திருவாக்குப் புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திருவாக்குப் புராணம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை எழுதியவர் கனகசபை என்பவர் ஆவார். இந்நூல் 1853ஆம் ஆண்டு சென்னையில் பதிப்பிக்கப் பெற்றுள்ளது.

நூல் பிரிவுகள்[தொகு]

திருவாக்குப் புராணம் மூன்று காண்டங்களைக் கொண்ட காப்பியமாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் விவிலிய வரலாறு கவிதை வடிவம் பெறுகிறது.

உள்ளடக்கம்[தொகு]

விவிலியத்தைக் கடவுளின் வாக்காகக் கிறித்தவர்கள் கருதுகிறார்கள். மேலும் மூவொரு கடவுளின் இரண்டாம் ஆள் "வாக்கு" என்றே அழைக்கப்படுகிறார். அவரே இவ்வுலகில் இயேசு கிறித்துவாக மனுவுருக் கொண்டு சிலுவையில் அறையுண்டு இறந்து, சாவினின்று உயிர்பெற்றெழுந்து மனித குலத்தைப் பாவத்தினின்றும் சாவினின்றும் விடுவித்து பேரின்ப வீட்டைத் திறந்துவைத்தார் என்பது கிறித்தவ நம்பிக்கை.

திருவாக்குப் புராணம் கடவுளின் வார்த்தையை எடுத்துரைப்பதால் இப்பெயர் பெற்றது.

ஆதாரம்[தொகு]

இர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).