சாமுவேல் ஹானிமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமுவேல் ஆனிமன்
Samuel Hahnemann
சாமுவேல் ஹானிமன்
பிறப்பு(1755-04-10)10 ஏப்ரல் 1755
மெய்சென், செருமனி
இறப்பு2 சூலை 1843(1843-07-02) (அகவை 88)
பாரிசு, பிரான்சு
தேசியம்செருமானியர்
துறைஓமியோபதி

கிறிஸ்டியன் பிரைட்ரிச் சாமுவேல் ஹானிமன் (Christian Friedrich Samuel Hahnemann, 10 ஏப்ரல் 1755[1] – 2 சூலை 1843) என்பவர் ஜெர்மனிய மருத்துவரும், ஓமியோபதி என்ற மாற்று மருத்துவ முறையைக் கண்டுபிடித்தவரும் ஆவார்.

இவர் 1755ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் நாள் ஜெர்மனியில் மிசென் நகரத்தில் பிறந்தார். இவரது தந்தை பெயர் கிறித்தியான் காட்ப்ரைடு ஹானிமன். இவரது தாய் பெயர் ஜோஹானா கிறிஸ்டியனா. இவர் லெப்ஸிக் பல்கலைக்கழகத்தில் ( leipzig university) அலோபதி மருத்துவம் படித்தார். பின்னர் எர்லேங்கன் பல்கலைக்கழகத்தில் ( erlangen university) மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். இவர் அலோபதி மருத்துவத்தின் மீதுள்ள வெறுப்பால் ஓமியோபதி மருத்துவத்தைக் கண்டறிந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Haehl, Richard (1922). Samuel Hahnemann his Life and Works. 1. பக். 9. "Hahnemann, was born on 10 April at approximately twelve o'clock midnight." 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமுவேல்_ஹானிமன்&oldid=2989924" இலிருந்து மீள்விக்கப்பட்டது