மேற்கு சியாங் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கு சியாங் மாவட்டம்
மேற்கு சியாங்மாவட்டத்தின் இடஅமைவு அருணாச்சலப் பிரதேசம்
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம்ஆலோ
பரப்பு8,325 km2 (3,214 sq mi)
மக்கட்தொகை112,274 (2011)
படிப்பறிவு67.6%
பாலின விகிதம்916
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மேற்கு சியாங் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது அருகில் உள்ள லோஹித் மாவட்டம் இருந்து 1989 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும்.

அமைப்பு[தொகு]

இந்த மாவட்டத்தின் தலைமை நகரமாக ஆலோ நகரம் உள்ளது. இதன் மொத்த பரப்பளவு 8325 சதுர கிலோமீடராகும். இந்த மாவட்டம் ஏழு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு: லிரோமோபோ, லிகாபலி, பசார், ஆலோங், ருமொங், மற்றும் மெசுகா.

மக்கள்[தொகு]

இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான அடி கம்பா மற்றும் மேம்பா இனத்தவரே அதிகம் உள்ளனர். அடி இனத்தவர் அனைவரும் டோன்யி-போலோ மதத்தை பின்பற்றினாலும் இவர்களின் குறிப்பிடத்தக்க மக்கள் கிருஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டனர். கம்பா மற்றும் மேம்பா இனத்தவர் அனைவரும் திபெத்திய பெளத்த மதத்தையும் பின்பற்றுகின்றனர்.

மொழி[தொகு]

சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தில் வரும் அடி மொழி இங்கு அதிகமாக பேசப்படுகிறது.

சுற்றுலாத் தளங்கள்[தொகு]

இந்த மாவட்டமானது அறிய வனவிலங்குகள் நிறைந்த ஒரு இடமாகும். பனி சிறுத்தைப் புலி, செந்நிற பாண்டாக் கரடி, கஸ்தூரி மான் போன்ற விலங்குகளும், மிகவும் அறிய பறவையான பிளித்ஸ் காட்டுக் கோழி போன்றவையும் இங்குள்ளன.

இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவியலின் புது உறுப்பினராக, ஒரு பெரியவகை பறக்கும் அணில் கன்னுபிடிக்கப் பட்டுள்ளது. இதற்கு மெசுகா பெரியவகை பறக்கும் அணில் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கேன் வனவிலங்குகள் சரணாலயம் இந்த மாவட்டத்தில் தான் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_சியாங்_மாவட்டம்&oldid=3890762" இலிருந்து மீள்விக்கப்பட்டது