சிராத்து

ஆள்கூறுகள்: 25°39′N 81°19′E / 25.65°N 81.32°E / 25.65; 81.32
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிராத்து
பேரூராட்சி
சிராத்து is located in உத்தரப் பிரதேசம்
சிராத்து
சிராத்து
இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் சிரத்து பேரூராட்சியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°39′N 81°19′E / 25.65°N 81.32°E / 25.65; 81.32
நாடு India
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்கௌசாம்பி
ஏற்றம்85 m (279 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்19,208
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்212217
வாகனப் பதிவுUP-73

சிராத்து (Sirathu), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பூர்வாஞ்சல் பிரதேசத்தில் உள்ள கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு தெற்கே 150.5 கிலோ மீட்டர் தொலைவிலும், கான்பூரிலிருந்து 140 கிலோ மீட்டர் தொலைவிலும், பிரயாகையிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

போக்குவரத்து[தொகு]

சிராத்து தொடருந்து நிலையம் பிரயாகை-கான்பூர் இருப்புப் பாதை வழித்தடத்தில் உள்ளது. பிரயாக்ராஜ் மற்றும் கான்பூருக்கு சிராத்து நகரம் தொடருந்துகள் மற்றும் பேருந்துகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 12.1 எக்டேர் பரப்பளவும், 2486 வீடுகளும் கொண்ட சிராத்து பேரூராட்சியின் மக்கள் தொகை 14423 ஆகும். அதில் ஆண்கள் 7546 மற்றும் பெண்கள் 6877 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 941 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1982 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 72.98% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 2729 மற்றும் 0 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 11,809, இசுலாமியர் 2,526 மற்றும் பிறர் 88 ஆகவுள்ளனர்.[1]

புகழ் பெற்றவர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிராத்து&oldid=3781794" இலிருந்து மீள்விக்கப்பட்டது