உள்ளடக்கத்துக்குச் செல்

ஆருணேய உபநிடதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருணேய/அருணி
தேவநாகரிअारुणेय/अरुणी
சமக்கிருத ஒலிப்பெயர்ப்புĀruṇeya/Āruṇeyī
உபநிடத வகைசந்நியாசம்
தொடர்பான வேதம்சாம வேதம்
அத்தியாயங்கள்1
பாடல்களின் எண்ணிக்கை5

அருணேய உபநிடதம் (Aruneya Upanishad)( சமசுகிருதம் : आरुणेय उपनिशद्) என்பது இந்து மதத்தின் 108 உபநிடதங்களின் தொகுப்பிலுள்ள ஒரு சிறிய உபநிடதம் ஆகும். இது சமசுகிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. இது சாமவேதத்துடன் இணைக்கப்பட்ட 16 உபநிடதங்களில் ஒன்றாகும்.[1][2] இது சந்நியாச உபநிடதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.[3] அருணேயி உபநிடதம், அருணிகா உபநிடதம்,அருணி உபநிடதம் என்றும் அழைக்கப்படுகிறது.

இது ஒரு சந்நியாசியின் (இந்து துறவி), சன்னியாசம் அல்லது துறவு மேற்கொண்டரின் கலாச்சார நிகழ்வைக் கையாள்கிறது.[2] ஆன்மீகத்தின் மிக உயர்ந்த நிலையை அடைந்த துறவியான பரமகம்சரின் தன்மை மற்றும் வாழ்க்கை முறையையும் உபநிடதம் கோடிட்டுக் காட்டுகிறது.[4] இந்த உரையானது பிரஜாபதி கடவுளிடமிருந்து (சில வர்ணனைகளில் பிரம்மாவுடன் அடையாளம் காணப்பட்டது) உத்தாலக ஆருணி முனிவருக்கு உபதேசமாக கூறப்பட்டது. அவர் இந்த உபநிடதத்திற்கு தனது பெயரைக் கொடுத்தார்.[5]

இந்த உரை கிமு 1-ஆம் மில்லினியத்தில் இருந்து தேதியிடப்பட்டது. மேலும் பண்டைய இந்தியாவில் துறவு பாரம்பரியம் பற்றிய விவரங்களுக்கு குறிப்பிடத்தக்கது.[6] ஆன்மாவை (தன்னை) அறிந்து கொள்வதற்கான ஒரு வழிமுறையாக சமாதி பயிற்சியை உபநிடதம் பரிந்துரைக்கிறதென துறவு மற்றும் தர்மம் ஆகியவற்றில் கவனம் செலுத்திய இந்தியவியலாளரான பேட்ரிக் ஆலிவெல் கூறுகிறார்.[7] சந்நியாசத்தை மேற்கொள்வதற்கு அறிவு ஒருவரைத் தகுதிப்படுத்துகிறது என்று கூறும் ஆரம்பகால உரைகளில் ஒன்றாகவும் இது குறிப்பிடத்தக்கது. இது ஜபால உபநிடதம் போன்ற பிற பண்டைய உபநிடதங்களிலிருந்து வேறுபட்டது. இது உலகத்திலிருந்து பற்றின்மை ஒருவரைத் துறவுப் பயணத்தைத் தொடங்கத் தகுதிபெறுகிறது எனக் கூறுகிறது.[8] இந்த உரை, பண்டைய இந்தியாவின் குறிப்பிடத்தக்க கலாச்சார நிகழ்வின் தெளிவான பதிவாகும். இது நவீன யுகத்தில் இருந்து வருகிறது. மேலும் "அதை பெற்றெடுத்தது மனிதனிடம் உள்ளது. நம் அனைவரிடமும் உள்ளது" என்று ஜெர்மானிய இந்தியவியல் இந்தியவியலாளர் பால் டியூசென் கூறுகிறார்.[2]

கால வரிசை

[தொகு]

அருணி உபநிடதம் பழமையான துறவு தொடர்பான உபநிடதங்களில் ஒன்றாகும்.[6]உபநிடதங்களின் ஜெர்மானிய அறிஞரான இசுப்ரோக்காப் மற்றும் பேட்ரிக் ஆலிவெல்லின் கூற்றுப்படி, பொது சகாப்தத்தின் தொடக்கத்தில் கிமு 4 ஆம் நூற்றாண்டு வரை இந்த உரை முடிக்கப்பட்டிருக்கலாம்.[6]

சான்றுகள்

[தொகு]
  1. Prasoon 2008, ப. 82.
  2. 2.0 2.1 2.2 Deussen 1997, ப. 741.
  3. Farquhar, John Nicol (1920), An outline of the religious literature of India, H. Milford, Oxford university press, p. 364, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-2086-X
  4. Olivelle 1992, ப. 115-119.
  5. Swami Madhavananda. "Aruni Upanishad". Advaita Ashram. Archived from the original on 23 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 15 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. 6.0 6.1 6.2 Olivelle 1992, ப. 5, 8-9, 60.
  7. Olivelle 1992, ப. 116 with footnotes.
  8. Olivelle 1993, ப. 119.

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆருணேய_உபநிடதம்&oldid=3959555" இலிருந்து மீள்விக்கப்பட்டது