கடத்தூர் (திருப்பூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கடத்தூர்
கடத்தூர்
இருப்பிடம்: கடத்தூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°37′06″N 77°24′00″E / 10.61843°N 77.399956°E / 10.61843; 77.399956ஆள்கூறுகள்: 10°37′06″N 77°24′00″E / 10.61843°N 77.399956°E / 10.61843; 77.399956
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் க. விஜயகார்த்திகேயன், இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை 3,056 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


325 மீட்டர்கள் (1,066 ft)

கடத்தூர் (ஆங்கிலம்:Kadathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தின் மடத்துக்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். கொங்கு நாட்டின் அமராவதி நதி பாயும் கரைவழி நாடு என்றழைக்கபடும் க வரிசை கிராமங்களில் கடத்தூர் ஒன்றாகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3056 மக்கள் (785 குடியிருப்புகள்) இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49.8% ஆண்கள், 50.1% பெண்கள் ஆவார்கள். [4]

அமைப்பு[தொகு]

உடுமலையிலிருந்து கனியூர் வழியாக பழனி மற்றும் தாராபுரம் செல்லும் சாலையில் சுமார் 20 கி.மி. தொலைவில் கடத்தூர் அமைந்துள்ளது. உடுமலையிலிருந்து நகர பேருந்துகள் இவ்வூருக்கு வந்து செல்கின்றன. பசுமையான வயல்கள், தென்னை மரங்கள், மருத மரங்கள் சூழ அமராவதி நதி கரையினில் அமைந்த கிராமம் இது

ஊர் சிறப்பு[தொகு]

கடத்தூரில் அமைந்துள்ள அர்சுனேஸ்வரர் கோயில் (அ) மருதவன ஈசர் கோயில்[5] இவ்வூரின் சிறப்பாகும். இங்குள்ள ஈசன் லிங்கத் திருமேனி மருத மர வேரினடியில் பல காலம் புதையுண்டு சுயம்புவாக வெளிப்பட்டது. அதனால் லிங்கத்திருமேனியில் மருத மரத்தின் வேர்கள் நரம்பு போல் தெரியும். கொங்கு மண்டலத்தின் மிக உயர்ந்த் சுயம்பு சிவலிங்கத்திருமேனியாகும்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 28, 2013.
  5. http://temple.dinamalar.com/New.php?id=452


"https://ta.wikipedia.org/w/index.php?title=கடத்தூர்_(திருப்பூர்)&oldid=1540781" இருந்து மீள்விக்கப்பட்டது