அலோங்
அலோங் ஆலோ | |
---|---|
நகரம் | |
நாடு | ![]() |
மாநிலம் | அருணாச்சலப் பிரதேசம் |
மாவட்டம் | மேற்கு சியாங் |
ஏற்றம் | 619 |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 16 |
• தரவரிசை | 4 (அருணாச்சலப் பிரதேசத்தில்) |
• அடர்த்தி | 13 |
மொழிகள் | |
• அலுவல் | ஆங்கிலம் |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
PIN | 791 001 |
தொலைபேசிக் குறியீடு | 91 3783 XXX XXXX |
வாகனப் பதிவு | AR 08 |
தட்பவெப்பம் | கொப்பென் |
சராசரி ஆண்டு அதிக வெப்பநிலை | 28.1 °C (82.6 °F) |
சராசரி ஆண்டு குறைந்த வெப்பநிலை | 15.3 °C (59.5 °F) |
குளிர்காலத்தில் சராசடி வெப்பநிலை | 18.5 °C (65.3 °F) |
கோடைக்காலத்தில் சராசரி வெப்பநிலை | 24.7 °C (76.5 °F) |
இணையதளம் | westsiang.nic.in |
அலோங் (Along) என்பது அருணாச்சலப் பிரதேசத்தில் மேற்கு சியாங் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இங்கு சியாங், யோம்கோ ஆறுகள் பாய்கின்றன. இதைச் சுற்றிலும் மலைகள் உள்ளன.
பொருளடக்கம்
தட்பவெப்பம்[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், அலோங் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | NA | NA | NA | NA | NA | 36.4 (97.5) |
N/A | N/A | N/A | N/A | N/A | N/A | |
உயர் சராசரி °C (°F) | 22.7 (72.9) |
23.8 (74.8) |
26.1 (79) |
27.7 (81.9) |
30.0 (86) |
30.6 (87.1) |
31.1 (88) |
31.7 (89.1) |
31.1 (88) |
30.0 (86) |
27.7 (81.9) |
24.4 (75.9) |
25.4 (77.7) |
தினசரி சராசரி °C (°F) | 16.3 (61.3) |
18.3 (64.9) |
21.1 (70) |
23.3 (73.9) |
26.1 (79) |
27.5 (81.5) |
28.1 (82.6) |
28.3 (82.9) |
27.5 (81.5) |
25.6 (78.1) |
21.6 (70.9) |
17.8 (64) |
16.4 (61.5) |
தாழ் சராசரி °C (°F) | 10.0 (50) |
12.7 (54.9) |
16.1 (61) |
18.1 (64.6) |
22.2 (72) |
24.4 (75.9) |
25.0 (77) |
25.0 (77) |
23.8 (74.8) |
21.1 (70) |
15.6 (60.1) |
10.0 (50) |
18.7 (65.7) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | NA | NA | NA | NA | 16.7 (62.1) |
N/A | N/A | N/A | N/A | N/A | N/A | ||
பொழிவு mm (inches) | 35.8 (1.409) |
67.4 (2.654) |
102.4 (4.031) |
195.2 (7.685) |
368 (14.49) |
409.9 (16.138) |
487.4 (19.189) |
336.7 (13.256) |
315.5 (12.421) |
121.3 (4.776) |
24.1 (0.949) |
12.9 (0.508) |
2,476.6 (97.504) |
சராசரி மழை நாட்கள் | 9 | 13 | 16 | 20 | 21 | 24 | 26 | 23 | 19 | 12 | 5 | 3 | 191 |
ஆதாரம்: World Weather Online.com |
சுற்றுலா[தொகு]
- பட்டும் பாலம்: யோம்கோ ஆற்றின் மீது பட்டும் பாலம் கட்டப்பட்டது. இது போக்குவரத்தை எளிமையாக்குவதோடு, காணக்கூடிய இடமாகவும் விளங்குகிறது. இங்கிருந்து ஊர் முழுமையும் காணமுடியும். பனிக்காலத்தில் இப்பகுதி எழில் கூடி காணப்படும்.
- படகுப் போக்குவரத்து:
இங்கு பாயும் சியோம், யோம்கோ ஆகிய இரு ஆறுகளும் பிரம்மபுத்திரா ஆற்றுடன் கலக்கின்றன. இப்பகுதியைச் சுற்றி இமய மலை பரவியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் படகு பயணம் மேற்கொள்வர்.
- தொங்கு பாலம்:
சியாங் ஆற்றின் மேல் தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது மூங்கில்களால் ஆனது. உள்ளூர் பழங்குடியினர் தங்கள் போக்குவரத்திற்காக இதை அமைத்துள்ளனர். இங்கிருந்து மீன் பிடிப்பர்.
- கானே வனவிலங்கு சரணாலயம்: இது 55 கி.மீ பரப்பளவு அமைந்துள்ளது. அலோங் நகரில் இருந்து பேருந்துகளில் வந்து சேரலாம். இங்கு அரிய வகை பூனைகளும், மான்களும், யானைகளும் உள்ளன. அக்டோபர் தொடங்கி ஏப்பிரல் வரையிலான காலத்திற்குள் இங்கு வந்து செல்வது சிறப்பு.
- பழங்குடியினர் கிராமங்கள்: பக்ரா என்னும் பழங்குடியின கிராமத்தில் உள்ளூர் வாசிகளின் வீட்டமைப்பைப் பார்க்கலாம். மரத்தாலும், மூங்கிலாலும் வேயப்பட்ட இந்த வீடுகள் உள்ளூர்வாசிகளின் பண்பாட்டை முன்னிறுத்துகின்றன. பங்கிங் என்ற கிராமத்தில் உள்ளூர் வாசிகள் ஆடையுடுத்தியிருக்கும் முறை காணக்கூடியது. அதிகளவிலான ஆதிவாசிகள் இங்கு வசிக்கின்றனர். தார்க்கா என்ற கிராமத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மொப்பின் திருவிழா சிறப்பானது. இங்கு அடர்ந்த காடுகள் உள்ளன. கோலா என்ற பழங்குடியினர் இங்கு வசிக்கின்றனர்.
- கம்கி நீராற்றல் மையம்: இது நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்க நிறுவப்பட்டது, கம்கி ஆற்றின் அணையின் மூலம் மின்சாரம் தயாரிக்கிறது. இந்த ஆலையைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு.
- தொன்யி போலோ கோயில்:
உள்ளூர் ஆதிவாசிகளின் வழிபாட்டுத் தலங்களுள் இதுவும் ஒன்று. சூரிய, சந்திர வழிபாட்டிற்கென அமைக்கப்பட்டது. தொன்யி போலோ என்பது அருணாச்சலப் பிரதேசத்தில் பின்பற்றும் சமயம். இது அமைதியான அணுகுமுறையையும், இயற்கை வழிபாட்டையும், பரிவையும் வலியுறுத்துகிறது. தியான அறையும், சூரிய சந்திர கடவுளர்களின் சிலைகளும் உள்ளன. இதன்மூலம் உள்ளூர் பண்பாடு பேணிக் காக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து[தொகு]
உள்ளூர் மக்கள் நடைபயணத்தை மேற்கொள்கின்றனர். சுற்றியுள்ள ஊர்களுக்குச் செல்ல ஆட்டோக்களும் உண்டு. தனியார் வாகனங்களிலோ, அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம். இந்தியாவின் ஏனைய பகுதிகளில் உள்ள பிற நகரங்களில் இருந்து வான்வழியில் பயணம் மேற்கொண்டு, ஆலோ விமான நிலையத்தை வந்தடையலாம். பின்னர், ஹெலிகாப்டர்களின் மூல்ம ஆலோங் நகருக்கு வரலாம். இங்கு ரயில் போக்குவரத்து வசதிகள் இல்லை. இதற்கருகில் தேசிய நெடுஞ்சாலை 52 உள்ளமையால், நாட்டின் ஏனைய பகுதிகளுடன் சாலைவழிப் போக்குவரத்து ஏதுவாக உள்ளது.