பூம் லா கணவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல்லைப் பிணக்குக்கள் குறித்து இந்திய-சீனா இராணுவ அதிகாரிகள் சந்திக்கும் இடம், பூம் லா கணவாய்
சங்கேஸ்தர் ஏரி, பூம் லா கணவாய்
கற்குவியல் நினைவுச் சின்னம்

பூம் லா மலைக்கணவாய் (Bum La Pass) இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் தாவாங் மாவட்டத்திற்கும், சீனாவின் திபெத் தன்னாட்சி பகுதியில் உள்ள கோனா மாவட்டத்திற்கு இடையே உள்ளது. எல்லைப் பிணக்குகளை பேசுத் தீர்ப்பதற்கு, பூம் லா கணவாய் பகுதியில் இந்திய-சீன இராணுவ அதிகாரிகள் சந்திக்கும் இடம் உள்ளது. [1]மேலும் இமயமலையின் கிழக்கில் அமைந்த இக்கணவாய் பகுதியில் இந்திய-சீன வணிகர்களின் வணிக மையமாக உள்ளது.[2]

அமைவிடம்[தொகு]

பூம் லா கணவாய், அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான தவாங் நகரத்திலிருந்து 37 கிலோ மீட்டர் தொலைவிலும்; சீனாவின் கோனா மாவட்டத்தின் சோனா சோங் நகரத்திலிருந்து 43 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இக்கணவாய் கடல் மட்டதிலிருந்து 15,200 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

2006ல் வணிகப் பாதை திறப்பு[தொகு]

1962 இந்திய-சீனப் போருக்குப் பின்னர் 44 ஆண்டுகள் கழித்து 2006-ஆம் ஆண்டு முதல் மீண்டும் இரு நாட்டு வணிகர்கள் வணிகம் செய்ய மற்றும் அஞ்சல்கள் அனுப்ப பூம் லா கணவாய் பகுதியில் பாதை திறக்கப்பட்டது.[3][2]

தட்ப வெப்பம்[தொகு]

பூம் லா கணவாய் பகுதியில் ஆண்டு முழுவதும் பனி படர்ந்திருக்கும். உலகின் துடிப்பு மிக்க மலைக்கண்வாய்களில் பூம் லா கணவாயும் ஒன்றாகும்.[4]

வரலாறு[தொகு]

இந்திய சீனப் போர், 1962[தொகு]

பூம் லா கணவாய் பகுதியில் 1962-ஆம் ஆண்டில் கடுமையான இந்திய சீனப் போர் நடைபெற்றது.[5]

2022 எல்லைப் பிணக்கு[தொகு]

பூம் லா கணவாய் பகுதியில் 9 டிசம்பர் 2022 அன்று இந்திய எல்லைப்பகுதியில் புகுந்த சீன வீரர்களை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் ஏற்பட்ட கைகலப்பு சண்டையில் இந்தியத் தரப்பில் 6 வீரர்கள் காயமடைந்தனர்.[6]

இந்திய சீன எல்லைக்கட்டுக் கோடு[தொகு]

  • இமயமலையின் கிழக்கில் சீனாவும் இந்தியாவும் 3,500 கிமீ (2,100 மைல்) நீளமான நடைமுறை எல்லையில், உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு என்று அழைக்கப்படும் பரந்த நிலப்பரப்பின் மீது உரிமை கோருகின்றன. இமயமலைப் பகுதி பெரும்பாலும் தொலைவில், கரடுமுரடான மற்றும் பனி மூடியதாக உள்ளது. இருதரப்பிலிருந்தும் வீரர்கள் பல பகுதிகளில் ஒருவருக்கொருவர் சில மீட்டர்கள் தொலைவில் எதிர்கொண்டுள்ளனர்.
  • எல்லை அதிகாரப்பூர்வமாக வரையறுக்கப்படவில்லை. இந்தியாவை ஆண்ட முன்னாள் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் அத்தகைய தொலைதூரப் பகுதியை வரையறுக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதினர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இரு நாடுகளும் பொதுவான எல்லைக்கு உடன்படவில்லை.[7]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூம்_லா_கணவாய்&oldid=3691261" இருந்து மீள்விக்கப்பட்டது