உள்ளடக்கத்துக்குச் செல்

மெதிலமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெதிலமீன்
Skeletal formula of methylamine with all explicit hydrogens added
Ball and stick model of methylamine
Ball and stick model of methylamine
Spacefill model of methylamine
Spacefill model of methylamine
பெயர்கள்
முன்னுரிமையுள்ள ஐயுபிஏசி பெயர்
மெதனமீன்
வேறு பெயர்கள்
  • அமினோமீத்தேன்
  • மோனோஎதிலமீன்
Identifiers
CAS Number
3D model (JSmol)
3DMet B00060 பரணிடப்பட்டது 2019-02-25 at the வந்தவழி இயந்திரம்
Abbreviations MMA
Beilstein Reference
741851
ChEBI
ChEMBL
ChemSpider
DrugBank
ECHA InfoCard 100.000.746
EC Number 200-820-0
Gmelin Reference
145
KEGG
MeSH methylamine
PubChem <abbr title="<nowiki>Compound ID</nowiki>">CID
RTECS number PF6300000
UN number 1061
Properties
Chemical formula
CH5N
மோலார் நிறை 31.06 கி·மோல்−1
தோற்றம் நிறமற்ற வாயு
மணம் மீன் நாற்றம், அம்மோனியா மணம்
அடர்த்தி 656.2 கிகி மீ−3 (at 25 °செல்சியசு)
உருகுநிலை −93.10 °செல்சியசு; −135.58 °பாரன்ஹீட்; 180.05 கெல்வின்
கொதிநிலை −6.6 to −6.0 °செ; 20.0 to 21.1 °பாரன்ஹீட்; 266.5 to 267.1 கெல்வின்
Solubility in water
1.08 கிகி லி−1 (at 20 °செல்சியசு)
log P −0.472
Vapor pressure 186.10 கிபாசுகல் (at 20 °C)
Henry's law
constant (kH)
1.4 mmol Pa−1 kg−1
Basicity (pKb) 3.36
Magnetic susceptibility (χ)
-27.0·10−6 செமீ3/மோல்
பாகுநிலை 230 μ பாசுகல் வினாடி (at 0 °C)
Dipole moment
1.31 D
Thermochemistry
Std enthalpy of
formation (ΔfHo298)
−23.5 கிலோயூல்மோல்−1
Hazards
Safety data sheet emdchemicals.com பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
GHS pictograms The flame pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word DANGER
GHS hazard statements
H220, H315, H318, H332, H335
GHS precautionary statements
P210, P261, P280, P305+351+338, P410+403
NFPA 704
NFPA 704 four-colored diamondFlammability code 4: Will rapidly or completely vaporize at normal atmospheric pressure and temperature, or is readily dispersed in air and will burn readily. Flash point below 23 °C (73 °F). E.g., propaneHealth code 3: Short exposure could cause serious temporary or residual injury. E.g., chlorine gasReactivity code 0: Normally stable, even under fire exposure conditions, and is not reactive with water. E.g., liquid nitrogenSpecial hazards (white): no code
4
3
0
Flash point −10 °C; 14 °F; 263 K (liquid, gas is extremely flammable)
Autoignition
temperature
430 °செல்சியசு (806 °F; 703 K)
Explosive limits 4.9–20.7%
Lethal dose or concentration (LD, LC):
LD50 (median dose)
100 mg kg−1 (வாய்வழி, எலி)
LC50 (median concentration)
1860 ppm (mouse, 2 hr)
US health exposure limits (NIOSH):
PEL (Permissible)
TWA 10 ppm (12 மிகி/மீ3)
REL (Recommended)
TWA 10 ppm (12 மிகி/மீ3)
IDLH (Immediate danger)
100 ppm
Related compounds
Related alkanamines
எதிலமீன், டைமெதிலமீன், டிரைமெதிலமீன்
Related compounds
ammonia
Except where otherwise noted, data are given for materials in their standard state (at 25 °C [77 °F], 100 kPa).
☒verify (what is ☑Y☒N ?)
Infobox references

மெதிலமீன் (Methylamine) என்பது CH3NH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கரிமச் சேர்மம் ஆகும். இந்த நிறமற்ற வாயுவானது அம்மோனியாவின் வழிப்பொருளாகும். அம்மோனியாவில் உள்ள ஒரு ஐதரசன் அணுவானது ஒரு மெதில் தொகுதியால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு இச்சேர்மம் பெறப்படுகிறது. இதுவே எளிய ஓரிணைய அமீன் ஆகும். இச்சேர்மம் மெத்தனால், எத்தனால், டெட்ராஐதரோஃப்யூரான் அல்லது நீர் இவற்றில் கரைக்கப்பட்டு கரைசல்களாகவோ அல்லது உலோக கொள்கலன்களில் அதிக அழுத்தத்தில் அடைத்து வைக்கப்பட்ட நீரற்ற வாயுக்களாகவோ விற்பனை செய்யப்படுகிறது. தொழில்முறையில் மெதிலமீனானது அழுத்தப்பட்ட தொட்டிலாரிகள் அல்லது சரக்குந்துகளில் அடைக்கப்பட்டு ஓரிடத்திலிருந்து மற்றொர் இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த வாயு மீனின் நாற்றத்தைக் கொண்டுள்ளது. மெதிலமீனானது வணிகரீதியாக கிடைக்கும் பல சேர்மங்களின் தொகுப்பு முறைக்கு ஒரு தொடக்க மற்றும் அடிப்படை அலகாகப் பயன்படுகிறது.

தொழிலக தயாரிப்பு

[தொகு]

மெதிலமீனானது வணிகரீதியில் அலுமினோசிலிகேட்டு முன்னிலையில் அம்மோனியா மற்றும் மெத்தனால் வினைபுரிவதால் தயாரிக்கப்படுகிறது. டைமெதிலமீன் மற்றும் டிரைமெதிலமீன் ஆகியவை உபவிளைபொருட்களாக கிடைக்கின்றன; வினைவேகவியலும் வினைபடுபொருட்களின் விகிதங்களும் விளைபொருட்களின் விகிதாச்சாரத்தை தீர்மானிக்கின்றன. இந்த வினையில் மிகவும் சாத்தியமான விளைபொருளாக டிரைமெதிலமீன்உள்ளது.[1]

CH3OH + NH3 → CH3NH2 + H2O

இந்த முறையைப் பயன்படுத்தி 2005 ஆம் ஆண்டில், உத்தேசிக்கப்பட்ட 1,15,000 டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது.

ஆய்வகத் தயாரிப்பு முறைகள்

[தொகு]

1849 ஆம் ஆண்டு சார்லசு அடால்ப் உர்ட்சு என்பவரால் முதன்முறையாக மெதிலமீன் பின்வரும் முறையில் தயாரிக்கப்பட்டது. இம்முறையில், மெதில்ஐசோசயனேட்டு மற்றும் அதனையொத்த சேர்மங்களின் நீராற்பகுப்பினை அடிப்படையாகக் கொண்டது.[2][3] இம்முறைக்கான உதாரணமானது மெதிலமீனை அசிட்டமைடு மற்றும் புரோமின் வாயு ஆகியவற்றைக்கொண்டு ஹாப்மேன் மறுஒழுங்கு செய்யும் வினை வழிமுறையை உள்ளடக்கியதாக உள்ளது.[4][5]

ஆய்வகத்தில், மெதிலமீன்ஐதரோகுளோரைடு வேறு பல முறைகளின் மூலமாகவும் எளிதில் தயாரிக்கப்படுகிறது. அவற்றில் ஒரு முறையானது பார்மால்டிஹைடை அம்மோனியம் குளோரைடுடன் வினைப்படுத்துவதாகும்.[6]

NH4Cl + H2CO → [CH2=NH2]Cl + H2O
[CH2=NH2]Cl + H2CO + H2O → [CH3NH3]Cl + HCO2H

இவ்வாறு கிடைக்கும் நிறமற்ற ஐதரோகுளோரைடு உப்பானது சோடியம் ஐதராக்சைடைப் போன்ற ஒரு வலிமையான காரத்தினைச் சேர்க்கும் போது அமீனாக மாற்றப்படுகிறது:

[CH3NH3]Cl + NaOH → CH3NH2 + NaCl + H2O

மற்றொரு முறையானது நைட்ரோமீத்தேனை துத்தநாகம் மற்றும் ஐதரோகுளோரிக் அமிலம் ஆகியவற்றின் மூலம் ஒடுக்க வினைக்கு உட்படுத்தும் செயல்முறையைப் பயன்படுத்திக் கொள்கிறது.[7]

மெதிலமீனைத் தயாரிப்பதற்கான மற்றுமொரு முறையானது கிளைசீனை ஒரு நீரில் காணப்படும் ஒரு வலிமையான காரத்துடன் வினைப்படுத்தி தன்னிச்சையான கார்பாக்சில் நீக்க வினையாகும்.

வினைபுரியும் திறம் மற்றும் பயன்பாடுகள்

[தொகு]

மெதிலமீன் ஒரு சிறந்த கருக்கவர் காரணியாகவும், தடையேதுமில்லாத அமீனாகவும் இருக்கிறது.[8] ஒரு அமீனாக இச்சேர்மம் ஒரு வலிமை குறைந்த காரமாக கருதப்படுகிறது. கரிம வேதியியலில் இச்சேர்மத்தின் பயன் எங்கும் பரவியிருக்கிறதாக உள்ளது. சில எளிய வினைக்காரணிகளை உள்ளடக்கிய சில எளிய வினைகள்: பாஸ்ஜீன் வாயுவுடன் வினைபுரிந்து மெதில் ஐசோசயேனட்டைத் தரும் வினை, கார்பன் டை சல்பைடு மற்றும் சோடியம் ஐதராக்சைடுடன் சேர்ந்து சோடியம் மெதில்டைதயோகார்பமேட்டு, குளோரோபார்ம் மற்றும் காரத்துடன் சேர்ந்து மெதில் ஐசோசயனைடு எதிலீன் ஆக்சைடுடன் சேர்ந்து மெதில்எதனாலமீன்கள் தருவது ஆகியவை. திரவ மெதிலமீனானது திரவ அம்மோனியாவை ஒத்த கரைப்பான் பண்புகளைப் பெற்றுள்ளது.[9]

மருந்தியல் பொருட்களான எஃபெட்ரைன் மற்றும் தியோஃபிலின், பூச்சிக்கொல்லிகளான கார்போஃப்யூரான், கார்பரைல் மற்றும் மெத்தம் சோடியம், கரைப்பான்களான N-மெதில்-2-பிரோலிடோன், N-மெதில்பார்மமைடு ஆகியவை மெதிலமீனிலிருந்து பெறப்படும் சில குறிப்பிடத்தக்க வணிகரீதியான தொகுப்புப் பொருட்களாகும். பரப்பியங்கிகள் மற்றும் ஒளிப்பட மேம்படுத்திகளின் தயாரிப்பிற்கு மெதிலமீனானது கட்டமைக்கும் அலகாகத் தேவைப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Corbin D.R.; Schwarz S.; Sonnichsen G.C. (1997). "Methylamines synthesis: A review". Catalysis Today 37 (24): 71–102. doi:10.1016/S0920-5861(97)00003-5. 
  2. 2.0 2.1 Karsten Eller, Erhard Henkes, Roland Rossbacher, Hartmut Höke "Amines, Aliphatic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2005. எஆசு:10.1002/14356007.a02_001
  3. Charles-Adolphe Wurtz (1849) "Sur une série d'alcalis organiques homologues avec l'ammoniaque" (On a series of homologous organic alkalis containing ammonia), Comptes rendus … , 28 : 223-226. Note: Wurtz's empirical formula for methylamine is incorrect because chemists in that era used an incorrect atomic mass for carbon (6 instead of 12).
  4. Mann, F. G.; Saunders, B. C. (1960). Practical Organic Chemistry, 4thEd. London: Longman. p. 128. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780582444072.
  5. Cohen, Julius (1900). Practical Organic Chemistry 2nd Ed. London: Macmillan and Co., Limited. p. 72.
  6. Marvel, C. S.; Jenkins, R. L. (1941). "Methylamine Hydrochloride". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv1p0347. ; Collective Volume, vol. 1, p. 347
  7. Gatterman, Ludwig; Wieland, Heinrich (1937). Laboratory Methods of Organic Chemistry. Edinburgh, UK: R & R Clark, Limited. pp. 157–158. {{cite book}}: Unknown parameter |last-author-amp= ignored (help)
  8. Peter Scott (ed.). Linker Strategies in Solid-Phase Organic Synthesis. p. 80. ...an unhindered amine such as methylamine
  9. Debacker, Marc G.; Mkadmi, El Bachir; Sauvage, François X.; Lelieur, Jean-Pierre; Wagner, Michael J.; Concepcion, Rosario; Kim, Jineun; McMills, Lauren E. H. et al. (1996). "The Lithium−Sodium−Methylamine System: Does a Low-Melting Sodide Become a Liquid Metal?". Journal of the American Chemical Society 118 (8): 1997. doi:10.1021/ja952634p. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெதிலமீன்&oldid=3946946" இலிருந்து மீள்விக்கப்பட்டது