திருவாரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 10°46′N 79°39′E / 10.77°N 79.65°E / 10.77; 79.65
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 9: வரிசை 9:
|மாவட்டம் = [[திருவாரூர்]]
|மாவட்டம் = [[திருவாரூர்]]
|வட்டம் = [[திருவாரூர் வட்டம்]]
|வட்டம் = [[திருவாரூர் வட்டம்]]
|பகுதி = சோழ நாடு (சோழ தேசம்)
|பகுதி = [[சோழ நாடு]]
|தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்றதலைவர்
|தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்றதலைவர்
|தலைவர் பெயர் =
|தலைவர் பெயர் =

07:14, 23 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்

திருவாரூர்
—  முதல் நிலை நகராட்சி  —
திருவாரூர்
இருப்பிடம்: திருவாரூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°46′N 79°39′E / 10.77°N 79.65°E / 10.77; 79.65
நாடு  இந்தியா
பகுதி சோழ நாடு
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
வட்டம் திருவாரூர் வட்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நகர்மன்றதலைவர்
சட்டமன்றத் தொகுதி திருவாரூர்
சட்டமன்ற உறுப்பினர்

கே. பூண்டி கலைவாணன் (திமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

58,301 (2011)

5,423/km2 (14,046/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 10.75 சதுர கிலோமீட்டர்கள் (4.15 sq mi)
குறியீடுகள்


திருவாரூர் (ஆங்கிலம்:Tiruvarur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர் வட்டம் மற்றும் திருவாரூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இவ்வூரில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் தேர் ஆசியாவின் மிக பெரிய தேர் ஆகும். இவ்வூரில் தான் மனு நீதி சோழன் தன் மகனை தேரில் இட்டு கொன்று பசு விற்கு நீதி வழங்கினார்.

வான்மீகிநாதர் கோயில் கோபுரம்
திருவாரூர் கோயில் தெப்பக்குளம்

பெயர் காரணம்

திருவாரூர் = திரு+ஆரூர். திருவாரூரில் கோவில் கொண்டுள்ள தியாகராஜர் மேலும் 6 ஊர்களில் கோவில் கொண்டுள்ளார் ( சப்தவிடங்க தலங்கள் ) எனவே முதலில் ஆரூர் (தேவார பாடல்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது) என்றும் பின்னர் கோவில் ஊர் என்பதால் திரு சேர்க்கப்பட்டு திருஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது.

திருவாரூர் என்ற பெயருக்கு வழங்கப்படும் மற்றும் ஒரு காரணம், திருமகள் திருமாலை அடையவேண்டி திருவாரூரில் உள்ள வன்மீகநாதரை வழிபட்டு, வரம் பெற்று திருமாலை மணந்து கொண்டதுடன் தன் பெயரிலேயே இவ்வூர் வழங்கப்படவேண்டும் என்று கேட்டதால் கமலாலயம் (அ) திருவாரூர் ( திரு - லட்சுமி ,ஆர் - பூமாதேவி பூஜித்தது ) என பெயர் பெற்றது.

வேதாரண்யம் விளக்கழகு, திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.

வரலாறு

திருவாரூர் சோழர்களின் 5 தலைநகரங்களில் (உறையூர், பழையாறை, தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம்) ஒன்றாகும். திருவாரூரை ஆண்ட மனுநீதி சோழன், பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது. இந்த நிகழ்வை சோழர்கள் கல்தேராக வடித்தனர். திருவாரூர் கோவிலுக்கு வடகிழக்கே கல்தேர் அமைந்துள்ளது. கல்தேரை பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம்.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 30 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 14,997 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 58,301 ஆகும். அதில் 28,397 ஆண்களும், 29,904 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 91% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 1,053 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5779 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,001 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 8,368 மற்றும் 383 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 84.38%, இசுலாமியர்கள் 14.13%, கிறித்தவர்கள் 1.39% மற்றும் பிறர் 0.11% ஆகவுள்ளனர்.[3]

புகழ்பெற்றவர்கள்

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள்.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. திருவாரூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவாரூர்&oldid=2779659" இலிருந்து மீள்விக்கப்பட்டது