தவாங் மடாலயம்
தவாங் மடாலயம் Tawang Monastery | |
---|---|
தவாங் மடாலயம். | |
Monastery information | |
இடம் | இந்தியா, அருணாச்சல பிரதேசம், தவாங் |
நிறுவியது | மேரா லாமா லோட்ரே கப்டோ |
புதுப்பித்தல் | 2002 இல் 14வது தலாய்லாமா |
வகை | திபத்திய பௌத்தம் |
பிரிவு | Gelug |
பள்ளிகள் | 17 gompas |
No. of monks | 450 |
Architecture | 65 குடியிருப்பு கட்டடங்கள் |
தவாங் மடாலயம் (Tawang Monastery) என்பது இந்திய ஒன்றியத்தின், அருணாச்சலப் பிரதேசத்தின், தவாங் மாவட்டத்தின், தவாங் நகரில் உள்ள ஒரு பௌத்த மடாலயமாகும். இந்த பௌத்தமடாலயமானது இந்தியாவிலேயே மிகப் பெரியது. உலகின் மிகப்பெரிய பௌத்தமடாலயமான திபெத்தின் லாசாவில் பொட்டலா அரண்மனை மடாலயத்துக்கு அடுத்து இரண்டாவது பெரிய மடாலயம் ஆகும். இது தவாங் ஆற்றின் பள்ளத்தாக்கில், இதே பெயரிலான சிறிய நகருக்கு அருகில், அருணாச்சலப் பிரதேசத்தின் வடமேற்குப் பகுதியில், திபெத்திய மற்றும் பூட்டான் எல்லைகளுக்கு அருகாமையில் உள்ளது.
தவாங் மடாலயமானது திபெத்தியில் கோல்டன் நாம்கே லாட்ஸே என அழைக்கப்படுகிறது.[சான்று தேவை], இது "விண்ணுலகின் சொர்க்கம்" என மொழிபெயர்க்கப்படுகிறது. இதை 5வது தலாய் லாமாவின் விருப்பத்திற்கு இணங்க. மெரிக் லாமா 1680-1681இல்[சான்று தேவை] நிறுவினார். இது மகாயான பௌத்த மதத்தின் கெலுக் பாடசாலைக்கு சொந்தமானது, மேலும் பிரித்தானிய ஆட்சிக் காலத்திலும் லாசாவின் டிரெபங் மடாலயத்தில் சமய உறவு தொடர்ந்து இருந்துவந்தது.
மடாலயம் மூன்றடு உயரப் பிரிவுகளாக உள்ளது. இது 925 அடி (282 மீ) நீள மதிற்சுவரால் சூழப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் 65 குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளன. மடாலய நூலகத்தில் பழங்காலத்திய மதிப்புமிக்க சமய நூல்கள் உள்ளன.
அமைவிடம்
[தொகு]இந்த மடாலயமானது மலை உச்சிக்கு அருகில் சுமார் 10,000 அடி உயரத்தில், பனி-மூடிய மலைகள் மற்றும் ஊசியிலையுள்ள காடுகளோடு தவாங் ஆற்றுப் பள்ளத்தாக்கிலிருந்து காட்சியளிக்கிறது. அதன் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளின் ஓரத்தில், நீரோடைகளால் உருவான செங்குத்தான பள்ளத்தாக்குகளோடு, வடக்கில் ஒரு கிளைக் குன்றும், கிழக்கில் ஒரு சரிவான தரைப் பாதையையும் கொண்டுள்ளது.[1][2][3][4] [5] மடாலயத்தின் பெயரைக் கொண்ட அருகில் உள்ள தவாங் நகரானது, சாலை, தொடர்வண்டி, வானூர்தி சேவைகள் மூலமாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள தொடருந்து நிலையம் 280 கி.மீ (170 மைல்) தொலைவில் உள்ள பாலுக் பாங் தொடருந்து நிலையம் ஆகும். 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தேஜ்பூர் விமான நிலையம் அருகில் உள்ள விமான நிலையம் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dalal 2010, ப. 363.
- ↑ Mibang & Chaudhuri 2004, ப. 211.
- ↑ "Landslides hit Tawang monastery". The Times of India. 28 November 2010. http://timesofindia.indiatimes.com/india/Landslides-hit-Tawang-monastery/articleshow/7003169.cms?referral=PM.
- ↑ Das 2009, ப. 178.
- ↑ Bareh 2001, ப. 325.