நிஷி மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நிஷி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நிஷி இனப் பெண்

நிஷி மக்கள் இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்தில் பெரும்பான்மையினராய் வாழும் ஒரு பழங்குடி இனக்குழுவினர்.

அருணாச்சலப் பிரதேசத்தின் பபும் பரே மாவட்டம், கிழக்கு காமெங் மாவட்டம்கீழ் சுபன்சிரி மாவட்டம், குருங் குமே மாவட்டம், மற்றும் மேல் சுபன்சிரி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் அசாம் மாநிலத்தின் சோனித்பூர், வடக்கு இலட்சிமிபூர் மாவட்டங்களிலும் இவ்வின மக்கள் வசிக்கின்றனர்.

2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக்கணக்கெடுப்பின் படி இவர்களின் மக்கள் தொகை 300,000 ஆகும். இவர்களின் மொழி சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.


பலமனைவி மணம் இவ்வினத்தினரிடையே பரவலாய்க் காணப்படும் ஒன்றாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிஷி_மக்கள்&oldid=2068056" இலிருந்து மீள்விக்கப்பட்டது