கிழக்கு காமெங் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கு காமெங் மாவட்டம்
கிழக்கு காமெங்மாவட்டத்தின் இடஅமைவு அருணாச்சலப் பிரதேசம்
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம்செப்பா
பரப்பு4,134 km2 (1,596 sq mi)
மக்கட்தொகை78413 (2011)
படிப்பறிவு62.5%
பாலின விகிதம்1012
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

கிழக்கு காமெங் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் செப்பா நகரம் ஆகும்.

பெயர்க் காரணம்[தொகு]

பிரம்மபுத்ரா நதியின் ஒரு கிளையான காமெங் ஆறு இங்கு பாய்வதால், இந்த மாவட்டத்திற்கு இந்த பெயர் வந்தது. முன்பு காமெங் மாவட்டம் என்ற பெயருடன் இருந்த இந்த மாநிலமானது, அரசியல் காரணங்களுக்காக ஜூன் 1, 1980 ஆம் ஆண்டு கிழக்கு மற்றும் மேற்கு காமெங் என்று இரண்டாக பிரிக்கப்பட்டது.

அமைப்பு[தொகு]

இதன் பரப்பளவு சுமார் 4134 சதுர கிலோமீடராகும். மேற்கு காமெங் மாவட்டம் போன்றே பருவநிலை கொண்ட இந்த மாவட்டம் இமய மலை தொடர்களால் சூழப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் கீழே உள்ளது. செப்பா, சாயாங்டஜோ, சாவா, கேநேவா, பாமெங், லாடா, கியாவே புரங், பிபு, செப்பா, ரிச்சுக்ரோங் ,பிஜிரங், பாக்கே கேசாங், செய்ஜோசா, டிச்சிங் பஸ்ஸோ. இந்த மாவட்டம் ஐந்து சட்டசபை தொகுதியை கொண்டுள்ளது.

மக்கள்[தொகு]

இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான நிஷி, மிஜி, சுலுங், மற்றும் அக இனத்தை சேர்ந்தவர்களே. இவர்கள் அனைவரும் டோன்யி-போலோ மதத்தை பின்பற்றினாலும், இவர்களின் வாழ்க்கை முறை வேறுபட்டுள்ளது.

மொழி[தொகு]

திபெத்திய- பர்மா மொழிக் குடும்பத்தில் வரும் கோரோ மொழி இங்கு அதிகமாக பேசப்படுகிறது. டணி மொழியை போன்று தோற்றமளித்தாலும் இது திபெத்திய- பர்மா மொழிக் குடும்பத்தில் ஒரு தனி மொழியாக 2001 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப் பட்டது. இந்த மொழி வேறு எந்த மொழியுடனும் தொடர்பில்லாத ஒரு தனி மொழியாகும். எனவே இது அந்த பகுதிக்கு அடிமைகளாக கொண்டுவரப்பட்ட மக்களின் மொழியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சுற்றுலாத் தளங்கள்[தொகு]

பகுய் புலிகள் சரணாலயம் இந்த மாநிலத்தில் அமைந்து உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_காமெங்_மாவட்டம்&oldid=3885206" இலிருந்து மீள்விக்கப்பட்டது