கீழ் சுபன்சிரி மாவட்டம்
கீழ் சுபன்சிரி மாவட்டம் | |
---|---|
கீழ் சுபன்சிரிமாவட்டத்தின் இடஅமைவு அருணாச்சலப் பிரதேசம் | |
மாநிலம் | அருணாச்சலப் பிரதேசம், இந்தியா |
தலைமையகம் | ஜிரோ |
மக்கட்தொகை | 83,030 (2011) |
படிப்பறிவு | 76.3% |
பாலின விகிதம் | 975 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
கீழ் சுபன்சிரி மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். 1987 ஆம் ஆண்டு சுபன்சிரி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்ட போது உருவாக்கப்பட்டவை கீழ் மற்றும் மேல் சுபன்சிரி மாவட்டங்கள்.
அமைப்பு
[தொகு]இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக ஜிரோ நகரம் உள்ளது. இந்த மாவட்டத்தில் 6 நிருவாக வட்டங்கள் உள்ளன, அவற்றின் பட்டியல் பின்வருமாறு: ஜிரோ, யாசுளி, பிஸ்தனா, ராகா, கம்பொரிஜோ, மற்றும் டோல்லுங்முக். இந்த மாவட்டம் இரண்டு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது.
மக்கள்
[தொகு]இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான நியிசி மற்றும் அபதனி இனத்தை சேர்ந்தவர்கள்.
மொழி
[தொகு]திபெத்திய- பர்மா மொழிக் குடும்பத்தில் வரும் அபதனி மொழி பேசுகின்றனர்.
சுற்றுலாத் தளங்கள்
[தொகு]இந்த மாவட்டத்தில் நடக்கும் விழாக்களான நியோகும், பூரி-பூட் மற்றும் டிரீ விழா மிகவும் பிரபலமானவை. 1995 ஆம் ஆண்டு இந்த மாவட்டத்தில் டேல் பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயம் தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.