ஓமியோபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாமுவேல் ஹானிமன், ஓமியோபதியின் தந்தை எனக் கருதப்படுபவர்

ஓமியோபதி (homeopathy, இனமுறை மருத்துவம்) என்பது மருத்துவர் சாமுவேல் ஹானிமன் என்பவரால் 1796ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாற்றுமுறை மருத்துவம் ஆகும். ஓமியோபதி மருத்துவமுறை ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும் என்ற கோட்பாட்டின்படி இயங்கும் முறையாகும்.

நோயின் காரணம்[தொகு]

நோயிக்கான காரணம் அகமுரண்பாடே ஆகும். எனவே உயிராற்றலில் ஏற்படும் பாதிப்பே பின் நோயாக வெளியுறுப்புகளில் வெளிப்படுகிறது. இதனை, மருத்துவர் கென்ட், “உயிராற்றல் பாதிக்கப்பட்டுள்ளதன் வெளிப்பாடே, வெளியுறுப்புகளில் ஏற்படும் நோய் பாதிப்பு” என்று கூறுகிறார். மேலும், ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு குறிப்பிட்ட பொருளை ஏற்கும் திறன் உண்டு. அது நோய்க்கும் நலனுக்கும் சமமாகப் பொருந்தும் என்பதாகும் என்று கூறிகிறார்.

ஓமியோபதி மருந்துகள் :

ஓமியோபதியில் மருந்துகள் இயற்கையில் கிடைக்கும் பொருட்களில் இருந்து உருவாக்கப்படுகிறது. மருந்துகள் உருவாக்கப்படும் போது அதனுடைய இயற்கை மூலக்கூறுகள் பெரும்பாலும் குலுக்குதல், நீர்க்க செய்தல் போன்ற முறைகளினால் அசல் மருத்துவத்தன்மை வாய்ந்த மூலக்கூறுகள் நீக்கப்படுகின்றது.

ஓமியோபதி  மருந்துகள் பெரும்பாலும் கனிமங்கள்,தாவர பொருள்கள் மற்றும் பல்வேறு மூலங்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றது . அசல் மூலப்பொருள்  கரையக்கூடியவயாக இருக்கவேண்டும்,

அசல் மூலப்பொருளின் ஒரு பகுதி பத்து பகுதி நீருடனோ, ஆல்ககால் உடனோ கலக்கி குலுக்கப்படும். இது 1X கலவை எனப்படும். 1C  என்பது ஒருபகுதி அசல் மூலப்பொருள் 100 பகுதி நீருடனோ, ஆல்கஹால் உடனோ கலக்கி குலுக்கப்படும். 3C என்பது ஒருபகுதி அசல் மூலப்பொருள் 1,000,000 பகுதி நீருடனோ, ஆல்கஹால் உடனோ கலக்கப்பட்டுள்ளது எனப்பொருள்படும்.

இப்படி 30C  வரை கொண்டு செல்லப்படும் இந்த கலவையில் அசல் மூலக்கூறு 1,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000,000 மூலக்கூறு கொண்ட நீரில் கலந்திருக்கும் ,

இப்போது பெரும்பாலான ஓமியோபதி மருந்துகள்(கலவைகள்) 30C முதல் 200C  வரை கொடுக்கப்பட்டு வருகின்றது. இதில் அசல் மூலக்கூறை கண்டறிவதே சிரமம். கடைசியில் நீர் மட்டுமே மிஞ்சுகிறது, டாக்டர்.திரு.ஹானிமன் அவர்களின் நம்பிக்கைப்படி "நீரின் ஞாபகசக்தி" கோட்பாடு பயன்படுத்துகின்றது. இதனால் தான் பெரும்பாலான மருந்துகள் பக்க விளைவுகள் இல்லாமல் இருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமியோபதி&oldid=2742568" இருந்து மீள்விக்கப்பட்டது