எத்திலீன்
![]() |
|
![]() |
|
![]() |
|
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
Ethene
எத்தீன் |
|
இனங்காட்டிகள் | |
74-85-1 | |
InChI
|
|
யேமல் -3D படிமங்கள் | Image |
SMILES
|
|
பண்புகள் | |
C2H4 | |
வாய்ப்பாட்டு எடை | 28.05 g/mol |
தோற்றம் | நிறமற்ற வளிமம் |
அடர்த்தி | 1.178 kg/m3 at 15 °C, வளிமம் [1] |
உருகுநிலை | |
கொதிநிலை | −103.7 °C (169.5 K, -154.7 °F) |
3.5 mg/100 ml (17 °C) | |
காடித்தன்மை எண் (pKa) | 44 |
கட்டமைப்பு | |
மூலக்கூறு வடிவம் | |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | சுழி |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
+52.47 kJ/mol |
நியம மோலார் எந்திரோப்பி S |
219.32 J·K−1·mol−1 |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | Extremely flammable (F+) |
தொடர்புடைய சேர்மங்கள் | |
தொடர்புடைய சேர்மங்கள் | எத்தீன்(Ethane) அசிட்டிலீன்(Acetylene) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். |
|
Infobox references | |
எத்திலீன் (Ethylene) (ஐயுபிஏசி(IUPAC) பெயர்: எத்தீன் (ethene) என்பது C2H4. என்னும் வேதியியல் வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதிப்பொருள். இதன் வேதிவாய்பாட்டை H2C=CH2 என்றும் எழுதுவது வழக்கம். இது நிறமற்ற தீபற்றும், சற்றே இனிய மணம் கொண்ட வளிமம். இதுவே ஆல்க்கீன் குழுவைச் சேர்ந்த கரிமவேதிப்பொருள்கள் யாவற்றினும் மிக எளிமையான சேர்மம். கரிம-கரிமப் பிணைப்பு இரட்டைப் பிணைப்பாக இருப்பதால் இதனை நிறைவுறா ஐதரோகார்பன் (unsaturated hydrocarbon) அல்லது ஓலிஃவின் (olefin) வகைகளில் ஒன்று என்பர். எத்திலீன், தொழிலகங்களில் பயன்படும் மிகவும் முக்கியமான வேதிப்பொருள்களில் ஒன்று. இது உயிரியலில் வளரூக்கியாகவும் (growth hormone) பயன்படுகின்றது [2] கரிம வேதிப்பொருள்களிலேயே எத்திலீன்தான் உலகளவில் கூட்டுதலாக படைக்கப்படும் பொருள்; 2005 ஆம் ஆண்டு உலகளாவிய படைப்பளவு 107 மில்லியன் டன்[3].
பிளாசிட்டிக் (நெகிழியப்) பைகள் (பரவலாக பாலித்தீன் பை என்று அறியப்படும் பாலியெத்திலீன் பை), நிறச்சாயம் (பெயின்ட்), தானுந்துகளில் பயன்படும்உறையான்கள் (antifreeze), கழுவப்பயன்படும் நீர்மங்கள் ஆகியவற்றில் எத்திலீன் பயன்படுகின்றது. எத்திலீன், எரியெண்ணெய் வேதியியல் தொழிலகங்களில்(பெட்ரோகெமிக்கல் தொழிலகங்களில்) பெரும்பாலும் உயர் வெப்பநிலையில் (~850 (°C)நீராவி கலந்து பிரிக்கும் வழி (இசுட்டீம் கிராக்கிங், Steam cracking) உருவாக்குகின்றார்கள்.
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]
- ↑ Record of Ethylene in the GESTIS Substance Database from the Institute for Occupational Safety and Health (IFA), accessed on 25 October 2007
- ↑ Wang K, Li H, Ecker J. "Ethylene biosynthesis and signaling networks". Plant Cell 14 Suppl: S131–51. பப்மெட் 12045274.
- ↑ “Production: Growth is the Norm” Chemical and Engineering News, July 1 0, 2006, p. 59.