பபும் பரே மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பபும் பரே மாவட்டம்
Arunachal Pradesh district location map Papum Pare.svg
பபும் பரேமாவட்டத்தின் இடஅமைவு அருணாச்சலப் பிரதேசம்
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம்யுபியா
பரப்பு2,875 km2 (1,110 sq mi)
மக்கட்தொகை176385[1] (2011)
படிப்பறிவு82.1%[1]
பாலின விகிதம்950[1]
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பபும் பரே மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இதுவே அருணாசலப் பிரதேசத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது மாவட்டமாகும். [2]இது அருகில் உள்ள கீழ் சுபன்சிரி மாவட்டத்தில் இருந்து, 1999 அன்று இயற்றப்பட்ட சட்டத்தின் படி புதிதாக பிரித்து உருவாக்கப்பட்ட மாவட்டமாகும்.[3]

அமைப்பு[தொகு]

இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக யுபியா நகரம் உள்ளது.இதன் பரப்பளவு மொத்தம் 2875 சதுர கிலோமீடராகும்.[4].அருணாசலப் பிரதேச மாநிலத்தின் தலைநகரமான இடாநகர் இந்த மாவட்டத்தில் தான் உள்ளது. இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு சகலீ, யுபியா, மேங்கியோ, லெபோரியாங், தொரு, கிமின், டோய்முக், பலிஜான், தாராசோ, நகர்லகுன், மற்றும் இடாநகர்.இந்த மாவட்டம் மூன்று சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது.[5]

மக்கள்[தொகு]

இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான நிஷி, மற்றும் மிகிர் இனத்தை சேர்ந்தவர்களே. நிஷி மக்கள் அனைவரும் டோன்யி-போலோ மதத்தை பின்பற்றினாலும், மிகிர் மக்கள் அதிகமானோர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டனர்.[6]

சுற்றுலாத் தளங்கள்[தொகு]

1978 ஆம் ஆண்டு இந்த மாவட்டத்தில் இடாநகர் வனவிலங்கு சரணாலயம் தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "District Census 2011". Census2011.co.in.
  2. "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
  3. Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்த்த நாள் 2011-10-11.
  4. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Arunachal Pradesh: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India. பக். 1113. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7. 
  5. "Assembly Constituencies allocation w.r.t District and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Arunachal Pradesh website. பார்த்த நாள் 2 May 2011.
  6. http://papumpare.nic.in/
  7. Indian Ministry of Forests and Environment. "Protected areas: Arunachal Pradesh". பார்த்த நாள் September 25, 2011.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பபும்_பரே_மாவட்டம்&oldid=2963381" இருந்து மீள்விக்கப்பட்டது