ஜிரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜிரோ (Ziro)
மலைப்பகுதி
நாடுஇந்தியா
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம்
மாவட்டம்கீழ் சுபன்சிரி மாவட்டம்
ஏற்றம்1,700 m (5,600 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்12,289
நேர வலயம்ஐ.எஸ்.டி (ஒசநே+5:30)
தொலைபேசி குறியீடு03788

ஜிரோ இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள மலைப்பகுதி ஆகும். தலைநகர் இடாநகரிலிருந்து 150 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய இடமாக இதனை இடம் பெறச்செய்ய இந்தியத் தொல்லியல் துறை முயற்சியெடுத்து வருகிறது.

அபதானி பழங்குடி மக்கள் இப்பகுதியில் வசித்துவருகின்றனர். இப்பழங்குடியினர் ஒரே பகுதியில் நிலைத்து வசிக்கும் குணம் கொண்டோர். அபூர்வமான ஆர்சிட் வகை பூக்கள் இப்பகுதியில் பூக்கின்றன.[1]

ஹிஜா கிராமத்தில் அபதானி பழங்குடிப் பெண்கள்

பெரிய சிவலிங்கம்[தொகு]

ஜூலை 2004 ஆம் ஆண்டு இங்கு கண்டுபிடிக்கப்பட்ட சித்தேஸ்வர்நாத் கோயிலின் சிவலிங்கம் மிகப்பெரியது. பிரேம் சுபா எனும் நேபாளியால் மரம் வெட்டுகையில் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த சிவலிங்கத்தின் வரலாறு சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.[2]

புவியியல் அமைப்பு[தொகு]

27°33′59″N 93°49′53″E / 27.56639°N 93.83139°E / 27.56639; 93.83139 அருணாச்சலப் பிரதேசத்தின் பழைமையான நகரான ஜீரோ கீழ் சுபன்சிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

மக்கள்தொகை[தொகு]

2001 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இங்கு மக்கள்தொகை 12,289. இதில் ஆண்கள் 52% பெண்கள் 48%. 17% பேர் ஆறு வயதிற்குக் கீழுள்ள குழந்தைகள்.[3]

கல்வி[தொகு]

அருணாச்சலப் பிரதேசத்தின் அதிக அளவு பள்ளிகள் இங்கமைந்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிரோ&oldid=3339514" இருந்து மீள்விக்கப்பட்டது