உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டப் பயிற்சி 2023

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதல் கலந்துரையாடல்

[தொகு]

மே 29 அன்று மாலை நடந்த இணையவழிக் கலந்துரையாடலில் சிஐஎஸ்ஸிலிருந்து டிட்டோ மற்றும் நிதேஷ் கலந்து கொண்டனர். தமிழ் விக்கிப்பீடியர்கள் சார்பாக நான், கி. மூர்த்தி, மகாலிங்கம், ஸ்ரீதர், த.உழவன், பார்வதிஸ்ரீ, பாலாஜி, செந்தமிழ் கோதை, மாலதி தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டோம். பெரிய கட்டுப்பாடின்றி மூன்று நாள் பயிற்சிக்கான திட்டமிடலை நாமே பரிந்துரைக்க கோரினர். வெளிநாட்டுப் பயனர்களுக்கான அனுமதிச் சீட்டு பெறுவதிலும், பெருந்தொற்றுக்குப் பிறகான சர்வதேசப் போக்குவரத்திலும் சிக்கல் இருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தனர். இருந்த போதும் இதர சாத்தியங்களைப் பார்ப்பதாகக் கூறினர். சுமார் 9 லட்சம் வரை நிதி நல்கைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அதனடிப்படையில் சுமார் 40 நபர்கள் கலந்து கொள்ள இயலும். நாம் திட்டமிட்டு, நிகழ்ச்சி வரைவை ஜூன் மாத நடுவிலேயே அளிக்கக் கோரியுள்ளனர். உரையாடலின் அடிப்படையில் கீழ்க்கண்ட கேள்விகளைக் கேட்கிறேன். மற்ற பயனர்கள் இதுதொடர்பான பரிந்துரைகள்/கருத்துக்களை ஜூன் 4 ஆம் தேதிக்குள் அளிக்கக் கோருகிறேன். ஆர்வமுள்ளவர்கள் ஒருங்கிணைப்பிலும் இணைந்து கொள்ள வேண்டுகிறேன்.

  1. நிகழ்வினை நடத்துமிடம்/ஊர்
  2. நிகழ்வினை நடத்தும் நாட்கள்
  3. நிகழ்விற்குப் பிறமொழி விக்கிப்பீடியர்களை அழைத்தல்
  4. என்னென்ன பயிற்சிகள் அளிக்கப் பரிந்துரைப்பீர்கள்
  5. இதர கருத்துக்கள் -நீச்சல்காரன் (பேச்சு) 16:06, 29 மே 2022 (UTC)[பதிலளி]

முன்மொழிவுகள்

[தொகு]

1. நீச்சல்காரன்

[தொகு]
  1. விமானப் பயணத்திற்கு ஏதுவான நகரமாகவும், உள்ளூரில் ஒரு பயனராவது பொறுப்பேற்கக் கூடிய வகையில் இருப்பதாலும் கோவை அல்லது மதுரை அருகே பண்பாட்டு நெருக்கமுள்ள நகரில் நடத்தப் பரிந்துரைக்கிறேன். ஊட்டியில் நடத்தக் கூடிய சாத்தியங்களையும் ஆய்வு செய்ய மற்ற பயனர்களும் ஆய்வு செய்கிறார்கள்.
  2. மூன்று மாதக் காலமாவது இருக்க வேண்டும் என்பதாலும் மழைக்காலத்திற்கு முன்னதாக நடத்த வேண்டுமென்பதாலும் செப்டம்பர் மாதத்தில் பரிந்துரைக்கிறேன். அரசு ஊழியர்களுக்கு ஏதுவான தொடர்விடுமுறை நாளில் வைத்துக் கொள்ளலாம்.
  3. 25 பயனர்கள் தமிழ் விக்கிப்பீடியாவிற்கும் 15 பயனர்கள் பிற மொழியில் வேங்கைத் திட்டத்தில் பங்கெடுத்தவர்களுக்கும் அளிக்கலாம். பஞ்சாபி விக்கி மட்டுமல்லாமல் அனைத்து மொழியினரையும் அழைக்கலாம். வரும் விண்ணப்பத்தில் சிறப்பான பங்களிப்பாளர்களைப் பயிற்சியில் இணைத்துக் கொள்ளலாம்.
  4. இங்கே பரிந்துரைத்துள்ள பயிற்சிகளை அளிக்கலாம்.
உள்ளூர் ஏற்பாட்டுக் குழு, நிதி நல்கைக் குழு, பரப்புரைக் குழு, பயிற்சித் திட்டமிடல் குழு என்று பணிகளைப் பிரித்துக் கொண்டு இந்த நிகழ்வினை நடத்தலாம். அடுத்த ஞாயிறு மாலையில் ஒரு இணையவழிச் சந்திப்பில் மேலும் உரையாடி ஒருமித்தக் கருத்தினை எடுக்கலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 16:36, 29 மே 2022 (UTC)[பதிலளி]

2. ஞா.ஶ்ரீதர்

[தொகு]
  1. ஊட்டி அல்லது மதுரை எனது விருப்பம்.
  2. செப்டம்பர் மூன்றாம் வாரம் அல்லது அக்டோபர் 2-5 (சரஸ்வதி , ஆயுத பூஜை விடுமுறை நாட்கள்) சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளை உள்ளடக்கிய மூன்று தினங்களாக இருந்தால் அனைவருக்குமே நன்றாக இருக்கும் (வேலை நாட்கள் எனில் பலருக்கு மூன்று நாட்கள் விடுப்பு என்பது சிக்கலாகிவிடும்.
  3. நம் சமூகத்தினரே சுமார் 60 பங்களிப்பாளர்கள் 2.0 வில் கலந்துகொண்டுள்ளனர். எனவே, 30 பயனர்கள் தமிழ் விக்கிப்பீடியர்களும் பஞ்சாபியர் உள்பட 10 பங்களிப்பாளர்களுக்குக் கொடுக்கலாம். (ஏனென்றால் இந்தப் போட்டியில் கலந்துகொண்டவர்கள், பெண் பங்களிப்பாளர்கள், நீண்டநாட்களாக பங்களிப்பு வழங்கி வருபவர்கள் , அண்மையில் பங்களிப்பவர்கள் , முன்னர் அதிகமாக பங்களித்து தற்போது ஏதேனும் காரணங்களால் பங்களிக்க இயலாத நிலையில் இருப்போர் ஆகிய பலரையும் உள்ளடக்குவது நன்றாக இருக்கும்.)
பரப்புரையிலும், பயிற்சித் திட்டமிடலிலும் இணைகிறேன். ஸ்ரீதர். ஞா (✉) 04:33, 30 மே 2022 (UTC)[பதிலளி]

3. மகாலிங்கம்

[தொகு]
  1. தமிழ் விக்கிப்பீடியர்களில் 30 பயனர்கள், பஞ்சாப் விக்கிப்பீடியர்களில் 10 பயனர்கள் (அல்லது) பஞ்சாப் 5 பேர் மற்றும் இதர விக்கிப்பீடிய சமூகத்தினர் 5 பேர் என்றவாறும் பங்கேற்பாளர்களைத் திட்டமிடலாம். சனி, ஞாயிறு உள்ளிட்ட 3 தினங்கள் பயிற்சிக்கான நாள்களாகத் தேர்வு செய்யலாம். பங்கேற்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு காரண, காரிய கொள்வை முடிவினைக் கலந்தாலோசித்து எட்டலாம். நிகழ்வு நடைபெறும் இடம் மதுரையாக இருந்தால் உள்ளூர் ஏற்பாட்டுக் குழுவில் இணைந்து செயல்படுகிறேன். பயிற்சித் திட்டமிடல் குழு மற்றும் பரப்புரைக் குழுவில் இணைந்து செயலாற்ற விருப்பம். --TNSE Mahalingam VNR (பேச்சு) 06:01, 30 மே 2022 (UTC)[பதிலளி]

4. சிவகோசரன்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியர்கள் அதிகம் இருப்பதால் தமிழ் 30 பேர், ஏனைய விக்கிப்பீடியர் 10 பேர் என்றிருப்பதே எனது விருப்பமும் ஆகும். நடைபெறும் திகதிகளைப் பொறுத்து, பன்னாட்டுப் பயனர்கள் அனுமதிக்கப்பட்டால் கலந்துகொள்ள விருப்பம். பரப்புரை, பயிற்சித் திட்டமிடலில் இணைந்து செயலாற்றுகிறேன். --சிவகோசரன் (பேச்சு) 12:36, 1 சூன் 2022 (UTC)[பதிலளி]

இரண்டாம் கலந்துரையாடல்

[தொகு]
மேலே நடந்த உரையாடலின் தொடர்ச்சியாக நாளை மாலை 7 மணிக்கு உரையாடவுள்ளோம்.(meet.google.com/hiu-ygsn-stt) எந்த ஊரில் நடத்துவது, முன்னேற்பாட்டிற்கான உள்ளூர் ஏற்பாட்டுக்குழு, பயிற்சி நிரல் போன்றவற்றின் ஒரு வரைவை உருவாக்குவோம், பின்னர் ஒரு வாரம் கருத்து கேட்டு அதை சிஐஎஸ்சிடம் முன்னர்த்துவோம்.-நீச்சல்காரன் (பேச்சு) 07:54, 4 சூன் 2022 (UTC)[பதிலளி]
இந்தக் கூட்டத்தில் திட்டமிடாத வருகையாளராக விக்கிமீடிய அறக்கட்டளையின் ரஷித் சர்மா கலந்து கொண்டு அறக்கட்டளை குறித்த சிறிய அறிமுகம் தந்தார். செந்தமிழ் கோதை, கி.மூர்த்தி, பார்வதிஸ்ரீ, உழவன், பாலாஜி, சிவகோசரன், சத்திரத்தான், மகாலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர். கோவை மாவட்டப் பயனர்களோ நிகழ்விடம் குறித்த தகவலோ இல்லாததால் கூட்டத்தில் இது தொடர்பாக உரையாடமுடியவில்லை. பொதுவான உரையாடலோடு சந்திப்பு நிறைவு செய்யப்பட்டது. தேவையெனில் அடுத்த வாரம் உரையாடுவோம். அதுவரை பரிந்துரைகளை இங்கேயே இடலாம். கோவை அல்லது மதுரை மாவட்டங்களில் நடத்தவே களத்தில் பயனர்கள் உள்ளனரென நினைக்கிறேன். இவை தவிர வேறு மாவட்டத்தில் நிகழ்வினை நடத்த வேறு பரிந்துரைகளை இருந்தால் முன்வைக்கலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 14:56, 5 சூன் 2022 (UTC)[பதிலளி]

முன்மொழிவுகள்

[தொகு]
  • தொடர்ந்து எடுக்கும் பலவித முன்னெடுப்புகளுக்கு நன்றி, நீச்சல்காரன். இந்திய உரூபாய் 9-10 இலட்சங்கள், 40 விக்கிப்பீடியப் பங்களிப்பாளர்களுக்குச் செலவிடப்படவுள்ளது. கொரோனா காலம் முடிந்து, பலவித பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இது பெருந்தொகையே. ஏறத்தாழ 25 உரூபாய் ஒரு நபருக்கு செலவிடப்பட உள்ளது. 62 பங்களிப்பாளர்கள் கலந்து கொண்டு,2,929 கட்டுரைகளை உருவாக்கியிருந்தனர். ஆறு நடுவர்களில் நானும் ஒருவனாக இருந்ததில், உடன்பயணித்தவர்களின் எண்ணங்களை அறிய முடிந்தது. இதில் இந்திய குடியுரிமை இல்லாதவர் கலந்து இயலாத சூழ்நிலை உள்ளதைக் கண்டு வருத்தப்படுகிறேன். இருப்பினும், இதில் அவர்களின் பங்கு அளப்பரியது.(மொத்தம் = 314 கட்டுரைகள். பாத்திமா = 237, Thilakshan = 21, மயூரனாதன் = 21, Sancheevis = 18, Kanags = 9, Kurumban = 5, Maathavan = 1, Sivakosaran = 1, Drsrisenthil = 1) பத்தில் ஒரு பங்கு கட்டுரைகள், அவர்களின் தளராத முயற்சியே. அதற்கு தலைவணங்குகிறேன். இத்தொகையில் குறிப்பிட்ட தொகையினை, ஒரு இலட்சமாவது, அவர்களுக்காக ஒதுக்கி, பரிசோ அல்லது நாம் கூடும் நாட்களில் அவர்களும் இணையவழியே கலந்தாய்வு செய்தல் நன்று.
  • யார் கலந்து கொள்ளலாம்? பயனர்:Asaf பஞ்சாபில் வேங்கைத் திட்டப்பயிற்சி அளித்த போது, இத்திட்டத்தில் ஈடுபடாதவர் அழைக்க இயலாது எனத்தெளிவாக கூறியுள்ளார். விக்கிமேனியா நிகழ்ச்சிகளுக்கு பிறரை அழைக்கலாம் என்பதை நாமும், சென்ற முறை போல பின்பற்ற வேண்டும். இத்திட்டத்தில் ஈடுபடாதவரை இதில் இணைத்துக் கொள்ள, நான் உடன்படவில்லை; விருப்பமில்லை. யார்? யார்? இதில் கலந்து கொள்ள இயலும் என்ற பட்டியல் அமைக்க என்ன வரையறை என அளித்தால் நானும் உடன் இணைந்து செயற்பட விரும்புகிறேன். தமிழில் பங்களித்த 62 பங்களிப்பாளர்களில், 25 தமிழ் பங்களிப்பாளர்களும்,பிற மொழியினர் 15 நபர்களும் இருத்தல் சிறப்பு.
  • சமூக ஒப்புதல் : கூகுள் படிவம் மூலமே பலரது எண்ணங்களைப் பெற்று, CIS நடத்தியுள்ளது. அதனை நாமும் கலந்து கொள்வோரிடம் பெறலாம். விக்கியிலேயே இதற்கான கருவியுள்ளது காண்க : https://wudele.toolforge.org/ இணையவழி உரையாடல் வழி புரிந்துணர்வு அதிகமாகும். அதனை ஆவணப்படுத்த இயலாது. ஆவணங்களே பின்னால் இது போன்று நிகழ்வுகளை எடுத்து நடத்த சிறந்த எடுத்துக்காட்டாக அமையும்.
  • நிகழ்விடம் மதுரையில் நடத்தவே விருப்பம். ஏனெனில், பஞ்சாபியர் அவர்களின் வரலாற்று இடங்களைக் காட்டினர். நாமும் அதுபோல காட்ட, ஊட்டி உகந்ததல்ல. பஞ்சாபியர் தில்லியில் இருந்து மதுரை வருவதை குறைவான செலவு. கோவை வந்து மீண்டும் ஊட்டி நகர்வது அலைச்சல். மேலும், ஊட்டி வரலாற்று சிறப்பு மிக்க இடமல்ல. ஆனால், விக்கிமேனியாவினை ஊட்டியில் நடத்தலாம். ஏனெனில் அதுபுதியவர்களை ஈர்ப்பதற்கான நிகழ்வாக அமையும்.
உங்கள் அடிப்படைப் புரிதலில் முரண்படுகிறேன். இப்பயிற்சி என்பது கட்டுரை எழுதியவர்களுக்குத் தரும் பரிசாகப் பார்க்கவில்லை. தமிழ் விக்கிப்பீடியாவிற்குக் கிடைத்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியாகவே பார்க்கிறேன். எனவே குறிப்பிட்ட நிதியை ஒதுக்கி, பகிர்ந்தளிப்பது என்ற பார்வை பிழையாகக்கூடும். அவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியாக என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். அனைவருக்கும் வழங்கப்படும் நினைவுப் பரிசினை அவர்களுக்கும் அளிக்கலாம். உள்ளூரில் சிறு சந்திப்பு நடத்தவிரும்பினால் உதவலாம். இத்திட்டத்தில் பங்கெடுத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கலாமே அன்றி இவர்களுக்கு மட்டும்தான் என்பதை ஏற்கவியலாது. இத்திட்டம் வளரப் புதியவர்களுக்குப் பயிற்சியளிப்பது தேவை. ஊட்டியில் விக்கிமேனியாவை நடத்துவது சவாலானது. சிறு நல்கைதான் அவர்களிடம் கேட்டுள்ளோம். மேலும் அவ்வூரில் ஒருங்கிணைக்க பயனர்கள் யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை என்பதால் மதுரையை மையமாகக் கொண்டே விண்ணப்பித்துள்ளேன். உள்ளூர் பயனர்கள் இல்லாமல் நடத்துவது கடினம். வேங்கைத் திட்டப் பயிற்சியை மதுரையில் நடத்த மற்றவர்களும் விருப்பம் தெரிவித்தால் அவ்வாறும் செய்யலாம். நீங்களே ஒரு கருத்து கேட்புப் படிவத்தை உருவாக்கி, மற்றவர்களிடம் கருத்து கேட்க உதவுங்கள். -நீச்சல்காரன் (பேச்சு) 07:42, 7 சூன் 2022 (UTC)[பதிலளி]
  • //உங்கள் அடிப்படைப் புரிதலில் முரண்படுகிறேன். // பஞ்சாபில் வேங்கைத்திட்டம் 1 பயிற்சி அளித்த ஆசாப் அவர்கள் கூற்றோடு நீங்கள் முரண்படுகிறீர்கள். அவர் கூறியதை நான் இங்கு நினைவூட்டினேன். இது குறித்து உங்கள் எண்ணத்தை அவருடனோ CSI அமைப்பினரோடு உரையாடினால் உங்கள் புரிதலில் மாற்றம் ஏற்படும்.
  • மேலும், 62 பயனர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்ச்சி எத்தனை தமிழ் பயனர்களுக்கானது என்ற வினாவினை கீழே மூர்த்தி கேட்டுள்ளார். அதற்கு எனது முன்மொழிவு மேலே கூறியது போல, கட்டுரை மதிப்பீட்டுக்கருவியில் முதலில் வரும் 25 நபர்களே. அவர்களில் வர இயலாதவர்கள் இருப்பின் அந்த வரிசைப்படி அடுத்துள்ளவர்களே. இத்திட்டத்தில் பங்கு பெறாதவர் வர விருப்பப்பட்டால், அவர்களுக்கான விதிமுறைகள் குறித்து நீங்கள் தான் கூறவேண்டும்.
  • மதுரை என்பதே இறுதியிடமாக அனைவரும் ஏற்றுக்கொள்வர் என்பதே எனது புரிதல். இதனை முன்னெடுப்பவர் நீங்கள் என்பதால் எத்தகைய உதவிகள் பிறர் செய்ய வேண்டும் என்று வரிசைப்படுத்துக. சென்ற முறை பாலாஜி சிறப்பாக ஒருங்கிணைத்தாரென்றே எண்ணுகிறேன். அவரிடமும் நீங்கள் கலந்துரையாடலம்.
  • விக்கிமூலத்திற்கென தனிப்பட்ட கல்வி அறக்கட்டளையொன்று 5 இலட்சங்கள் தருவது போல உள்ளது. முழுவிவரமும் கிடைத்த பிறகு, விக்கிமூலத்தில் தொடர்வோம். மேலும், விக்கிமூலத்தில், விக்கிமீடிய நல்கைக்குரிய, நூல்கள் மேம்பாட்டு பணிகளையும் செய்து வருவதால், ஓரளவே என்னால் இந்நிகழ்வுக்கான பணிகளில் ஈடுபடு இயலும். எனவே, பெயர் பட்டியல் தருக. --உழவன் (உரை) 09:27, 8 சூன் 2022 (UTC)[பதிலளி]
    @Info-farmer வணக்கம், இது குறித்து ஆசாப் மற்றும் ஏற்பாட்டாளருடன் உரையாடினேன். வேங்கைத் திட்டத்தில் பங்கெடுத்தவர்கள் மட்டும் தான் பயிற்சிக்கு வர வேண்டுமென்று தான் சொன்னதாக நினைவில்லை என்று ஆசாப் சொன்னார். அந்தச் சமூகம் முடிவு செய்து கொள்ளலாம் என்று தான் சிஐஎஸ்சும் சொல்கின்றனர். எனவே தமிழ் விக்கிப்பீடியாவை வளர்த்தெடுக்க யாரெல்லாம் உதவுவார்களோ அவர்களை எல்லாம் இணைக்கும் வகையில் 1. வேங்கைத் திட்டப் பங்களிப்பு, 2. பொதுவான விக்கிப்பீடியப் பங்களிப்பு, 3. இதற்கு முந்தைய நேரடிப் பயிற்சிகளில் கலந்து கொள்ளாதவர்கள். இந்தக் காரணிகளை வைத்து நிதிநல்கைக் குழு தேர்வு செய்யலாம் எனப் பரிந்துரைக்கிறேன். நீச்சல்காரன் (பேச்சு) 03:44, 10 சூன் 2022 (UTC)[பதிலளி]
    சரி. இதனால் மேலும் நண்பர்கள் இணைய இருப்பதால், அவர்களுக்கான வரையறை இருப்பின் பிணக்கு இல்லாமல் தேர்வு செய்ய வசதியாக இருக்கும். விக்கிமூல வளங்கள் விக்கிப்பீடியாவிற்கும் உதவக்கூடியவையே. அவ்வளங்களை அடுத்து நடக்க இருக்கும் போட்டிகளில் பயன்படுத்துவது குறித்து வழிகாட்டுதல்களையும், பயிற்சிகளையும் தர திட்டமிருந்தால் அவர்களாலும் வளர்ச்சி உண்டு. இதுவரை பிற திட்டப்பயனர்களை நாம் உடன் அழைத்து எந்த நிகழ்வுகளும் நடத்தவில்லை என்பதால் இந்த முன்மொழிவு எனவே, வேங்கைத்திட்டங்களில் ஈடுபடாதவருக்கான தகுதிகளையும், இதில் தேர்ந்தெடுக்கப்பட்டோரின் பட்டியலும் இருப்பின் அடுத்த கட்டம் நோக்கி நாம் நகரலாமென்றே எண்ணுகிறேன். உழவன் (உரை) 08:41, 10 சூன் 2022 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் வடிவமைத்தவன் என்ற முறையில், என் கருத்து: யார் பங்கேற்பது என்பது குறித்த நீச்சல்காரனின் அணுகுமுறை சரியானது. ஒரு சமூகம் ஒட்டு மொத்தமாக முன்னேற வேண்டும் என்ற நோக்கிலேயே இத்திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பரிசு வடிவமைக்கப்பட்டது. நெடுநாள் பயனர்கள், புதியவர்கள், திட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் என்று பல தரப்பட்டவர்கள் கலந்து கொள்ளும் போது தான், ஒருவரிடம் இருந்து மற்றவர் கற்றுக் கொள்ள முடியும். கலந்து கொள்வோரின் பன்முகத் தன்மை உறுதி செய்யப்படும். --இரவி (பேச்சு) 19:38, 13 சூன் 2022 (UTC)[பதிலளி]

  • பயிற்சி நடக்கும் இடம் முடிவு செய்யப்பட்டால் மற்றவை அனைத்தும் எளிதில் இறுதியாகிவிடும். ஊட்டியில் நமது பயனர் எவரும் இல்லாத காரணத்தால், பயிற்சி முடியும்வரை ஒவ்வொரு திட்டமிடலிலும் இத்தகைய சிக்கல்களுக்கு வாய்ப்புண்டு. எனவே நீச்சல்காரன் கூறியது போல மதுரை நலம் என நினைக்கிறேன். கூகுள் படிவம் மூலம் பங்கேற்பாளர்கள் எண்ணிகையை நாம் இறுதி செய்ய முடியும். --கி.மூர்த்தி (பேச்சு) 06:17, 7 சூன் 2022 (UTC)[பதிலளி]
  • இவ்வாறாக ஒரு நிகழ்விற்கான ஆயத்தம் நடைபெறுகிறது என்பதை இன்று எதேச்சையாக இந்தப் பக்கத்தில் பார்க்கும்போது அறிந்தேன். இத்திட்டத்தில் கலந்துகொண்ட பலரும் என் நிலையில் இருப்பர் என நினைக்கிறேன். வேங்கைத்திட்டம் 2.0 போட்டியில் பங்குகொண்ட அல்லது அதிக எண்ணிக்கையில் (முதலிட நிலையில்) எழுதியவர்களுக்கு இச்செய்தி அனுப்பப்பட்டிருந்தால் அவர்கள் தத்தம் கருத்தைச் சொல்ல உதவியாக இருந்திருக்கும். இவ்வாறான எந்த ஒரு திட்டத்தின் தொடர்புடைய நிகழ்வுக்கும் உரியவர்களை அழைத்து, அரவணைத்துச் செல்லும் நடைமுறையானது பல புதிய கருத்துகளைப் பெற உதவும்.
  • பயிற்சி நடக்கும் இடம் மதுரையாக இருக்கவேண்டும் என விழைகிறேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 08:49, 9 சூன் 2022 (UTC)[பதிலளி]
@பா.ஜம்புலிங்கம்: வணக்கம், இன்னும் எங்கே நடத்துவதென்ற உறுதியான முடிவு எடுக்கவில்லை. மதுரையில் நடத்த வாய்ப்புள்ள இடங்களை நீங்கள் பரிந்துரைத்து ஒருங்கிணைக்க இயலுமா? -நீச்சல்காரன் (பேச்சு) 12:52, 9 சூன் 2022 (UTC)[பதிலளி]
வணக்கம், நீச்சல்காரன். மேலே இருந்த விவாதத்தின் அடிப்படையில் என் விருப்பத்தை மட்டும் தெரிவித்தேன்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:31, 9 சூன் 2022 (UTC)[பதிலளி]
சரி ஐயா. களத்தில் பயனர்கள் குறைவு என்பதால் மதுரையில் நடத்துவதற்கு வாய்ப்பு குறைவு. இருந்தாலும் மற்றவர்கள் கருத்தைக் கேட்டு முயல்வோம். -நீச்சல்காரன் (பேச்சு) 16:19, 9 சூன் 2022 (UTC)[பதிலளி]
சரி, நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:46, 10 சூன் 2022 (UTC)[பதிலளி]

வணக்கம், நீச்சல்காரன். கருத்துக்கேட்புப்படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பியுள்ளேன். தகவலுக்காக.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:30, 13 சூன் 2022 (UTC)[பதிலளி]

  • பயிற்சி நடக்கும் இடம் எது என்று முடிவு செய்யவேண்டும் மதுரை நலம் என நினைக்கிறேன். மதுரை இல்லாவிட்டால் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க ஏதாவது நகரத்தில் நடத்தலாம் கூகுள் படிவம் மூலம் பங்கேற்பாளர்கள் எண்ணிகையை நாம் இறுதி செய்யலாம்.--அருளரசன் (பேச்சு) 23:59, 9 சூன் 2022 (UTC)[பதிலளி]
விக்கிமீடியா உடன் திட்டங்களில் தொடர்பங்களிப்பு செய்யும் நபர்களுக்கு பயிற்சியில் கலந்துகொள்ள வாய்ப்புகள் வழங்கினால் விக்கிபீடியா பங்களிப்பு, மேம்பாடு முழுமைபெற ஏதுவாக அமையும். --TVA ARUN (பேச்சு) 06:24, 10 சூன் 2022 (UTC)[பதிலளி]

முதற்கண் உங்களுக்கு நன்றி நீச்சல்காரன். பயிற்சிப் பட்டறையில் குறைந்தது நான்கு கூறுகளைப் பற்றி அக்கறை கொண்டு பயிற்சி அளிக்கவேண்டும். (1) தொழினுட்பம் (எப்படி படம் சேர்ப்பது, அட்டவணை சேர்ப்பது, உள்தலைப்புகள் இடுவது, மேற்கோள்கள், அடிக்குறிப்புகள், உசாத்துணைகள் சேர்ப்பது போன்றவை. (2) கட்டுரையின் உள்ளடக்கம் எப்படி அமைக்க வேண்டும். (கட்டுரைகளின் பெரும்பாலான வகைகள் (எ.கா. (அ) வாழும் நபர், அறிவியலாளர், இலக்கிய ஆளுமை.. பற்றிய கட்டுரைகள், (ஆ) நகரங்கள், இடங்கள், ஆறு, மலை, மரஞ்செடிகொடிகள், விலங்கு-பூச்சிகள் பற்றிய கட்டுரைகள், (இ) அறிவியல் கருத்து, கணிதவியல் கருத்து அரசியல் கருத்து-கோட்பாடு, கலை, வரலாறு பொருளாதாரம் ) (3) கலைக்களஞ்சிய நடை (எளிய தொடர்கள், நல்ல உரைநடை, மிகைப்பட உரையாமை, நடுநிலைமை, சான்றுடன் எழுதுதல், தமிழிலக்கணம் பேணுதல்.) (4) உரையாடல் பண்பு, நன்னடத்தை. இவை அனைத்தையும் விரிவாகச் சொல்லுதல் கடினம். ஒவ்வொரு பிரிவிலும் சிலவற்றைச் சொல்லிவிட்டு, தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள உதவிப்பக்கங்களைக் காணப் பரிந்துரைக்கலாம். இடம் முதலானவை எல்லாம் பிற தரவுகள் வசதிகள், பங்கு பெறவிரும்புவோரின் விருப்பம் முதலானவற்றைப் பற்றி அமைபவை. --செல்வா (பேச்சு) 20:32, 10 சூன் 2022 (UTC)[பதிலளி]

நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் மரபார்ந்த சிறப்பு என்பது முதன்மையான காரணியாகவோ முக்கிய தேவையாகவோ இருக்கத் தேவையில்லை. மதுரையில் மரபுச் சுற்றலா செல்லலாம் என்றால் ஊட்டியில் சூழல் சுற்றுலா செல்ல முடியும். பயனர்கள் இளைப்பாறி மனம் மகிழவும் முடியும். சென்னையோ மதுரையோ கோவையோ ஊட்டியோ உலகத்தரமான நட்சத்திர விடுதிகளும் உள்ளன. எனவே, பெரும்பகுதி ஏற்பாடுகளை அவர்களே கவனித்துக் கொள்வர். அதே நேரம், நிகழ்வு நடக்கும் ஊரை நன்கு அறிந்து, ஒருங்கிணைக்கும் பயனர்கள் களத்தில் இருப்பதும் முக்கியம். எனவே, இந்த நோக்கில் சென்னை போன்ற நகரங்களிலும் நிகழ்ச்சியை நடத்தலாம். சென்னையில் போக்குவரத்து வசதிகள் மிகுதி. சந்திகரில் இருந்து ஒருவர் தில்லிக்குப் போய் ஊட்டியோ மதுரையோ வருவதை விட சந்திகரில் இருந்து நேரடியாக சென்னை வரும் விமானத்தைப் பிடிப்பது அலைச்சல் குறைந்தது. எதற்கு முன்னுரிமை கொடுத்து எங்கு நிகழ்ச்சியை நடத்துவது என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் இது போன்ற பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கலாம். --இரவி (பேச்சு) 19:49, 13 சூன் 2022 (UTC)[பதிலளி]

பல்வேறு தடைகளையும் தாண்டி மற்றொரு முன்னெடுப்பு மகிழ்ச்சியளிக்கின்றது. அனைவருக்கும் நன்றிகள்.

கருத்துக் கேட்புப் படிவம்

[தொகு]

நிகழ்வு குறித்து இதுவரை வந்துள்ள கருத்துக்களைக் கொண்டு இந்தப் படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் திட்டங்களை முன்னெடுப்போம். கேட்புப் படிவம் கருத்துக்கள் கூடுதல் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் இங்கும் இடலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 18:54, 9 சூன் 2022 (UTC)[பதிலளி]

பிறர் படிவத்தில் எழுதியதை உடனுக்குடன் கூகுள் ஆவணத்தில் தெரியபடுத்தும் நுட்பத்தினை அமைத்து, வெளிப்படைத்தன்மையை வளர்க்கின்றமைக்கு தலைவணங்குகிறேன். இப்படிவத்தினை நிரப்ப இறுதிநாள் என்று எனத்தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--உழவன் (உரை) 11:59, 11 சூன் 2022 (UTC)[பதிலளி]
பொதுவாக ஒரு வாரம் காத்திருக்கலாம். நிகழ்ச்சித் திட்டமிடல் குழு முன்னின்று இதை எடுத்தால் அவர்களே இந்த இறுதிநாளை முடிவு செய்யலாம். உரையாடலில் காட்டும் ஆர்வத்தில் நீங்களே பொறுப்பேற்றுப் பயிற்சிகளைத் திட்டமிட்டால் நன்று. நான்கு குழுக்களாகப் பிரிந்து நிகழ்ச்சியை நடத்தலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 18:36, 11 சூன் 2022 (UTC)[பதிலளி]
சரி.//நிகழ்ச்சி திட்டமிடல் குழு// உள்ளதெனில், அவர்களுடன் இணைய விரும்புகிறேன். விக்கிமூல வளங்களைப் பயன்படுத்தி குறிப்பாக கலைக்களஞ்சியங்களை பயன்படுத்தலாமென்று நீங்கள் முதல் சுற்று பேச்சில் ஏற்றபிறகு, அதற்காக அடித்தளமிட்டு வருகிறேன். s:அட்டவணை:கலைக்களஞ்சியம் 1.pdf, s:அட்டவணை:அறிவியல் களஞ்சியம் 1.pdf ஆகியவைகளில் அருளரசன், மூர்த்தி, இன்னும் சில விக்கிமூல நண்பர்களுடன் இணைந்து மேம்படுத்தி வருகிறேன். அப்பொழுதுதான் அந்த இலக்கு சிறப்பான விளைவினைத் தரும். சீனியிடன் இணைந்து வழங்கி(server) வழியே எழுத்துணரியாக்கம்(for double column books) செய்ய பயிற்சி பெற்று வருகிறேன். 1. உரிமம் குறித்த அடிப்படை புரிதல்களையும், மொழிபெயர்ப்புகளையும் (எ-கா) m:Volunteer_Response_Team/Recruiting/ta) செய்யவது குறித்து பயிற்சி அளிக்கவும், 2. பொதுவாக பைவிக்கிப்பீடியா வழியே குறிப்பாக PAWS நுட்பம் பயன்படுத்தி துப்புரவு, பகுப்பு மேலாண்மை பயிற்சிகளை அறிமுகம் செய்ய அணியமாக உள்ளேன். சமூக ஊடகங்களில் இருக்கும் ஆர்வம் நண்பர்களுக்கு, இப்பேச்சுப்பக்கத்தில இல்லையே என வருந்துகிறேன். நீங்கள் உருவாக்கிய கூகுள் விண்ணப்பம் போடதவர்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்தால், பலரும் விரைந்து இணைவர் என்றே எண்ணுகிறேன். விண்ணப்பம் கூட எழுதாதவர்களும் நிகழ்வில் கலந்து கொள்ளும் இச்சூழ்நிலையை மாற்றவே கோருகிறேன். நிகழ்வில் சந்திப்போம். மேற்கூறியவற்றில் ஆர்வமுள்ளவர் எனது பேச்சுப்பக்கத்தில் உங்களது எண்ணங்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். வணக்கம். உழவன் (உரை) 03:04, 12 சூன் 2022 (UTC)[பதிலளி]
//நீங்கள் உருவாக்கிய கூகுள் விண்ணப்பம் போடதவர்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்தால், பலரும் விரைந்து இணைவர் என்றே எண்ணுகிறேன். விண்ணப்பம் கூட எழுதாதவர்களும் நிகழ்வில் கலந்து கொள்ளும் இச்சூழ்நிலையை மாற்றவே கோருகிறேன்.// நீங்கள் கூற வருவது புரிகிறது ஆனால் விக்கிப்பீடியாவில் யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது அவ்வாறு செய்யவும் கூடாது. ஸ்ரீதர். ஞா (✉) 09:36, 15 சூன் 2022 (UTC)[பதிலளி]

பங்கேற்பாளர்களுக்கான தகுதிகள்

[தொகு]

ஒட்டு மொத்தமாகச் சிறப்பாகச் செயற்படுகிற விக்கிப்பீடியா சமூகத்துக்குத் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் பயிற்சி முகாம் ஒன்றும் நடத்தப்படும். என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் எந்தக் குழப்பமும் இன்றி போட்டியில் கலந்து கொண்டவர்கள் மட்டுமன்றி நாம் நம் சமூகத்தில் உள்ள பலரையும் இதில் கலந்துகொள்ளக் கோரலாம்.

பங்கு பெறுவோருக்கான தகுதிகளாகப் பின்வருவன அமையட்டும் என்று பரிந்துரைக்கிறேன். உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள்.

  • குறைந்தது 1000 முதன்மைவெளித் தொகுப்புகள்
  • பெண்களுக்கு முன்னுரிமை
  • வேங்கைத் திட்டக் கட்டுரைப் போட்டியில் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னுரிமை.
  • தொடர்ந்து பங்களித்து வரும் புதிய பயனர்கள் (இந்தப் போட்டி நடந்து முடிந்து 2 ஆண்டுகள் கழித்து இந்தப் பயிற்சிப் பட்டறை நடைபெறுகிறது. போட்டிக்குப் பிறகு பல புதிய பயனர்கள் ஆர்வமாகப் பங்களித்து வருகின்றனர் அவர்களில் சிலருக்கு வாய்ப்பு வழங்குவது முறையாக இருக்கும்).
  • தொடர்பங்களிப்பாளர்களாக இருந்து தற்போது பங்களிக்காதவர்கள் ( முன்னர் தொடர்பங்களிப்பாளர்களாக இருந்தவர்கள் கொரோனா , பணிச் சூழல் போன்ற காரணங்களால் தற்போது பங்களிக்க இயலாமல் இருந்திருக்கலாம் அவர்களுக்கு இந்தப் பயிற்சி புத்துணர்ச்சியினை அளிக்கும்)

ஸ்ரீதர். ஞா (✉) 09:29, 15 சூன் 2022 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவில் ஆயிரம் தொகுப்புகளைக் கடந்தவர்கள் மொத்தம் 174 தான். இதில் 2020,21,22 ஆண்டுகளில் பங்களித்துக் கொண்டுவருபவர்களுள் என்றால் சுமார் 80 பயனர்கள் தான் உலக அளவில் வருவார்கள். எனவே இந்த வரையறையைத் தரவரிசைப்படுத்தப் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர தகுதியாக வைப்பது வேண்டாம். மற்ற பரிந்துரைகளை எடுத்துக் கொள்ளலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 12:51, 15 சூன் 2022 (UTC)[பதிலளி]
//ஆயிரம் தொகுப்புகளைக் கடந்தவர்கள் மொத்தம் 174 தான்// இந்தத் தகவல் ஆச்சரியமாக உள்ளது. இதனை அறிந்துகொள்ளும் பக்கம்/ கருவி இருந்தால் அறியத் தரவும். ஸ்ரீதர். ஞா (✉) 05:45, 16 சூன் 2022 (UTC)[பதிலளி]
கருவிகள் இருக்கலாம் தெரியவில்லை. ஆனால் பயனர்களை முதல்பக்கத்தில் அறிமுகம் செய்ய, விக்கி ஏபிஐ வழி நானாக எழுதிய நிரல்வழியே இத்தரவினை அறிந்தேன். -நீச்சல்காரன் (பேச்சு) 10:01, 16 சூன் 2022 (UTC)[பதிலளி]

ஒருங்கிணைப்புக் குழு

[தொகு]

பங்கேற்பாளர்களைத் தேர்வு செய்வது , எந்தெந்த பயிற்சிகளை வழங்கலாம், நிகழ்ச்சி நிரல் தயாரித்தல் , பங்கேற்பாளர்களுக்கு நினைவுப் பரிசு வழங்குதல் போன்ற பல வேலைகள் உள்ளதால் ஒருங்கிணைப்புக் குழு அவசியமானதாகும். எனவே வேங்கைத் திட்டம் 2 இல் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்தவர்களான பார்வதிஸ்ரீ, கி.மூர்த்தி,உழவன்,பாலாஜி ,தினேஷ்குமார் பொன்னுசாமி,நீச்சல்காரன்,இரவி (திட்ட வடிவமைப்பாளர்), Tnse anita cbe ஆகியோரைக் கேட்டுக் கொள்கிறேன். மற்ற பயனர்களும் விரும்பினால் இணையலாம். ஸ்ரீதர். ஞா (✉) 09:52, 15 சூன் 2022 (UTC)[பதிலளி]

நான்கு குழுவினைப் பரிந்துரைக்கிறேன். 1. உள்ளூர் ஏற்பாட்டுக் குழு - நிகழ்விடம் ஒருங்கிணைப்பு, தங்குமிடம், உணவு, போக்குவரத்து, நிகழ்விற்கான பொருட்கள் உதவி போன்றவற்றை முன்னெடுப்பர். 2. நிதி நல்கைக் குழு - தமிழ் மற்றும் பிற மொழியினர் விண்ணப்பிக்கும் கோரிக்கையைப் பரிசீலனை செய்து தேர்வு செய்தல் & கலந்து கொண்ட பின்னர் நிதி நல்கையளித்தல் போன்றவற்றை முன்னெடுப்பர். 3. பயிற்சி திட்டமிடல் குழு - என்னென்ன பயிற்சி & நிகழ்ச்சி என்று வடிவமைத்தல், பயிற்சியாளர்களை ஒருங்கிணைத்தல் போன்றவற்றை முன்னெடுப்பர். 4. பரப்புரைக் குழு - தமிழ் மற்றும் பிற மொழி விக்கித்திட்டங்களில் அழைப்பினைப் பகிர்தல், பயனர்களுக்குத் தகவலளித்தல். சமூக ஊடகம் மற்றும் செய்தி நிறுவனங்களுக்குச் செய்தி அனுப்புதல் போன்றவற்றை முன்னெடுப்பார்கள். தேவையின் அடிப்படையில் ஒருவர் பல குழுவிலும் இருக்கலாம் அந்தந்தக் குழுவினர் முடிவுகளை எடுத்து விரைவாகச் செயல்படலாம். அவ்வப்போது ஒருங்கிணைந்த சந்திப்பில் அனைவரும் கலந்து திட்டமிடலாம். இதுவரை நிதி நல்கைக் குழுவில் பாலாஜியும், பயிற்சித் திட்டமிடல் குழுவில் த.உழவனும் இணைய ஒப்புதல் அளித்துள்ளனர். விருப்பமுள்ள மற்றவர்களும் இணைந்து கொள்ளலாம். தற்போதுவரை மதுரையில் நடத்துவதையே அதிகப் பயனர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவ்வாறெனில் மதுரையிலேயே மகாலிங்கம், அம்மார் மற்றும் கிருஷ்ணமூர்த்தி போன்ற உள்ளூர் பயனர்களிடம் பேசித் திட்டமிட முயவோம். நமக்குள் இவ்வார ஞாயிறு(ஜூன் 19) சந்திப்பினை நடத்தி சிஐஎஸ்ஸுடனான அடுத்த சந்திப்பான 26 ஜூனுக்குள் திட்ட வரைவை வடிவமைக்க வேண்டும். -நீச்சல்காரன் (பேச்சு) 12:39, 15 சூன் 2022 (UTC)[பதிலளி]
என்னால் சந்திப்புகளில் கலந்துகொள்ள இயலவில்லை. இயன்றால் பயிற்சித்திட்டத்தில் வெவ்வேறு பகுப்புக் கட்டுரைகளுக்கான சான்றுகளை அறியும் முறைகளையும் எடுத்துக்காட்டுகளையும் தரலாமா? -- சுந்தர் \பேச்சு 03:42, 16 சூலை 2022 (UTC)[பதிலளி]
கட்டுரைகளுக்கான சான்றுகளை அறியும் முறைகள் எனக்கும் தேவை. அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். --கி.மூர்த்தி (பேச்சு) 03:52, 16 சூலை 2022 (UTC)[பதிலளி]

அடுத்த கலந்துரையாடல்

[தொகு]

நாளை மாலை (19 June) 7 மணியளவில் உரையாடுவோம் meet.google.com/hiu-ygsn-stt ஏறக்குறைய அனைவர் பரிந்துரைகளும் உள்ளன. இதைக் கொண்டு நிகழ்ச்சி நிரல் வரைவை உருவாக்க இனி முயல்வோம். 26 ஜூன் மாலை சிஐஎஸ்ஸுடனான சந்திப்பில் இதை முன்வைப்போம் -நீச்சல்காரன் (பேச்சு) 03:07, 18 சூன் 2022 (UTC)[பதிலளி]

இன்றைய கலந்துரையாடலில் ஸ்ரீதர், மூர்த்தி, பாலு, தியாகு கணேஷ், பார்வதிஸ்ரீ, மகாலிங்கம், சஞ்சீவி, செல்வசிவகுருநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். இன்றைய உரையாடலில் அடிப்படையில் இந்த பயிற்சி வரைவை உருவாக்கியுள்ளோம். கூடுதல் பரிந்துரைகளையும் வழங்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 15:25, 19 சூன் 2022 (UTC)[பதிலளி]

பயிற்சிக்கான நாட்களை இறுதி செய்தல்

[தொகு]

வேங்கைத் திட்டப் பயிற்சி நடத்த ஒப்புதல் கிடைத்துள்ளது. மேலே எடுக்கப்பட்ட கருத்துக் கேட்பின்படி 30 தமிழ் விக்கிப்பீடியர்களுக்கும் 10 இரண்டாம்(பஞ்சாபி) மற்றும் மூன்றாம்(வங்கம்) இடம் பிடித்த விக்கிக்குழுவினரும் உறுதி செய்துள்ளோம். முன்னதாகப் பரிந்துரைத்த மாதத்திற்குக் குறுகிய காலமுள்ளதால் புதிய காலத்தைப் பரிந்துரைக்கக் கோரியுள்ளனர். அண்மையில் மதுரையில் விக்கிமேனியா சந்திப்பும் நிகழ்ந்துள்ளது. அதனால் விரும்பினால் வாய்ப்புள்ள வேறு பகுதிகளைப் பரிந்துரைக்கலாம். காலமும் இடமும் குறித்தப் பரிந்துரைகளை அதே படிவத்தில் முன்வைக்கலாம். பொதுவாக விடுமுறைக் காலமாக டிசம்பர் கடைசி வாரம் இருப்பதால் அதைப் பரிந்துரைக்கிறேன். வேறு கருத்துக்களையும் வரவேற்கிறோம். -நீச்சல்காரன் (பேச்சு)

பயிற்சிக்கான திட்ட வரைவைப் பரிந்துரைகளாக அனுப்பியிருந்தோம். மேலும் செலவுகளின் வரைவையும் அனுப்பக் கோரியுள்ளனர். ஏற்கனவே மதுரையில் விக்கிமேனியா நிகழ்வு கடந்த மாதம் நடைபெற்றதால் மீண்டும் அதே ஊரில் இப்பயிற்சிக்கான நிகழ்வை ஒருங்கிணைப்பதில் ஆர்வம் சற்று குறைந்துள்ளது. வேறு ஊரில் நிகழ்வினை நடத்த யாரேனும் விரும்புகிறீர்களா? -நீச்சல்காரன் (பேச்சு) 20:20, 23 செப்டம்பர் 2022 (UTC)
நல்லது. கோவையில் நடத்துங்கள். வேங்கைத் திட்டப் பயிற்சி நிகழ்விற்கான ஒப்புதலை சிஐஎஸ் அளித்துள்ளது. டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி இரண்டாவது வார தொடர்விடுமுறையை ஒட்டி நிகழ்வினை நடத்தலாம். ஆர்வமுள்ளவர்கள் ஒருங்கிணைப்பில் கலந்து கொண்டு நிகழ்வினைப் பயனுள்ளதாக்க விரும்புகிறேன். ஏற்கனவே திட்ட வரைவை உருவாக்கிவிட்டோம். சில தினங்களில் ஒரு இணையவழிச் சந்திப்பின் மூலம் திட்டமிடலை விரைவுப்படுத்தலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 11:50, 25 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]

இவ்வார இறுதியிலோ அல்லது மற்றொரு நாளிலோ ஒரு இணையவழி உரையாடலை நிகழ்த்தலாம். வசதியுள்ள நாளை, நேரத்தை தமிழ் விக்கிப்பீடியர்கள் தெரிவிக்கலாம்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 13:03, 25 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]

29.10.2022 அல்லது 30.10.2022 மாலை நிகழ்த்தலாம்.--கி.மூர்த்தி (பேச்சு) 04:16, 26 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]
நல்லது. 29 அக்டோபர் சனியன்று மாலை 7 மணியளவில் உரையாடுவோம். நான்கு குழுக்களின் பணி, மேல்விக்கியில் திட்டப் பக்கம், பஞ்சாபி, வங்கமொழியினர்க்கு உரையாட அழைப்பு, தேதி & விடுதியை நிதிநிலையைக் கருத்தில் கொண்டு இறுதி செய்தல் போன்றவை முக்கிய உரையாடல் பொருளாகக் கொள்ளலாம். அவரவர் பரிந்துரைகளை முன்வைக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 05:58, 27 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]
நாளை திட்டமிடல் தொடர்பாக இணையவழிச் சந்திப்பினை நடத்துவோம் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயிற்சியை ஒருங்கிணைக்க அழைக்கிறோம். https://meet.google.com/dwd-bucd-edb முக்கிய உரையாடல்களைப் பின்னர் விக்கிப்பீடியாவிலும் இற்றை செய்வோம். -நீச்சல்காரன் (பேச்சு) 13:27, 28 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]

ஊட்டியை விட சென்னையே அனைவரது பயணத்தும் எளியது. 2023 ஜனவரி மாதமே நல்லது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:01, 27 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]

@உலோ.செந்தமிழ்க்கோதை ஊட்டியில் நடத்தவில்லை. கோவையில் நடத்துகின்றனர். சென்னையில் நடத்த எந்தப் பயனரும் முன்வராத போது எப்படி நடத்துவது. -நீச்சல்காரன் (பேச்சு) 12:20, 27 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]

அக்டோபர் 29 உரையாடல்

[தொகு]

இன்றைய இணையவழிச் சந்திப்பில் பாலு, அபிராபி, பார்வதிஸ்ரீ, பாலாஜி, ஸ்ரீதர், மகாலிங்கம், செல்வசிவகுருநாதன், கி. மூர்த்தி, சத்தியராஜ், சிவகோசரன், வசந்தா ஆகியோர் கலந்து கொண்டோம். தேதி இறுதி ஆனவுடன் விடுதியை இறுதி செய்ய முடியும். மேலும் மேல்விக்கியில் பக்கம் உருவாக்கவும், மற்ற சமூகத்துடன் உரையாடவும் விவாதிக்கப்பட்டன. டிசம்பர் 23-25 அல்லது ஜனவரி 26-28 ஆகிய நாட்களுள் ஒன்றைப் பயிற்சிக்கான நாளாகப் பரிந்துரை செய்யப்பட்டது. நவம்பர் 2 ஆம் நாளுக்குள் இவற்றுள் ஒன்றை இறுதி செய்ய வேண்டும். மற்றவர்கள் தங்கள் கருத்தினை அதற்குள் தெரிவிக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 14:35, 29 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]

ஜனவரி 26-28 ஆகிய நாட்களில் பயிற்சியை வைத்துக்கொள்ளலாம் என்பது என் விருப்பம்--அபிராமி (பேச்சு) 15:36, 29 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]
சனவரி 26-28 ஆகிய நாட்களில் கோவையில் பயிற்சியை நடத்தலாம்.--Balu1967 (பேச்சு) 16:07, 29 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]
சனவரி 26-28 ஆகிய நாட்களில் பயிற்சியை நடத்தலாம் என்பதே எனது விருப்பமும் கூட--வசந்தலட்சுமி (பேச்சு) 16:44, 29 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]
சனவரி 26-28 ஆகிய நாட்களில் பயிற்சியை நடத்தலாம் என்பதே எனது விருப்பம்.--கி.மூர்த்தி (பேச்சு) 17:48, 29 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]
வானூர்திக் கட்டணம், விடுதிக் கட்டணங்கள், ஒட்டுமொத்த திட்டமிடல்கள் ஆகியனவற்றை கருத்திற் கொண்டு, சனவரி 26-28 ஆகிய நாட்கள் சிறந்தவை என்பது எனது கருத்து. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:12, 30 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]
சனவரி 26-28 ஆகிய நாட்களில் பயிற்சியை நடத்தலாம் என்பதே எனது விருப்பம்.--மகாலிங்கம் இரெத்தினவேலு --TNSE Mahalingam VNR (பேச்சு) 08:09, 30 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]
நிகழ்வைச் சிறப்பாகத் திட்டமிட்டு ஒருங்கிணைக்கத் தேவையான நேரத்தை வழங்குவதற்கு உதவும் என்பதால் சனவரி 26-28 காலப்பகுதியே எனது விருப்பமும் ஆகும். --சிவகோசரன் (பேச்சு) 13:43, 30 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]
சனவரி 26-28 -- ஸ்ரீதர். ஞா (✉) 07:25, 31 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]
நிகழ்வை நல்லமுறையில் திட்டமிட தேவையான கால அவகாசம் தேவை என்பதால் சனவரி 26-28 ஆகிய நாட்களில் பயிற்சியை நடத்துவதே நல்லது.--கு. அருளரசன் (பேச்சு) 08:42, 31 அக்டோபர் 2022 (UTC)[பதிலளி]
சனவரி 26-28 ஆகிய நாட்களில் பயிற்சியை வைத்துக்கொள்ளலாம் என்பது என் விருப்பம்--நேயக்கோ (பேச்சு) 13:14, 2 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]


பெரும்பான்மைக் கருத்துக்களின் அடிப்படையில் சனவரி 26-28 நிகழ்வு நடைபெறும்.

நிகழ்விடம் இறுதி செய்தல்

[தொகு]

ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் பல விடுதிகளை அபிராமி விசாரித்து, இறுதியாக இரு விடுதிகளான oxyvalley resorts மற்றும் bungalowclub resort ஆகியவற்றைத் தேர்வு செய்து சிஐஎஸ் அமைப்பிடம் தெரிவித்துள்ளோம். இந்த நிதி நிலைக்குள் நகருக்குள் பெரும்பாலான விடுதிகள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. சிஐஎஸ்சின் அறிவுறுத்தலின் படி அடுத்தடுத்த திட்டமிடல் தொடரும். இடையில் நவம்பர் 15 முதல் விண்ணப்பப்படிவம் தொடங்கி டிசம்பர் 5 க்குள் பயனர் இறுதி செய்யப்படவுள்ளனர். -நீச்சல்காரன் (பேச்சு) 06:57, 13 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

சிஐஎஸ்சுடனான உரையாடல்

[தொகு]

நவம்பர் 16 அன்று சிஐஎஸ்சுடனான சந்திப்பு நிகழ்ந்தது. அதில் நான், மேதினி, நிதேஷ், பாலாஜி, அபிராபி, பார்வதிஸ்ரீ மற்றும் பாலு ஆகியோர் கலந்துகொண்டோம். நவம்பர் 30ஆம் தேதியுடன் நிதிநல்கைப் படிவத்தை நிறுத்தி, பங்கேற்பாளர் பெயர்களை இறுதி செய்ய முடிவெடுத்தோம். பங்கேற்பாளர்களுக்கான பயணத் திட்டத்தை முன்னரே கூறினால் சிஐஎஸ்ஸே முன்பதிவு செய்து தருவதாகக் கூறியுள்ளனர். அல்லது பயனர்களே செலவழித்துவிட்டு நிகழ்விற்குப்பின் ஒரு வாரம் கழித்து நிதியைத் திரும்பப் பெறலாம் என்றனர். அறக்கட்டளை அல்லது ஏ2கே பங்கேற்பாளர்கள் தவிர மற்ற பயிற்சியாளர்களின் பயணச் செலவுகளை நமது நிதி நிலைக்குள் செய்ய வேண்டினர். இலங்கைப் பணத்தில் இலங்கைப் பயனர்களுக்குச் செலவீடு செய்வது இயலாதென்றனர். ஆனால் பயணச்சீட்டுகளை இந்திய ரூபாயில் முன்பதிவு செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளோம். அது தொடர்பாக அவர் கலந்துரையாடி முடிவினைச் சொல்வதாகச் சொல்லியுள்ளனர். இதர விடுதி தொடர்பான ஏற்பாடுகள் குறித்து உரையாடியுள்ளோம். பரிந்துரைத்திருந்த விடுதியை விரைவில் முன்பதிவு செய்யச் சொல்லிக் கேட்டுக்கொண்டோம் -நீச்சல்காரன் (பேச்சு) 14:46, 16 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

பஞ்சாபி மற்றும் வங்கப் பயனர்களின் இறுதிப் பட்டியலை அம்மொழியினர் அனுப்பியுள்ளனர். பயணச்சீட்டு முன்பதிவிற்கு அதனை அவ்வாறே சிஐஎஸ்சிடம் அனுப்பியுள்ளோம். தமிழ்ப் பயனர்களின் இறுதிப் பட்டியலை டிசம்பர் முதல் வாரத்தில் இறுதி செய்யவுள்ளோம். செப்டம்பருக்குப் பிறகான புதிய விதிகளின் படி இலங்கைப் பயனர்களுக்கு முழு பயணநிதி உதவி அளிக்க முடியாது என்பதைக் குறிப்பிடுகின்றனர். இந்தியப் பணத்தில் இருவழி விமானச் சீட்டினை மட்டுமாவது இலங்கைப் பயனர்களுக்கு அளிக்கமுடியுமா என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். -நீச்சல்காரன் (பேச்சு) 13:24, 23 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

வேங்கைத்திட்டப் பயிற்சியைப் பற்றி sitenoticeஇல் அறிவித்தல்.

[தொகு]

வேங்கைத் திட்டப் பயிற்சியைப் பற்றியும், அதற்கு நிதிநல்கை விண்ணப்பித்தல் குறித்தும் sitenoticeஇல் அறிவித்தால் பல பேர்களிடம் இருந்து நல்ல கவனம் கிடைக்கும். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 09:30, 23 நவம்பர் 2022 (UTC) 👍 விருப்பம் ஸ்ரீதர். ஞா (✉) 09:43, 23 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

விருப்பம். மாற்றுக் கருத்தில்லையெனில் நாளை முதல் 30 ஆம் நாள் வரை ஒரு வாரக் காலம் அறிவிப்பினைக் கொடுக்கலாம்.-நீச்சல்காரன் (பேச்சு) 12:39, 23 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

வேண்டுகோள்

[தொகு]

நீச்சல்காரன் முன்பதிவு செய்யாத பயனராக நான் பயிற்சியில் கலந்துகொள்ள இயலுமா? கோவைக்கு அருகில் நடப்பதால் கலந்து கொள்ளவது எனக்கு சாத்தியமாக இருக்கும். --Booradleyp1 (பேச்சு) 13:41, 30 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

வணக்கம் நிகழ்வை சிறப்பான முறையில் நடத்த முன்பதிவு என்பது அவசியமாகிறது. முன்பதிவு செய்யாமல் கலந்து கொள்ள பயனர்களை அனுமதிக்கும் பொழுது சில சிக்கல்கள் எழ வாய்ப்புள்ளது. இன்றுடன் முன்பதிவு செய்ய கடைசி நாள் என்பதால் நீங்கள் தாராளமாக விண்ணப்பம் செய்யலாம். நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 15:24, 30 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
உங்களை நிகழ்வில் சந்திக்க அனைவருமே காத்திருக்கிறோம். உடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி. TNSE Mahalingam VNR (பேச்சு) 15:30, 30 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]
நிகழ்வில் உங்களை சந்திக்கவும் ஆலோசனைகள் பெறவும் காத்திருக்கிறோம். வருக! வருக!!--கி.மூர்த்தி (பேச்சு) 04:33, 1 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

பங்களிப்பு

[தொகு]

வணக்கம். வீட்டிலிருக்கும் முக்கியப் பணிகளின் காரணமாக, இப்பயிற்சியில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கவில்லை. எனினும் தொடர்பான உரையாடல்களில் கலந்துகொள்ள இயலும். என்னால் இயன்ற உதவிகளை செய்ய இயலும். நிகழ்வுகள் சிறப்புற நடந்திட எனது வாழ்த்துகள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:10, 1 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி பயிற்சிகளின் பட்டியலை நீங்கள் கண்டிருக்கலாம். வாய்ப்பிருந்தால் ஒரு மாலை வேளையில் இணையம் வழி இணைந்து, துப்புரவுப் பணிகுறித்து நீங்கள் பயிற்சியளிக்கலாம். அதற்கான ஆவணங்களை உருவாக்கலாம். தொடர்ந்து பயிற்சி சிறக்க ஆலோசனைகளையும் அளிக்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 16:44, 2 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

பயிற்சிகளின் பட்டியலை எங்கு காணலாம்? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:49, 2 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

இங்கு காணலாம்

நவம்பர் வரையிலான இற்றை

[தொகு]

பஞ்சாபி மற்றும் பெங்காலி பயனர்களின் பட்டியல்கள் இறுதி செய்யப்பட்டு சிஐஎஸ்சிடம் அனுப்பப்பட்டுள்ளன. நிகழ்வுகளான நிதி ஒப்புதலை மேனிதி அலுவல்பூர்வமாகப் பெற்றுவிட்டார். விடுதி கட்டணமும் வெளிமொழிப் பயனர்களுக்கான பயணச்சீட்டிம் இன்னும் சில தினங்களில் அனுப்பி முன்பதிவு செய்யவும். நமது நிதி நல்கைக்கான விண்ணப்பக் காலக்கெடு நிறைவடைந்துள்ளது. இதுவரை 50 பயனர்கள் விண்ணப்பித்துள்ளனர். இன்னும் சில நாட்களில் பங்கேற்கும் தமிழ்ப் பயனர்கள் இறுதி செய்யப்பட்டுத் தனித்தனியாக அஞ்சலில் தொடர்பு கொள்ளப்படும். பயிற்சியாளர்களைத் தொடர்பு கொண்டு வருகிறோம். சிலருக்கு நேரம் ஒத்துவரவில்லை சிலருக்குச் நிதிச்சிக்கல் உள்ளன. வேறு யாரேனும் பயிற்சியளிக்க விருப்பம் தெரிவித்தால் அறியத் தருக.

அண்மையில் அமலில் வந்துள்ள FCRA விதிமுறைகளின்படி இலங்கைப் பயனர்களுக்கான செலவினை சிஐஎஸ் மூலம் செய்ய இயலாதெனப் பல கட்டப் பேச்சுகளுக்குப் பின்னர் இறுதிசெய்துள்ளனர். இது கூகிள் முன்னடுத்த நிகழ்வாகையால் நேரடியாக அறக்கட்டளையிடமும் விண்ணப்பிக்க இயலாதெனத் தெரிகிறது. எனவே இப்பயிற்சியில் இலங்கைப் பயனர்களை அழைக்க இயலவில்லை. வேறு பரிந்துரைகள் இருந்தால் சுட்டிக் காட்டலாம். - ஒருங்கிணைப்புக் குழு சார்பாக நீச்சல்காரன் (பேச்சு) 16:41, 2 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

பயிற்சியில் இணைய விருப்பம் தெரிவிப்பவர்கள் (திசம்பர் 2022)

[தொகு]

தே.நீதிதாஸ்

பயிற்சியாளர்கள் பரிந்துரை

[தொகு]

ஏறக்குறைய விண்ணப்பித்த பயனர்களுள் பெரும்பாலானோர்கள் பங்கேற்பாளர்களாகத் தேர்வாகியுள்ளனர். இது மேம்பட்ட பயிற்சி என்பதால் முற்றிலும் விக்கிப்பீடியாவிற்குப் புதியவர்களை இணைத்துக் கொள்ள இயலவில்லை. மொத்தப் பங்கேற்பாளர்கள் பட்டியலும் தயாராகி சிஐஎஸ்சும் ஒப்புதல் அளித்துவிட்டனர். அசாப், சாம் வாட்சம் போன்ற சில அறக்கட்டளையினரிடமும் பயிற்சியளிக்கத் தொடர்பு கொண்ட போது இந்திய விக்கிமாநாடு ஏப்ரலில் நடைபெறுவதால் ஜனவரியில் இந்தியா வருவதற்கான வாய்ப்பில்லை என தெரிவித்தனர். ஆகவே பயிற்சியாளர்களாக User:Nitesh (CIS-A2K), User:SGill_(WMF), User:PDas_(WMF), User:THasan_(WMF), User:Subodh_(CIS-A2K), User:Mouryan, User:Jayprakash12345, User:Gnoeee, User:Bhuvana_Meenakshi ஆகியோர் தற்போதைய பரிந்துரையில் உள்ளனர். பங்கேற்பாளர்களின் தேவை/நிதிநிலை பொறுத்து, பயிற்சியாளர்கள் இறுதி செய்யப்படுகிறார்கள். அனைத்துப் பங்கேற்பாளர்களிடமும் பயிற்சித் தலைப்புகள் குறித்த ஒரு பின்னூட்டம் வாங்கிய பிறகு முறையான பயிற்சி நிரல் வெளியிடப்படுகிறது. வேறு யாரேனும் பயிற்சியாளராகப் பரிந்துரைக்க விரும்பினால் அறியத் தருக.-நீச்சல்காரன் (பேச்சு) 06:45, 20 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

நிகழ்வின் இறுதி நாள் குறித்து

[தொகு]

m:Project Tiger Training 2023 இங்கு கலந்து கொள்வோர் பட்டியலைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். சில ஆண்டுகளுக்குப் பிறகு பிறமொழி நண்பர்களையும் ஒன்று சேர காணப் போகும் நாள் எனக்கு திருநாளே! இந்நிகழ்வினை நடத்த ஏற்பாடு செய்த அனைவருக்கும் எனது உள்ளங்கனிந்த வணக்கங்கள். இந்நிகழ்வு இன்னும் சிறப்பாக அமைய கீழ்கண்ட எனது பரிந்துரையை தருகிறேன்.

  • இறுதி நாளன்று பயிலரங்கு மாலை 5வரை இருக்கும் என நம்புகிறேன். அதன் பிறகு அறைக்குத் திரும்பி உடைமைகளை அணியப்படுத்திக் கொண்டு ஏறத்தாழ அனைவரும் 6-8 மணி நேரப்பயணம் செய்து இல்லம் திரும்ப வேண்டும். அதற்கு நிகழ்விடத்தில் இருந்து ஊர்தியிடம் வர ( 40 கி. மீ. பயணிக்க வேண்டும்- எதுவாக இருப்பினும்:பேருந்து, தொடருந்து, வானூர்தி) ஒன்றரை மணி நேரம் ஆகும். இச்சூழ்நிலையில் எனக்கு இறுதி நாளன்று காலை 10 மணிக்கே அறையை காலி செய்யச்சொல்லி மின்னஞ்சலில் வற்புறுத்தப்பட்டுள்ளது.
  • 54 வயதாகும் நான், என்னுடைய 14 ஆண்டுகள் விக்கிமீடிய வாழ்க்கையில், பல இந்திய அளவு பயிலரங்குகளிலும், சில அயல்நாட்டு பயிலரங்குகளிலும் நான் கலந்து கொண்டுள்ளேன். எங்கும் இதுபோல, நிகழ்வு முடிவதற்கு முன்னமே அறையில் இருந்து வெளியேற வற்புறுத்தப்படவில்லை. மீண்டும் இந்தியாவில் கோரோனா அதிகரிக்கும் சூழல் உள்ள நிலையில் நாம் உடன் பயணிக்கும் நண்பர்களின், தனிமனித சுகாதாரத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

உழவன் (உரை) 03:35, 23 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

முதல் நாள் உரையாடல் குறிப்பு

[தொகு]

ஆனைக்கட்டியில் நடைபெற்றுவரும் வேங்கைத் திட்டப் பயிற்சியில் பல நாட்கள் கழித்துப் பலரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. கடைசி நேரத்தில் ஏழுக்கும் மேற்பட்டவர்கள் வர இயலாத நிலை, முதல்நாள் பயண ஒருங்கிணைப்பு போன்றவை ஒருங்கிணைப்பாளர்களுக்குச் சற்று சிரமமாக இருந்தாலும் பங்கேற்பாளர்களுக்கு இப்பயிற்சி இனிய அனுபவமாக இருக்கும் எனும் போது மட்டற்ற மகிழ்ச்சி. பயனுள்ள பயிற்சிகளுக்கிடையே தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாட்டுப் பணிகள் குறித்து நீண்ட உரையாடலை மாலையில் அமைத்தோம். அதில் பல்வேறு கருத்துக்கள் உரையாடப்பட்டன. அவற்றின் சுருக்கத்தை இங்கே பதிவு செய்கிறேன்.

  1. ஒரே நாளில் ஐந்திற்கும் மேற்பட்ட நகரங்களில் புதுப்பயனர்களுக்கான பயிற்சியளித்துத் துப்புரவுப் பணிகளைச் செய்யலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. துப்புரவுப் பணிகளுக்கு புதுப் பயனர்கள் சரி வருமா? சிறிய அளவில் வேண்டுமானால் பயிற்சியளித்து அதனடிப்படையில் விரிவாக்கலாம் என்றும் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்றவர்கள் போன்றவர்களின் வாய்ப்புகள் குறித்தும் ஆலோசனைக் கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.
  2. இயந்திர மொழிபெயர்ப்பு வசதியைப் புதுப்பயனர்களுக்குக் காட்டலாமென்று கருத்து முன்வைக்கப்பட்டது. தொழில் நுட்ப வாய்ப்பு இருப்பத்தால், சமூக ஒப்புதல் இருந்தால் உறுதிசெய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும் இதைக் காட்டுவோம் என்று பதிலுரைக்கப்பட்டது.
  3. இயந்திர மொழிபெயர்ப்பில் வரைவாகச் சேமிக்கப்பட்ட கட்டுரைகளால் பிறராக மொழிபெயர்க்க முடியவில்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
  4. தமிழக மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட பின்னரும் கோவில் மற்றும் ஊராட்சிக் கட்டுரைகளில் அவை மேம்படுத்தவில்லை. அதைச் செய்யத் தானியங்கி வாய்ப்புகள் குறித்து உரையாடப்பட்டன. தானியங்கியைவிடப் பயனர்களே செய்வது சிறப்பு என்று முடிவுசெய்யப்பட்டது.
  5. பெயரிலியாக எழுதும் பயனர்களுக்குப் பயனர் கணக்கினை உருவாக்க அறிவுறுத்தல்கள் காட்டல் அதிகமானோர் துப்புரவுப் பணிகளில் ஈடுபடல், வாய்ப்புள்ள அரசு தரப்பு தரவுகளைப் பெற்று கட்டுரையை மேம்படுத்தல், சில நுட்பச் சிக்கல்கள் குறித்தும் உரையாடப்பட்டன. -நீச்சல்காரன் (பேச்சு) 02:15, 27 சனவரி 2023 (UTC)[பதிலளி]

தொடர்-தொகுப்பு திட்டம்

[தொகு]

தொடர்-தொகுப்பு திட்டம் குறித்து உரையாடியமைக்கு நன்றி. இந்தத் திட்டம் குறித்தான எனது வரைவு பற்றி சில விளக்கங்கள் தர விரும்புகிறேன். இதனடிப்படையில், வாய்ப்பிருந்தால், மீண்டும் உரையாடுங்கள்.

  • தொடக்கத்தில், கூடுதல் ஆர்வத்தில், ஒரே நாளில் 5 நகரங்களில் நடத்துவதற்கு பரிந்துரைத்தேன். அதன்பிறகு டிசம்பர் 23 அன்று, நிகழ்வு அமைப்பில் திருத்தம் [1] செய்துள்ளேன். இதனைக் கருத்திற்கொண்டு தொடர்ந்து உரையாடலாம்.
  • துப்புரவுப் பணிகளில் நேரடியாக புதுப் பயனர்களை ஈடுபடுத்தவேண்டும் எனும் பரிந்துரையை முன்வைக்கவில்லை. உரிய பயிற்சிகளுக்குப் பிறகு, கட்டுரைகளில் முன்னேற்றப் பணிகளைச் செய்தல் என்பதாகவே திட்டப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளேன். இதன் மூலமாக, தமிழக ஆசிரியர்கள் எழுதிய கட்டுரைகளை செம்மைப்படுத்துதல், மேற்கோள்கள் இல்லாத கட்டுரைகளில் குறைந்தது ஒரு மேற்கோளாவது சேர்த்தல் ஆகிய திட்டங்களில் புதிய பயனர்களை ஈடுபடுத்தலாம் என்பதே எனது பரிந்துரை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:24, 27 சனவரி 2023 (UTC)[பதிலளி]

புதுப் பயனர்களுக்கு இயந்திர மொழிபெயர்ப்பை அறிமுகப்படுத்துதல்

[தொகு]

இதில் எனக்கு தயக்கம் இருக்கிறது. முந்தையத் திட்டமொன்றினை செம்மைப்படுத்துவதில் கற்றுவரும் பாடம். இயந்திர மொழிபெயர்ப்பை செய்து, அதனை பதிப்பித்தல் செய்தலோடு நின்றுவிடுவது 75 விழுக்காட்டிற்கும் மேலாக உள்ளது. புதுப் பயனர் விக்கிப்பீடியா குறித்து ஓரளவு அறிந்தபிறகு, அடுத்துவரும் பயிற்சிகளில் இயந்திர மொழிபெயர்ப்பை அறிமுகப்படுத்தலாம்.

பொதுவாக, புதுப் பயனர்களை புதிதாக கட்டுரைகள் எழுதத் தூண்டுவதைவிட, ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளை விரிவுபடுத்தத் தூண்டுவது பலவகைகளில் பலனளிக்கும் என்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. குறிப்பாக, அவர்களை தக்கவைக்க இயலும் என புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. காண்க: தேர்ந்தெடுத்தல் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:06, 28 சனவரி 2023 (UTC)[பதிலளி]

2022-2023

[தொகு]

விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டப் பயிற்சி 2022 என்பதிலிருந்து விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டப் பயிற்சி 2023 என்ற பக்கத்திற்கு நகர்த்தலாம்.--சா. அருணாசலம் (பேச்சு) 17:52, 27 சனவரி 2023 (UTC)[பதிலளி]