அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை
அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை | |
---|---|
10வது அருணாச்சல பிரதேச பேரவை | |
வகை | |
வகை | |
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
தலைமை | |
பேரவைத் தலைவர் | |
துணை பேரவைத் தலைவர் | |
அவைத் தலைவர் (முதலமைச்சர்) | |
அவை துணைத் தலைவர் (துணை முதலமைச்சர்) | |
எதிர்க்கட்சித் தலைவர் | காலி |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 60 |
அரசியல் குழுக்கள் | அரசு (59)
எதிர்கட்சி
மற்றவை (1)
|
தேர்தல்கள் | |
First past the post | |
அண்மைய தேர்தல் | 19 ஏப்ரல் 2024 |
அடுத்த தேர்தல் | 2029 |
கூடும் இடம் | |
சட்டமன்றக் கட்டிடம், இட்டாநகர், அருணாசலப் பிரதேசம் | |
வலைத்தளம் | |
arla |
அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள அருணாசலப் பிரதேச மாநிலத்தின் ஒருமித்த ஓரவை சட்டமன்றமாகும். மாநிலத்தின் தலைநகரான இட்டாநகரில் சட்டப்பேரவையின் அமர்வு உள்ளது. சட்டப் பேரவையானது 60 சட்டப் பேரவை உறுப்பினர்களை உள்ளடக்கியது,[1] ஒரு உறுப்பினர் தொகுதிகளில் இருந்து நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
வரலாறு
[தொகு]29 திசெம்பர் 1969 அன்று, அசாம் ஆளுநரை தலைவராகக் கொண்டு, வடகிழக்கு எல்லைப்புற முகமையின் (இன்றைய அருணாச்சலப் பிரதேசம்) ஆளுகைக்கான உச்ச ஆலோசனைக் குழுவான முகமை சபை நடைமுறைக்கு வந்தது. முகமை சபை 1972 அக்டோபர் 2 இல் பிரதேச சபையால் மாற்றப்பட்டது. 15 ஆகத்து 1975 இல் பிரதேச சபை தற்காலிக சட்டப் பேரவையாக மாற்றப்பட்டது. ஆரம்பத்தில், சட்டப் பேரவை 33 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது, அதில் 30 உறுப்பினர்கள் நேரடியாக ஒற்றை உறுப்பினர் தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர் மற்றும் 3 உறுப்பினர்கள் மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டனர்.[2]
பதவிகள் மற்றும் தற்போதைய உறுப்பினர்கள்
[தொகு]தற்போதைய பேரவை அருணாசலப் பிரதேசத்தின் பத்தாவது சட்டப் பேரவையாகும்.
பதவி | பெயர் |
---|---|
ஆளுநர் | கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக் |
பேரவைத் தலைவர் | பசாங் டோர்ஜி சோனா |
துணை பேரவைத் தலைவர் | டேசம் போங்டே |
அவைத் தலைவர் (மாநில முதலமைச்சர்) | பெமா காண்டு |
எதிர்க்கட்சித் தலைவர் | காலி |
இவற்றையும் காண்க
[தொகு]- அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்
- அருணாச்சலப் பிரதேச அரசு
- அருணாச்சலப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்
- அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல்
குறிப்புகள்
[தொகு]- ↑ No official opposition because no political party obtained at least 10% of the seats in the assembly
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Arunachal Pradesh Legislative Assembly". Legislative Bodies in India website. பார்க்கப்பட்ட நாள் 29 January 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Arunachal Pradesh Legislative Assembly-Introduction" (PDF). Legislative Bodies in India website. Archived from the original (PDF) on 28 September 2011. பார்க்கப்பட்ட நாள் 29 January 2011.