உள்ளடக்கத்துக்குச் செல்

லோஹித் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோஹித் மாவட்டம்
லோஹித்மாவட்டத்தின் இடஅமைவு அருணாச்சலப் பிரதேசம்
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம்டேசு
பரப்பு2,402 km2 (927 sq mi)
மக்கட்தொகை145,726 (2011)
படிப்பறிவு69.9%
பாலின விகிதம்901
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

லோஹித் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக டேசு நகரம் உள்ளது.

பெயர்க்காரணம்

[தொகு]

இந்த மாவட்டத்தில் பாயும் லோஹித் நதியின் பெயரைக்கொண்டு, இந்த மாவட்டம் அழைக்கப்படுகிறது.

அமைப்பு

[தொகு]

லோஹித் மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு நம்சை, டேசு, சௌகம், லேகங்.இந்த மாவட்டம் நான்கு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது.

போக்குவரத்து

[தொகு]

பல காலமாக பரசுராம குன்று பகுதிக்கு சரியான பாலம் வசதிகள் இல்லாமல் அவதிபட்டு வந்த இந்த மக்களுக்கு, 2004 ஆம் ஆண்டு ஒரு பாலம் கட்டபட்டதன் மூலம் இகிலக்கு டேசு பகுதி வருடம் முழுவதும் சென்று வரக்கூடிய வசதியை பெற்றது.

மக்கள்

[தொகு]

இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான அடி, ஜெக்ரிங், கம்டி, டிஓரி, அஹோம்ஸ், சிங்போ, சக்மா மற்றும் மிஸ்மி இனத்தை சேர்ந்தவர்கள்.

மொழி

[தொகு]

சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தில் வரும் காலோ மொழி.

சுற்றுலாத் தளங்கள்

[தொகு]

1989 ஆம் ஆண்டு இந்த மாவட்டத்தில் கம்லங் வனவிலங்கு சரணாலயம் தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோஹித்_மாவட்டம்&oldid=3372521" இலிருந்து மீள்விக்கப்பட்டது