அர்ச்சயசிஷ்ட சவேரியார் காவியம்
அர்ச்சயசிஷ்ட சவேரியார் காவியம் (அர்ச். சவேரியார் காவியம்) என்பது கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் வாழ்ந்த அந்தோனிமுத்து நாயகர் என்னும் கவிஞரால் 1877ஆம் ஆண்டு பாடப்பட்ட ஒரு தமிழ்க் கிறித்தவக் காப்பியம் ஆகும்.
காவியம் பற்றிய குறிப்புகள்
[தொகு]இக்காவியத்தில் 12 படலங்களும் 821 விருத்தங்களும் உள்ளன. மனித வாழ்க்கையில் நிலவும் வறுமை, நோய் போன்ற துன்பங்களைச் சுட்டிக்காட்டி, அவற்றைப் போக்க புனித பிரான்சிசு சவேரியார் மனிதநேயப் பண்போடு எவ்வாறு செயல்பட்டார் என்பதை இந்நூல் பாடுகிறது.
அற்றார்க்கு அழிபசி தீர்த்தல், உற்றார்க்கு உறுபிணி அகற்றல் என்னும் குறிக்கோள்களுடன் தன்னைப்போல் பிறரையும் அன்பு செய்யக்கூடிய இறைமகன் இயேசுவைப் பின்பற்றிப் பணிபுரிந்த புனித சவேரியாரைக் காப்பியத் தலைவராகக் கொண்டு உருவாக்கப்பட்டது இந்நூல்.
ஆதாரம்
[தொகு]இர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).