வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம்
Appearance
வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் இறுதி படலமாகும்.
இப்படலத்தில் மதுரை வணிகன் ஒருவனுக்கு பெற்றோர் இல்லாத பெண்ணை ஞானசம்மந்தர் செய்து வைத்த திருமணமும், அத்திருமணத்தினை ஏற்காத வணிகனின் முதல் மனைவிக்கு திருமண சாட்சியாக வன்னி மரமும், கிணரும், இலிங்கமும் எழுந்தருளியது இடம்பெற்றுள்ளது.