அம்பி (கர்நாடகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎வரலாறு: (edited with ProveIt)
வரிசை 23: வரிசை 23:


விஜயநகரப் பேரரசின் காலத்தில் இங்கு பல கோயில்கள் தோன்றின. பம்பபதி கோயில் (விரூபாக்சர் கோயில்), அசரா இராமர் கோயில், உக்கிர நரசிம்ம சுவாமி கோயில், விட்டலர் கோயில் என்பவற்றின் அழிபாடுகள் விஜயநகரப் பேரரசின் எச்சங்களாகக் காணப்படுகின்றன.<ref name="PP" />
விஜயநகரப் பேரரசின் காலத்தில் இங்கு பல கோயில்கள் தோன்றின. பம்பபதி கோயில் (விரூபாக்சர் கோயில்), அசரா இராமர் கோயில், உக்கிர நரசிம்ம சுவாமி கோயில், விட்டலர் கோயில் என்பவற்றின் அழிபாடுகள் விஜயநகரப் பேரரசின் எச்சங்களாகக் காணப்படுகின்றன.<ref name="PP" />

1420-ஆம் ஆண்டு இந்நகரைப் பார்க்க வந்த நிக்கோலா கோண்டி என்ற இத்தாலியப் பயணி இந்நகரம் 60 மைல் சுற்றளவு கொண்டது என்று கூறியுள்ளார்.<ref>{{cite book | title=எனது இந்தியா | publisher=விகடன் பிரசுரம் | author=எஸ், ராமகிருஷ்ணன் | authorlink=எஸ். ராமகிருஷ்ணன் | year=2012 | location=பக். 230 - விஜய நகரின் எழுச்சி}}</ref>


===அஞ்சனாத்ரி குன்று===
===அஞ்சனாத்ரி குன்று===

10:34, 19 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
ஹம்பியில் உள்ள நினைவுச் சின்னங்களின் தொகுதி
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
Hampi
வகைபண்பாடு
ஒப்பளவு(i)(iii)(iv)
உசாத்துணை241
UNESCO regionஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1986 (10ஆவது, 15ஆவது தொடர்)
ஆபத்தான நிலை1999–2006

அம்பி (Hampi, ஹம்பி) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள ஒரு ஊர் ஆகும். ஹம்பி, விஜயநகரப் பேரரசின் தலைநகரமான விஜயநகரத்தின் அழிபாடுகளிடையே அமைந்துள்ளது. விஜயநகரத்துக்கும் முந்திய காலப்பகுதியைச் சேர்ந்ததாக இருக்கக்கூடிய இவ்வூர் இன்றும் ஒரு முக்கியமான சமயச் சிறப்புவாய்ந்த இடமாகத் தொடர்ந்து வருகிறது. புகழ்பெற்ற விருபாட்சர் கோயில் இவ்விடத்திலேயே உள்ளது. ஹம்பி, விஜயநகரத்தோடு தொடர்புடைய மேலும் பல நினைவுச் சின்னங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. [1]இவ்வூர் பழைய நகரத்தின் வீதிகளிலும் விரிவடைந்து உள்ளது. இது பழைய நகரத்தின் மையப் பகுதியில் இருப்பதனால், இதையும் அழிந்த நகரத்தையும் ஒன்றாக எண்ணிக் குழம்பும் நிலை உள்ளது. விஜய நகரத்தின் நினைவுச் சின்னங்கள், ஹம்பியில் உள்ள நினைவுச் சின்னங்களின் தொகுதி 'என்ற பெயரில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஹம்பி என்னும் பெயர் கன்னடப் பெயரான ஹம்பே என்பதன் ஆங்கிலப்பெயர் ஆகும். ஹம்பே என்னும் இந்தக் கன்னடச் சொல் துங்கபத்திரை ஆற்றின் பழைய பெயரான பம்பா என்பதிலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படுகின்றது.[2] இது சில சமயங்களில் விஜயநகரம் என்றோ அல்லது விஜயநகர அரசர்களின் குலதெய்வமான விருபாட்சரின் பெயரைத் தழுவி விருபாட்சபுரம் என்றோ அழைக்கப்படுவதும் உண்டு.

இயற்கை காட்சி

ஹம்பி 360° இயற்கை காட்சி, மடாங்கா குன்றிலிருந்து

வரலாறு

இராமாயணத்தில் வரும், குரங்கு அரசான கிஷ்கிந்தையுடன் ஹம்பியில் உள்ள பல புண்ணிய இடங்கள் அடையாளம் காணப்படுவது உண்டு. அம்பிக்கு அருகில் உள்ள நிம்பபுரம் என்ற ஊரில் வாலியின் எச்சங்கள் காணப்படுவதாக சொல்லப்படுகிறது.[3] ஹம்பியின் குடியேற்றங்கள் கி.பி முதலாம் ஆண்டிலிருந்து தொடங்கியதாகச் சொல்லப்படுகின்றது.

விஜயநகரப் பேரரசின் காலத்தில் இங்கு பல கோயில்கள் தோன்றின. பம்பபதி கோயில் (விரூபாக்சர் கோயில்), அசரா இராமர் கோயில், உக்கிர நரசிம்ம சுவாமி கோயில், விட்டலர் கோயில் என்பவற்றின் அழிபாடுகள் விஜயநகரப் பேரரசின் எச்சங்களாகக் காணப்படுகின்றன.[3]

1420-ஆம் ஆண்டு இந்நகரைப் பார்க்க வந்த நிக்கோலா கோண்டி என்ற இத்தாலியப் பயணி இந்நகரம் 60 மைல் சுற்றளவு கொண்டது என்று கூறியுள்ளார்.[4]

அஞ்சனாத்ரி குன்று

ஹம்பியில் உள்ள ’அஞ்சனாத்ரி குன்று’ அனுமன் பிறந்த மலையாகக் குறிப்பிடப்படுகின்றது. இந்த மலையில் 1060 படிகள் ஏறிச்சென்றால் அனுமனுக்கும் அவரது தாயார் அஞ்சனா தேவிக்கும் கோயில்கள் உள்ளன. இங்கு வழிபாடு நடத்தப்படுகிறது.[5]

மேற்கோள்கள்

  1. Hampi minicircle Monuments
  2. திராவிட மொழிகளில் ப என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள், கன்னடத்தில் ஹ என்றும் தொடங்கும். பிற்காலத்தில் தோன்றிய இவ்வழக்கு கன்னடத்தில் மட்டுமே காணப்படுகிறது.
  3. 3.0 3.1 இந்துக்கலைக் களஞ்சியம், பகுதி 1, பொ. பூலோகசிங்கம், 1990, கொழும்பு
  4. எஸ். ராமகிருஷ்ணன் (2012). எனது இந்தியா. பக். 230 - விஜய நகரின் எழுச்சி: விகடன் பிரசுரம். 
  5. http://www.dinamani.com/weekly_supplements/sunday_kondattam/2014/07/05/அஞ்சநாத்ரி-குன்று/article2315728.ece

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பி_(கர்நாடகம்)&oldid=1881092" இலிருந்து மீள்விக்கப்பட்டது