தவாங் மாவட்டம்
தவாங் மாவட்டம் | |
---|---|
தவாங்மாவட்டத்தின் இடஅமைவு அருணாச்சலப் பிரதேசம் | |
மாநிலம் | அருணாச்சலப் பிரதேசம், இந்தியா |
தலைமையகம் | தவாங் நகரம் |
பரப்பு | 2,085 km2 (805 sq mi) |
மக்கட்தொகை | 49,977 (2011) |
படிப்பறிவு | 60.6% |
[tawang.nic.in அதிகாரப்பூர்வ இணையத்தளம்] |
தவாங் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இதுவே இந்தியாவின் மிகவும் குறைந்த மக்கள் தொகை கொண்ட ஏழாவது மாநிலமாகும். ஒரு காலத்தில் திபெத் நாட்டில் இனைந்து இருந்த இந்த மாவட்டம், 1914ஆம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தது. 1962 ஆம் வருட இந்திய-சீனப் போரின் பொழுது, இந்த இடம் முழுவதும் சீனாவால் ஆக்ரமிக்கப்பட்டு இருந்தது. இதனால் பலமுறை இந்த இடம் தனக்கு சொந்தம் என்று கூறி வந்தது.
அமைப்பு[தொகு]
இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக தவாங் நகரம் உள்ளது. இதன் பரப்பளவு மொத்தம் 2172 சதுர கிலோமீடராகும். இது அருகில் உள்ள மேற்கு காமெங் மாவட்டத்தில் இருந்து, புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலமாகும்.இந்த மாவட்டம் மூன்று சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு தவாங், லும்லா, ஜங், கிட்பி, பொங்கர், துடுங்கர், ஜெமிதங், முக்டோ, திங்பு, மற்றும் லௌ.
மக்கள்[தொகு]
இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான அடி, ஜெக்ரிங், மொன்பா இனத்தை சேர்ந்தவர்கள்.
சுற்றுலாத் தளங்கள்[தொகு]
இங்குள்ள தவாங் மடாலயம் புத்த மதத்தினரிடம் மிகவும் பிரபலமான இடமாகும். இவ்விடம் சுற்றுலாப்பயனிகளால் விண்ணுலகின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகின்றது.
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- Tawang District Government Website
- Legendary beginnings about the Tawang monastery பரணிடப்பட்டது 2007-10-09 at the வந்தவழி இயந்திரம்
- Buddhism adds richness to the paradise of Tawang
- The lines nations draw பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
- Young Buddhist monks lead insular lives in India
- The mysteries of an unspoiled place Arunachal Pradesh பரணிடப்பட்டது 2006-08-18 at the வந்தவழி இயந்திரம்