உள்ளடக்கத்துக்குச் செல்

தனுஜா ஆனந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தனுஜா ஆனந்தன்
Thanuja Ananthan
怒江在这里说
பிறப்புதனுஜா ஆனந்தன்
நவம்பர் 23, 1987 (1987-11-23) (அகவை 36)
மலேசியா கோலாலம்பூர், மலேசியா
படித்த கல்வி நிறுவனங்கள்இங்கிலாந்து நார்த்தம்பிரியா பல்கலைக்கழகம்
நியூகாசல்
இங்கிலாந்து
பணிவழக்குரைஞர்
வனவிலங்கு பாதுகாவலர்
உயரம்1.78 m (5 அடி 10 அங்)
எடை52 kg (115 lb)
அழகுப் போட்டி வாகையாளர்
பட்டம்மலேசிய அழகி 2009
மலேசிய உலக அழகி 2009
தலைமுடி வண்ணம்கரு நீலம்
விழிமணி வண்ணம்கரு நீலம்
முக்கிய
போட்டி(கள்)
உலக அழகி 2009
20வது இடம்
Miss Universe 2009

தனுஜா ஆனந்தன், (Thanuja Ananthan) 2009ஆம் ஆண்டின் மலேசிய அழகி.[1] 2009இல், உலகின் 112 நாடுகளின் உலக அழகிகள் பங்கு பெற்ற உலக அழகிப் போட்டியில், தனுஜா ஆனந்தன் 20வது இடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டவர்.[2] உலக அளவில் பல வனவிலங்கு காப்பங்களின் நல்வழி, புனர்வாழ்வு ஆர்வலராகச் சேவை செய்து வருகின்றார்.[3]

இவர் ஒரு வழக்குரைஞர். தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர். பேத்தா எனும் மலேசிய விலங்கு நல்வாழ்வு மேம்பாட்டு வாரியத்தின் தூதுவர்.[4][5] மலேசியப் புற்று நோய்ச் சங்கத்தின் ஆயுள்காலப் பணியாளர்.[6] இவருக்கு வயது 25.

வரலாறு

[தொகு]

2008ஆம் ஆண்டு மலேசிய அழகிப் போட்டியில் தனுஜா தோல்வி அடைந்தார். இறுதிச் சுற்றில் 19 பேர் பங்கெடுத்துக் கொண்டனர். அதில் சூ வின்சி எனும் சீனப் பெண் வெற்றி அடைந்தார். இருப்பினும், பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும் எனும் பிடிவாதமான கொள்கையும், வெற்றி பெற முடியும் எனும் அசைக்க முடியாத நம்பிக்கையும், இவருடைய திடமான கொள்கைப்பாடாக அமைந்தன.[7]

மறுபடியும் 2009ஆம் ஆண்டில் பங்கெடுத்தார். அதற்கு முன், பல மாதங்களுக்கு தீவிரமான ஒப்பனைப் பயிற்சிகளை மேற்கொண்டார். அத்துடன், ஓய்வற்ற ஒத்திகைகளும் தொடர்ந்தன. அவை எல்லாம் ஒன்றாக இணைந்து, அவருக்கு அழகுராணி எனும் பரிசை வழங்கி ஒரு முத்தாய்ப்பு வைத்தன.

முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதற்கு, தனுஜா எனும் இந்த மலேசியத் தமிழ்ப்பெண் நல்ல ஓர் எடுத்துக்காட்டு.

இறுதிச் சுற்றுக்கு 18 பெண்கள்

[தொகு]

2009ஆம் ஆண்டு மலேசிய அழகிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு 18 பெண்கள் தேர்வாயினர். பொதுவாக, உலக அழகிப் போட்டிகளில், இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெறுபவர்களிடம் கடைசியாக ஒரு கேள்வி கேட்கப்படும்.

அந்தக் கேள்விக்கு அவர் அளிக்கும் விவேகமான, சாதுர்யமான, புத்திசாலித்தனமான பதிலில் இருந்துதான் அவர் மலேசிய அழகியாக அல்லது உலக அழகியாகத் தேர்வு செய்யப்படுவார். அந்த வகையில் தனுஜாவிடம், ‘உங்களுக்கு ஓர் அவதூறு ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில்,

அடுத்த நிமிடம் அவருக்கு மலேசிய அழகியின் கிரீடம் சூட்டப்பட்டது. ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த வாக்குகளில் அவரைத் தேர்வு செய்தனர்.

112 நாடுகளின் அழகிகள்

[தொகு]

அதே 2009ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி, தென் ஆப்பிரிக்கா, ஜொகானஸ்பர்க் மாநகரில் உலக அழகிப் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் தனுஜா, மலேசியாவைப் பிரதிநிதித்தார். இதில் 112 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். உலகம் முழுமையும் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை 600 மில்லியன் மக்கள் பார்த்தனர். அதில் அவருக்கு 20வது இடம் கிடைத்தது.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, Miss World Top Model எனும் அழகுநய அழகிப் போட்டி நவம்பர் 28ஆம் தேதி நடைபெற்றது.[9] அதில் தனுஜா எட்டாவது இடத்தைப் பெற்றார்.[10]

பொதுச் சேவைகள்

[தொகு]

சிலாங்கூர் மாநில விலங்கு வதைத் தடுப்புக் கழகத்தின் பரப்புரையாளராகச் சேவை செய்து வரும் தனுஜா, தனக்கு ஓய்வு கிடைக்கும் போது எல்லாம் அந்தக் கழகத்தில் பராமரிக்கப் படும் நாய்கள், பூனைகள், செல்லப் பிராணிகளுடன் நேரத்தைக் கழிப்பதை ஒரு பொழுது போக்காகக் கொண்டுள்ளார்.[11]

தவிர, PETA எனும் மலேசிய விலங்கு நல்வாழ்வு மேம்பாட்டு வாரியத்தின் தூதுவராகச் சேவை செய்கின்றார். கோலாலம்பூரில் நடைபெறும் பல்வேறு விலங்கு நல அமைப்புகளின் ஒன்றுகூடும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்கிறார்.[12][13][14]

நாளிதழ்களின் பாராட்டுகள்

[தொகு]

தனுஜா ஆனந்தன், மலேசியாவில் உள்ள ஆதரவற்றச் சிறார்கள் இல்லங்களுக்குச் செல்வதை ஒரு வழக்கமாகவும், ஒரு வாடிக்கையாகவும் பேணிக் காத்து வருகின்றார். அங்குள்ள சிறுவர்களுக்கு இலவசமாக பரிசு பொருள்களையும், உணவு வகைகளையும் வழங்கி பெருமைப் படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறார்[15]

இவர் ஒரு வழக்குரைஞர் என்பதால், மலேசியாவின் பிரபல பெரிய நிறுவனங்கள் இவரை அழைத்து தங்களின் ஊழியர்களுக்கு விழிப்புரைகளை ஆற்றச் சொல்கின்றன. அதன் மூலம் அவருக்கு நிதி அன்பளிப்புகள் கிடைக்கின்றன.

அந்த நிதிகளை இவர் அப்படியே அனாதை இல்லங்களுக்குத் திருப்பிவிடுகிறார். இவருடைய இந்த இலட்சியக் கொள்கைகளைப் பற்றி மலேசியாவில் உள்ள நாளிதழ்கள் நிறைய செய்திகளை வெளியிட்டு வருகின்றன. [16][17]

மலேசியப் புற்று நோய்ச் சங்கம்

[தொகு]

மலேசியப் புற்று நோய்ச் சங்கத்திலும் தனுஜா ஆழ்ந்த ஈடுபாடுகளைக் காட்டி வருகின்றார். அந்தச் சங்கத்திற்கு தன்னால் இயன்ற பொருளுதவிகளையும் செய்து வருகிறார்.[18] Aug 28, 2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 28ஆம் தேதி, மலேசியப் புற்று நோய்ச் சங்கத்திற்கு நிதியுதவி திரட்டும் வகையில், மலேசியாவின் ஆக உயரமான கினபாலு மலையில் ஏறி சாதனை படைத்தார். அதன் மூலம் ரிங்கிட் 50 ஆயிரம் கிடைத்தது.

அவருக்குத் துணையாக அவருடைய தங்கை அனுஜாவும் மலை ஏறினார். தனுஜாவும் அனுஜாவும் ஐந்து நிமிட இடைவெளியில் பிறந்த அக்காள் தங்கைகள். 2012 ஜூலை மாதம் ஓர் இசைக் காணொளியை வெளியிட்டதன் மூலம், மலேசியப் புற்று நோய்ச் சங்கத்திற்கு ரிங்கிட் 5 இலட்சம் வசூல் செய்து தரப்பட்டது.[19][20][21]

சர்ச்சை

[தொகு]

2012 செப்டம்பர் மாதத்தில் Dermalogica எனும் சருமப் பாதுகாப்பு நிறுவனம் ஒரு விளம்பரத்தில் நடிக்க இவருக்கு அழைப்பு விடுத்து இருந்தது. அதில் தன் சருமத்தின் அழகைக் காட்ட சற்றே கூடுதலாகக் கவர்ச்சி காட்டி இருந்தார் என்று சொல்லப்படுகிறது.[22] அந்த விளம்பரப் படம் ஒரு தரப்பினரின் குறைகூறல்களுக்கும் உள்ளாகியது.

தான் கவர்ச்சியைக் காட்டவில்லை; கவர்ச்சி என்றால் என்ன என்று சொல்ல வந்ததாக தனுஜா கூறினார். இதில் ஒரு தரப்பினர், தனுஜா அப்படியே நடித்து இருந்தாலும் அதில் கிடைத்த ரிங்கிட் மூன்று இலட்சம் பணத்தையும், அனாதை ஆசிரமங்களுக்கு அப்படியே தானமாகக் கொடுத்துவிட்டாரே என்று வாதாடினர். மலேசியாவில் உள்ள சில அனாதை ஆசிரமங்களின் ஊழியர்களும், குழந்தைகளும் தனுஜாவுக்கு ஆதரவாக எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

மலேசிய விழாக்கள்

[தொகு]

தனுஜாவின் சமூகக் கொள்கைகள், மலேசியர்கள் பலருக்குப் பிடித்து இருப்பதால், அந்தச் சர்ச்சை பெரிதாக்கப்படவில்லை.[23] [24] மலேசிய ஊடகங்களும் அந்தச் சர்ச்சையைச் சாந்தப்படுத்தி அமைதியாக்கிவிட்டன. அதன் பின்னர் விளம்பரப் படங்களில் நடிப்பதைத் தனுஜா நிறுத்திக் கொண்டார். பகலில் நீதிமன்றத்திற்குச் சட்ட நூல்களுடன் போகும் இவர், மாலை வேலைகளில் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இன்றும், எல்லா வகையான இந்திய, சீன, மலாய் பாரம்பரிய மலேசிய விழாக்களிலும், சமய நிகழ்ச்சிகளிலும் கலந்து சிறப்பு செய்கின்றார். தீபாவளி, நோன்புப் பெருநாள், சீனப் புத்தாண்டு, கிறிஸ்மஸ் போன்ற பண்டிகை நிகழ்ச்சிகளில் ஏழை எளியவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றார்.[25]

2009 உலக அழகிப் போட்டி

[தொகு]

- Sin Ting Lau

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Thanuja Ananthan's second shot at the Miss World/Malaysia title pays off". Archived from the original on 2010-01-10. பார்க்கப்பட்ட நாள் 2022-01-10.
  2. Miss World Malaysia off to conquer the international Miss World pageant in Johannesburg, South Africa.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Beauty queen Thanuja Ananthan, an animal lover herself, will be making a guest appearance at the show.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Miss Malaysia World 2009 Thanuja Ananthan was given the opportunity to pose for an ad campaign by the People for the Ethical Treatment of Animals (Peta) recently". Archived from the original on 2010-03-07. பார்க்கப்பட்ட நாள் 2022-01-10.
  5. Draft to curb animal abuse.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. Help cancer patients by joining Founder’s Run.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. It was reported a small kid running around his table in a food court screaming Miss Malaysia!Miss Malaysia!Miss Malaysia! only to be stopped by his parent.
  8. She is also very confident that there will never be any scandal about her that will emerge in the future.
  9. "The Miss World History". Archived from the original on 2014-03-30. பார்க்கப்பட்ட நாள் 2013-03-06.
  10. The Miss World Top Model took place at Turbine Hall, Johannesburg, South Africa on November 28, 2009. The event held along with the Miss World Dress Designer Final.
  11. Animal welfare champion Thanuja Ananthan emceed the event and took one of the shelter’s dog for the charity walk.[தொடர்பிழந்த இணைப்பு]
  12. Miss Malaysia/World Thanuja Ananthan, who is also PETA Malaysia’s ambassador.[தொடர்பிழந்த இணைப்பு]
  13. Miss World Malaysia 2009 Thanuja Ananthan, the Selangor SPCA's celebrity ambassador, made a grand appearance as Venus.[தொடர்பிழந்த இணைப்பு]
  14. Miss Malaysia 2009 Thanuja Ananthan is into saving animals, representing Peta Asia – showing her inner and outer beauty as a person indeed.[தொடர்பிழந்த இணைப்பு]
  15. Hotel treats Rumah Nur Salam children.[தொடர்பிழந்த இணைப்பு]
  16. "Five charity organisations to benefit from KL marathon". Archived from the original on 2010-05-04. பார்க்கப்பட்ட நாள் 2021-09-21.
  17. RM30,000 boost for quake victims.[தொடர்பிழந்த இணைப்பு]
  18. "Beauty queen Thanuja Ananthan reached her fundraising target when she made it to the Mount Kinabalu summit yesterday". Archived from the original on 2013-06-28. பார்க்கப்பட்ட நாள் 2013-03-06.
  19. National Cancer Council (Makna) has launched a music video for cancer awareness in its efforts to reach out and empower those affected by cancer.[தொடர்பிழந்த இணைப்பு]
  20. Jarrod and Rawlins (J&R) officially announced its charity campaign ‘Dine for Charity’ with the campaign’s beneficiary and charity partner, the National Cancer Society Malaysia.[தொடர்பிழந்த இணைப்பு]
  21. National Cancer Society Malaysia and Breast Cancer Welfare Association’s annual fundraising event, Jamuan Teh Malaysia 2010[தொடர்பிழந்த இணைப்பு]
  22. THERE is nothing dirty about Dermalogica’s call to “Get Naked” – in fact, it has everything to do with cleanliness.[தொடர்பிழந்த இணைப்பு]
  23. Celebrities say Veet product makes their skin smooth.[தொடர்பிழந்த இணைப்பு]
  24. "Miss Malaysia World 2009 Thanuja Ananthan was at the launch of Scholl's new products". Archived from the original on 2010-07-19. பார்க்கப்பட்ட நாள் 2022-01-10.
  25. "Deepavali in 1Malaysia spirit". Archived from the original on 2010-01-10. பார்க்கப்பட்ட நாள் 2022-01-10.

காணொளிகள் தொகுப்பு

[தொகு]
  1. யூடியூபில் The Crowning Of Miss World Malaysia 2009
  2. யூடியூபில் Miss World Malaysia 2009 Grand Finale
  3. யூடியூபில் Miss World-Malaysia 2009 : Meet the Finalists
  4. யூடியூபில் 55 Malaysia's Hottest Female Artistes (2013)
  5. யூடியூபில் CUTECARRY.TV thanuja Ananthan Von Jolly MIFW 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனுஜா_ஆனந்தன்&oldid=3557546" இலிருந்து மீள்விக்கப்பட்டது