உள்ளடக்கத்துக்குச் செல்

உத்தாலக ஆருணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆருணி (Aruni) (கிமு எட்டாம் நூற்றாண்டு), இந்து தொன்மவியலில் பிற்கால வேதகாலத்தில் வாழ்ந்த ரிஷியான இவரை உத்தாலகர் அல்லது உத்தாலக ஆருணி என்றும் அழைப்பர்.[1][2]

உத்தாலக ஆருணியின் மகன் சுவேதகேது அவரது சீடருமாகவும் அறியப்படுகிறார்.

வேத கால சமஸ்கிருத உபநிடதங்களில், குறிப்பாக பிரகதாரண்யக உபநிடதம் மற்றும் சாந்தோக்கிய உபநிடதங்களில் மகரிஷி ஆருணி பிரம்ம வித்தையை கற்பிக்கும் குருவாக குறிபிடப்படுகிறார்.[3]

இப்புகழ் பெற்ற வேதகால குரு ஆருணி, கௌதம புத்தருக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்.[1] ஆருணியின் புகழ் பெற்ற சில சீடர்களில் யாக்யவல்க்கியர் மற்றும் சுவேதகேது ஆவர்.[3] ஆருணியும், யாக்யவல்க்கியரும் இந்து சமய உபநிடத ஆசிரியர்களாக பெரும்பான்மையாக அறியப்படுகிறார்கள்.[4]

டெல் அவீவ் பல்கலைக்கழகப் பேராசிரியர் பென் – அமி ஸ்கார்ப்ஸ்டின், பதிவு செய்யப்பட்ட தத்துவ வரலாற்றில், உத்தாலக ஆருணியும் பண்டைய தத்துவ ஆசிரியர்களில் ஒருவராக அறியப்படுகிறார் எனக் குறிப்பிடுகிறார்.[1] உத்தாலக ஆருணி தன் மகனும், சீடனுமான சுவேதகேதுவிடம், எதை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாக கொள்ள முடியும் எனக் கேள்வி எழுப்பி, பிரம்மம் மற்றும் ஆத்மா தத்துவங்களை உபதேசம் செய்து அத்வைத தத்துவத்தை நிலைநாட்டுகிறார்.[5]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Ben-Ami Scharfstein (1998), A comparative history of world philosophy: from the Upanishads to Kant, Albany: State University of New York Press, pp. 9-11
  2. H. C. Raychaudhuri (1972), Political History of Ancient India, Calcutta: University of Calcutta, pp. 8-9, 21–25
  3. 3.0 3.1 Ariel Glucklich (2008). The Strides of Vishnu: Hindu Culture in Historical Perspective. Oxford University Press. pp. 65–66. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-971825-2.
  4. Klaus K. Klostermaier (2010). Survey of Hinduism, A: Third Edition. State University of New York Press. p. 158. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-8011-3.
  5. Ben-Ami Scharfstein (1998). A Comparative History of World Philosophy: From the Upanishads to Kant. State University of New York Press. pp. 56–61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7914-3683-7.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தாலக_ஆருணி&oldid=3802828" இலிருந்து மீள்விக்கப்பட்டது