உள்ளடக்கத்துக்குச் செல்

நம்பி திருவிளையாடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மதுரை மீனாட்சி கோயிலில் உள்ள ஒரு ஓவியம்; மேல் இரண்டு அடுக்குகள் இந்திரன் பழி தீர்த்த படலத்தை விவரிக்கின்றன, கீழ் இரண்டு அடுக்குகள் ஐராவதம் (வெள்ளையானை சாபம் தீர்த்த படலம்) தனது சாபத்தைப் போக்கிக்கொள்ள சிவலிங்கத்தை வழிபடுவதை விவரிக்கிறது.

திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் அல்லது நம்பி திருவிளையாடல் [1] என்பது பெரும்பற்றப்புலியூர் நம்பி என்பவரால் எழுதப்பெற்ற சைவ சமய நூலாகும். [2] இந்நூல் திருவிளையாடல் புராணத்துக்கு முன்பு தோன்றியது எனக் கருதப்படுகிறது. [3] இந்நூல் உத்தரமகாபுராணம் எனும் வடமொழி நூலின் சாரசமுச்சயம் எனும் பிரிவிலிருந்து மொழிபெயர்த்து எழுதப்பட்டதாகும். சாரசமுச்சயம் எனும் பகுதியில் சிவபெருமானின் 64 கதைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது உண்மையில் ஒரு திருவிளையாடல் புராணம். சிவன் கதைகளை முதன்முதலில் தொகுத்துக் கூறிய நூல் இது. இதனை ஓதரிய எனும் செய்யுளின் மூலமாகவும், "அம் பதுமத்தார்" எனும் நூற்சிறப்பு பாயிரச் செய்யுள் மூலம் அறிந்து கொண்டதாக உ.வே.சா குறிப்பிட்டுள்ளார். இந்நூல் 1753 செய்யுள்களைக் கொண்டதாகும்.[2]

வேறு பெயர்கள்

[தொகு]

இந்நூலை திருவாலவாயுடையார் திருவிளையாடல் என்றும் அழைப்பர். இந்நூல் காலத்தால் முந்தியது என்பதால் பழைய திருவிளையாடல் என்றும், வேம்பத்தூரார் திருவிளையாடல் என்றும் அழைக்கப்படுகிறது. [4]

இந்நூலின் ஆசிரியர் பெரும்பெற்றப் புலியூர் நம்பியின் காலம் பதிமூன்றாம் நூற்றாண்டாக கருதப்படுகிறது.[3] இவர் கிபி 1228-ஆம் ஆண்டு இந்நூலை இயற்றி பாண்டிய அரசனிடம் இறையில் நிலம், பல்லக்கு போன்றவைகளைப் பெற்றுள்ளார். [3] இந்த நூலில் 1753 விருத்தப் பாடல்கள் உள்ளன. இவற்றில் மதுரைச் சொக்கநாதரின் 64 திருவிளையாடல்கள் பாடப்பட்டுள்ளன.

  • பாயிரம்
  • கடவுள் வாழ்த்து
  • அவை அடக்கம்
  • பதிகம்
  • நூல்வரலாறு
  • திருநகரச் சிறப்பு
  • நூற்பயன்

என்னும் பகுப்புகளில் சொல்லப்பபட்டுள்ளது.

பாடல்கள் - எடுத்துக்காட்டு
[தொகு]

சந்தப்பாடல்

அருளுந்தொறும பொருளுந்திருந் தழகுந்தொகும் குலமும்தரும்
பரிவொன்றுசந் ததியும்புகும் பழியஞ்சுமொண் பொடியும்பொருந்
துருவுந்திறம் பிறவுந்துளங் கொளியும்பிறங் கறிவும்செழுந்
திருவும்பெரும் புகழும்தருந் திருவம்பலம் திருவம்பலம்

சிவசின்னங்கள் எனப் போற்றப்படுவன உருத்திராச்சம், திருநீறு, நமச்சிவாய-மந்திரம் ஆகிய மூன்று. இவற்றில் மந்திரப் பயனைக் கூறும் பாடல்

குலம் தரும் நீதி மிக்க குணம் தரும் வெதம் சொல்லும்
பலம் தரும் உயர்ந்த சாயுச்சயம் தரும் ப.உது இலாத
தலம் தரும் எல்லாம் வல்ல சயம் தரும் நிறைந்த செல்வ
நலம் தரும் பெருமை குன்றா நயம் தரும் - நமச்சிவாய

அச்சில்

[தொகு]

திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம் எனும் இந்நூலை அச்சில் 1906-ஆம் ஆண்டு உ.வே. சாமிநாத ஐயர் கொண்டு வந்துள்ளார். அதன் பிறகு 1927 மற்றும் 1972 ஆகிய இரு பதிப்புகள் வந்திருக்கின்றன.

மேலும் காண
[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 156. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  2. 2.0 2.1 பன்னிரு திருமுறை வரலாறு நூல்-8 முதல் 12 வரை பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் பக்கம் 18
  3. 3.0 3.1 3.2 மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்! தினமணி
  4. திருவிளையாடற் புராணம் நாவலர், பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரையெழுதிய நூல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நம்பி_திருவிளையாடல்&oldid=4268303" இலிருந்து மீள்விக்கப்பட்டது