேவ், குரூப்சுகாயாவை இசுட்டாலின் மிரட்டி, அவருக்கு மாற்றாக வேறொருவரை "இலெனின் விதவை" எனப்பெயரிட முடியும், என அச்சுறுத்தியதை உறுதிப்படுத்துகிறது. இதே கதையை முன்னாள் அலுவலர் அலெக்சாந்தர் ஓர்லோவும் கூறி, அந்த விதவையாக, யெலெனா சுட்டாசோவா இருக்கலாம் எனக் கூறுகிறார்.[27] மற்றொரு வதந்தி, அந்த விதவையாக உரோசாலியா செம்லியாச்கா இருக்கலாம் எனக் கூறுகிறது.[26] 1936 இல், இவர் சோவியத் அரசின் கருக்கலைப்புச் சட்டத்தை ஆதரித்துள்ளார். கருக்கலைப்புக்கான காரணங்களைத் தவிர்க்கவேண்டும் என்ற கொள்கை 1920 இல் இருந்தே வலியுறுத்தப்பட்டு வந்ததை நினைவூட்டியுள்ளார்.[28]

குரூப்சுகாயா 1930 இல் இலெனின் உடனான அவரது வாழ்க்கை நினைவுகளை ஒரு நூலாக எழுதினார்; இது 1930 இல் இலெனின் நினைவுகள் எனவும் 1959 இல் இலெனின் நினைவலைகள் எனவும் மொழிபெயர்க்கப்பட்டது.[29] இந்நூல் அதிகாரத்துக்கு வரும்வரையிலான இலெனின் வாழ்க்கையை விரிவாக விளக்கினாலும் 1919 உடன் முடிந்து விடுகிறது.

இறப்பு[தொகு]

தனது எழுபதாவது பிறந்தநாளுக்கு மறுநாள், 1939 பிப்ரவரி 27 இல் இறந்தார்; இவரது சாம்பல் கிரெம்ளின் சுவர் நெரோபோலிசில் அடக்கம் செய்யப்பட்டது. இசுடாலினின் செயலாளர் அலெக்சாந்தர் போசுக்கிரெபிசேவ் பின்னாளில் குரூப்சுகாயாவுக்கு பிறந்தநாள் விழாவில் நஞ்சூட்ட ஆணையிட்டதாக வெளியிட்டுள்ளார்.[30][31] இசுட்டாலினின் முன்னாள் இணையரும் அரசியல் குழும உறுப்பினருமான இலசார் ககனோவிச்சு கூட, குரூப்சுகாயாவுக்கு நஞ்சு கொடுத்ததில் இலாவெரன்ட்டி பேரியா ஈடுபட்டிருக்கலாம் என கருதியுள்ளார். இதை அவர் 1991 இல் " அந்த நிகழ்ச்சிக்கான வாய்ப்பை புறந்தள்ள முடியாது. அவர்(இசுட்டாலின்) செய்திருக்கலாம்" எனக் கூறியுள்ளார்.[32] இலியோன் டிராட்சுகியும் 1939 இல் குரூப்சுகாயாவின் இறப்புச் சூழ்நிலைமலைக் குறித்து இதுபோன்ற உறுதிப்பாட்டைக் கூறியுள்ளார்.[33]

சோவியத் கல்வி, நூலகங்கள்[தொகு]

நதேழ்தா குரூப்சுகாயா

அக்தோபர் புரட்சிக்கு முன்பு, ஐந்தாண்டுகள் ஒரு தொழிலகத்தில் மாலை வகுப்புகளில் அதன் பணியாளர்களுக்குக் கல்வி கற்பித்தார். சட்டப்படி, அங்கே அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் கணக்கிட எண்பயிற்சியும் தந்துள்ளார். கமுக்கமாக விரும்பும் ஆட்களுக்கு புரட்சி குறித்த தாக்கத்தைக் கல்விவழி ஏற்படுத்தியுள்ளார். அப்பகுதியில் சம்பள உயர்வு கோரி, 30,000 தொழிலாளர்கள் பணிநிறுத்தம் மேற்கொண்டபோது குரூப்சுகாயாவும் பிற ஆசிரியர்களும் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர்.[34] புரட்சிக்குப் பிறகும் அவரது கவனம், "இளைஞர்களின் அமைப்பு, கல்விச் சிக்கல்களிலேயே குவிந்திருந்தது."[35] இளைஞர்கள் கல்விபயில, நூல்களை எளிதாக அணுகும் வழிமுறைகள் தேவைப்பட்டன.[36]

புரட்சிக்கு முந்திய நூலகங்கள் குறிப்பிட்டவரைத் தவிர்க்கும் போக்கு நிலவியது. சில நூலகங்கள் உயர்வகுப்பினருக்கு மட்டுமே இயங்கின; சில குறிப்பிட்ட குழுமத்தின் தொழிற்சங்கப் பணியாளர்களுக்கு மட்டுமே நடந்தன. மேலும், அவற்றில் குறுகிய நோக்கப் பழமைப் போக்கு நூல்களே இருந்தன. புதிய சிந்தனை சார்ந்த நூலேதும் இருக்கவில்லை. எனவே, இதனால் தலைமறைவு நூலகங்கள் தோன்றலாயின. மக்கள்திரளின் கல்விமட்டமும் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தது. அல்வார் ஆல்ட்டோ வடிவமைத்த விபோர்கு நூலகம், அந்நூலகத்தை சோவியத் அரசு ஏற்றதும் அது குரூப்சுகாயா நகராட்சி நூலகம் எனப் பெயரிடப்பட்டது.

புரட்சியால் ஒரே இரவில் நூலகங்களை மேம்படுத்தல் அரிது. உண்மையில், சிலகாலம் வரை பல்வேறு சிக்கல்கள் உருவாகி வந்தன. தொழிற்சங்கங்கள் நூலகத்தைப் பொதுமக்கள் பயன்படுத்த இசையவில்லை; புத்தகங்களின் கொள்வினைக்கும் போதுமான நிதியில்லை; போதுமான அளவில் நூல்களும் கிடைப்பது அரிதாகவே இருந்தது. இதனால் நூலகங்கள் அருகின; வருமானம் குறைவாக இருந்ததால், நூலகப் பணிக்கு வரும் ஆர்வமும் குன்றியிருந்தது. எனவே, நூலகங்களையும் நூலக இயக்கத்தையும் முற்றிலும் மீளமைக்க வேண்டியிருந்தது.

குரூப்சுகாயா, 1931

இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண, குரூப்சுகாயா நூலகப் புள்ளிவிவரத் தொகுப்புக்கு ஆணையிட்டார்.[37] பொதுமக்களுக்கு கதவுகளைத் திறந்து வைக்கும்படி, குரூப்சுகாயா நூலகங்களை ஊக்குவித்தார். இவர் நூலகர்களை தம் புரவர்களாகிய மக்களிடம் எங்கணும் புழங்கும் பொதுவழக்கைப் பயன்படுத்த ஊக்குவித்தார். தொழிலாளர் தேவைகளை அறியும்படியும் இருப்பில் வைக்கவேண்டிய புத்தக வகைகளையும் வாசகர்கள் விரும்பும்கருப்பொருள்களையும் அறியும்படிக்கும் வாசகர்கள் எளிதாக தமக்கு வேண்டியவற்றை எளிதாக அணுகும் வகையில் ஒழுங்குபடுத்தி வைக்கும்படியும் வேண்டுதல் விடுத்தார். நூலக அட்டை பட்டியல்களை மேம்படுத்த குழுக்கள் அமைக்கப்பட்டன.

குரூப்சுகாயா ஒரு நூலகக் கருத்தரங்கில் பின்வருமாறு கூறுகிறார்: " நாம் நகைக்க தக்கவகையிலேயே நமது நூலக எண்ணிக்கை உள்ளது; அவற்றில் நூலிருப்புகளும் பொதுமானதாக இல்லை. அவற்றின் தரமோ மிகமிக தாழ்வான நிலையில் உள்ளது. மக்களுக்கும் நூலகத்தைப் பயன்படுத்தும்வழிவகை தெரியாது, ஏன் நூலகம் என்றாலே என்னவென்று தெரியாது."[38]

இவர் நூலகர்களை உருவாக்க மேலும் சிறந்த தொழில்முறைப் பள்ளிகளை உருவாக்க முயன்றார். புரட்சிக்கு முந்தைய உருசியாவில் நூலகருக்கு முறையாகப் பயிற்சிதரும் வழக்கமே இல்லை. இந்நிலை இருபதாம் நூற்றாண்டில் தான் உருவாகலானது. எனவே, குரூப்சுகாயா நூலகப் பயிற்சிக்கூடங்களைத் தோற்றுவித்து, அங்கே பணியில் உள்ள நூலகர்கள் பணிக்குவரும் நூலகருக்குப் அத்துறையில் வேண்டிய பயிற்சியை, மேலை நாடுகளில் உள்ளதைப் போல, அளித்திட வழிவகுக்க முயன்றார். என்றாலும் கல்விப்பாங்கு புரட்சிகரச் சோவியத்துக்கு ஏற்றதாக இருக்கவேண்டும். நூலகர்கள் புரவலராகிய மக்களுக்கு வேண்டிய நூல்களைத் தேர்வு செய்ய, அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், பயிற்சி அளிக்கவேண்டும்.[39]

குரூப்சுகாயா நூலகர்கள் பேச்சுத் திறனும் எழுத்தாற்றலும் பெற்றிருக்கவேண்டும் என விரும்பினார். அப்போது தான் அவர்கள்மிகத் தெளிவாக சில கருப்பொருள்களை விட வேறு சில கருப்பொருள்கள் பயன்மிகுந்தவை என மக்களுக்கு விளக்கலாம். இவர் மக்களுக்கு வேண்டியவற்றை விளக்குதல் நல்நோக்கத்துக்காக வன்றி, அது நூலகரின் பணியன்று; இப்பணி நிகரற அரசியல் விழுமியங்களில் கல்விக்கான வாய்ப்பைக் கூடுதலாக்கும். அவர்கள் முதலில் புரட்சிக்கு உதவி, பிற்பாடு புரட்சியால் ஏற்படும் நிகரறச் சமூக அரசின் விழுமியங்களைப் பேணிக் காத்தல் வேண்டும்.[39]

குரூப்சுகாயா ஒரு பொறுப்புமிக்க மார்க்சியர். இவருக்கு பொதுக் கல்வி மக்களது வாழ்க்கையை மேம்படுத்தும் ஆயுதமாகும்; இது அனைத்து மக்களும் கல்வியையையும், நூலகங்களையும் அணுக உதவும் கருவியாகும்; இது மேலும் நிறைவான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். கல்வியே நிறைவான வாழ்வு தரும்; அதற்கு நூலகங்களும் நூல்களுமே தக்க கருவிகளாகும்.[40]

1917 முதல் 1936 வரை எழுதிய சில கட்டுரைகள்,ஆற்றிய சொற்பொழிவுகள், ஆகியவற்றைக் கொண்ட ‘கம்யூனிச முறையில் இளைஞர்களைப் பயிற்றி வளர்த்தல்” என்ற நூலில், பொதுக்கல்வியைப் பற்றி இவர் பெண் குழந்தைகளின் கல்வியும் குழந்தைகளைப் பன்முகத் தன்மையுடன் வளர்த்தலும் சமுக உடைமைமுறை உருவாக்கத்தில் எவ்வளவு இன்றியமையாதது என்பதை இந்நூல் விளக்கியது.

புத்தகங்கள்[தொகு]

புரட்சிக்குப் பிந்தைய சோவித் ஒன்றியம் குறித்த கற்க விரும்பும் வாசகர்களிடம் இவரது மாவோவின் “இரகசியப்பொருளாதாரம் பற்றிய விமர்சனம் ”, ஜார்ஜ் தாம்சனின் ‘மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை’ நூலின் முதல் சோசியலிச அரசு என்று ஏழாவது இயலில் ‘சோசியலிச சமுகத்தில் வர்க்கப் போராட்டம்’ என்னும் பகுதி , பால்சுவிசியின் ‘’புரட்சிக்கு பிந்தைய சமுதாயம்’ ஆகிய நூல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

பெருந்தூய்மிப்பில் குரூப்சுகாயா[தொகு]

குரூப்சுகாயா, 1936

1937 பிப்ரவரியில் நிக்கோலாய் புக்காரின், அலெக்சி இரிக்கோவ் இருவரையும் கட்சியில் இருந்து நீக்க முடிவெடுத்த கட்சி நடுவண்குழு அரங்கில் குரூப்சுகாயா முடிவுக்கு ஆதரவாக வாக்களித்தார்.[41] ஆனால், சிலவேளைகளில் இவர் குற்றவாளிகளுக்காக வாதாடியதும் உண்டு. 1937 ஜூன் நடுவண்குழுவில், ஓசிப் பியாட்னித்சுகி சிறைபிடிக்கப்படுவதை எதிர்த்தார்; அது ஏற்கப்படவில்லை. ஐ. தி. சுகுரின் எனும் பழைய போல்செவிக்கை விடுவிப்பதில் வெற்றி கன்டார்; இருந்தாலும் சுகுரின் கட்சியில் சேர்க்கப்படவில்லை. வாழ்நாள் முழுவதும் கூரைவேயும் தொழிலில் ஈடுபாட்டார்.[42]

தகைமை[தொகு]

 • இவர் 1939 இல் இறந்த பிறகு, இலெனின்கிராதில் இருந்த ஒரு தொழிற்சாலை இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது. அதில் செய்யப்படும் சாக்கொலேட்டுக் கட்டிகள் குரூப்சுகாயா சாக்கொலேட்டுகள் இன்றும் அழைக்கப்படுகின்றன.[43]
 • 1971 இல் தமரா மிகய்லோவ்னா சுமிர்னோவா எனும் சோவியத் வானியலாளரால் கண்டுபிடிக்கப்பட்ட 2071 நதேழ்தா சிறுகோள் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.[44]
 • திரைப்பட இயக்குநர் மார்க் டான்சுகாய் 1974 இல் ஒரு வரலாற்று படமாக நாதேழ்தா எனும் திரைப்படத்தை எடுத்தார்.
 • பிரித்தானிய ஒலிபரப்பு நிறுவனம் 1974 இல் இலின் ஃபார்லே என்பார் கழுகளின் வீழ்ச்சி நிகழ்வில் குரூப்சுகாயாவை விவரித்துள்ளார்.
 • ஜேன் பார்னெசு கசே 1974 இல் நான் குரூப்சுகாயா: இலெனினோடான எனது வாழ்க்கை (Houghton Mifflin Company; ISBN 0-395-18501-7) எனும் தலைப்பில் ஒரு வரலாற்றுப் புனைவு நினவலைகள் நூலை இயற்றியுள்ளார்.
 • பன்னாட்டுக் கல்வி, அறிவியல் அவை இவரது நினைவாக பன்னாட்டுக் கல்வி, அறிவியல் பேரவை (யுனெஸ்கோ) நதேழ்தா கே. குரூப்சுகாயா எழுத்தறிவிப்பு பரிசு எனும் பரிசை உருவாக்கி வழங்கி வருகிறது.[45]
 • கார்தி வோல்மெர் இயக்கிய எசுத்தோனிய நகைச்சுவை திரைப்படமாகிய எனது இலெனின்கள் 1997 இல் வெளியிடப்பட்டது; இதில் நதேழ்தா குரூப்சுகாயாவாக எசுத்தோனிய நடிகை எலனி வண்ணர் நடித்துள்ளார்.

காட்சிமேடை[தொகு]

மேலும் காண்க[தொகு]

நிகரறப் பெண்ணியம்

மார்க்சியப் பெண்ணியம்

கிளாரா ஜெட்கின்

அலெக்சாந்திரா கொலந்தாய்

உரோசா இலக்சம்பர்கு

மேற்கோள்கள்[தொகு]

 1. McNeal, 13.
 2. 2.0 2.1 Marcia Nell Boroughs Scott, Nadezhda Konstantinovna Krupskaya: A flower in the dark. [Dissertation] The University of Texas at Arlington, ProQuest Dissertations Publishing, 1996. 1383491.
 3. McNeal, 5–9.
 4. McNeal, 11–12.
 5. C. Bobrovskaija, Lenin and Krupskaja (New York City: Workers Library Publishers, Inc., 1940), 4.
 6. McNeal, 19.
 7. McNeal, 17–19.
 8. Mihail S. Skalkin, and Georgij S. Tsov’janov, “Nadezhda Konstantinovna Krupskaya," Prospects, Paris, Vol. 24, Issue 1 (1 January 1994): 49.
 9. "Tolstoy, Leo", in Encyclopædia Britannica. Retrieved 21 March 2008.
 10. McNeal, 23.
 11. Matietta Shaginyan, "Memories of Nadezhda Krupskaya", Soviet Literature, Moscow, Vol. 0, Issue 3 (1 January 1989): 156.
 12. Parkomenko, A.A. "Robert Eduardovich Klasson". The Free Dictionary. பார்க்கப்பட்ட நாள் 27 April 2021.
 13. 13.0 13.1 "Nadezhda Konstantinovna Krupskaya". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 26 July 2016.
 14. Barbara Evans Clements, Bolshevik Women, Cambridge University Press, 1997.
 15. Krupskaya (1970). Memories of Krupskaya. London: Panther. பக். 30. 
 16. Marcia Nell Boroughs Scott, Nadezhda Konstantinovna Krupskaya: A flower in the dark. [Dissertation]. The University of Texas at Arlington, ProQuest Dissertations Publishing, 1996. 1383491.
 17. Krupskaya. Reminiscences of Lenin. Moscow: Foreign Language Publishing House. 1959. p. 30
 18. H. Rappaport, Conspirator (London: Hutchinson, 2009), 200.
 19. Trotsky, Leon (1930). ""My Life", Chapter XII: The Party Congress and the Split". Marxists.org. Pathfinder Press. பார்க்கப்பட்ட நாள் 26 February 2016.
 20. 20.0 20.1 Sheila Fitzpatrick, The Commissariat of Enlightenment: Soviet Organization of Education and the Arts under Lunacharsky, October 1917–1921. Cambridge University Press, 2002.
 21. London, Eric. "Sylvia Ageloff and the assassination of Leon Trotsky". World Socialist Web Site (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-09.{{cite web}}: CS1 maint: url-status (link)
 22. Daniels, Robert Vincent (1969). The Conscience of the Revolution, Communist Opposition in Soviet Russia. New York: Simon & Schusterf. பக். 179. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-671-20387-8. 
 23. Daniels. The Conscience. பக். 245. 
 24. Nadezhda K. Krupskaya. The Lessons of October Source: The Errors of Trotskyism, Communist Party of Great Britain, May 1925.
 25. Leon Sedov. Red Book (Chap. 11) Source: Red Book, October 1936.
 26. 26.0 26.1 Khrushchev, Nikita (1971). Khrushchev Remembers. London: Sphere. பக். 39–41. 
 27. Orlov, Alexander (1954). A Secret History of Stalin's Crimes. London: Jarrolds. 
 28. Preface to the pamphlet "The New Law on Mother and Child", 1936.
 29. N. K. Krupskaya's. Reminiscences of Lenin, Foreign Language Publishing House, 1959.
 30. Toxic Politics: The Secret History of the Kremlin's Poison Laboratory―from the Special Cabinet to the Death of Litvinenko by Arkadi Vaksberg and Paul McGregor, ABC-Clio, ISBN 031338746X, pages 75-81
 31. Yuri Felshtinsky and Vladimir Pribylovsky, The Corporation. Russia and the KGB in the Age of President Putin, Encounter Books, ISBN 1-59403-246-7, February 25, 2009, page 445.
 32. Vaksberg, Arkadiĭ (2011) (in en). Toxic Politics: The Secret History of the Kremlin's Poison Laboratory--from the Special Cabinet to the Death of Litvinenko. ABC-CLIO. பக். 80. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-38746-3. https://books.google.com/books?id=BQdl1h-ubnAC. 
 33. Trotsky, Leon (1975–1979). Writings of Leon Trotsky. New York: Pathfinder Press. பக். 197. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0873483138. https://archive.org/details/leon-trotskii-collected-writings-1938-1939/leon-trotskii-collected-writings-1938-1939/page/n195/mode/2up. 
 34. Raymond, 53–55.
 35. McNeal, 173.
 36. Raymond, 171.
 37. N. K. Krupskaya, Part two : Krupskaia on libraries, ed Sylva Simsova (Hamden : Archon Books, 1968) 45–51.
 38. Raymond, 161.
 39. 39.0 39.1 Richardson, John (2000). "The Origin of Soviet Education for Librarianship: The Role of Nadezhda Konstantinovna Krupskaya (1869–1939), Lyubov' Borisovna Khavkina-Hamburger (1871–1949) and Genrietta K. Abele-Derman (1882–1954)". Journal of Education for Library and Information Science 41 (Spring 2000): 106–128 (115–117). doi:10.2307/40324059. பன்னாட்டுத் தர தொடர் எண்:0748-5786. http://polaris.gseis.ucla.edu/jrichardson/origin.pdf. பார்த்த நாள்: 2023-04-24. 
 40. Raymond, 172.
 41. J. Arch Getty, and Oleg V. Naumov (1999). The Road to Terror: Stalin and the Self-Destruction of the Bolsheviks, 1932-1939. New Haven: Yale U.P.. பக். 412–13. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-300-07772-6. 
 42. Medvedev, Roy (1976). Let History Judge, The Origins and Consequences of Stalinism. Nottingham: Spokesman. பக். 199. 
 43. Crace, John (27 January 2010). "The Soviet chocolate named after Lenin's widow". The Guardian (London). https://www.theguardian.com/lifeandstyle/2010/jan/27/soviet-chocolate-lenin-russia. 
 44. Schmadel, Lutz D. (2003). Dictionary of Minor Planet Names (5th ). New York: Springer Verlag. பக். 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-540-00238-3. 
 45. Winners of the Mohammad Reza Pahlavi Priza and the Nadezhda K. Krupskaya Prize, UNESCO

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nadezhda Krupskaya
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

நூல்கள்[தொகு]

 • Memories of Lenin. New York: International Publishers, 1930. —Reissued as Reminiscences of Lenin.
 • On Education: Selected Articles and Speeches. Moscow: Foreign Languages Publishing House, 1957.

மேலும் படிக்க[தொகு]

 • Clements, Barbara Evans, Bolshevik Women, Cambridge University Press, 1997.
 • Fitzpatrick, Sheila. The Commissariat of Enlightenment: Soviet Organization of Education and the Arts under Lunacharsky, October 1917–1921. Cambridge University Press, 2002.
 • McDermid, Jane and Anya Hilyar, "In Lenin's Shadow: Nadezhda Krupskaya and the Bolshevik Revolution," in Ian D. Thatcher (ed.), Reinterpreting Revolutionary Russia. New York: Palgrave Macmillan, 2006; pp. 148–165.
 • McNeal, Robert H., Bride of the Revolution: Krupskaya and Lenin. London: Gollancz, 1973.
 • Raymond, Boris The Contribution of N. K. Krupskaia to the Development of Soviet Russian Librarianship: 1917–1939. Ann Arbor, MI: University of Chicago, 1978.
 • Read, Christopher “Krupskaya, Proletkul't and the Origins of Soviet Cultural Policy,” International Journal of Cultural Policy, 12(3) 2006: 245-255.
 • Scott, Marcia Nell Boroughs, Nadezhda Konstantinovna Krupskaya: A Flower in the Dark. PhD dissertation. University of Texas at Arlington, 1996. Available from ProQuest Dissertations Publishing, 1383491.
 • Segal, Louis. “Nadezhda Konstantinovna Krupskaya” The Slavonic and East European Review, Vol. 18, No. 52 (July 1939): 202-204.
 • Sebestyen, Victor, Lenin the Dictator: An Intimate Portrait. New York: Pantheon, 2017.
 • Stites, Richard, The Women's Liberation Movement in Russia: Feminism, Nihilism, and Bolshevism, 1860-1930. Princeton, NJ: Princeton University Press, 1978.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நதியெஸ்தா_குரூப்ஸ்கயா&oldid=3862825" இலிருந்து மீள்விக்கப்பட்டது