நான் மாடக்கூடலான படலம்
நான் மாடக்கூடலான படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 19 ஆவது படலமாகும்.(செய்யுள் பத்திகள்: 1307- 1332)[1] இப்படலம் வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் என்பதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.
சுருக்கம்
[தொகு]கடல் வற்றிப் போனது கண்டு கலங்கிய வருண தேவன், அடுத்தாக ஒன்பது மேகங்களை அனுப்பி மதுரை நகருள் மழையை பெய்யச் செய்தார். கடுமையான மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களை காக்க இறைவனிடம் வேண்டினர். சொக்கநாத பெருமான் தன்னுடைய சடாமுடியிலிருந்த நான்கு மேகங்களை அனுப்பி, மதுரை காக்க கட்டளையிட்டார். அந்த நான்கு மேகங்கள் மதுரைக்கு வந்து நான்கு மாடங்களிலும் நின்று வருணன் அனுப்பிய மேகங்களிலிருந்து மழை நீரை உறிஞ்சி மதுரையை சுற்றி பெய்யுமாறு செய்தன.
வருணன் தன்னுடைய தவறை உணர்ந்து இந்திரனின் கட்டளையால் இவ்வாறு செய்தமையாக இறைவனிடம் வருந்தி வணங்கினான். இறைவன் வருணனின் வயிற்று வலியை தீர்த்து அனுப்பினார். [2]
காண்க
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ "பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் (திருவாலவாய் மான்மியம்) இரண்டாவது - கூடற் காண்டம் - பாகம் 2 ( படலம் 35-42): 28. நாகமெய்த படலம் (1603 - 1625)". மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம். 1998-2014. Retrieved 11 செப்டம்பர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=2260
வெளி இணைப்புகள்
[தொகு]- மூன்றாவது - திருவாலவாய்க் காண்டம் பரணிடப்பட்டது 2016-09-21 at the வந்தவழி இயந்திரம்