யூசுப் சுலைகா காப்பியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

யூசுப் சுலைகா காப்பியம் என்பது 1957ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும். இக் காப்பியத்தை சாரண பாஸ்கரன் என்கிற டி. எம். அஹமத் எழுதினார்.

இது திருக்குர்ஆனில் இடம்பெறும் யூசுப் நபி பற்றிய தகவல்களையும் யூசுபின் மீது விருப்பம் கொண்டவர் எனக் கூறப்பட்டு பின்னாளில் சுலைகா என அறியப்பட்ட ஒரு பெண்மணியைப் பற்றி வட்டார வழக்கத்தில் இருந்த ஒரு கதைக்கருத்தையும் இணைத்து எழுதப்பட்ட செய்யுள்களைக் கொண்ட ஒரு தமிழ்க் காப்பியம் ஆகும்.

இந்த நூல் இரண்டு பாகங்களைக் கொண்டது. முதற்பாகம் 43 இயல்களையும் இரண்டாம் பாகம் 23 இயல்களையும் கொண்டது.[1]

"முதல்பாகம் யூசுப் சுலைகா நாயகியை மணம் கொண்டதுடன் முடிந்து விடுகிறது. இரண்டாம் பாகம் பின்னுள்ள நிகழ்ச்சிகளைக் கொண்டு புனையப்பட்டுள்ளது."[1]

எடுத்துக்காட்டுப் பாடல்[தொகு]

நானெனும் தனிமை கொண்டால்
நஞ்செனக் கொல்லும் காதல்
தானெனும் எண்ணம் நீங்கித்
தன்னலம் யாவும் போக்கில்
தேனெனச் சுவைக்கலாகும்
தெரிந்தவர் உரைக்கக் கூடும்


இருவரின் இதயத் துள்ளும்
எழுவதே உண்மைக் காதல்
ஒருவரின் உள்ளம் மட்டும்
ஒப்பிடில் காதல் அன்றே
இருவரும் இணைந்தால் சொர்க்கம்
இல்லையேல் நரக மாகும்

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 எம். எஸ். பஷீர். (2005). இக்கால இஸ்லாமிய தமிழ்க் காப்பியங்கள். சென்னை: சந்தியா பதிப்பகம்.

வெளி இணைப்புகள்[தொகு]