உள்ளடக்கத்துக்குச் செல்

கீய் பன்யோர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீய் பன்யோர்
நாடு இந்தியா
மாநிலம்அருணாசலப் பிரதேசம்
தோற்றுவிக்கப்பட்டது1 மார்ச் 2024
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்30,000
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுஇந்திய அனுமதி இலக்கத்தகடுகள்

கீய் பன்யோர் மாவட்டம் (Keyi Panyor district) என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள அருணாசலப் பிரதேச மாநிலத்தின் 28 மாவட்டங்களில் ஒன்றாகும். யாசுலி இதன் தலைமையகமாகும். [1]

வரலாறு

[தொகு]

திசம்பர் 2022-இல், அனைத்து யாசுலி மாணவர் சங்கம், சுபன்சிரி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, கீய் பன்யோர் மாவட்டத்தை உருவாக்கக் கோரியது.[2] செப்டம்பர் 2023-இல், அருணாசலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு புதிய மாவட்டம் உருவாக்குவதாக அறிவித்தார்.[3] 2024 பிப்ரவரியில், மாவட்ட உருவாக்கத்திற்கான சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது கீழ் சுபன்சிரி மாவட்டத்திலிருந்து 195 கிராமங்களைப் பிரித்து உருவாக்கப்பட்டது.[4] மார்ச் 1,2024-இல், இந்த மாவட்டம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. [5]

மக்கள்தொகை

[தொகு]

கீய் பன்யோர் மாவட்டம் மாவட்டத்தில் முக்கியமாக நைசி மக்கள் வசிக்கின்றனர். இதன் மக்கள்தொகை 30,000க்கும் அதிகமாக உள்ளது. இது 195 கிராமங்களை உள்ளடக்கியது.[6]

அரசியல்

[தொகு]

அருணாச்சல பிரதேச சட்டப்பேரவையில் யாசுலி சட்டமன்றத் தொகுதி இந்த மாவட்டத்தில் உள்ளது.[7] இந்த மாவட்டம் அருணாச்சல மேற்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Arunachal Assembly passes bill for two new districts". India Today NE (in இந்தி). 2024-02-08. பார்க்கப்பட்ட நாள் 2024-02-25.
  2. "Create Keyi Panyor district by bifurcating Lower Subansiri: AYSU". Arunachal Observer (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-12-05. பார்க்கப்பட்ட நாள் 2024-02-25.
  3. PTI. "Arunachal CM announces creation of 'Keyi Panyor' district". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-25.
  4. "Arunachal assembly passes bill to create two new districts". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-25.
  5. Today, North East (2024-03-01). "Arunachal: New District Keyi Panyor Officially Inaugurated Today". Northeast Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-03.
  6. "Arunachal government inaugurates 27th district, Keyi Panyor, amid grand celebrations". India Today NE (in இந்தி). 2024-03-01. பார்க்கப்பட்ட நாள் 2024-03-03.
  7. "Arunachal: Pema Khandu inaugurates new district 'Keyi Panyor'" (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-03-01. பார்க்கப்பட்ட நாள் 2024-03-03.
  8. "Assembly Constituencies allocation w.r.t District and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Arunachal Pradesh website. Archived from the original on 13 August 2011. பார்க்கப்பட்ட நாள் 21 March 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீய்_பன்யோர்_மாவட்டம்&oldid=3992415" இலிருந்து மீள்விக்கப்பட்டது